Maenmai Paaratuven
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே – 2
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் – என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்
Kattupuravin Satham
காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன் -2
1. தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
–உம் வருகைவரை
2. கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
–உம் வருகைவரை
3. பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே
–உம் வருகைவரை
Kaatupuraavin Saththam Kaetkirathae
En Nesar Ennai Thedi Varuvarendru
Kaana Kuyilin Kaanam Isaikindrathae
Mannavar Singaramaai Varuvar Endru
Um Varugaivarai Naan Kathirupaen
En Vili Erandal Endrum Viliththirupaen – 2