Manam Thirumbum Paavikkellaam Pugalidamae
மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே
வந்தனமப்பா வந்தனமே
1. திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்
உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன்
2. இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல
உம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்ல
உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல
3. கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே
Manam Thirumbum Paavikkellaam Pugalidamae
Manadhurugum dhevan endhan maraividamae
Vandhanamappaa vandhanamae
1. Thiruchabai naduvil umadhu peyarai cholliyae paadiduvaen
Thirukkaram seidhitta arpudham ninaikirayn
Ummudaiya seyalgal ellaam ninaikkum bodhu viyakkirayn
2. Radhangalum gudhiraigalum engalai ratchikka mudiyavilla
Ummai vittaal engalukku vera vazhi illa
Ummai nambi vandhuvittoemay veroru naamathai ariyavilla
3. Kartharukkul magizhndhirukkum pillaikalukkendrum nimmathiyae
Kaathirundhaal kidaikkum avarin kirubaiyae
Ennai vittu edubadaadha nalla pangu avar sannidhiyae