All Songs by david

Yesuvae Um Arukinilae – இயேசுவே உம் அருகினிலே

Yesuvae Um Arukinilae
இயேசுவே உம் அருகினிலே
ஆவலாய் வருகின்றேன்
எந்நேரமும் எந்தன் சுவாசம்
உம்மையே துதித்திடுமே
எந்நாளுமே எந்தன் வாழ்க்கை
உந்தன் மகிமையைப் பாடிடுமே
இயேசுவே… இயேசுவே…

Yesuvae Um Arukinilae
Aavalaai Varukinten
Ennaeramum Enthan Suvaasam
Ummaiyae Thuthithidumae
Ennaalumae Enthan Vaalkai
Unthan Makimaiyai Paadidumae
Yesuvae… Yesuvae…

Christmas Naalidhae – கிறிஸ்மஸ் நாளிதே

Christmas Naalidhae Ellorum Paadi Kondadi Magilum
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

Kilaiyaathin Pisin Thailame – கிளையாத்தின் பிசின் தைலமே

Kilaiyaathin Pisin Thailame

கிளையாத்தின் பிசின் தைலமே
எங்கள் இயேசு மகாராஜா
கிளையாத்தின் பிசின் தைலமே
இரண வைத்தியர் இயேசு ராஜா

ஓரு வார்த்தை சொன்னால் போதுமே
என் வியாதி எல்லாம் சொஸ்தமாகுமே – 2
என் நோய்கள்.. காயங்கள்
உம் தழும்புகளால் சுகமாகும் – 2

ல ல ல லல லல லா
நான் குணமானேன் குணமானேன்
ல ல ல லல லல லா
இயேசுவின் காயங்களால் குணமானேன்

இயேசுவின் ரத்தத்தாலே கழுவப்பட்டேனே
பூரண சுகத்தை பெற்றுக்கொண்டேனே – 2 (…ல ல ல)

சொஸ்தமாய் நான் பாடி துதிப்பேனே
நன்றி சொல்லி ஆடி மகிழ்வேனே – 2 (…ல ல ல)

விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே
எனக்கு விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே
உனக்கு விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே
நமக்கு விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே (…கிளையாத்தின்)

Kilaiyaaththin Pisin Thylame
Engal Yesu Magaaraajaa
Kilaiyaaththin Pisin Thylame
Rana Vyththiyar Yesu Raajaa

Oru Vaarthai Sonnal Podhume
En Vyadhi Ellam Sosthamaagume – 2
En Noigal.. Kaayangal
Um Thazhumbugalaal Sugamaagum – 2

La La La Lala Lala Laa
Nan Gunamaanen Gunamaanen
La La La Lala Lala Laa
Yesuvin Kaayangalaal Gunamaanen – 2

Yesuvin Raththaththaale Kazhuvappattene
Poorana Sugaththai Pettrukkondene – 2 (…La La La)

Sosthamaay Nan Paadi Thudhippene
Nandri Solli Aadi Magizhvene – 2 (…La La La)

Vidudhalai Vidudhalaiye
Yesu Thandhuvittaar Vidudhalaiye
Enaku Vidudhalai Vidudhalaiye
Yesu Thandhuvittaar Vidudhalaiye
Unaku Vidudhalai Vidudhalaiye
Yesu Thandhuvittaar Vidudhalaiye
Namakku Vidudhalai Vidudhalaiye
Yesu Thandhuvittaar Vidudhalaiye (…Kilaiyaaththin)

Uyarnthavarai Thuthipom – உயர்ந்தவரை துதிப்போம்

Uyarnthavarai Thuthipom

உயர்ந்தவரை துதிப்போம்
மகிமை அணிந்தவரை துதிப்போம்
மகத்துவரை துதிப்போம்
அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம் – 2

1. ஏற்ற வேளை ஆகாரம் தருவீரே
உம்மை நோக்கி நான் காத்திருப்பேன்
நீர் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்ளுவேன்
நீர் எடுத்தால் நான் மாண்டு போவேன் – 2

கையை திறந்தால் நான்
திருப்தியாவேன்
முகத்தை மறைத்தால்
திகைத்துப் போவேன் – உங்க – 2 (…உயர்ந்தவரை)

2. கடலுக்கு எல்லை காற்றுக்குச் செட்டை
பூமிக்கு ஆடை வானுக்குத் திரை
உமது கிரியையால் உலகம் நிறைந்தது
உமது ஞானம் மிகவும் பெரியது – 2 (…கையை)

3. தூதர்களை காற்றுகளாய் மாற்றி
ஊழியர்களை அக்கினியாக்கி
மனுஷனுக்கு நீர் வேலையைக் கொடுத்து
இருதயத்தை நீர் மகிழ்ச்சியாக்கினீர் – 2 (…கையை)

