All Songs by david

Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு

Ummai Pola Yarundu
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா

1. உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல

2. எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல

3. கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல

4. மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல

Ummai Pola Yaarundu
Nanmai Seiya Neerundu
Ummai Thaane Nampuven
En Theva

1. Ummai Thaan Enthen Vaalvil
Aathaaramaai Ninaithu Ullen
Neer Illa Enthen Vaalkai
Veenaai Thaane Poguthaiya – Ummai Pola

2. Elshadaai Aarathipen
Elohim Aarathipen
Adonaai Aarathipen
Yeshuva Aarathipen – Ummai Pola

3. Kalangi Nintra Ennai Kandu
Kaneerai Thudaithavare
Kaalamellaam Kanmani Pola
Karam Pidithu Kaathavare – Ummai Pola

4. Maranathin Paathaithanil
Manam Thalarnthu Nintra Ennai
Maruthuvaraai Neere Vanthu
Maruvaalvu Thantheeraiya – Ummai Pola

Athikalayil Ummai – அதிகாலையிலுமைத் தேடுவேன்

Athikalayil Ummai
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே
தேவாசீர்வாதம் பெற நாடுவேன்
ஜெப தபத்தாலே
இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாயெனை உத்தமனாக்கிடும் – தேவே

1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களிடனிருப்பதா யுரைத்த நல் நாதா!
ஈனப் பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா!
எனக்கான நீசனே! வான ராசனே!
இந்த நாளிலுமொரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதிகாலையிலுமை

2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும் போது
தப்பாது நின் கிருபை தாங்கிட வேணுமப்போது
விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங்கொண்டு மெய்ப்பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது – அதிகாலையிலுமை

3. நரர் யாவர்க்குமுற்ற நண்பனாய் நடத்திடவையே – தீ
நாவின் பாவமற்ற நன்மைகள் மொழிந்திட செய்யே
பரலோக ஆவியை நல் மாரி போலெனில் பெய்யே
புகழான நாதனே! வேத போதனே! பூரணமாயுனைப்
போற்றுவேன் தினம் தினம் மெய்யே – அதிகாலையிலுமை

Chandirane Suriyane – சந்திரனே சூரியனே

Chandirane Suriyane
சந்திரனே சூரியனே
கர்த்தருக்கு கைத்தாளம் போடுங்க
வானங்களே பூமிகளே
கர்த்தருக்கு எக்காளம் ஊதுங்க
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என துதிகள் பாடி நம்ம இயேசு ராஜவ துதியிங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என மகிழ்ந்து பாடி
வரம் தரும் கனி தரும் அருள் தரும் பெலன் தரும்
ஆவி தூய ஆவி எங்கள நிரப்பி தாருமே

யோசேப்பை போல பயந்திடுவேன்
சாமுவேல் போல பேசிடுவேன்
தாவீதை போல ஆடிடுவேன்
தானியேல் போல ஜெபிப்பேன்
வானத்தின் நட்சத்திரமே
மேகத்தின் பனி மழையே
எப்போதுமே எந்நாளுமே
சாரோனின் ரோஜாக்கள் நாங்க
பரலோகத்தின் ராஜாக்கள் நாங்க

கர்த்தருக்கு புது பாடல் பாடிடுவேன்
அவர் நல்லவர் வல்லவர் என்று
சொல்லி பாடுவேன்
ஆதியும் அவரே என் அந்தமும் அவரே
துள்ளி துள்ளி மகிழ்ச்சியோடு
கரங்கள் தட்டி ஆடி பாடி ஸ்தோதரிப்பேனே

யோசுவா போல சென்றிடுவேன்
யூதா போல எழும்பிடுவேன்
ஈசாக்கை போல விதைத்திடுவேன்
சிம்சோன் போல கிழிப்பேன்
பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜாவே
என்றென்றைக்கும் எந்நேரமும்
கர்த்தரின் கரத்தில் நாங்க
இயேசுவின் கரத்தில் நாங்க

Chandhiranae sooriyanae
kartharukku kaithaalam poadunga
Vaanangalae poomigalae
kartharukku ekkaalam oodhunga
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa allaelooyaa
Ena thudhigal paadi namma yaesu raajava thudhiyunga
Allaelooyaa allaelooyaa allaelooyaa
Ena magizhnthu paadi
Varam tharum kani tharum arul tharum belan tharum
Aavi thooya aavi engala nirappi thaarumae

Yoaseappai poala payanthiduvaen
Saamuvaelai poala paesiduvaen
Dhaaveedhai poala aadiduvaen
Dhaaniyaelai poala jebippaen
Vaanathin natchathiramae
Maegathin pani mazhaiyae
Eppoadhumae ennaalumae
Saaroanin roajaakkal naanga
Paraloakathin raajaakkal naanga

Kartharukku pudhu paadal paadiduvaen
Avar nallavar vallavar endru
Solli paaduvaen
Aadhiyum avarae en antdamum avarae
Thulli thulli magizhchiyoadu
Karangal thatti aadi paadi sthoatharippaenae

Yoasuvaa poala chendriduvaen
Yoodhaa poala ezhumbiduvaen
Eesaakkai poala vidhaithiduvaen
Simsoan poala kizhippaen
Pallathaakkin leeliyae
Saaroanin roajaavae
Endrendraikkum ennaeramum
Kartharin karathil naanga
Yaesuvin karathil naanga

En Nesar Yesuve – என் நேசர் இயேசுவே

En Nesar Yesuve
என் நேசர் இயேசுவே
என் அன்பு இரட்சகா
நீரே வழி நீரே சத்யம்
நீரே எந்தன் தஞ்சம் அன்றோ (2)

உம்மையல்லாமல் எங்கே நான் போவேன்
நீரே என் ஜீவனன்றோ (2)
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

மனிதரின் அன்பால் கைவிடப்பட்டேன்
நோவுக்குள் தள்ளப் பட்டேன்
மாந்தரின் அன்பால் நொருக்கப் பட்டேன்
உம் நேசத்தினால் என்னை அனைத்தீரே
நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யா
உம் துணையின்றி நான் வாழ இயலாதய்யா
என் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர்

Santhosham Venuma – சந்தோஷம் வேணுமா

Santhosham Venuma

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
இயேசுவிடம் வாருங்களே
துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
இயேசுவிடம் வாருங்களே (2)
இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) – சந்தோஷம்

பாவங்கள் போக்கிடுவாரே
புது வாழ்வு தந்திடுவாரே (2)
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

கண்ணீரைத் துடைத்திடுவாரே
கரங்களை பிடித்திடுவாரே (2)
கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

சாத்தானை துரத்திடுவாரே
சாபத்தை முறித்திடுவாரே (2)
அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

Nandri Solli Paaduven – நன்றி சொல்லி பாடுவேன்

Nandri Solli Paaduven
நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி இயேசு ராஜா

என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர்

ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை
ஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர்

என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர்

இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர்

Kalanguvathen – கலங்குவதேன் கண்ணீர்

Kalanguvathen
கலங்குவதேன் கண்ணீர் விடுவதேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே..

சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்
கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..
புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்!

அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்
தோல்வியில் ஜெயம் தருவார்
வியாதியில் சுகம் தருவார்

En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே

En Vaazhvil Yesuve
என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் பாராமல் நான் வாழும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்
பாரங்கள் தாங்காமல் நான் சாயும் போது
பாதங்கள் நீயாக வேண்டும்
எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும்

காலங்கள் எல்லாம் என் நெஞ்சின் வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் சுடர் தீபங்கள் நீயாக வேண்டும்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும்
மழை மேகங்கள் நீயாக வேண்டும்

Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும்

Then Inimaiyilum Yesuvin
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே – தேன்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே – தேன்

3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே – தேன்

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே – தேன்

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே – தேன்

Then Inimaiyilum Yesuvin Naamam
Dhivya Madhuramaamae – Adhaith
Thediyae Naadi Odiyae Varuvaai
Dhinamum Nee Manamae

1. Kaasini Thenilae Nesamathaagak
Kastaththai Uththariththae – Paavak
Kasadadhai Aruththu Saabaththai Tholaiththaar
Kandunar Nee manamae – Then

2. Paaviyai Meetkkath Thaaviyae Uyiraith
Thaamae Eendhavaraam – Pinnum
Nemiyaam Karunai Nilaivaramudae
Nidham Thuthi En Manamae – Then

3. Kaalaiyil Panipol Maayamaai Yaavum (ulagam)
Ubaamayaai Neengividum – Endrum
Kartharin Paadham Nitchayam Nambu
Karuththaai Nee Manamae – Then

4. Thunbaththil Inbam Thollaiyil Nalla
Thunaivaraam Nesaridam – Neeyum
Anbadhaai Serndhaal
Anaiththu Kaappaar Aasaikol Nee Manamae – Then

5. Boologaththaarum Melogaththaarum
Pugazhndhu Pottrum Naamam – Adhaip
Poondu Kondaal than Ponnagar Vaazhvil
Puguvaai Nee Manamae – Then

Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர்

Rettham Sinthineer
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்