கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை (என்றும்)
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் – 2
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும் (இன்னமும்) – 2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் – 2
கும்பிடுவோரை குணமாக்கும் வேகம் (…கல்வாரி)
2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண – 2
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் – 2
என்னை காணுவோர் உம்மை காணட்டும் (…கல்வாரி)
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா – 2
நான் சிறுகவும் நீர் பெருகவும் – 2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும் (…கல்வாரி)
1. மேசியாவென்றுரைத்து யூத
ராஜனென்றே நகைத்து
தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே
2. யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
பேதுரு மறுதலிக்க
சூதா யேரோதே மெய்க்க வெகு
தீதாயுடை தரிக்க
நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே
3. நீண்ட குரு செடுத்து, எருசலேம்
தாண்டி மலையெடுத்து,
ஈண்டல் பின்னே தொடுத்து, அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே – ஏங்குதே