Neer Sonnal Pothum
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
ஆராதனை இயேசுவுக்கே! (4)
1. கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலை
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
என்தன் துணையாய் நிற்பதால் எனக்கு ஏது கவலை
2. பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை (என்றும்)
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் – 2
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும் (இன்னமும்) – 2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் – 2
கும்பிடுவோரை குணமாக்கும் வேகம் (…கல்வாரி)
2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண – 2
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் – 2
என்னை காணுவோர் உம்மை காணட்டும் (…கல்வாரி)
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா – 2
நான் சிறுகவும் நீர் பெருகவும் – 2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும் (…கல்வாரி)
Vetkama Unakku Vetkama
வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
ஊரு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
கட்டு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
உயிர் கொடுத்த இயேசு பத்தி சொல்ல வெட்கமா
தன்னையே இழந்த இயேசு முக்யமா
1. ரெண்டு காலு ரெண்டு கையு எதற்காக
உனக்கிருக்கும் பேச்சு மூச்சு எதற்காக
இயேசு பத்தி சொல்லு ஆத்துமாவ வெல்லு
துன்பத்திலும் இன்பத்திலும் யேசுகாக நில்லு
Selvam Gnanam Ithu
செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
ஐஸ்வரியம் சௌந்தர்யம்
இது எல்லாமே நீர் தந்தது
தந்தவரே திருப்பி தருகிறோம்
உம்மையே உயர்த்துகிறோம்
1. உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
பரலோகம் நிரம்பனும்
பாவி மனம் திரும்பனும்
அதற்காய் என்னையே தந்தேன் ஐயா
2. எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரிரீர்
அதை நான் அறிவேன் ஐயா
நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்
அதை நான் மறவேன் ஐயா
பரிசுத்தமாய் வாழனும்
உங்க முகம் பாக்கணும்
பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா