Song Category: Tamil

Kalvari Mamalai Mel – கல்வாரி மா மலைமேல் கை

Kalvari Mamalai Mel
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருகிற் றென் மனதை

அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்

கர்த்தரின் சத்தமத்தை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே

Song Lyrics & Tune Composed by Rev. S. Devadason, Former Editor, Varukayin Thoothan & CSI Pastor at Karungal, Kannanore at the period of Bishop Gnanadason, KK Diocese.

Deva Kumara Deva Kumara – தேவ குமாரா தேவ குமாரா

Deva Kumara Deva Kumara
தேவகுமாரா தேவகுமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க X 2
நீங்க நெனச்சா ஆசீர்வாதம் தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான் X 2

பிழைக்க தெரியாதவன் நான்
அது உமக்கே தெரியும்
எதற்கும் உதவாதவன் நான்
என் உறவே அறியும் X 2
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது X 2
நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது X 2 (…தேவகுமாரா)

தேவகுமாரா என் நேச தந்தையே
துதி உமக்கே எல்லா கனமும் உமக்கே

உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
அது உமக்கே தெரியும்
உம்மை மறுதளித்தவன் நான்
என் உலகே அறியும் X 2
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2 (…தேவகுமாரா)

உடைந்த பாத்திரம் நான்
அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர்
இது யாருக்கு புரியும் X 2
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2 (…தேவகுமாரா)

Devakumaaraa Devakumaaraa
Enna Nenachidunga
Devakumaaraa Devakumaaraa
Konjam Nenachidunga
Neenga Nenacha Aasirvaatham Thaan
Enna Maranthaa Enge Poven Naan X 2

Pizhaikka Theriyaathavan Naan
Adhu Umakke Theriyum
Edharkkum Udhavaathavan Naan
En Urave Ariyum
Udhavaathu En Needhi Udhavaathu
Neenga Illaama En Pozhuthum Vidiyaathu X 2
Neenga Illaama En Pozhuthum Vidiyaathu X 2 (… Devakumaaraa)

Devakumaaraa En Nesa Thanthaiye
Thuthi Umake Ellaa Ganamum Umake X 2

Ummai Maranthu Vaazhthavan Naan
Adhu Umakke Theriyum
Ummai Maruthaliththavan Naan
En Ulage Ariyum X 2
Udhavaathu En Needhi Udhavaathu
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2 (… Devakumaaraa)

Udaintha Paaththiram Naan
Adhu Umakke Theriyum
Devan Payanpaduththukireer
Idhu Yaaruku Puriyum X 2
Udhavaathu En Needhi Udhavaathu
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2 (… Devakumaaraa)

Vaalibam Unnai Izhukudho – வாலிபம் உன்னை இழுக்குதோ

Vaalibam Unnai Izhukudho
வாலிபம் உன்னை இழுக்குதோ
வானத்தைத் தொடத் துடிக்குதோ
பாவங்கள் கண்ணை மறைக்குதோ
கைகள் செய்ய துடிக்கின்றதோ
உந்தன் சிந்தை மறைக்கின்றதோ (2)

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

உலகின் வாழ்க்கை ஒன்று தானே
மறந்து நீ போகாதே
இன்று மறித்தால் எங்கு செல்வாய்
காலமும் நில்லாதே
மயக்கும் எல்லாம் மாயை தானே
மதி கெட்டு போகாதே
சிதைக்கும் உன்னை சில்லரை ஆக்கும்
சீர் கெட்டுப் போகாதே
கானல் போன்ற வாழ்க்கையெல்லாம்
மறைந்து போதும் முன்பே
உன்னைப் படைத்த சிருஷ்டிகரை நீ
மறந்து போகாதே
சத்திய தேவன் அவர் நித்தியம் தருபவர்
வாழ்வை இழந்தவற்கு வழியை திறப்பவர்
சத்திய தேவனை நீ நித்தமும் தேடிடு
ஜீவனைக் கொடுத்தவற்கு வாழ்வை கொடுத்திடு

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

Ennai Valladikku Neeki – என்னை வல்லடிக்கு நீக்கி

Ennai Valladikku Neeki

என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ – 2
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் – 2

