Song Tags: Tamil Resurrection Song Lyrics

Easter Tamil Song Lyrics Index:
1. Aa Varum Naam Ellarum Koodi – வாரும் நாம் எல்லோரும் கூடி
2. Alleluyaa! Alleluyaa! – அல்லேலூயா! அல்லேலூயா!
3. Amen Alleluia – ஆமென் அல்லேலூயா
4. Christhaesu Uyirthezhunthar – கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்
5. Deva Aattu Kuttiyin – தேவ ஆட்டு குட்டியின் இரத்தம் ஜெயம்
6. Elunthar Iraivan – எழுந்தார் இறைவன்
7. En Meetpar Kiristu Uyirthelunthar – என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்
8. En Meetpar Uyirodu – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
9. En Meetpar Uyirodu Undu – என் மீட்பர் உயிரோடுண்டு
10. Enakkai Jeevan Vittavarae – எனக்காய் ஜீவன் விட்டவரே
11. Enni Enni Paar – எண்ணி எண்ணிப் பார்
12. Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய
13. Hosanna Paadi Paadi – ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி
14. Inba Yesu Raja Vai Naan Parthal Pothum – இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
15. Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்
16. Jaithuvitaar Maranathai – ஜெயித்து விட்டார் மரணத்தை
17. Jeeva Kristhu Uyirthelunthar – ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
18. Karthar En Nambikkai – கர்த்தர் என் நம்பிக்கை
19. Karthar Uyirthelundar – கர்த்தர் உயிர்த்தெழுந்தார் இன்னும்
20. Karthar Uyirthelunthaar – கர்த்தர் உயிர்த்தெழுந்தார்
21. Mannuyirekaaga Thannuyir – மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
22. Maraname Un Koor Enge – மரணமே உன் கூர்
23. Maritha Yesu – மரித்த இயேசு உயிர்த்து விட்டார்
24. Mesiya Yesu Raja – மேசியா இயேசு ராஜா அவர்
25. Muzhangaal Nindru Naan – முழங்கால் நின்று நான்
26. Naan Aarathikum Yesu – நான் ஆராதிக்கும் இயேசு
27. Nandri Bali Peedam Kattuvom – நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
28. Oru Kutram Kooda – ஒரு குற்றம் கூட செய்யாத
29. Paranthu Kaakum Patchiyaipola – பறந்து காக்கும் பட்சியைபோல
30. Parisuthar Yesu – பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
31. Rajathi Raja Vai Kondaduvom – ராஜாதி ராஜாவை
32. Sarva Valla Devane – சர்வ வல்ல தேவனே
33. Sarva Vallavar – சர்வ வல்லவர்
34. Senaiyathiban Nam Kartharukke – Jeya Kristhu Mun Selgiraar – சேனையதிபன் நம் கர்த்தருக்கே
35. Sonnapadi Uyirthelunthaar – சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
36. Uyirodu Elunthavare Ummai Arathanai – உயிரோடு எழுந்தவரே
37. Uyirodu Ezhuntha Yesuve – உயிரோடு எழுந்த இயேசுவே
38. Uyirodu Ezhunthavar – உயிரோடு எழுந்தவர் நம்
39. Uyirtheluntha Naam Yesu – உயிர்தெழுந்த நம் இயேசு
40. Uyirthelunthare Alleluia – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
41. Uyirthezhunthar Nam Yesu – உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
42. Uyirthezhunthar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு
43. Venranare Nam Yesu – வென்றனரே நம் இயேசு
44. Yeshuva Avar Ezhundhittar – இயேஷுவா அவர் எழுந்திட்டார்
45. Yutha Raja Singam – யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

Hosanna Paadi Paadi – ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி

Hosanna Paadi Paadi
ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி
ஆத்துமா ஆடிப்பாட வாஞ்சிக்குதே
நிலையில்லா இந்த வாழ்வில்
அளவில்லா அன்பு செய்தீர்
சாட்சியாக நானிருந்து உந்தன்
அன்பை எடுத்துச் சொல்வேன்

ஆவியானவர் அன்பின் ஆண்டவர்
அடிமையெனக்காய் மனிதனானீர்
களிமண்ணாலே வனைந்த என்னை
கழுவியெடுக்க குருதி ஈந்நீர்
சிந்திய இரத்த எனக்காயல்லோ
பொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோ
உம்மைப் போல் ஆண்டவர் யருமில்லை
உமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லை
உம்மையல்லால் ஒரு வாழ்வும் எனக்கில்லை