Uyarnthavarai Thuthippom
Magimai Aninthavarai Thuthippom
Magaththuvarai Thuthippom
Avar Kiriyaikalai Solli Thuthippom – 2

1. Yettra Velai Aagaaram Tharuveere
Ummai Nokki Naan Kaaththiruppen
Neer Koduththaal Naan Vaangi Kolluven
Neer Eduththaal Naan Maandu Poven – 2

Kaiyai Thiranthaal Naan
Thirupthiyaaven
Mugaththai Maraiththaal
Thigaiththu Poven – Unga – 2 (…Uyarnthavarai)

2. Kadalukku Yellai Kaattrukku Settai
Boomikku Aadai Vaanukku Thirai
Umathu Kiriyaiyaal Ulagam Nirainthathu
Umathu Gnaanam Migavum Periyathu – 2 (…Kaiyai)

3. Thoothargal Kaattrugalaai Maattri
Oozhiyargalai Akkiniyaakki
Manushanukku Neer Velaiyai Koduththu
Iruthayaththai Neer Magizhchchiyaakkineer – 2 (…Kaiyai)

Enakaaga Yaavaiyum – எனக்காக யாவையும்

Enakaaga Yaavaiyum

எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் (4)
இன்றே செய்பவர் நன்றே செய்பவர் (2) என்றும் செய்பவர்

1. இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர் – 2
காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர் (2)
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர் (2) (…எனக்காக)

2. தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர் – 2
என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர் (2)
புரண்டுவரும் பெரு வெள்ளத்திற்கும் புகலிடமானவர் (2) (…எனக்காக)

Enakkaaga Yaavaiyum Seithu Mudikkum Karththar (4)
Indre Seibavar Nandre Seibavar (2) Endrum Seibavar

1. Irulil Irunthu Oliyai Padaiththavar
Verumaiyil Irunthu Ulagai Padaiththavar – 2
Kaattrum Megamum Indri Mazhaiyai Pozhibavar (2)
Sengadalinaiyum Paathaiyaakkum Sarva Vallavar (2) (…Enakkaaga)

2. Tham Karangalile Kaalaththai Vaiththe Iruppavar
Tham Puyabelaththaal Raajjiyangal Aalugai Seibavar – 2
En Pechchaiyum Perumoochchaiyum Sevisaaiththu Ketpavar (2)
Puranduvarum Peru Vellaththirkum Pugalidamaanavar (2) (…Enakkaaga)

Siluvai Sumanthoraai – சிலுவை சுமந்தோராய்

Siluvai Sumanthoraai

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் (2)
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் – 2

இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார் – 2

ஹாலேலூயா (4) (…இயேசு தாங்குவார்)

1. சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் (2)
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் (2)
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன் – 2 (…ஹாலேலூயா)

2. வாழ்வும் இயேசுவே சாவும் லாபமே (2)
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே (2)
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன் – 2 (…ஹாலேலூயா)

3. சீஷன் என்பவன் குருவைப் போலவே (2)
தனக்காய் வாழாமல் தன்னையும் தருவானே (2)
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும் – 2 (…ஹாலேலூயா)

4. விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன் (2)
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன் (2)
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மை உள்ளவன் என்றழைப்பீர் – 2 (…ஹாலேலூயா)

Siluvai Sumanthoraai Seeshanaaguvom (2)
Sinthai Vaazhvilum Thaazhmai Tharippom
Ninthai Sumappinum Santhosham Kolvom – 2

Yesu Thaanguvaar Avare Sumappaar
Orupothum Kaividave Maattaar – 2

Haaleluyaa (4) (…Yesu Thaanguvaar)

1. Sontham Banthangal Sollaal Kollalaam (2)
Maattror Sathiseithu Mathippai Kedukkalaam (2)
Avarukkaagave Anaiththum Izhanthaalum
Athai Magimai Endrenniduven – 2 (…Haaleluyaa)

2. Vaazhvum Yesuve Saavum Laabame (2)
Avar Perugavum Naan Sirugavum Vendume (2)
Kirubai Tharugiraar Viruthaavaakkiden
Athai Niththamum Kaaththukkolven – 2 (…Haaleluyaa)

3. Seeshan Enbavan Guruvai Polave (2)
Thanakkaai Vaazhaamal Thannaiyum Tharuvaane (2)
Paraloga Sinthai Kondu Umakkaai
Paniseiven Naan Anuthinamum – 2 (…Haaleluyaa)

4. Vinnai Vittu En Kannai Agattriden (2)
Mannin Vaazhvaiyum Kuppaiyaai Ennukiren (2)
Vinnin Vaarthaikku Ennai Tharukiren
Unmai Ullavan Endrazhaippeer – 2 (…Haaleluyaa)

