Pagal Nera Paadal Neerae – பகல் நேரப் பாடல் நீரே

Pagal Nera Paadal Neerae
பகல் நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் – என்

1. எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் என்

மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்

2. கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என் – மகிழ்ச்சியின்

3. தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி – மகிழ்ச்சியின்

4. பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை – மகிழ்ச்சியின்

Pagalnera Paadal Neerae
Iravellaam Kanavu Neerae
Maelaana Santhosham Neerae
Naalellaam Ummai Paaduvaen – En

1. Yerusalaemae Unnai Maranthaal
Valakaram Seyal Ilakkum
Makilchiyin Makudamaai Karuthaavidil
Naavu Otti Kollum En

Makilchiyin Makudam Neerthaanaiyaa
En Manavaalarae Ummai Maravaen

2. Kavalaigal Peruki Kalangumpothu
Makilvitheer Um Anbinaal
Kaalkal Saruki Thadumaarum Pothu
Thaangineer Kirubaiyinaal En – Makilchiyin

3. Thaaymadi Thavalum Kulanthaipola
Makilchiyaai Irukindren
Ippothum Eppothum Nambiyullaen
Ummaiyae Nambiyullaen – Makilchiyin

4. Paarvaiyil Seruku Enakkillai
Irumaappu Ullathil Endrumillai
Payanatra Ulakathin Seyalkalilae
Pangu Peruvathillai – Makilchiyin

Puthiya Varudathile – El-Hannora – புதிய வருடத்திலே

புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிறார்
புதிய வாக்குதத்தங்கள்,
என் தேவன் எனக்கு தருகிறார்

புல்லுள்ள இடங்களிலே
கர்த்தர் என்னை நடத்துகிறார்
அமர்ந்த தண்ணீரண்டை
நித்தமும் சுகமாய் நடத்துகிறார்
El – Hanora (2) வல்லமையுள்ள தேவனே
El – Hanora(2) கிருபையுள்ள தேவனே

1. என் தலையை அபிஷேகம் செய்து
என்னை உயர்த்துவீரே
மேலான வரங்களினாலே
என்னை நிரப்புவீரே (2)

2. இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர்
இன்றும் என்னோடு இருக்கிறீர்
தேவரீர் என் விளக்கை ஏற்றி என்
இருளை வெளிச்சமாய் மாற்றுவீர் (2)

Oru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம்

Oru Magimayin Megam

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க

அன்பின் ஆவியானவரே
விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே
நன்றி ஐயா

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

Devareer Neer Sagalamum Seiya Vallavar – தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

Devareer Neer Sagalamum Seiya Vallavar
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்

1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர்

2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர்

உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் -2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது

Scale: F-Major

Un Kariyathai Vaikapannum Karthar – Kaariyam Vaikkum – உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

Un Kariyathai Vaikapannum Karthar

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)

உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2)

1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் – (2)
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம்

2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் – (2)
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – (2) – உன் காரியம்

3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் – (2) – என் காரியம்

4. என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2)

என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (3)

Jebame En Vaazhvin – ஜெபமே என் வாழ்வில் செயலாக

Jebame En Vaazhvin
ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே

1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
பொறுமையுடன் காத்திருந்தே
போராடி ஜெபித்திடவே

2. சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
என் மாம்சத்தின் பெலவீனத்தில்
ஆவியின் பெலன் தாருமே

3. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
உபவாசம் எனில் தாருமே

4. முழங்காலில் நின்றே முழு மனதுடனே
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
உம் வருகை நாளதிலே
உம்முடன் சேர்ந்திடவே

Jebame En Vaazhvin Sayalaaka Maara
Jeba Aaviyaal Ennai Niraithidumae
Jebamindiyae Jeyamillaiyae
Jeba Sinthai Enil Thaarumae

1. Iravellaam Jebiththa En Thaevanae Um
Ithayaththin Paaram Ennilum Thaarum
Porumaiyudan Kaathirunthae
Poraadi Jebiththidavae

