நான் உனக்காக (மகனே) நான் உனக்காக
என்னை நம்பி வாழ்கிறாய் நான் உனக்காக – 2
நீ எனக்காக இறைவா நீ எனக்காக
உன்னை நம்பி வாழ்கிறேன் நீ எனக்காக – 2
1. பொழியும் நல்ல வானம் தந்தேன் நான் உனக்காக
விளையும் நல்ல பூமி தந்தேன் நான் உனக்காக
இரவும் பகலும் பிரித்து வைத்தேன் நான் உனக்காக
படைத்தவை அனைத்தும் நலமெனக்கண்டேன் நான் உனக்காக (…நான்)
2. வானம் போல மனதை தருவேன் நான் உனக்காக
பூமி போல பலனை தருவேன் நான் உனக்காக
பகலை போல ஒளியை தருவேன் நான் உனக்காக
இருளை போல பொறுமை கொள்வேன் நான் உனக்காக (…நான்)
3. அன்பு செய்யும் அருளை தந்தேன் நான் உனக்காக
மன்னிக்கின்ற இதயம் தந்தேன் நான் உனக்காக
ஏற்றுக்கொள்ளும் மனதை தந்தேன் நான் உனக்காக
மாற்றம் செய்யும் வலிமை தந்தேன் நான் உனக்காக (…நான்)
உம்ம விட்டா யாரும் இல்ல இயேசையா
உம்ம விட யாரும் இல்ல இயேசையா – 2
நீங்க போதும் எனக்கு (2)
நீங்க போதும் (3) எனக்கு – 2 (…உம்ம)
1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2
என்னுடைய உழைப்பை யார்வந்து பறித்து கொண்டாலும்
என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2 (…நீங்க போதும்)
2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும்
பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
கானானின் பயணத்திற்கு தடை இல்லையே – 2
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீரே
நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே – 2 (…நீங்க போதும்)
3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும்
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும்
நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே – 2
என் கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே – 2 (…நீங்க போதும்)
Umma Vittaa Yaarum Illa Yesaiyaa
Umma Vida Yaarum Illa Yesaiyaa – 2
அவர் துதி சொல்லி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே (2)
முன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார்
மகிமைபடுத்தினார் இன்னும் மகிமைபடுத்துவார் (2)
1. பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே
வானங்களை திரைப்போலாய் விரித்தவரும் அவரே – 2
நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே (2)
உன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே (2) (…அவர் துதி)
2. வானம் திறந்து மன்னாவால் போஷிப்பவரும் அவரே
செங்கடல்தனை இரண்டாக பிளந்தவரும் அவரே – 2
மோசேயின் கைக்கோலால் அற்புதங்கள் செய்தவரே (2)
உலகம் முடியும்வரை துணையாய் நம்முடன் இருப்பவரே (2) (…அவர் துதி)
3. இழந்து போன என்னை தேடி இரட்சிக்க வந்தவரே
பாவ குழியில் என்னை மீட்டு புது வாழ்வு தந்தவரே – 2
ஜீவனுள்ள நாளெல்லாம் கிருபையால் காப்பவரே (2)