எந்தன் ஆதரவே எந்தன் அடைக்கலமே
எந்தன் மறைவிடமே உம்மை ஆராதிப்பேன் – 2

1. ஆழத்தில் இருந்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் – 2
எதிரான யோசனை அதமாக்கினீர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – 2 (…எந்தன்)

2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே – 2
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் – 2 (…எந்தன்)

3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் – 2
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர் தந்த தரிசனம் நிறைவேற்றினீர் – 2 (…எந்தன்)

Ennai Valladikku Neekki Um Karangalaal Thookki
Unnathaththil Vaiththathai Marappeno – 2
Neer Sonnathinaal Naan Pizhaiththukkonden
Neer Kandathinaal Naan Jeevan Pettren – 2

Enthan Aatharave Enthan Adaikkalame
Enthan Maraividame Ummai Aaraathippen – 2

1. Aazhaththil Irunthennai Thookkivitteer
Uyarvaana Thalangalil Niruththi Vaitheer – 2
Ethiraana Yosanai Adhamaakkineer
Unthanin Yosanai Niraivettrineer – 2 (…Enthan)

2. Aayiram Ennodu Porittaalum
Ennai Merkollum Athigaaram Peravillaiye – 2
Kirubaiyinaal Ennai Moodikkondeer
Naan Thallunda Idangalil Uyarththi Vaitheer – 2 (…Enthan)

3. Karadaana Paathaiyil Thookki Sendreer
Mullulla Idangalil Sumanthu Kondeer – 2
Enakkaaga Kuriththathai Enakku Thantheer
Neer Thantha Dharisanam Niraivettrineer – 2 (…Enthan)

Kristavanai Disturb Pannathe – கிறிஸ்தவனை Disturb பண்ணாதே

Kristavanai Disturb Pannathe
கிறிஸ்தவனை Disturb பண்ணாதே
அவனை Assault எண்ணி விடாதே

அவன் வெட்ட வெட்ட வளருவான்
கொட்ட கொட்ட உயருவான்

1. திட்டம் போட்டு மிரட்டிடலாம் என்று எண்ணாதே
கட்டிப் போட்டு மடக்கிடலாம் என்று கனவு காணாதே
முட்டி போட்டு ஜெபிச்சான்னா – நீ
முதுகைக் காட்டி ஓடிடுவே – அவன்
ஆழம் அகலம் தெரியாமல் காலை விடாதே – அவன்
நீளம் உயரம் தெரியாமல் மாட்டிக் கொள்ளாதே

2. மாம்சத்தோடு இரத்தத்தோடும் போரிடாதவன்
வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன்
நிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதை
பொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன்
கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் – அவன்
தண்ணீரை தரைபோல வழி நடப்பவன்

3. கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன்
பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன்
உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும்
பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்
நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும்

Yen Indha Kolam – ஏன் இந்த கோலம்

ஏன் இந்த கோலம் என் ஐயனே
ஏன் இந்த கோரம் சொல் மெய்யனே (2)
சிலுவையை சுமந்தது எதற்காக
சிந்திய இரத்தமே யாருக்காக
சிலுவையிலே மறித்தீர் எதற்காக – ஏன்

அழகுமில்லை செளந்தர்யமில்லை
ஆண்டவர் என்னும் அந்தஸ்துமில்லை (2)
கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி
கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி
குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர்
குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர் – ஏன்

வானத்து வெளிகளின் சூரிய சந்திரன்
உளாவிடும் விண்மீன்கள் படைத்திட்ட இறைவா (2)
மனிதன் உம்மை வதைத்திட்ட போதும்
ஈன மனிதன் இகழ்ந்திட்ட போதும்
இறைவனின் மகனே மெளனம் ஏனோ
இறைவனின் மகனே மெளனம் ஏனோ – ஏன்

அரசருக்கெல்லாம் அரசரும் நீரே
ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர் நீரே (2)
உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம்
உமக்கு கிடைத்ததோ முள்முடி கிரீடம்
உலகம் தந்ததோ சிறுவையின் பாரம்
உலகம் தந்ததோ சிறுவையின் பாரம் – ஏன்