2. Sothanaiyanukaa Vilippudan Jebikka
Sothanaiyathilum Sornthidaa Jebikka
En Maamsathin Pelaveenathil
Aaviyin Belan Thaarumae

3. Entha Samayamum Ellaa Manitharkkum
Parisuththavaankal Pannikal Palanukkum
Thuthi Sthothiram Jebam Veanduthal
Ubavaasam Enil Thaarumae

4. Mulangaalil Ninte Mulu Manathudanae
Visuvaasam Uruthiyil Unnmaiyaai Jebikka
Um Varukai Naalathilae
Ummudan Searthidavae

Pidhaavae Nandri Solgiroam – பிதாவே நன்றி சொல்கிறோம்

Pidhaavae Nandri Solgiroam
பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் -2

1. தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரமே

2. நேசரே என் மேலே என்றும்
பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா
அன்பு காட்டினீரே
இரக்கத்திலும் கிருபையிலும்
அனுதினமும் முடிசூட்டினீரே

3. கடந்த நாட்கள் கண்மணி
போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னைத் தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே

4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே

Pidhaavae nandri solgiroam
Yaesuvae nandri solgiroam (2)
Thooya aaviyae engal dheivamae
Nandri solgiroam
Thudhi aaradhanai seigiroam -2

1. Dhaevan aruliya solli mudiyaa
Eevukku sthoathiram
Neer seidha ellaa nammaikkum
Sthoathiram sthoathiramae
Enni mudiyaa adhisayangal
Seidhavarae sthoathiramae

2. Naesarae enmaelae endrum piriyam vaiththeerae
Agalam aazham endha alavumillaa
Anbu kaattineerae
Irakkaththilum kirubaiyilum
Anudhinamum mudisoottineerae

3. Kadandha naatkalil kanmaipoala
Paadhugaatheerae
Soadhanaiyil ennai thaetriyae
Dhairiyapaduththineerae
Theeraadha noigalellaam
Thazhumbugalaal sugappaduththineerae

4. Sagala aaseervaadhangalaalae
Aaseervadhiththeerae
Kuraigalellaam niraivaakineer
Sezhippaai ennai maatrineer
Mana kavalai theertheerae
Magizhchiyinaal nirappineerae

En Meetpar Sendra Paathayil – என் மீட்பர் சென்ற பாதையில்

En Meetpar Sendra Paathyil
என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன் (5)
சிலுவையை(2) நான் விடேன்

1. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா

2. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா

3. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயாசெய்வாயாகோழை
நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா

4. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேனே

En Meetpar Sendra Paathaiyil
Nee Sella Aayaththamaa
Kolkathaa Malai Vaathaiyil
Pangaip Peruvaayaa

Siluvaiyai Naan Vidaen (5)
Siluvaiyai(2) Naan Vidaen

2. Ooraar Inathaar Mathiyil
Thunpam Sakippaayaa
Moorkkar Kopikal Naduvil
Thidanaai Nirpaayaa

3. Thaakathaalum Pasiyaalum
Thoynthaalum Nirpaayaa
Avamaanangal Vanthaalum
Siluvai Sumapaayaa

4. Paavaathmaakkal Gunappada
Nee Thatham Seyvaayaaseyvaayaakolai
Nenjar Thidappada
Meiyuththan Seivaayaa

5. Vaalnaalellaam Nilai Nintu
Siluvaiyai Sumappaenae
Deva Arulinaal Vendru
Mael Veettach Seruvaenae

Yerusalem Yerusalem Unnai – எருசலேம் எருசலேம் உன்னை

Yerusalem Yerusalem Unnai

எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்

1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் – 2
தயை செய்யும் காலம் வந்தது – 2
குறித்த நேரமும் வந்துவிட்டது – 2

விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் – எருசலேம்

2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் – 2
சீயோனை திரும்ப கட்டுகிறார் – 2
மகிமையிலே காட்சியளிப்பார் – 2 – விழித்தெழு

3. பூமியின் ஜனங்களுக்குள்ளே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள் – 2
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் – 2
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் – 2 – விழித்தெழு

