Anbe Anbe Anbe Aaruyir Urave
அன்பே.. அன்பே..
அன்பே ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே (2)
1 . ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளென்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா – என்மேல் (2)
2. அலைந்தேன் பலநாள் உமையும் அறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே – எனையும் (2)
3. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப்போல்
வாடாதே ஐயா – அன்பு (2)
4. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோ கரிலன்பேனையா?
ஆழம் அறிவேனோ – அன்பின் (2)
5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில் (2)
Anbe Anbe
Anbe Aaruyir Urave
Aanandham Aanandhame (2)
1. Oru Naal Um Dhayai Kandenaiyaa
Annaal Ennai Veruththen Aiyaa
Um Dhayai Peridhaiyaa – En Mel (2)
2. Alaindhen Palanaal Umaiyum Ariyaa
Marandhe Thirindha Throgiyai
Anaiththeer Anbaale – Enaiyum (2)
3. Poologaththin Porulin Magimai
Azhiyum Pullin Poovai Pol
Vaadaadhe Aiyaa – Anbu (2)
4. Paralogaththin Arumai Porule
Naralo Garilanbenaiyaa
Aazham Ariveno – Anbin (2)
5. Ippaarinil Um Anbin Inimai
Iyambar Kiyalaathaagil Yaan
Isaikkavum Elidhaamo – Paraththil (2)
Super is the song
ஆறுதலான பாடல்