Pinmari Peiyattum – பின்மாரி பெய்யட்டும்

Pinmari Peiyattum

பின்மாரி பெய்யட்டும்
பரிசுத்தமே வல்லமை

பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும்
பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே
கல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிட
பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே

1. ஆதிநாட்கள் தொட்டு ஆவியானவரின்
அற்புத சக்திகளை இயேசுவே
பாவிகளாயினும் நாங்களும் கண்டிட
ஊற்றியருளணுமேஇயேசுவே

2. உள்ளம் உடல் பொருள் பங்கம் பதர் இன்றி
சுட்டெரித்தாகணுமே இயேசுவே
ஏசாயா நாவினைத் தொட்டத் தழலுடன்
மேசியா நீர் வாருமே இயேசுவே

3. எண்ணற்ற தேவைகள் எனைச்சூழ நிற்கையில்
எந்தன் நிலை பாருமே இயேசுவே
எத்தனை வீழ்ச்சிகள் எத்தனை தோல்விகள்
எந்தன் நிலை மாற்றுமே இயேசுவே

4. தேசம் எங்கும் தேவ செய்தி முழங்கிட
ஊக்கம் அருளணுமே இயேசுவே
மரணபரியந்தம் உண்மையாய் விளங்க
இயேசு என்னில் வாருமே இயேசுவே

Pinmaari Peyyattum
Parisuththamae Vallamai

Pinmaari Peyyattum Pinmaari Peyyattum
Pinmaari Peyyattumae Yesuve
Kalvaari Anpinai Elloerum Kantita
Pinmaari Peyyattumae Yesuve

1. Aathinaatkal Thottu Aaviyaanavarin
Arputha Sakthikalai Yesuve
Paavikalaayinum Naankalum Kantita
Uurriyarulanumae Yesuve

2. Ullam Utal Porul Pankam Pathar Inri
Sutteriththaakanumae Yesuve
Aesaayaa Naavinaith Thottath Thazhalutan
Maesiyaa Neer Vaarumae .. Yesuve

3. Ennarra Thaevaikal Enaissuuzha Nirkaiyil
Enthan Nilai Paarumae .. Yesuve
Eththanai Veezhssikal Eththanai Thoelvikal
Enthan Nilai Maarrumae .. Yesuve

4. Thaesam Enkum Thaeva Seythi Muzhankita
Uukkam Arulanumae .. Yesuve
Maranapariyantham Unmaiyaay Vilanka
Yesuve Ennil Vaarumae .. Yesuve

Vaan Veliliyil – வான்வெளியில் தூதர்கள்

Vaan Veliliyil
ரிகமரி நிச ரிகமரி நிச
ரிகமரி நிச சநிதபம ப
ரிகமரி நிச ரிகமரி நிச
சநிதபம ப ரிகமரி நிச

வான்வெளியில் தூதர்கள்
பாடும் ஓசை கேட்டது
வான் உயர் எழும் மலைகளும்
பதிலாய் தாளம் போட்டது

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
பமரி கமரிரிச ரிச பமதப மரி தம
ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம்
பதம கமபரி கமபரி கமபம தப
மபதனிச கப மரி கம..

மேப்பப்பர்களின் ஆனந்தம்
மேன் மேலும் சந்தோஷம்
ஓயா இன்பப் பாடல்கள்
ஒலிக்கிறதேன் கூறுங்கள்

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
தபகம பரி ரிகம பரிநி நிச தசகம
பம ரித பமரி சரிகமபத தமப
தமப பதநி சச சச சநி கமபரிகம..

பெத்லகேமுக்கு வாருங்கள்
பேறுபெற்றோராய் நில்லுங்கள்
நம்முடன் வாழ வந்துள்ள கடவுளை
குழந்தையாய் காணுங்கள்

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
சநி நிச கநி பத நிதபம ரிக மபரி
கமரி சப மபகரி மபதநிசகரிச
ரிரி சநி சநிச தபமரிக கப
சரிகப கமரிக மப தநி

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (3)

Kana Oorin Kalyanathil – கானாவூரின் கல்யாணத்தில்

Kana Oorin Kalyanathil
கானாவூரின் கல்யாணத்தில் தான்
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்

1. பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்
நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார்
உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்
சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார்
ஆகா நான் எங்கு காண்பேனோ
இயேசு என் நேசர் போல்

2. அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்
தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார்
ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்
இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார்
ஆகா நான் எங்கு காண்பேனோ
நேசர் என் இயேசு போல்

Ottathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Ottathai Odi
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே

ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2

எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2

கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே – 2
கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

Vaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே

Vaaikaalgal Orathilae
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்

இலையுதிரா மரம் நான் – 2

செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே-2

எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் – 2

கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் – 2
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்

நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்

துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்

Marakkappaduvathillai Nee – மறக்கப்படுவதில்லை நீ

Marakkappaduvathillai Nee

மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2

கலங்காதே என் மகனே(மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே

உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2

மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2

ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2

Veppamigu Naatkalil – வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே

Veppamigu Naatkalil
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – 2
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன் – 2

நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2
பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்
என்றென்றும் பாக்கியவான்

கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும் – உம்

இதயம் அகமகிழும் – என்
இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன்

இக்கட்டு துன்ப வேளையில்
காக்கும் தகப்பன் நீரே – 2
பூரண சமாதானம் – உம்
தினம் தினம் இதயத்திலே – 2

குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2

நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
யவீரு உம்மை நம்பியதால்
மகள் அன்று சுகம் பெற்றாள்

Unnatha Maanavarae – உன்னதமானவரே என்

Unnatha Maanavarae
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2

நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே

சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே – 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்

நான் நம்பும் தகப்பன் நீர் என்று
நான் தினம் சொல்லுவேன் – 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் – 2

மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 -நான்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்

நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்

வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே

Aathumave Nandri Sollu – ஆத்துமாவே நன்றி சொல்லு

Aathumave Nandri Sollu
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2

குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2

கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்

இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – 2 – நாம்

கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார்

எப்போதும் கடிந்து கொள்ளார்
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
மன்னித்து மறந்தாரே

தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
என்றென்றும் கோபம் கொண்டிரார்
தயவு காட்டுவது போல்
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார்

அவரது பேரன்பு வானளவு
உயர்ந்துள்ளது
கிழக்கு மேற்கு தூரம்போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்

Enni Enni Paar – எண்ணி எண்ணிப் பார்

Enni Enni Paar
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை – 2

நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் – 2

1. தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே – 2
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி

2. காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே – 2
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் – 2

3. சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2

4. ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் – 2