1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு
2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்
3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்
4. அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவேன்
நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்
Maritha Yesu Uyirthu Vittar Alleluyaa
Mannan Yesu Jeevikkiraar Alleluyaa
Naan Unnai Vittu Vilaguvathillai
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன் – 2
1. பயப்படாதே நீ மனமே
நான் காத்திடுவேன் உன்னை தினமே – 2
அற்புதங்கள் நான் செய்திடுவேன் (2)
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் (2) (…நான் உன்னை)
2. திகையாதே கலங்காதே மனமே
நான் உன்னுடனிருக்க பயமேன் – 2
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் (2)
உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் (2) (…நான் உன்னை)
3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்
நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் – 2
அத்திமரம் போல் செழித்திடுவாய் (2)
நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் (2) (…நான் உன்னை)
4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே – 2
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய் (2)
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய் (2) (…நான் உன்னை)