4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல் – 2
அமரிந்திருக்க இருப்பதில்லை – 2
அமர்ந்திருக்க விடுவதில்லை – 2 – விழித்தெழு

5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள் – 2
ஓடி வந்து மீட்படைவார்கள் – 2 – விழித்தெழு

6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர் – 2
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் – 2
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான் – 2 – விழித்தெழு

Yerusalem Yerusalem Unnai
Snehipor Sugithiruppaargal
Un Alangaththirkuzhzhe Samaadhaanam
Aranmanaikkuzhzhe Poorana Sugam

1. Karthar Unmel Manam Irangugiraar
Aadharavaai Ezhundhu Nirkindrar – 2
Dhayai Seiyum Kaalam Vandhadhu – 2
Kuritha Neramum Vandhuvitadhu – 2

Vizhithezhu Seiyone
Vallamaiyai Dhariththukkozh – 2
Yerusalem Yerusalem Unnai
Snehipor Sugithirupaargal

2. Thurathunda Isravelarai
Thuridhamaai Kooticherkindrar – 2
Seiyonai Thirumba Kattugiraar – 2
Magimaiyile Kaatchiyazhipaar – 2 – Vizhithezhu Seeyoney…

3. Boomiyin Janangazhukuzhe
Pugalchiyum Keerthiyumaavaai – 2
Unnilirundhu Vedham Vezhippadum – 2
Karthar Vasanam Prasithamaagum – 2 – Vizhithezhu Seeyoney…

4. Iravum Pagalum Maunamaayiraadha
Jaamakaarar Un Madhilmel – 2
Amarindhirukka Iruppadhillai – 2
Amarnthirukka Viduvadhillai – 2 – Vizhithezhu Seeyoney…

5. Malaigazh Kundrugazh Naduve
Miga Melaai Nilainiruthugiraar – 2
Makkazh Inam Thedi Varuvaargazh – 2
Odi Vandhu Meetpadaivaargazh – 2 – Vizhithezhu Seeyoney…

6. Karthar Unnai Virumbinapadiyaal
Therindhukondaar Uraividamaai (Avar) – 2
Amarnthirukkum Ariyanai Nee Dhaan – 2
Agilaththirkkum Vezhichcham Nee Dhaan – 2 – Vizhithezhu Seeyoney…

Yerusalem Yerusalem Unnai with Bible Verses

எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் சங். 122:6
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்

1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் சங். 122:6
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் ஏசா. 52:1

2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் சங். 147:2
சீயோனை திரும்ப கட்டுகிறார்
மகிமையிலே காட்சியளிப்பார். சங். 102:15

3. பூமியின் ஜனங்களுக்குள்ளே செப். 3:20
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள்
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் மீகா 4:2, ஏசா. 2:3

4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல் ஏசா. 62: 6- 7
அமரிந்திருக்க இருப்பதில்லை
அமர்ந்திருக்க விடுவதில்லை

5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மீகா 4:1 – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள் ஏசா. 2:2 – 3

6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் சங். 132:14 – 15
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்

Yakobin Devan Thunaiyaar – யாக்கோபின் தேவன் துணையானார்

Yakobin Devan Thunaiyaar

யாக்கோபின் தேவன் துணையானார்
பாக்கியவான் நான் பாக்கியவான் சங். 146:5
தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலே
நம்பிக்கை வைத்துள்ளேன்
பாக்கியவான் நான் பாக்கியவான்

  1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி
    அல்லேலுயா நீ தினம் பாடு சங். 146:1>6
    நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
    நமக்குள் வாழ்கிறார்
  2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்
    மாபெரும் கடலை உருவாக்கினார் சங். 146:6>10
    அரசாள்கின்றார் என்றென்றைக்கும்
    ராஜாரீகம் செய்கின்றார்
  3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்
    கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்
    சிநேகிக்கின்றார் அதரிக்கின்றார் சங். 146:7 > 8 >9
    திக்கற்ற பிள்ளைகளை
  4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றர்
    பசியுற்றோரை போ~pக்கின்றார்
    ஒழுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர் சங். 146:8 > 9
    நியாயம் செய்கின்றார் (நீதி)