Song Category: Tamil

Yenathu Ullam Yaruku – எனது உள்ளம் யாருக்கு

Yenathu Ullam Yaruku
எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா
எனது நினைவு யாருக்கு புரியும்

என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீரே – இயேசையா

1. அன்னை தந்தை அறியவில்லையே – என்
உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
என்னை அறிந்த தெய்வம் நீரையா – என்
உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது

2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
நொருங்கி போன எனது உள்ளத்தை
அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது

3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
என் உள்ளம் நொந்து சோகமானது
என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே

Ummaiyallamal Enakku Yarundhu – உம்மை அல்லாமல் எனக்கு

Ummaiyallamal Enakku Yarundhu
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு – 4
என் இயேசையா அல்லேலூயா – 4

1. இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே – 2
எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2

2. என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே – 2
என் எல்லாமே ஐயா நீர் தானே – 2

3. இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே – 2
எந்நாளுமே ஐயா நீர்தானே – 2

Vetkama Unakku Vetkama – வெட்கமா உனக்கு வெட்கமா

Vetkama Unakku Vetkama
வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
ஊரு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
கட்டு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
உயிர் கொடுத்த இயேசு பத்தி சொல்ல வெட்கமா
தன்னையே இழந்த இயேசு முக்யமா

1. ரெண்டு காலு ரெண்டு கையு எதற்காக
உனக்கிருக்கும் பேச்சு மூச்சு எதற்காக
இயேசு பத்தி சொல்லு ஆத்துமாவ வெல்லு
துன்பத்திலும் இன்பத்திலும் யேசுகாக நில்லு

2.உனக்கொரு பொருப்பிரிக்கிது மறவாதே
அந்த பொறுப்ப அலட்சியமாய் எண்ணாதே
கிறிஸ்தவனே கேளு ஏசுபத்தி சொல்லு
இல்லையென்றால் உன்வீடு Heaven இல்ல ஹெல்லு

Selvam Gnanam Ithu – செல்வம் ஞானம் இது

Selvam Gnanam Ithu
செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
ஐஸ்வரியம் சௌந்தர்யம்
இது எல்லாமே நீர் தந்தது
தந்தவரே திருப்பி தருகிறோம்
உம்மையே உயர்த்துகிறோம்

1. உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
பரலோகம் நிரம்பனும்
பாவி மனம் திரும்பனும்
அதற்காய் என்னையே தந்தேன் ஐயா

2. எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரிரீர்
அதை நான் அறிவேன் ஐயா
நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்
அதை நான் மறவேன் ஐயா
பரிசுத்தமாய் வாழனும்
உங்க முகம் பாக்கணும்
பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா

Isravelin Rajave – இஸ்ரவேலின் ராஜாவே

Isravelin Rajave
இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இயேசுவே – (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

1. திருக்கரம் என்னை தாங்கி
கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதற்கு
பலத்தை நீர் தந்தற்காய் – இயேசுவே

2. எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் – இயேசுவே

3. என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் – இயேசுவே

Isravaelin Raajaavae
En dhaevanaam kartharae
Naan ummai vaazhthugiraen
Nanmaigal ninaikiraen

Yaesuvae – (4)
Nandri nandri naadhaa
Alavillaa anbirkaaga

1. Thirukaram ennai thaangi
Kadum pratchanaigalilum
Munnaeri selvadharku
Belathai neer thandhadharkaai – Yaesuvae

2. Edhirkiravar munbilum
Thallinavar matthiyil
Pandhi aayathappaduthi
Anbaaga ganam pannineer – Yaesuvae

3. Enna naan seluthiduvaen
Aayiram paadalgaloa
En uyir kaalam muzhudhum
Ratchippai uyarthiduvaen – Yaesuvae

Sinthika Varir – சிந்திக்க வாரீர் செயல்

Sinthika Varir
சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2
சிந்திய இரத்தம் கூப்பிடுதே -3

சபையே நீ திரும்பிப் பார்
சபையே நீ குனிந்துப் பார்
சபையே நீ நிமிர்ந்துப் பார்
முன்னேப் பார் -3

1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்
பூர்வ பாதைகளை விசாரித்து அறி
இளைப்பாறுதல் அதுவே ஆத்துமாவுக்கு
களைப்பை போக்கிடுமே போதுமதுவே

2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை
முழங்கால் முடக்கிக் குனிந்துபார்
வணங்காக் கழுத்துனக்கு வேண்டாமே
வனாந்தரத்தில் அதினால் அழிவாமே