Visuvaasiye Ninaithuppaar – விசுவாசியே நினைத்துப்பார்

Visuvaasiye Ninaithuppaar

விசுவாசியே நினைத்துப்பார்
நிலைப்பவைகளை நாடு
நித்திய ஜீவன் பெற

ஓடி வருவாயே இன்றே
பாடி மகிழ்வாயே அன்றே – 2 (…விசுவாசியே)

1. அறுப்பு மிகுதி ஆளோ இல்லை
வெறுப்பில் அலையும் மாந்தர் மிகுதி – 2
நினைத்து புலம்பி அலைந்து தேடு (2)
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே (2) (…விசுவாசியே)

2. நீ போகாவிடில் யார் போவார்
இப்போதில்லாவிடில் எப்போ – 2
கணக்கு கேட்பார் என்ன செய்வாய் (2)
கண்ணீர் விடுவாயோ கர்த்தரை கண்டு (2) (…விசுவாசியே)

3. நீ பேசாவிடில் கற்கள் பேசும்
நீ இல்லாவிடில் வேறே யாரோ – 2
மனம் திரும்பு உலகத்தை விட்டு (2)
செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே (2) (…விசுவாசியே)

4. வருகையின் நாள் சமீபமே
வல்லமை தேவன் வெளிப்படவே – 2
பூமி அழியும் பூதலம் எரியும் (2)
சேர்த்திட்ட பொக்கிஷம் யாருக்கு சேரும் (2) (…விசுவாசியே)

Visuvaasiye Ninaiththuppaar
Nilaippavaigalai Naadu
Niththiya Jeevan Pera

Odi Varuvaaye Indre
Paadi Magizhvaaye Andre – 2 (…Visuvaasiye)

1. Aruppu Miguthi Aalo Illai
Veruppil Alaiyum Maanthar Miguthi – 2
Ninaiththu Pulambi Alainthu Thedu (2)
Seyalpattaal Indre Magizhuvaai Andre (2) (…Visuvaasiye)

2. Nee Pogaavidil Yaar Povaar
Ipothillaavidil Eppo – 2
Kanakku Ketpaar Enna Seivaai (2)
Kanneer Viduvaayo Karththarai Kandu (2) (…Visuvaasiye)

3. Nee Pesaavidil Karkal Pesum
Nee Illaavidil Vere Yaaro – 2
Manam Thirumbu Ulagaththai Vittu (2)
Seyalpattaal Indre Magizhuvaai Andre (2) (…Visuvaasiye)

4. Varugaiyin Naal Sameebame
Vallamai Devan Velippadave – 2
Boomi Azhiyum Boothalam Eriyum (2)
Serththitta Pokkisham Yaarukku Serum (2) (…Visuvaasiye)

Thuthi Umakke Yesu Naathaa – துதி உமக்கே இயேசு நாதா

Thuthi Umakke Yesu Naathaa

துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உம்மையே – 2
நித்தமும் காத்திடும் கிருபைகளையே
எண்ணியே துதித்திடுவோம் – 2

1. கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை
காருண்யத்தாலே காத்தீரே – 2
வல்ல தேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம் – 2 (…துதி)

2. ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
ஜீவனை வைத்தே துதித்திடவே – 2
நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் – 2 (…துதி)

3. உன்னதர் உந்தன் மகிமையைக் காண
சீயோனை எமக்கு காட்டினீரே – 2
இயேசுவே உந்தன் வருகையின் நாளை
எண்ணியே துதித்திடுவோம் – 2 (…துதி)

4. ஆதி அந்தமில்லா அனாதி தேவனே
அடைக்கலமானீர் எமக்கு நீரே – 2
மாறா விசுவாசத்தை எமக்கு தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் – 2 (…துதி)

5. தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தந்தை போல் எம்மை சுமந்தீரே – 2
ஜீவனை தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம் – 2 (…துதி)

Thuthi Umakke Yesu Naathaa
Vaazhththiduvom Ummaiye – 2
Niththamum Kaaththidum Kirubaigalaiye
Enniye Thuthiththiduvom – 2

1. Kadantha Naalellaam Vazhuvaamal Emmai
Kaarunyaththaale Kaaththeere – 2
Valla Devane Um Vaakkukalaiye
Enniye Thuthiththiduvom – 2 (…Thuthi)

2. Jeyam Pettroraai Sevai Seithu
Jeevanai Veiththe Thuthiththidave – 2
Niththiya Jeevanai Emakku Thantheere
Enniye Thuthiththiduvom – 2 (…Thuthi)

3. Unnathar Unthan Magimaiyai Kaana
Seeyonai Emakku Kaattineere – 2
Yesuve Unthan Varugaiyin Naalai
Enniye Thuthiththiduvom – 2 (…Thuthi)

4. Aathi Anthamillaa Anaathi Devane
Adaikalamaaneer Emakku Neere – 2
Maaraa Visuvaasaththai Emakku Thantheere
Enniye Thuthiththiduvom – 2 (…Thuthi)