வான தூதர்கள் வாழ்த்துப் பாடிட
வாகை சூடி வானில் வருவீர்
மேகக் கூட்டங்கள் மேளம் முழங்க
மகிமையோடு இறங்கி வருவீர்
காத்திருந்தவை கண்டு மகிழ
கர்த்தரோடு வானில் எழும்ப
இன்பமோ துன்பமோ இனிவரும் நாளில்
என் இருதயத்தால் என்றும்
ஸ்தோத்தரிப்பேன் நீர் வரும் வரை
உம் வழி நிலைத்திருப்பேன்

Hosanna Paadi Paadi Naesarai Thaeti
Aaththumaa Aatippaada Vaanjikkuthae
Nilaiyillaa Intha Vaalvil
Alavillaa Anpu Seytheer
Saatchiyaaka Naanirunthu Unthan
Anpai Eduththuch Solvaen

Aaviyaanavar Anpin Aanndavar
Atimaiyenakkaay Manithanaaneer
Kalimannnnaalae Vanaintha Ennai
Kaluviyedukka Kuruthi Eenneer
Sinthiya Iraththa Enakkaayallo
Ponnum Velliyin Vilaithaan Thakumo
Ummaip Pol Aanndavar Yarumillai
Umathanpukku Eedaay Ethuvumillai
Ummaiyallaal Oru Vaalvum Enakkillai

Vaana Thootharkal Vaalththup Paatida
Vaakai Sooti Vaanil Varuveer
Maekak Koottangal Maelam Mulanga
Makimaiyodu Irangi Varuveer
Kaaththirunthavai Kanndu Makila
Karththarodu Vaanil Elumpa
Inpamo Thunpamo Inivarum Naalil
En Iruthayaththaal Entum
Sthoththarippaen Neer Varum Varai
Um Vali Nilaiththiruppaen

Oru Kutram Kooda – ஒரு குற்றம் கூட செய்யாத

Oru Kutram Kooda
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு
தெய்வம்- இயேசு மட்டும் தான்
தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த
ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான்

சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட
மன்னித்த பெரிய தெய்வம்
மரித்த பின்பு உயிரோடு எழுந்த
ஒரே ஒரு தெய்வம்

எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த
எல்லாம் வல்ல தெய்வம்
உலகத்தைப் படைத்தவர்
வணக்கத்துக்குரியவர்
ஒரே ஒரு தெய்வம்

செத்துப் போன உடலுக்குள்ளே
உயிரை வைத்த தெய்வம்
ஆகாரமில்லா அனாதைகட்கு
அடைக்கலமான தெய்வம்

Oru Kutram Kooda Seiyaatha Orae Oru
Dheivam – Yesu Mattum Thaan
Than Ethirikalukkaai Uyirai Kodutha
Orae Oru Dheivam Yesu Mattum Thaan

Siluvaiyil Thannai Arainthavaraikooda
Mannitha Periya Dheivam
Maritha Pinpu Uyirodu Eluntha
Orae Oru Theyvam

Engum Niraintha Ellaam Arintha
Ellaam Valla Dheivam
Ulakathai Pataiththavar
Vanakathukuriyavar
Orae Oru Dheivam

Setthu Pona Udalukullae
Uyirai Vaitha Dheivam
Aakaaramillaa Anaathaikatku
Ataikalamaana Dheivam

Mannuyirekaaga Thannuyir – மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க

Mannuyirekaaga Thannuyir
மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் வந்தார்

இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே
ஏகபராபரன் வந்தார் வந்தார்

வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்
மகிமைப் பராபரன் வந்தார் வந்தார்

நித்திய பிதாவின் நேய குமாரள்
நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார்

மெய்யான தேவன் மெய்யான மனுடன்
மேசியா ஏசையா வந்தார் வந்தார்

தீவினை நாசர் பாவிகள் நேசர்
தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார்

