Song Category: Tamil

Aayathamaa Aayathamaa – ஆயத்தமா ஆயத்தமா

Aayathamaa Aayathamaa
ஆயத்தமா ஆயத்தமா
இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா
அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா

1. மணவாட்டி போல நீ காத்திருந்தால்
அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்
மேகங்கள் மீதினில் வந்திடுவார் – உன்னை
மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்
புவியை வெறுத்திட ஆயத்தமா
அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா

2. நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் – உன்
பாவங்கள் இன்று தலை தூக்கினால்
பரலோக கனவுகள் பாழாகுமே – உந்தன்
பாடுகள் அனைத்துமே வீணாகுமே
நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா – அட
இன்று போல் நாளையும் ஆயத்தமா

Aayathamaa Aayathamaa
Irandaam Varugaikku Aayathamaa
Avar Eppodhum Varalaam Aayathamaa

1. Manavaati Pola Nee Kaathirundhaal – Avar
Naamathai Dhinamum Potrirundhaal
Megangal Meedhinil Vandhiduvaar – Unnai
Motchathirk Azhaithu Sendriduvaar
Puviyai Veruthida Aayathamaa – Andha
Paranai Patrikolla Aayathamaa

2. Netru Varaikkum Nee Nanmai Seithum – Un
Paavangal Indru Thalai Thookinaal
Paraloga Kanavugal Paazhaagumay – Undhan
Paadugal Anaithumay Veenagumay
Netraipol Indrum Nee Aayathamaa – Ada
Indru Pol Naalaiyum Aayathamaa

Vakku Panninavar Maridar – வாக்குப் பண்ணினவர் மாறிடார்

Vakku Panninavar Maridar
வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

1. அவர் மனிதனல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்கு மறப்பதில்லையே
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

2. காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத் தத்தங்கள் – உன்
வாழ்வினில் தொலைந்ததோ
வாக்குத் தந்தவர் சிறந்தவர்
சிறந்ததைத் தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

Vaakku Panninavar Maaridaar
Vaakkuthatham Niraivaetruvaar
Sornthu Pokaathae – Nee
Sornthu Pokaathae
Unnai Alaithavar Unnmaiyullavar

1. Avar Manithanallavae
Poi Solvathillaiyae
Avar Unnmaiyullavar
Vaakku Marappathillaiyae
Vaakku Thanthavar Siranthavar
Siranthathai Tharubavar
Yemaatrangal Illaiyae

2. Kaalangal Kadanthatho
Thaamatham Aanatho
Vaakku Thathangal – Un
Vaalvinil Tholainthatho
Vaakku Thanthavar Siranthavar
Siranthathai Tharubavar
Yemaatrangal Illaiyae

Neer En Sontham – நீர் என் சொந்தம்

Neer En Sontham
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே

1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என்

2. நெ‌‌‌‌‍ரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுவார்
விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்

Yesu Azhaikiraar – இயேசு அழைக்கிறார்

Yesu Azhaikiraar
இயேசு அழைக்கிறார் – 2
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் – 2

1. எத்துன்ப நேரத்திலும்
ஆறுதல் உனக்களிப்பார் – 2
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் – 2 (இயேசு அழைக்கிறார்)

2. கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணிபோல் காப்பார் – 2
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கனிவோடே உன்னைக் காத்திடவே – 2 (இயேசு அழைக்கிறார்)

3. சோர்வடையும் நேரத்தில்
ஆறுதல் உனக்களிப்பார் – 2
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் – 2 (இயேசு அழைக்கிறார்)

4. சகல வியாதியையும்
குணமாக்க வல்லவராம் – 2
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே – 2 (இயேசு அழைக்கிறார்)

Yesu Azhaikiraar – 2
Aavalaai Unnai Tham Karangal Neetiye
Yesu Azhaikiraar – 2

1. Yeththumba Nerathilum
Aaruthal Unakkalippaar – 2
Endrunarnthu Neeyum Yesuvai Nokkinaal
Yellai Illaa Inbam Pettriduvai – 2 (Yesu Azhaikiraar)

2. Kaneerellam Thudaipaar
Kanmanipol Kaappaar – 2
Kaarmegam Pondra Kashtangal Vandhaalum
Kanivode Unnai Kaathidave – 2 (Yesu Azhaikiraar)

3. Sorvadaiyum Neraththil
Aaruthal Unakkalippaar – 2
Avar Un Velichcham Ratchippumaanathaal
Thaamathamindri Nee Vanthiduvaay – 2 (Yesu Azhaikiraar)

