Um Anbu Ethanai Perithaiya
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்
வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே
எப்படி நான் மறப்பேன் -3
உம் அன்பை (2)
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
Devareer Neer Sagalamum Seiya Vallavar
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்
1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர்
2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர்
உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் -2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது