எல்லாமே கிருப என் எல்லாமே கிருப – (2) நான் நிர்ப்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருப..(2)
உன்னதமானவரே உங்க மறைவு எனக்கு கிருப. பரிபூரணமானவரே, உங்க அன்பு எனக்கு கிருப..-(2) எல்லாமே உங்க கிருபையே-(2). – எல்லாமே..
வழியில்லா நேரத்தில், உங்க சமூகம் எனக்கு கிருப மதியில்லா நேரத்தில், உங்க ஞானம் எனக்கு கிருப..-(2) எல்லாமே உங்க கிருபையே-(2). – எல்லாமே..
கலங்கிடாதே… உன்னோடு நான் இருக்க என்றும்… என் மடியில் நீ இருக்க. சோராதே.. உன்னோடு நான் இருக்க என்றும்… என் மடியில் நீ இருக்க.
நான் உன்னை மீட்டுகொண்டேன், பெயர் சொல்லி
அழைத்து வந்தேன்.. என்னுடையவன்(என்னுடையவள்) என்று சொல்லி
ஏற்றுக்கொண்டேன் – (2) துன்பங்கள் துயரங்கள் ஆழ்த்தியே வந்தாலும், தாலாட்டும் தாயாய் உன் பக்கம் நான். – கலங்கிடாதே…
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்
என் தேச எல்லையெங்கும்
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
1.இறுதி நாளில் மாம்சமான
யாவர்மேலும்
எழுப்புதல் பெருமழையாய்
இறங்கவேண்டும்
உன்னதரின் வல்லமை
உயிர்ப்பிக்கும் வல்லமை
ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும்
பொழிந்தருளும் பூமியெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்- 2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்
சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து
வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்
காண வேண்டும் அதிகமதிகமாய்
3.அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து
அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்
பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்
தேசமெங்கும் எழும்ப வேண்டும்
4.ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள்
அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்
குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்
முடவர்கள் நடக்கனுமே
5.வறுமையே இல்லாத தமிழ்நாடு
வன்முறையே இல்லாத தமிழ்நாடு
நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும்
நிறைந்த தமிழ்நாடு
பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
6.பஞ்சமே இல்லாத பாரத தேசம்
பாவமே இல்லாத பாரத தேசம்
ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள்
இல்லாத பாரத தேசம்
பொழிந்தருளும் தேசமெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
Aayiramaayiram Paadalgalaal
ஆயிரமாயிரம் பாடல்களால்
அதிசய நாதனை துதித்திடுவேன்
ஆனந்த கீதம் பாடிடுவேன் – நான்
நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன்
1. வானதூதர் சேனையெல்லாம்
வாழ்த்துகின்ற பரிசுத்தரே
வான மகிமை விட்டு
மானிடராய் வந்தவரே
வானிலும் பூவிலும் என் ஆசை நீரே
வாழ்த்தி என்றும் திரு நாமம் துதித்திடுவேன்
2. இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும் தூய தேவனே
இக்கட்டில் தம் ஜனங்களின் இரட்சகராய் வருபவரே
செங்கடலோ சேனைகளோ எதிரே வந்தாலும்
சோர்ந்திடாமல் கரம்தட்டி துதித்திடுவேன்
3. ஆழியின் அலைபோல் சோதனைகள் பெருகினாலும்
அக்கினியின் சோதனையில் என் உள்ளம் தளர்ந்தாலும்
தாயைப்போல் கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்