Siluvai Sumanthoraai
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் (2)
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் – 2
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார் – 2
ஹாலேலூயா (4) (…இயேசு தாங்குவார்)
1. சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் (2)
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் (2)
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன் – 2 (…ஹாலேலூயா)
2. வாழ்வும் இயேசுவே சாவும் லாபமே (2)
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே (2)
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன் – 2 (…ஹாலேலூயா)
3. சீஷன் என்பவன் குருவைப் போலவே (2)
தனக்காய் வாழாமல் தன்னையும் தருவானே (2)
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும் – 2 (…ஹாலேலூயா)
4. விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன் (2)
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன் (2)
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மை உள்ளவன் என்றழைப்பீர் – 2 (…ஹாலேலூயா)
Siluvai Sumanthoraai Seeshanaaguvom (2)
Sinthai Vaazhvilum Thaazhmai Tharippom
Ninthai Sumappinum Santhosham Kolvom – 2
Yesu Thaanguvaar Avare Sumappaar
Orupothum Kaividave Maattaar – 2
Haaleluyaa (4) (…Yesu Thaanguvaar)
1. Sontham Banthangal Sollaal Kollalaam (2)
Maattror Sathiseithu Mathippai Kedukkalaam (2)
Avarukkaagave Anaiththum Izhanthaalum
Athai Magimai Endrenniduven – 2 (…Haaleluyaa)
2. Vaazhvum Yesuve Saavum Laabame (2)
Avar Perugavum Naan Sirugavum Vendume (2)
Kirubai Tharugiraar Viruthaavaakkiden
Athai Niththamum Kaaththukkolven – 2 (…Haaleluyaa)
3. Seeshan Enbavan Guruvai Polave (2)
Thanakkaai Vaazhaamal Thannaiyum Tharuvaane (2)
Paraloga Sinthai Kondu Umakkaai
Paniseiven Naan Anuthinamum – 2 (…Haaleluyaa)
4. Vinnai Vittu En Kannai Agattriden (2)
Mannin Vaazhvaiyum Kuppaiyaai Ennukiren (2)
Vinnin Vaarthaikku Ennai Tharukiren
Unmai Ullavan Endrazhaippeer – 2 (…Haaleluyaa)