3.வானத்தின் சத்துவங்கள் அசைவதைப்பார்
வானவரின் வருகை சமீபமே
நிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே
நிலைத்திருப்பவைகளையே நாடு நீயே

4.கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை
கண்டிப்பாய் செயல்பட வேண்டுமே
அழியும் கணிகளைப் பொறுக்காவிடில்
அழுகை தான் தங்கிடுமே வருகையிலே

Vanam Pollinthathu – வானம் பொழிந்தது மதகுகள்

Vanam Pollinthathu
வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன
கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே
பணமும் பதவியும் செல்லா காசானதே -2
மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை-2
வாழ்வின் நோக்கமதை -2

1. வங்கி பணமும் வரவில்லை உதவிட
பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட
பவனி வந்த சொகுசு கார்களும-2
அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2

2. குடும்ப உறவும் குலைந்து போனதே
குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே
சொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2
சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2

3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்
அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்
அறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2
அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2

4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்
பூமகன் இயோசுவின் வருகையின் நாள்
புறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க
பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2

Yelumbiduvir Valibare – எழும்பிடுவீர் வாலிபரே

Yelumbiduvir Valibare
எழும்பிடுவீர் வாலிபரே
எழும்பிடுவீர் கன்னியரே -2
எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே
எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2

1.உல்லாசம் தந்திடும் உலகம் இது
ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2
ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
வாடி வதங்கிடும் வருகை அன்று

2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2
திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
திருமறை சொல்வதை கேட்பவர் யார்?

3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2
நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?

Vanjagan Valaivusukiraan – வஞ்சகன் வலை வீசுகிறான்

Vanjagan Valaivusukiraan
வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2
வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு
விடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு
விதையை அறியாமல் அதை
பொறுக்குவாரும் உண்டு – 2

1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது
போதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது
சுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது
மனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2

2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது
சரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது
சவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை
உபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது -2

3. தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில்
இறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும்
இந்த வஞ்சகர்களையும் நயவசனிப்பாளர்களையும்
இச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல
சபையை மாற்றிவிடும் முறைகளையும்
வெட்டவெளிச்சத்தில் கொண்டு வந்து
திருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ. . .

Ennai Jenippithavarum – என்னை ஜெனிப்பித்தவரும்

Ennai Jenippithavarum
என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
என்னைப் பெற்றெடுத்தவரும் நீர்தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
என்னை வளர்த்தவரும் நீர்தானே

கண்மலையே கண்மலையே – 2
உமக்கே ஆராதனை – 4

1. தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவே இல்லாத உண்மையான அன்பு – 2
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மறித்தீரே – 2
எனக்காக உயிர்த்தீரே – 4
உமக்கே ஆராதனை – 4

2. என் மேல் கிருபை வைத்து இரட்சிப்பைத் தந்தவரே
இதற்கு ஈடு இணை பூமியிலே இல்லையப்பா – 2
என் மேலே அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை -2
நித்திய ஜீவனை தந்தீரே – 4
உமக்கே ஆராதனை – 4

3. உமக்கு நிகரான தெய்வம் ஒன்றும் இல்லையப்பா
அகில உலகத்திற்கும் ஆண்டவரும் நீர் தானே – 2
முடிவில்லா இராஜியத்தை
அரசாலும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் – 2
நித்திய மகிழ்ச்சியே நீர் தானே – 4
உமக்கே ஆராதனை – 4

Ennai jenippithavarum neerthaanae
Ennai petreduthavarum neerthanae
Enakku paeru vachavarum neerthaanae
Ennai valarthavarum neerthaanae

Kanmalayae kanmalaiyae – 2
Umakkae aaradhanai – 4

1. Thaayin anbilum maelaana anbu
Alavae illadha unmaiyaana Anbu – 2
Enakkaaga adikkappatteer
Enakkaaga norukkappatteer
Naan vaazha maritheerae – 2
Enakkaaga uyrittheerae – 4
Umakkae aaradhanai – 4

2. En mel Kirubai vaithu ratchippai thandhavarae
Idharkku eedu inai boomiyilae illaiyappaa – 2
En Melae anbu vaiththu
Parigaaram seidheerae
Paavamillai maranamillai – 2
Nithiya jeevanai thandheerae – 4
Umakkae aaradhanai – 4

3. Umakku nigaaraana dheivam ondrum illayappaa
Agila ulagathirkkum aandavarum neerthaanae -2
Mudivillaa raajiyathai
Arasaalum dheivam neerae
Kanneerellam thudaithiduveer – 2
Nithiya Magizhchiyae neerthaanae -4
Umakkae aaradhanai – 4