ஜெய அனுகூலர் திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் வந்தார்

Mannuyirekaaga Thannuyir Vidukka
Valla Paraaparan Vanthaar Vanthaar

Innilam Purakka Unnathath Thirunthae
Aekaparaaparan Vanthaar Vanthaar

Vaanavar Panniyunj Senaiyin Karuththar
Makimai Paraaparan Vanthaar Vanthaar

Nithiya Pithaavin Naeya Kumaaral
Naemi Anaiththum Vaala Vanthaar Vanthaar

Meyyaana Thaevan Meyyaana Manudan
Maesiyaa Yesaiyaa Vanthaar Vanthaar

Theevinai Naasar Paavikal Naesar
Thaeva Kiristhaiyaa Vanthaar Vanthaar

Jeya Anukoolar Thivviya Paalar
Thiru Manuvaelanae Vanthaar Vanthaar

Marithavar Uyirthaar – மரித்தவர் உயிர்த்தார்

Marithavar Uyirthaar
மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
மரணத்தை இயேசு ஜெயித்தார்

1. பேய்கள் அலறிட
நோய்கள் பறந்திட
பாதாள வல்லமைகள் பதறிட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

2. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
பாவத்தின் பெலனை அழித்திட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

3. கிறிஸ்து உயிர்த்ததால்
விசுவாசம் பிறந்தது
உயிர்த்தெழுதலின் முதற்பலனாக
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

Karthar Uyirthelunthaar – கர்த்தர் உயிர்த்தெழுந்தார்

Karthar Uyirthelunthaar
கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – இன்னும்
கல்லறை திறந்திருக்க
நற்செய்தி தரிசனங்கள்
சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம்

1. காரிருளில் கண்ணீருடன்
கல்லறை நோக்கியே சென்றனரே
அற்புதக் காட்சியும் கண்டிட ஸ்திரீகள்
ஆச்சர்யம் அடைந்தனரே

2. மரியாளே என்ற சத்தம்
மா திகைப்பாய் அவள் கேட்டிடவே
ரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி
ரபூனி என்றழைத்தான்

3. பயந்திடவே சீஷர்களே
பூட்டின உள்ளறை தங்கினரே
மெய்ச் சமாதானத்தின் வாக்குகள் கூறி
மேசியா வாழ்த்தி சென்றார்

Karthar Uyirthelunthaar – Innum
Kallarai Thiranthirukka
Narseythi Tharisanangal
Saatri Keerthanam Panniduvom

1. Kaarirulil Kannnneerudan
Kallarai Nokkiyae Sentanarae
Arputha Kaatchiyum Kantida Sthirekal
Aacharyam Adainthanarae

2. Mariyalae Endra Satham
Maa Thikaipaai Aval Kaetidavae
Ratchakar Tharisanam Kandu Munnodi
Rapooni Endralaithaan

3. Payanthidavae Sesharkalae
Pootina Ullarai Thanginarae
Mei Samaathaanathin Vaakkukal Koori
Messiyaa Vaalthi Sendaar

Uyirodu Ezhunthavar – உயிரோடு எழுந்தவர் நம்

Uyirodu Ezhunthavar
உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே – 2

ஜெயித்தவர் மரணம் ஜெயித்தவர்
உயிர்த்தார் உயிரோடெழுந்தார் – 2

1. கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
சாத்தானை ஜெயித்தவர் உயிருடன் எழுந்தாரே – உயிரோடு

2. வல்லமை உடையவர் சாபத்தை முறித்திட
நோய்களை தீர்த்திட வீரமாய் எழுந்தாரே – உயிரோடு

3. புதுபெலன் அடைந்திட சாட்சியாய் மாறிட
அபிஷேகம் செய்பவர் மகிமையாய் எழுந்தாரே – உயிரோடு

Sarva Valla Devane – சர்வ வல்ல தேவனே

Sarva Valla Devane
சர்வ வல்ல தேவனே என் இயேசுவே
சாவை வென்ற தேவனே என் இயேசுவே
அல்லேலூயா உயிர்த்தார் அல்லேலூயா (2)

1. பூமி மிகவும் பலமாக அதிரவே
தூதன் வானத்திலிருந்து இறங்கவே
கல்லறையின் கல் புரண்டு ஓடவே
காவலர் திடுக்கிட்டு நடுங்கவே

2. வேதாள கணங்கள் யாவும் ஓடவே
பாதாள சேனைகளும் நடுங்கவே
நித்திய நம்பிக்கை நமக்கு நல்கவே
நித்தமும் நம்மை வழி நடத்தவே

