வானம் நிற்க மேகம் நிற்க நிமிடம் ஓர் சுவாசம் நிற்க
தேவன் கொஞ்சம் கை அசைத்தால் என்ன செய்வோம்?
வாழ்க்கை சுற்றி நடப்பதெல்லாம் தவறாய் நமக்கிருந்தால்
தேவன் சொல்லும் சொல்லை மீறி என்ன செய்வோம் ?
பல இன்பங்கள் தந்த நம் சொந்தம் இழந்தோம்
கோடி நினைவுகள் விட்டு சென்ற அன்பை இழந்தோம்
ஓ அழகென்று சேர்த்து வைத்த செல்வம் இழந்தோம்
இனி நமக்கென்று ஏதும் இல்லை இயேசு மட்டும் தான்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு வாழ்க்கை கடப்போம்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு துன்பம் மறப்போம்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு கண்ணீர் துடைப்போம்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு நித்யம் நினைப்போம் – 2
தக்கத்தை (6) தக்கதோம் (2) (1) – 2
பதில் ஒன்றும் அறியாத பல கேள்விகள்
நம் மனதின் ஓரங்களை ஆட்கொள்வதேன்
தவறேதும் செய்யாத தேவன் அவர்
அவர் பிள்ளைகள் நம் வாழ்வில் நன்மை செய்வார்
வாழ்வில் ஒன்றும் அறியோம்
நம் வாழ்கை ஒவ்வொன்றையும் முற்றும் அறிவார்
நம் சிந்தையின் கேள்விக்கு பதிலும் இல்லை
அவர் பாதங்கள் ஒன்றே என்று பற்றிக்கொள்வோம் வா… (…பல இன்பங்கள்)
காலையும் மாலையும் அல்லே-லூயா
நான் விடும் சுவாசமே அல்லே-லூயா – 2
நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும்
நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும்
அல்லே-லூயா – (4)
என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும்
அல்லே-லூயா (2)
1. கன்மலை உச்சியில் அல்லே-லூயா
ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா – 2
நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும்
நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
அல்லே-லூயா – (4) (…என் உயர்விலும்)
2. சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா
ஏளனம் செய்கையில் அல்லே-லூயா – 2
என் எதிரி பெருக பெருக என் பந்தி அளவும் பெருகும்
நான் துதித்துப் பாடும் போது சிறைச்சாலை கதவும் திறக்கும்
அல்லே-லூயா – (8) (…என் உயர்விலும்)
1. தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்
கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்
வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்
ஒண்ணுமே இல்லனாலும் உம் கிருபை போதும்
2. மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்
தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்
அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும் (…இயேசப்பா நீங்க)
Um Kirubai Enakku Podhum – 3
En Belaveenatthil Um Belamo
Pooraṇamaai Vilangum – 2
1. Thaazhvil Irundhaalum Um Kirubai Podhum
Kanneeril Moozhginaalum Um Kirubai Podhum
Vedhanai Irundhaalum Um Kirubai Podhum
Onnume Illanaalum Um Kirubai Podhum