4. Sagala Vyathiyaium
Kunamaakka Vallavaraam – 2
Yaarayirunthaalum Pethangal Indriye
Kirubaiyaai Anbai Alithidave – 2 (Yesu Azhaikiraar)

Thanthanai Thuthipome – தந்தானைத் துதிப்போமே

Thanthanai Thuthipome
தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச் சீயோனே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை

2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை

3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை

4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
தூரம் திரிந்த சீயோனே
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) – தந்தானை

5. சிங்காரக் கன்னிமாரே – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
சிங்காரக் கன்னிமாரே
மங்காத உம் மணவாளன் இயேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை

Thandhaanai thudhipoamae – thiru
Sabaiyaarae kavi – paadippaadi
Thandhaanai thudhipoamae
Vindhaiyaai namakkanandhanandhamaana
Villarkariyadhoar nanmai miga miga (2) – Thandhaanai

1. Oyyaarathu seeyoanae – neeyum
meiyaaga kalikoorndhu naerndhu
Oyyaarathu seeyoanae
Aiyanaesukunin kaiya kooppi thuthi
Seiguvaiyae magizh kolluvaiyae naamum (2) – Thandhaanai

2. Kannaara kalithaayae – nanmai
Kaatchiyai kandu rusithu pusithu
Kannaara kalithaayae
Ennukkadangaadha ethanaiyoa nanmai
innumunmaer soanaa maarippoar peidhumae (2) – Thandhaanai

3. Suthaangathu narsabaiyae – unai
Mutraai kollavae alaindhu thirindhu
Suthaangathu narsabaiyae
Satthu kulaindhunai sakthiyaakka thammin
Rathathai sindhiyeduthae uyir varam (2) – Thandhaanai

4. Dhooram thirindha seeyoanae – unai
Thookkiyeduthu karathinilaendhi
Dhooram thirindha seeyoanae
Aarangal pootti alangarithu ninnai
Atthan manavaatti yaakkinadhu ennai (2)– Thandhaanai

5. Singaara kannimaarae – um
Alangaara kummi adithu padithu
Singaara kannimaarae
Mangaadha um manavaalan yaesudhanai
Vaazhthi vaazhthi aetthi panindhidum – Thandhaanai

Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம்

Thuthithu Paadiduvom
துதித்து பாடிடுவோம் தாவீதை போல
நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2)

1. எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு
தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார் – துதித்து

2. மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்
முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் – துதித்து

3. இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்
மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம் – துதித்து

Naan Paavi Thaan – நான் பாவி தான்

Naan Paavi Thaan
1. நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

2. நான் பாவி தான் என் நெஞ்சிலே
கறைபிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

3. நான் பாவி தான் – பயத்தினால்
அலைந்து பாவப்பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

4. நான் பாவி தான் – மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
உம்மாலே பெற்று வாழவும்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

5. நான் பாவி தான் இரங்குவீர்
அணைத்துக் காத்து இரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

6. நான் பாவி தான் – அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன் – வந்தேன்

Sthotharipaen Sthotharipaen – ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

Sthotharipaen Sthotharipaen
1. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

2. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

3. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன்

4. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

5. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

6. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

7. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்
சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

Kuyavanae Um Kaiyil – குயவனே உம் கையில்

Kuyavanae Um Kaiyil
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் -2
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே -2

1. என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில் -2

2. உம் சேவைக்காக எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே -2

3. உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம்போல் – உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே -2

4. உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட எனை மாற்றுமே – ஓய்வின்றி
உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே -2

Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி

Thirukarathal Thangi Ennai
1. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே

2. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

3. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

4. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை

1. Thirukkarathaal thaangi ennai
Thirusitham poal nadathidumae
Kuyavan kaiyil kaliman naan
Anudhinamum neer vanaindhidumae

2. Um vasanam dhiyaanikkaiyil
Idhayamathil aarudhalae
Kaarirulil nadakkaiyilae
Theebamaaga vazhi nadathum

3. Aazhkadalil alaigalinaal
Asaiyumpoadhu en padagil
Aathma nanbar yaesu undae
Saerndhiduvaen avar samoogam

4. Avar namakkaai jeevan thandhu
Alithanarae indha meetpu
Kangalinaal kaangiraenae
Inba kaanaan dhaesamadhai