5. Thaayinum Melaai Anbu Koorntheer
Thanthai Pol Emmai Sumantheere – 2
Jeevanai Thantha Um Anbinaiye
Enniye Thuthiththiduvom – 2 (…Thuthi)

Neer Illaatha Vaazhkai Ennil – நீர் இல்லாத வாழ்க்கை என்னில்

Neer Illaatha Vaazhkai Ennil

நீர் இல்லாத வாழ்க்கை என்னில் வேண்டாம்
உம்மை காணும் கண்கள் என்னில் தாரும் – 2

கிருபை வேண்டும் (3) என் ஏசுவே

யோசேப்பை போல இப்பூமியில்
பரிசுத்த வாழ்க்கை நான் வாழ்ந்திட (…கிருபை)

என் மேல் நீர் கொண்ட தரிசனத்தை
அனுதினம் நான் வாழ்ந்து நிறைவேற்றிட (…கிருபை)

Neer Illaatha Vaazhkkai Ennil Vendaam
Ummai Kaanum Kangal Ennil Thaarum – 2

Kirubai Vendum (3) En Yesuve

Yoseppai Pola Ippoomiyil
Parisuththa Vaazhkkai Naan Vaazhnthida (…Kirubai)

En Mel Neer Konda Tharisanaththai
Anuthinam Naan Vaazhnthu Niraivettrida (…Kirubai)

Sthothirathode Keerthanam – ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம்

Sthothirathode Keerthanam

ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு.. ஓ! பாடு!
துதிகனம் மகிமை சேர்த்து செலுத்தி.. ஓ! பாடு!
நெற்றித் தரைதொட வீடிநந்து.. பணிந்து ஓ! பாடு!
ஆவி ஆன்மா தேகம் தாழ்த்தி.. ஓ! பாடு!
ஆசைபொங்க அர்ப்பணத்தோடு ஓ! பாடு!
கிருபை சத்தியம் சேர்ந்திசைந்து ஓ! பாடு!

அல்லேலூயா துதி முழங்கு
ஆண்டவர் செயலைச் சொல்லி முழங்கு – 2
அல்லேலூயா துதி முழங்கு!

1. மூவரு கடவுளை முதற்கண் வாழ்த்து.. ஓ! வாழ்த்து!
மூவருக்கும் தனித்துவமுண்டு.. ஓ! வாழ்த்து!
சுயம்புவாய் அவர் அநாதிதேவன்.. ஓ! வாழ்த்து!
நிகரில்லாதவர் நித்தியர் அவரை.. ஓ! வாழ்த்து!
இயேசுவையன்றி மீட்பரில்லையே.. ஓ! வாழ்த்து!

2. ஆற்றல்மிக்கவர் தூய ஆவியை.. ஓ! போற்று!
ஆனந்த தைலத்தால் நம்மை.. நிரப்பினார் ஓ! போற்று
சிங்காரிக்கும் அழகு சீலனை.. ஓ! போற்று!
சுத்தாங்கத்தை உடுத்தி மகிழ்ந்தே.. ஓ! போற்று!
முடிவில்லாதவர் மகிமை நாதனை.. ஒ! போற்று
இராஜ கம்பீர களையுடன்..வாழ்ந்து ஓ! போற்று

Sthothiraththode Keerththanam Paadu.. Oh! Paadu!
Thuthikanam Magimai Serththu Seluththi.. Oh! Paadu!
Nettri Tharaithoda Veedinanthu.. Paninthu Oh! Paadu!
Aavi Aanmaa Thegam Thaazhththi.. Oh! Paadu!
Aasai Ponga Arppanaththodu Oh! Paadu!
Kirubai Saththiyam Sernthisainthu Oh! Paadu!

Alleluyaa Thuthi Muzhangu
Aandavar Seyalai Solli Muzhangu – 2
Alleluyaa Thuthi Muzhangu

1. Moovaru Kadavulai Mutharkan Vaazhththu.. Oh! Vaazhththu!
Moovarukkum Thaniththuvamundu.. Oh! Vaazhththu!
Suyambuvaai Avar Anaathidevan.. Oh! Vaazhththu!
Nigarillaathavar Niththiyar Avarai.. Oh! Vaazhththu!
Yesuvaiyandri Meetparillaiye.. Oh! Vaazhththu!

2. Aattralmikkavar Thooya Aaviyai.. Oh! Pottru!
Aanantha Thailaththaal Nammai.. Nirappinaar Oh! Pottru!
Singaarikkum Azhagu Seelanai.. Oh! Pottru!
Suththaangaththai Uduththi Magizhnthe.. Oh! Pottru!
Mudivillaathavar Magimai Naathanai.. Oh! Pottru!
Raaja Kambeera Kalaiyudan.. Vaazhnthu Oh! Pottru!