3. மரியாள் இயேசுவையே காணவே
மா திகைப்பாய் மனம் மகிழ்ந்தழைக்கவே
தோமாவும் சந்தேகத்தால் திகைக்கவே
உண்மையை கண்டு உள்ளம் பூரிக்கவே

Karthar En Nambikkai – கர்த்தர் என் நம்பிக்கை

Karthar En Nambikkai
கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

அல்லேலூயா அல்லேலூயா (4)

1. வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
பாதாளக் கட்டுகள் கழன்று போனது
பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

2. சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே

Karthar En Nambikkai Thurukamaanavar
Kanmalai Kottaiyum Iratchippumaanavar
Ataikkalam Pukalidam Kaedakam Entar
Aapaththu Naalil En Apayamumaavaar

Alleluyaa Alleluyaa (4)

1. Vaanam Asainthathu Poomi Athirnthathu
Paathaala Kattukal Kalantu Ponathu
Paarthalaththin Raajan Uyirthelunthaarae
Karthar Karthar Entu Poomi Mulanguthae

2. Samuththiraththin Mael Athikaaramutaiyavar
Sannithi Pirakaaraththin Akkiniyaanavar
Singaanam Entumaay Veettirukkavae
Siluvaiyil Mariththu Uyirthelunthaarae

Parisuthar Yesu – பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்

Parisuthar Yesu
பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
புகழ் செலுத்தி மகிழ்வோம்
அன்றதி காலை மூன்றாம் நாளில்
சொன்னபடி எழுந்தார்

1. சடுதி பூமி அதிர்ந்ததே
சரீரம் வைத்த கல்லறை
அற்புதமாகத் திறந்திடவே
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
தேவனின் வல்ல செயலிதுவே
தேவனால் கூடாததொன்றுமில்லை
கலங்கிடாமல் நம்பிடுவோம்
கைவிடமாட்டார் கடைசி வரை – பரிசுத்தர்

2. அழிவைக் காணார் பரிசுத்தர்
அகல பாதாளம் வென்றார்
பூமியிலே தாழ்விடங்களிலே
புண்ணியராக இறங்கினாரே
சிறைப் பட்டவரை சிறையாக்கி
சிறந்த வரங்கள் அளித்தாரே
வானாதி வானம் ஏறினாரே
வலது பாரிசம் வீற்றிடவே – பரிசுத்தர்

3. பரிசுத்தாவி பெலத்தினால்
மரித்தவர் எழுந்தாரே
சரீரமாம் தம் திருச்சபை மேல்
சத்திய ஆவி பொழிந்தனரே
ஆவியால் தேவன் இறங்கிடவே
ஆவியால் தேகம் நிரம்பிடுதே
ஆகமதில் உலவுகின்றார்
ஆனந்த பாக்கியம் அடைகிறோமே – பரிசுத்தர்

4. பரம சீயோன் சேருவோம்
மரணமோ நம் ஜீவனோ
கடைசி நேரம் கேட்டிடுவோம்
எக்காள சத்தம் முழங்கிடுமே
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தவர்கள்
கல்லறை திறக்க எழும்பிடவே
மறுரூபம் கண்ணிமைப் பொழுதே
மகிமை அடைந்தே பறந்து செல்வோம் – பரிசுத்தர்

Alleluyaa! Alleluyaa! – அல்லேலூயா! அல்லேலூயா!

Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! அல்லேலூயா!
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
1. கல்லறையின் கல் திறந்திடவே
காவலர் நடுங்கிடவே
கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
களிப்புடன் பாடியே ஆர்ப்பரிப்போம்

2. வானத்தின் சேனை துதித்திடவே
வேதாள கணங்கள் ஓடிடவே
முன்னுரைத்த வாக்கின்படி
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தார்

3. பார்தலம் யாவும் படைத்தவரை
பூமியும் தாங்கிடுமோ
ரூபித்தாரே தேவனென்று
மரணத்தை வென்று எழுந்தது

4. மரித்தவர் ஓர் நாள்
எழும்பிடுவர் மா தேவன்
இயேசுவைப் போல் பாக்கியமாம்
வாழ்வினையும் பரிசுத்தர்
இயேசு அளித்திடுவார்

5. சீயோனின் ராஜனாய் வந்திடுவார்
மத்திய வானத்திலே
தாம் வரும் அந்நாளினிலே
மகிமையின் சாயலாய் மாற்றிடு