உலகம் முடிவில் என்னை அழைத்து பரலோகில் சேர்ப்பவரே (2) (…அவர் துதி)
கர்த்தர் நமக்காக யுத்தம் செய்யும் தேவன்
மேற்கொள்ளுவார் நமக்காய் மேற்கொள்ளுவாரே
அசைக்கப்படமாட்டோம் தோற்றுப்போகமாட்டோம்
இயேசு நம் பட்சம்
நம் பாரம் யாவும் சுமப்பார் நிந்தை மாற்றுவார்
மேற்கொள்ளுவார் நமக்காய் மேற்கொள்ளுவாரே
அசைக்கப்படமாட்டோம் தோற்றுப்போகமாட்டோம்
இயேசு நம் பட்சம்
வாழ்வேன் நான் ஜீவனோடு
இயேசுவின் உயிர்த்த வல்லமை
என்னுள் இருப்பதால் விடுதலை ஆனேன்
இயேசு நாமத்தால்
நம் பாரம் யாவும் சுமப்பார் நிந்தை மாற்றுவார்
மேற்கொள்ளுவார் நமக்காய் மேற்கொள்ளுவாரே
அசைக்கப்படமாட்டோம் தோற்றுப்போகமாட்டோம்
இயேசு நம் பட்சமே [இயேசு நம் பட்சம்]
வாழ்வேன் நான் ஜீவனோடு
இயேசுவின் உயிர்த்த வல்லமை
என்னுள் இருப்பதால் விடுதலை ஆனேன்
இயேசு நாமத்தால்
வாழ்வேன் நான் ஜீவனோடு
உம் நாமம் உயர்த்தி பறைசாற்றுவேன்
கிறிஸ்து வெளிப்பட்டார் சுகமானேனே
இயேசு நாமத்தால்
Nam Baaram Yaavum Sumappaar Nindhai Maattruvaar
Merkkolluvaar Namakkaai Merkkolluvaare
Asaikka Pada Maattom Thottru Poga Maattom
Yesu Nam Patchame [Yesu Nam Patcham]
3. பாடுகள் சகித்த இயேசு
அவர் நடந்த பாதை இதல்லோ? – 2
ஓடியே வீரனாம் இயேசுவை நோக்கியே
பாடுவேன் நம்பிக்கையுடனே – 2 (…நான் செல்லும்)
4. மண் வாழ்வின் இன்பம் வெறுத்தேன்
மேல் விண் வாழ்வின் இன்பத்தை கண்டே – 2
துன்பங்கள் மூலமாய் சுத்தரானோருடன்
பொன் நகரம் சேர்ந்து வாழுவேன் – 2 (…நான் செல்லும்)
5. ஆதரவாய் இடை கட்டி
என்னை ஆனந்தமாய் ஓடச் செய்தார் – 2
ஆவி அச்சாரத்தால் புத்திர சுவிகாரம்
ஆளுகையும் அன்று பெறுவேன் (…நான் செல்லும்)
வானம் நிற்க மேகம் நிற்க நிமிடம் ஓர் சுவாசம் நிற்க
தேவன் கொஞ்சம் கை அசைத்தால் என்ன செய்வோம்?
வாழ்க்கை சுற்றி நடப்பதெல்லாம் தவறாய் நமக்கிருந்தால்
தேவன் சொல்லும் சொல்லை மீறி என்ன செய்வோம் ?
பல இன்பங்கள் தந்த நம் சொந்தம் இழந்தோம்
கோடி நினைவுகள் விட்டு சென்ற அன்பை இழந்தோம்
ஓ அழகென்று சேர்த்து வைத்த செல்வம் இழந்தோம்
இனி நமக்கென்று ஏதும் இல்லை இயேசு மட்டும் தான்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு வாழ்க்கை கடப்போம்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு துன்பம் மறப்போம்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு கண்ணீர் துடைப்போம்
இயேசு என்ற ஓர் நாமம் கொண்டு நித்யம் நினைப்போம் – 2
தக்கத்தை (6) தக்கதோம் (2) (1) – 2
பதில் ஒன்றும் அறியாத பல கேள்விகள்
நம் மனதின் ஓரங்களை ஆட்கொள்வதேன்
தவறேதும் செய்யாத தேவன் அவர்
அவர் பிள்ளைகள் நம் வாழ்வில் நன்மை செய்வார்
வாழ்வில் ஒன்றும் அறியோம்
நம் வாழ்கை ஒவ்வொன்றையும் முற்றும் அறிவார்
நம் சிந்தையின் கேள்விக்கு பதிலும் இல்லை
அவர் பாதங்கள் ஒன்றே என்று பற்றிக்கொள்வோம் வா… (…பல இன்பங்கள்)