Ulagin Oliye Yesuve – உலகின் ஒளியே இயேசுவே

Ulagin Oliye Yesuve

உலகின் ஒளியே இயேசுவே
அகிலம் போற்றும் தெய்வமாம்
அன்பின் தெய்வம் வேறுஇல்லை
அவரை அண்டியே சேர்ந்திடுவாய்

இயேசு நல்லவரே
இயேசு வல்லவரே
மனதின் இருளை நீக்கிடுவார்
உள்ளம் திறந்தே ஏற்பாய்

1. பாவம் போக்க வந்தவர்
சாபம் யாவும் நீக்குவார்
இவரை அல்லால் வழியும் இல்லை
அகத்தில் இவரை ஏற்றிடுவாய் – இயேசு

2. பாவங்கள் யாவும் அகற்றிடவே
பரிவாய் வந்தார் உலகினிலே
சாவை ஜெயித்தார் ரோகம் தொலைத்தார்
உந்தன் நாயகனாம் இவரை – இயேசு

3. தேவ மைந்தனாய் வந்தவர்
மாலும் மாந்தரை மீட்கவே
கருணை தேவன் அன்பின் தெய்வம்
எந்தன் நாயகனாம் இவரே – இயேசு

Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு எந்தன்

Anbu Yesuvin Anbu Enthan
அன்பு இயேசுவின் அன்பு
எந்தன் பாவத்தை நீக்கினதால் அந்த
அன்பை நான் என்றும் விடேன் – அல்லேலூயா
அன்பை நான் என்றும் விடேன்

1. பாவியாக இருக்கையிலே
பாரில் என்னை தேடிவந்த
பாரில் என்னை தேடி வந்தார்
பரிசுத்த தேவ அன்பே அல்லேலூயா
பரிசுத்த தேவ அன்பே

2. நேசர் என்னை அன்பால் இழுத்தார்
பாசமாய் அவரோடிணைத்தார்
மாபெரும் அன்பிதுவே அல்லேலுயா
மாபெரும் அன்பிதுவே

3. எந்தன் வாஞ்சை இயேசு தானே
எந்தன் ஜீவனும் இயேசு தானே
அவரென்னை எறிகின்றார் அல்லேலுயா
அவரென்னை எறிகின்றார்

Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு

Anbu Yesuvin Anbu
அன்பு இயேசுவின் அன்பு – அது
அளவிடமுடியாதது
நம்பு நீ அதை நம்பு – இந்த
இகமதில் கிடைக்காதது

1. தந்தை தாய் அன்பொருநாள் – அது
தணிந்தே போய்விடும் – தன்
பிள்ளையின் அன்பொருநாள் – அது
பிரிந்தே போய்விடும்

2. என்றென்றும் மாறாதது – என்
இயேசுவின் தூய அன்பு
என் வாழ்வில் தீராதது – என்
தேவனின் ஜீவ அன்பு

3. கணவனின் அன்பொருநாள் – அது
கரைந்தே போய்விடும் – நல்ல
மனைவியின் அன்பொருநாள் – அது
மறைந்தே போய்விடும்

4. உறவினர் அன்பொருநாள் – அது
ஒழிந்தே போய்விடும் – உடன்
பிறந்தவர் அன்பொருநாள் – அது
அழிந்தே போய்விடும்

5. நண்பனின் அன்பொருநாள் – அது
நழுவியே போய்விடும் – நீ
நம்பினோர் அன்பொருநாள் – அது
வழுவியே போய்விடும்

Varusha Thovakathil

Varusha Thovakathil
வருஷத் துவக்கத்தில்
வந்தேன் இயேசு நாமத்தில்

பல்லவி
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்
நெஞ்சத்தில் விசார மேன் ?
நேசரைப் பின் பற்றுவேன்

1. வருங்காலம் அறியேன்
ஆயினும் நான் கலங்கேன்

2. சாத்தான் வந்தெதீத்தாலும்
சத்ரு மூர்க்கங் கொண்டாலும்

3. கஷ்டமோ ? கலக்கமோ ?
துஸ்டரின் இடுக்கமோ ?

4. சுகமோ ? வியாதியோ ?
துக்கமோ ? மகிழ்ச்சியோ ?

5. நித்திய யெகோவா ! உம்
சித்தமே, என் பாக்கியம்