Song Category: Tamil

Namaskaram Devane – நமஸ்காரம் தேவனே

Namaskaram Devane
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே -2
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே -2
போர்படை அமைத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே -2
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே -2
பற்றியே எரிபவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே-2
யெகோவா தெய்வமே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே -2
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

7. குருடரை தொட்டவரே நமஸ்காரமே -2
வியாதியை நீக்கினீரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

Aruvadaiyo Miguthi – அறுவடையோ மிகுதி

Aruvadaiyo Miguthi
அறுவடையோ மிகுதி
ஆட்களோ கொஞ்சம்
அறுவடையின் தேவனை நோக்கிடுவோம்

1. வயல் நிலங்கள் எல்லாம்
விளைந்து விட்டதன்றோ
ஓடி ஓடி அறுப்போம்
களஞ்சியத்தில் சேர்ப்போம் – அறுவடையோ

2. திறப்பிலே நிற்போம்
விரிசல்களை அடைப்போம்
விழித்திருந்து ஜெபிப்போம்
வெற்றி கண்டு மகிழ்வோம் – அறுவடையோ

3. நதியளவு கண்ணீர்
நாள்முழுதும் வடிப்போம்
இந்தியாவை நினைப்போம்
இரவும் பகலும் ஜெபிப்போம் – அறுவடையோ

4. ஆத்ம பாரம் கொள்வோம்
ஆர்வத்தோடு செல்வோம்
யுத்த களத்தில் நிற்போம்
கோலியாத்தை வெல்வோம் – அறுவடையோ

5. தொடர்ந்து நன்மை செய்வோம்
சோர்வில்லாமல் செல்வோம்
குறித்த காலம் வருமே
அறுவடை நிச்சயமே – அறுவடையோ

Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே

Avar Arputhamaanavarae
1. அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர்

3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர்

4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்

Nallavar Neer Migavum – Naan Uyirodu Irukum – நான் உயிரோடு இருக்கும்

Nallavar Neer Migavum
நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

Thudhiyum Ganamum – துதியும் கனமும் எல்லாம் – கிருபைகள் என்னில்

Thudhiyum Ganamum

1. கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் (2)
உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம் (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

2. சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் (2)
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2) – துதியும்

3. கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர் (2)
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2) – துதியும்

Alangara Vasalale – அலங்கார வாசலாலே

Alangara Vasalale
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம்

ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே

1. ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே – ஆராதிக்க

2. பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – ஆராதிக்க

3. நன்மையை செய்தவர்க்கே
நாங்கள் நன்றி செலுத்துவோமே
எம் காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே – ஆராதிக்க

4. துதிகன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே – ஆராதிக்க

Alangara Vaasalaalae Prevaesika Vanthunirkirom
Dheivaveetin Nanmaiyalae Nirambidavan Thunirkirom

Aarathika Vanthom
Anbukoora Vanthom
Yehova Devanayae
Thuthithida Vanthom
Tholuthida Vanthom
Thooyavar Yesuvayae

1. Aalayam Seluvathae,
Athu Magilchiyai Thanthiduthae..
Yen Sabayudanae, Umai Tholuthidavae
Kirubayum Kidaithittathae – Aarathika

2. Baligalai Seluthidavae,
Jeeva Baliyaga Maaridavae
Marurubathin Iruthayathai Thantheerae,
Sthothiram Sthothiramae – Aarathika

3. Nanmayai Seithavarkae – Naangal
Nandri Seluthuvomae,
Yemkaanikkaiyai, Um Karangalilae
Urchaagamai Vithaikiromae – Aarathika

4. Thuthi Ganammagimayumae
Muzhu Manathodu Seluthinomae,
Samboorana Aasirvaathangalal
Thirupthiyai Anupidumae – Aarathika

Paninthu Um Paatham – பணிந்து உம் பாதம்

Paninthu Um Paatham
பணிந்து உம் பாதம் விழுந்து
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
கிருபையும் அன்பும் நிறைந்தவர்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்

நீரே தூயர் தூயர் தூயர் (3)
என்றென்றுமே

வீ ஃபால் டொவ்ன்
வீ லே ஆர் க்ரௌன்ஸ்
அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ்
த கிரேட்னஸ் ஆஃப் மெர்ஸி அன்ட் லவ்
அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ்

வீ க்ரை ஹோலி ஹோலி ஹோலி (3)
இஸ் த லேம்ப்

ஹலேல்லூயா ஹலேல்லூயா
ஹலேல்லூயா ஜீஸஸ்

Paninthu Um Paatham Vizhunthu
unthan naamaththai uyarthiduven
kirubaiyum anbum nirainthavar
unthan naamaththai uyarthiduven
paninthu um paatham vizhunthu
unthan naamaththai uyarthiduven
kirubaiyum anbum nirainthavar
unthan naamaththai uyarthiduven

neere thooyar thooyar thooyar
neere thooyar thooyar thooyar
neere thooyar thooyar thooyar
endrendrume

paninthu um paatham vizhunthu
unthan naamaththai uyarthiduven
kirubaiyum anbum nirainthavar
unthan naamaththai uyarthiduven

neere thooyar thooyar thooyar
neere thooyar thooyar thooyar
neere thooyar thooyar thooyar
endrendrume

We fall down
we lay our crowns
at the feet of Jesus
the greatness of
mercy and love
at the feet of Jesus

we cry holy holy holy
we cry holy holy holy
we cry holy holy holy
is the lamb

We fall down
we lay our crowns
at the feet of Jesus
the greatness of
mercy and love
at the feet of Jesus

we cry holy holy holy
we cry holy holy holy
we cry holy holy holy
is the lamb

hallelujah hallelujah
hallelujah hallelujah
Jesus hallelujah

Yaarum Illa Nerathil – யாருமில்லா நேரத்தில்

Yaarum Illa Nerathil
யாருமில்லா நேரத்தில்
நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
சோர்ந்து போன நேரத்தில்
கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)

நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர்
என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2)
வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே
கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா

சர்வ வல்லவர் பரிசுத்தமானவர்
ஆராதனை உமக்கே என் இயேசுவே (2)
ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே
உம் கிருபை போதுமே தூயஆவியே
உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா

Yaarumillaa nerathil

Thuthipom Alleluya Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி

Thuthipom Alleluya Padi
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா

1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம்

2. கூப்பிடும் வேளைகளில் என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம்

3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் – துதிப்போம்

4. அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன் – துதிப்போம்

5. தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார் – துதிப்போம்

Facebook Twitter WhatsApp – ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு

Facebook Twitter WhatsApp
ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு பாக்குரியே
பைபிலத் தொடக்கூட நேரமில்லையா? (2)
வைமெயிலு ஜீமெயிலு ஈமெயிலா பண்ணுரியே
ஜெபம் பண்ண முடியலைன்னா பாவமில்லையா? (2)
பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்தவன்
ஏ லம்புடி லம்புடி லங்கா
ஏ ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கா

1. உல்லாசம் உலகத்துல பரந்து விரிஞ்சி நெறஞ்சிருக்கு
பாதையில நடக்கையில் பரிகாரியம் தேடு (2)
சல்லாபம் மனசுக்குள்ள அறிச்சி நெறிச்சி நெறிச்சிருக்கு
பாவப்பட்ட மனுஷருக்கு பலிகடா யாரு (2)
பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்துவன் 2 – ஃபேஸ்புக்

2. மாசமொரு மொபைல மாத்திக்கிட்டே இருகிறான்
நெனச்ச நேரமெல்லாம் சேட்டிலேயே மெதக்கிறான்
வார்த்தை ஜாலங்கள வாய்யிக்குள்ள பேசுறான்
கோபம் வந்துபுட்டா கண்டபடி ஏசுறான்
சர்ச்சுல பந்தாவா ஸீன் போட்டு
கேட்கும் போதே காத்துல விட்டு
கணக்குக்காக காணிக்கைய கொடுத்துப்புட்டா
இவன் பெயருக்கு கிறிஸ்துவன்

3. பரிசுத்த வாழ்கையை நீ அழைச்சு நிலைச்சு தழைச்சுப் பாரு
பரலோகப் பாதையைத் தான் தடுப்பது யாரு (2)
பேருபோன நேரத்துல வருந்தி திருந்தி பலனுமில்ல
கடைசி காலத்துல நெருங்குது கொல்ல (2)
காலமினி செல்லாது ஐய்யய்யோ உஷாரு 2 – ஃபேஸ்புக்