Song Category: Tamil

Kattupuravin Satham – காட்டு புறாவின் சத்தம்

Kattupuravin Satham
காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று

உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன் -2

1. தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
–உம் வருகைவரை

2. கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
–உம் வருகைவரை

3. பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே
–உம் வருகைவரை

Kaatupuraavin Saththam Kaetkirathae
En Nesar Ennai Thedi Varuvarendru
Kaana Kuyilin Kaanam Isaikindrathae
Mannavar Singaramaai Varuvar Endru
Um Varugaivarai Naan Kathirupaen
En Vili Erandal Endrum Viliththirupaen – 2

1. Thayinum Melaai Unthan Anbu Ullathae
Thanthaiyaga Neer Ennil Valginrerae
Neer Enthan Naesarthanae
Neer Enthan Nanbarthanae
Endrendrum Unthan Anbai Enavendru Nan Soluvaen
– Um Varugai

2. Kanavellaam Endrum Ummaiyae Kanginraen
Ninaivellam Endrum Ummaiyae Sutruthae
Neerinri Naanu Millaiyae
Neerthanae Enthan Ellai
Endrendrum Enthan Naval Ummaiyae Paadiduvaen
– Um Varugai

3. Poorana Aazhagu Ullavarum Neerthanae
Ummaku Negarai Yaarum Inguillaiyae
Neer Enthan Jeevan Thanae
Naan Unthan Saayal Thanae
Endrendrum Enthan Muuchu Unthan Paeyar Solliduthae
– Um Varugai

Anbil Ennai Parisuthanaaka – அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க

Anbil Ennai Parisuthanaaka
1. அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ

என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்

2. மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை

3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர

4. வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய் உம்
கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே

5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே

  1. Anbil Ennai Parisuthanaakka
    Ummai Konndu Sakalathaiyum
    Uruvaakkiyae Neer Mutharpaeraaneero
    Thanthai Nookkam Anaathiyanto

En Yesuvae Naesitheero
Emmaathiram Mannaana Naan
Innum Nandriyudan Thuthippaen

  1. Marithoril Muthal Elunthathinaal
    Puthu Sirushtiyin Thalaiyaaneerae
    Sabaiyaam Um Sareeram Seer Porunthidavae
    Eevaai Alitheer Aposthalarai – En Yesuvae
  2. Munnarinthae Ennai Alaitheerae
    Mutharpaeraai Neer Irukka
    Aaviyaal Abishaekitheer Ennaiyumae
    Um Saayalil Naan Valara – En Yesuvae
  3. Varungaalangalil Mutharpaeraai
    Neer Irukka Naam Sothararaai Um
    Kirubaiyin Vaarthaiyai Velippaduthi
    Aaluvom Puthu Sirushtiyilae – En Yesuvae
  4. Nantiyaal En Ullam Nirainthiduthae
    Naan Itharkenna Pathil Seykuvaen
    Ummakaa Nnokkam Muttumaay Niraivaerida
    Ennai Thanthaen Nadaththidumae – En Yesuvae

 

Kalaiyil Pookum Poo – காலையில் பூக்கும் பூ

Kalaiyil Pookum Poo
காலையில் பூக்கும் பூ
மாலையில் வாடிடுதே
ஓடிப்போகும் நிழல் போன்றதுதான்
மனித வாழ்க்கையுமே

சிந்திப்பாயா? ஓ மனிதா!
உன்னை சந்திக்கும் வேளை இதுதான்
சிந்திப்பாயா? ஓ மனிதா!
தேவனை சந்திக்கும் வேளை இதுதான்

1. இன்று மரித்தால் நீ எங்கே போவாய்
பொன்னும், பொருளும் கூட வராதே
சந்திக்கும் வேளை அறியாவிட்டால்
உன் ஆத்துமா இழந்திடுவாய்
(சிந்திப்பாயா? ….)
2. உலகமெல்லாம் வெறும் மாயை தானே
அழிகின்ற குப்பை தானே
மனந்திரும்பி மறுபடியும் பிறவாவிட்டால்
உன் மகிமையை இழந்திடுவாய்
(சிந்திப்பாயா? ….)
3. தினம் சற்றுநேரம் உன்னை ஒப்புக்கொடு
உண்மை தேவனை தேடிடவே
உத்தம இதயத்தால் தேடும்போது
அவரை நீ கண்டடைவாய்
(சிந்திப்பாயா? ….)

Kalayil Pookum Poo
Malayil Vadiduthey
Odi Pogum Nizlal Pontrathuthaan
Manitha Vazlkaiyumey

Sinthipaayaa Oo Manithaa !
Unnai Santhikkum Vezlai Ithuthaan
Sinthipaayaa Oo Manithaa !
Devanai Santhikkum Vezlai Ithuthaan

1. Intru Marithaal Nee Engey Povaay
Ponnum Porulum Kooda Varaathey
Santhikkum Vezlai Ariyaavittaal
Unless Aathuma Izlanthiduvaay
(Sinthipaayaa …)
2. Ulagamellam Verum Maayaithaaney
Azikintra Kuppaithaaney
Mananthirumbi Marubadium Piravaavittaal
Un Magimaiyaai Izanthiduvaai
(Sinthipaayaa …)
3. Satru Neram Unnai Oppukodu
Unmai Devanai Thedidavey
Utthama Idayathaal Thedumbothu
Avarai Nee Kandadaivaai
(Sinthipaayaa …)

Uyir Thanthu Meetu – உயிர் தந்து மீட்டு கொண்டீர்

Uyir Thanthu Meetu
உயிர் தந்து மீட்டு கொண்டீர்
உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர்
உடனிருந்து நீங்கா நிழலே
என் இயேசுவே
உயிரே (3)

மறக்கப்பட்ட என்னை நினைத்து
மறுவாழ்வு தந்தீரே
உம்மை நினைத்து என்னை கொடுத்தேன்
உடல் நான் உயிர் நீரே

பயனில்லாத என்னை எடுத்து
குயவனே நீர் வனைந்தீர்
பயன்படுத்தும் உம் கரத்தில்
பலரும் உம்மை அறிய

உம் சிலுவையே என் மேன்மையே
எல்லா புகழ் உமக்கே
இனி நான் அல்ல நீரே
உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
புது பெலன் அடைந்தேன்
உம் அன்பு ஒன்றே போதுமே (2)

Uyir Thandhu Meetu Kondeer
Uyirthezhundhu Vazha Vaitheer
Udanirunthu Neenga Nizhalae
En Yesuvae
Uyirae (3)

Marakka Patta Enai Ninaithu
Maru Vazhvu Thantheerae
Umai Ninaithu Enai Koduthaen
Udal Naan Uyir Neerae

Payanilaatha Enai Eduthu
Kuyavanae Neer Vanaintheer
Payanpaduthum Um Karathil
Palarum Umai Ariya

Um Silavaiyae En Maenmaiyae
Ella Pugazh Umakkae
Ini Naan Alla Neerae
Um Mugathai Nokki Parthaen
Puthu Belan Adaivaen
Um Anbu Ondre Podhumae (2)

Thirantha Vaasal – Irul Sullum Neram – இருள் சூழும் நேரம்

Thirantha Vaasal

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும் காலம்
நான் என்ன செய்வேன் என்று நினைக்கையில்
ஒளியாய் வருவீர் வழியைத் திறப்பீர்
திறந்த வாசல் உனக்கு உண்டு என்றீர்

திறந்த வாசல் எனக்குண்டு
திறந்த வாசல் எனக்குண்டு
தேவன் திறந்திட்டதை
ஒருவரும் அடைக்கமுடியாதே
திறந்த வாசல் எனக்கு நிச்சயம்

தனிமையின் நேரம்
துணை யாருமின்றி
கலங்கி நான் நிற்கும் போது
பயம் வேண்டாம் என்று
பெலன் தந்திடுவீர்
அதிசயங்கள் கண்டிட செய்வீர்

திறந்த வாசல் எனக்குண்டு
திறந்த வாசல் எனக்குண்டு
தேவன் திறந்திட்டதை
ஒருவரும் அடைக்கமுடியாதே
திறந்த வாசல் எனக்கு நிச்சயம்

தனியாக நிற்கும்போது
என் துணையாக வந்திடுவீர்
மனம் நொந்த நேரத்திலும்
மறுவாழ்வு தந்திடுவீர்
ஒரு வழி அடைந்தாலும்
புது வழி திறக்கும்
தாவீதின் திறவுகோல் உடையவரே

திறந்த வாசல் எனக்குண்டு
திறந்த வாசல் எனக்குண்டு
தேவன் திறந்திட்டதை
ஒருவரும் அடைக்கமுடியாதே
திறந்த வாசல் எனக்கு நிச்சயம்

Irul Soozhum Neram
Oli Mangum Kaalam
Naan Enna Seiven Endru
Ninaikayil

Oliyaai Varuveer
Vazhiyai Thirapeer
Thirantha Vaasal Unaaku
Undendreer

Chorus
Thirantha Vaasal Enakundu
Thirantha Vaasal Enakundu
Devan Thiranthittathai
Oruvarum Adaikka Mudiyathey
Thirantha Vaasal Enakku Nichaiyam
Thirantha Vaasal Enakku Nichaiyam

Stanza
Thanimayin Naeram
Thunai Yaarumindri
Kalangi Naan Nirkum Bodhu
Bayam Vendam Endru
Belan Thanthiduveer
Athisayangal Kandida Cheiveer

Bridge
Thaniyaga Nirkum Podhu
Thunayaga Vandhiduveer
Manam Nondha Nerathilum
Maru Vazhvu Thandhiduveer
Oru Vazhi Adainthaalum
Pudhu Vazhi Thirakkum
Daveedhin Thiravukkol
Udayavarey

Chorus
Thirantha Vaasal Enakundu
Thirantha Vaasal Enakundu
Devan Thiranthittathai
Oruvarum Adaikka Mudiyathey
Thirantha Vaasal Enakku Nichaiyam
Thirantha Vaasal Enakku Nichaiyam

Siranthathai Tharubavar – சிறந்ததை தருபவர்

Siranthathai Tharubavar

சிறந்ததை தருபவர்
தடைகளை உடைப்பவர்
என்னை வளரச் செய்பவர்

யாக்கோபின் கன்மலையே
கைவிட தெரியாதவரே

1. கலங்கும் நேரங்களில்
கண்ணீர் துடைக்கிறீர்
தடுமாறும்போது என்னை
தாங்கி பிடிக்கிறீர்

சாய்ந்திட தோளை எனக்கு தந்தவரே
உங்க வாக்கை நம்பி வந்த என்னை
கடைசி வரைக்கும் நடத்த வல்லவரே
உங்க அன்புபோல எதுவும் இல்லப்பா
உங்க கிருபையை நான் பாடுவேன் அப்பா
உங்க அன்புபோல எதுவும் இல்லப்பா
உங்க கிருபையை கொண்டாடுவேன் அப்பா

2. மனிதரின் வார்த்தையால்
திடனற்று போகையில்
அலைகடல் மீது உம்
பாதங்கள் தோன்றுமே

கடல்மேல் நடக்க சொல்லி தந்தவரே
என் அடிமை வாழ்வின் துன்பம் நீக்கி
அரியணையில் அமரச் செய்பவரே
கரைசேர செய்யும் எந்தன் துணையாளரே
எல்லைகளை விரிவாக்கி
மேன்மைபடுத்துவீர்

3. ரூத்தை போல
முகவரி இழந்த என்னை
இஸ்ரவேலின் தேவன்
கனிவாய் கண்டீரே

எவரும் நினையாத நேரத்தில்
என் நிந்தை மாற்றி உங்க பேரை
பெருமைப்படுத்த என்னை
அணைத்தவரே
உங்க வம்சத்தில் என் பேரை எழுதினீர்
உங்க பெயரை சொல்ல என்னை அழைத்தீர்
உங்க வம்சத்தில் என் பேரை எழுதினீர்
உங்க மகிமையால என்னை மூடினீர்

Siranthathai Tharubavar
Thadaigalai Udaipavar
Ennai Valara Seiybavar

Yakkobin Kanmalaiye
Kaivida Theriyadhavare

1. Kalangum Nerangalil
Kanneer Thudaikireer
Thadumarum Podhu Ennai
Thaangi Pidikireer
Sainthida Tholai
Enakku Thanthavarey

Unga Vaaka Nambi Vandha Ennai
Kadaisi Varaikkum
Nadatha Vallavare
Unga Anbu Pola Edhuvum Illa Pa
Unga Kirubaya Naan Paaduvaen Appa
Unga Anbu Pola Edhuvum Illa Pa
Unga Kirubaya Kondaduvaen Appa

2. Manidharin Varthayaal
Thidanatru Pogayil
Alaikadal Meethu Um
Paadhangal Thondrume
Kadal Mel Nadakka
Solli Thanthavarey

En Adimai Vazhvin Thunbam Neeki
Ariyanayil Amara Seiybavare
Karai Sera Seiyyum
Endhan Thunaiyalare
Ellaigalai Virivaaki Maenmai Paduthuveer

3. Ruthai Pola Mugavari Izhantha Enna
Isravelin Devan Kanivaai Kandeerey
Evarum Ninaiyatha Naerathil

En Nindhai Maatri Unga Pera
Peruma Padutha
Ennai Anaithavarey
Unga Vamsathil En Pera Ezhuthineer
Unga Peyara Solla Ennai Azhaitheer
Unga Vamsathil En Pera Ezhuthineer
Unga Magimayale Ennai Moodineer

Siranthathai Tharubavar
Thadaigalai Udaipavar
Ennai Valara Seiybavar

Yakkobin Kanmalaiye
Kaivida Theriyadhavare

Ummai Allal Ondrum – உம்மை அல்லால் ஒன்றும்

Ummai Allal Ondrum
உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்
உதவிடும் என் தெய்வமே
உந்தன் கையில் ஆயுதமாக
உபயோகியும் இயேசையா

நேசரே உம் நேசம் போதும்
இயேசுவே உம் பாசம் போதும்
அன்பரே உம் மகிமை காண
ஆண்டவா நான் ஓடி வந்தேன்

1. நீரே திராட்சை செடி
நாங்கள் உம் கொடிகள்
உம்மில் நிலைத்திருந்து
மிகுந்த கனி கொடுப்போம்

2. நீரே நல்ல மேய்ப்பன்
நான் உந்தன் ஆட்டுகுட்டி
உம் தோளில் தான் இருப்பேன்
எங்கும் பின் சென்றிடுவேன்

3. நீரே என் தகப்பன்
நான் உந்தன் செல்லப்பிள்ளை
கீழ்படிந்து நடந்திடுவேன்
காலமெல்லாம் மகிழ செய்வேன்

Ummai Allal
Ondrum Seiyaen
Uthavidum En Deivamae
Unthan Kaiyil Aayuthamaga
Ubayogiyum Yesaiyya

Nesarae Um Nesam Podhum
Yesuvae Um Paasam Podhum
Anbarae Um Mahimai Kaana
Aandava Naan Odi Vandhaen

1. Neerae Thratchai Chedi
Naangal Um Kodigal
Ummil Nilaithirunthu
Migundha Kani Kodupom

2. Neerae Nalla Meipan
Naan Undhan Aatu Kutti
Um Tholil Thaan Irupaen
Ummai Pin Sendriduvaen

3. Neerae En Thagappan
Naan Undhan Chella Pillai
Keezhpadindhu Nadanthiduven
Kaalamellam Magizha Cheiyven

Unga Kirubai Pothume – உங்க கிருபை போதுமே

Unga Kirubai Pothume
உங்க கிருபை போதுமே
அது எனக்கு போதுமே
என் பெலவீனத்தில் உம்
பெலன் விளங்குமே

கிருபை எல்லாம் கிருபை நான் நிற்பதும் நடப்பதும் கிருபை – அல்லேலூயா

1. நான் சாகாமல் பிழைத்திருப்பது கிருபை
கர்த்தரின் செயல்களெல்லாம் சொல்ல வைப்பது கிருபை
(கிருபை……)

2. எல்லா பொல்லாப்புக்கும் விலக்கி காப்பது கிருபை
இக்கட்டு காலத்திலும் உதவி பெற்றது கிருபை
(கிருபை……)

3. பஞ்ச காலத்திலும் காப்பது உங்க கிருபை
கொள்ளை நோய்களுக்கும் விலக்கி மீட்பது கிருபை
(கிருபை……)

Unga Kirubai Pothume
Athu Enakku Pothume
En Belaveenathil Um Belan Vilangume

Kirubai Ellam Kirubai
Naan Nirbathum Nadapathum Kirubai – Hallelujah

1. Naan Saahamal Bilaithiruppathu Kirubai
Kartharin Seyalgalellam Solla Vaippathu Kirubai
(Kirubai….)

2. Ella Pollappukkum Vilakki Kaappathu Kirubai
Ikkatu Kaalathilum Uthavi Betrathu Kirubai
(Kirubai….)

3. Banja Kaalathilum Kaappathu Unga Kirubai
Kollai Noigalukkum Vilakki Kaappathu Kirubai
(Kirubai)

Immatum Neer Ennai Nadathi – இம்மட்டும் நீர் என்னை நடத்தி

Immatum Neer Ennai Nadathi
இம்மட்டும் நீர் என்னை நடத்தி
இம்மட்டும் என்னை பாதுகாத்தீர்
எந்தன் இயேசு மிகவும் நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்

ஒரு நாளும் கைவிடீரே
ஒரு நாளும் விலகிடீரே
ஒரு நாளும் மறந்ததில்லை
எந்தன் இயேசுவே மேலானவர் (ஆண்டவர்)

எந்தன் அவசியம் கருதி (அறிந்து)
வானத்தின் வாசல்கள் திறந்து
எல்லாம் பூரணமாய் நல்கினீரே
எந்தன் இயேசு நல்மேய்ப்பர்

Immatum Ennai Nadathi – இம்மட்டும் என்னை நடத்தினீர்

Immatum Ennai Nadathi
இம்மட்டும் என்னை நடத்தினீர்
இம்மட்டும் என்னை தாங்கினீர்
எந்தன் இயேசு நல்லவரே அவர்
என்றுமே போதுமானவர்

எந்தன் பாவ பாரமெல்லாம்
தன் மேலே ஏற்றுக்கொண்டு
எனக்காய் குருசில் மரித்த
எந்தன் இயேசு நல்லவரே

எந்தன் தேவைகள் அறிந்து
வின்வாசல்களை திறந்து
எல்லாம் நிறைவாய் எனக்கு தந்த
எந்தன் இயேசு நல்லவரே

மனபாரத்தின் நேரத்தில்
மனவேதனையின் வேளையில்
மனமுருகி நான் ஜெபிக்கையிலே
எந்தன் இயேசு நல்லவரே

வியாதி நேரத்தில் மருத்துவரே
துக்க வேளையில் ஆறுதலே
கொடும் வெயில்தனில் நிழல் அவரே
எந்தன் இயேசு நல்லவரே

ஒரு போதும் கைவிடாரே
ஒரு நாளும் விலகிடாரே
ஒரு நாளும் மறவாரே
எந்தன் இயேசு உண்மை உள்ளவர்

எந்தன் இயேசு வரும் போது
மார்போடு அணைப்பாரே
சீக்கிரமாய் வருவாரே
நான் அவருடன் சென்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா

Immatum Ennai Nadathi
Ithuvarayillium Ennai Thangi
En Yesu Nallavare
Avar Endrendrum Pothumanavar

Enthan Paava Baaram Ellam
Than Tholil Sumenthaare
Sluvaiyil Marithare
En Yesu Vallavare

Oru Pothum Kaividaare
Oru Naalum Thallidaare
Oru Naalum Marapathillai
En Yesu Unmaiullavar

En Kartharin Varugaiyile
Avar Maridam Sernthiduven
Ponathu Pol Vanthiduvar
En Yesu Vallavare