Nigare Illatha Sarvesa – நிகரே இல்லாத சர்வேசா

Nigare Illatha Sarvesa
நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா

துதிபாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா
துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனைத் தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம்
கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம்

பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே
தேவ மைந்தனாய் அவதரித்தார்

பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
கொந்தளிக்கும் அலைகளையும்
கால் மிதிக்கும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதற்றிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே
ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே

One thought on “Nigare Illatha Sarvesa – நிகரே இல்லாத சர்வேசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *