Song Tags: Good Friday Tamil Song Lyrics

Good Friday Tamil Song Index:
1. Aani Konda Um Kayangalai – ஆணி கொண்ட உம் காயங்களை
2. Alaganavar Arumaiyanavar – அழகானவர் அருமையானவர்
3. Anbe Kalvari Anbe – அன்பே கல்வாரி அன்பே
4. Antho Kalvariyil – அந்தோ கல்வாரியில்
5. Appa Um Patham – அப்பா உம் பாதம்
6. Balipeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே
7. Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்
8. Ellame Mudinthathu Endru – எல்லாமே முடிந்தது என்று
9. Engu Pogireer Yesu – எங்கு போகிறீர் இயேசு
10. Enkuthe Ennakanthan Thuyar – ஏங்குதே என்னகந்தான்
11. En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது
12. Ennavale Jeevan Viduthiro – என்னாலே ஜீவன் விடுத்தீரோ
13. En Yesuve En Nesare – என் இயேசுவே என் நேசரே
14. Ezhai Manu Uruvai – ஏழை மனு உருவை
15. Iratham Jeyam – இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
16. Iratham Kayam Kuthum – இரத்தம் காயம் குத்தும்
17. Iyya Neeranu Anna – ஐயா நீரன்று அன்னா
18. Jeevanulla Devane Varum – ஜீவனுள்ள தேவனே வாரும்
19. Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை
20. Kalangathe Kalangathe Karthar – கலங்காதே கலங்காதே
21. Kalvaari Siluvayilae – கல்வாரி சிலுவையிலே
22. Kalvari Anbai Ennidum Velai – கல்வாரி அன்பை எண்ணிடும்
23. Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை
24. Kalvari Malaiyoram Vaarum – கல்வாரி மலையோரம் வாரும்
25. Kalvari Mamalai Oram – கல்வாரி மாமலை ஓரம்
26. Kalvari Nayagane – கல்வாரி நாயகனே
27. Kalvariye Kalvariye – கல்வாரியே கல்வாரியே
28. Kalvariyin Karunai Ithae -கல்வாரியின் கருணையிதே
29. Karthar Thuyar Dhoniyai – கர்த்தர் துயர் தொனியாய்
30. Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே
31. Magimai Adaiyum Yesu – மகிமையடையும் இயேசு
32. Manathurugum Deivame – மனதுருகும் தெய்வமே
33. Marida Em Ma Nesare – மாறிடா எம்மா நேசரே
34. Mulmudi Sudiya Aandavar – முள்முடி சூடிய ஆண்டவர்
35. Naane Vazhi Naane Sathyam – நானே வழி நானே
36. Naan Ummai Patri – நான் உம்மைப்பற்றி
37. Nalla Kalam Porakuthu – நல்ல காலம் பொறக்குது
38. Nenjame Getsemanekku Nee – நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ
39. Nesare Um Thiru Paadam – நேசரே உம் திருபாதம்
40. Oppukoduthir Ayya – ஒப்புக் கொடுத்தீர் ஐயா
41. Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு
42. Parir Gethsemane – பாரீர் கெத்சமனே
43. Pavangal Pokave Sabangal Neekave – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
44. Pothumanavare Puthumaiyanavare – போதுமானவரே புதுமையானவரே
45. Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ
46. Ratha Kottai Kulle – இரத்தக் கோட்டைக்குள்ளே
47. Siluvai Naadhar Yesuvin – சிலுவை நாதர் இயேசுவின்
48. Siluvai Sumantha Uruvam – சிலுவை சுமந்த உருவம்
49. Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில்
50. Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன்
51. Thooyathi Thooyavare – தூயாதி தூயவரே உமது
52. Ullam Ellam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதய்யா
53. Ullamellam Uruguthaiyoo – உள்ளமெல்லாம் உருகுதையோ
54. Urugaadho Nenjam – உருகாதோ நெஞ்சம்
55. Urugatho Nenjam – உருகாதோ நெஞ்சம்
56. Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே
57. Uyirulla Yesuvin Karangalilae – உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
58. Vinthai Kiristhesu Raja – விந்தை கிறிஸ்தேசு ராஜா
59. Yen Intha Padukal – ஏன் இந்தப் பாடுதான்
60. Yen Intha Paduthan – ஏன் இந்தப் பாடுதான்!
61. Yerukindrar Thalladi – ஏறுகின்றார் தள்ளாடி
62. Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு
63. Yesu Umthainthu Kaayam – இயேசு உமதைந்து காயம்
64. Yezhai Manu Uruvai – ஏழை மனு உருவை

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே

Uruguayo Nenjame
1. உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்!
கரங் கால்கள் ஆணி யேறித்
திரு மேனி நையுதே!

2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நிலமெல் லாம் புரக்க
ஈனக் குரு சேறினார்

3. தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏக பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்

4. மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்

5. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கினார் அன்றோ?

Uruguayo Nenjame
1. Urukaayo Nenjamae Nee
Kurusinil Antho Paar!
Karang Kaalkal Aanni Yaerith
Thiru Maeni Naiyuthae!

2. Mannuyirkkaayth Thannuyirai
Maaykka Vantha Mannavanaam
Innilamel Laam Purakka
Eenak Kuru Serinaar

3. Thaaka Minji Naavaranndu
Thanga Maeni Manguthae
Aeka Paran Kannayarnthu
Ethanaiyaay Aenguraar

4. Moovulakaith Thaangum Thaevan
Moontanni Thaangidavo?
Saavu Vaelai Vantha Pothu
Siluvaiyil Thonginaar

5. Valla Paeyai Vella Vaanam
Vittu Vantha Theyvam Paaraay
Pullar Itho Nanti Kettup
Puram Paakkinaar Anto?

Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே

Kurusinil Thongiye
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ – குருசினில்

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை – குருசினில்

3. சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில்

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது பார் – குருசினில்

5. எருசலேம் மாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ – குருசினில்

Kurusinil Thongiye Kuruthiyum Vatiya
Kolkothaa Malaithanilae Nam
Kuruvaesu Suvaami Kodunthuyar Paavi
Kollaay Kann Konndu

1. Sirasinil Mulmuti Uruththida Arainthae
Siluvaiyil Serththaiyo – Theeyar
Thirukkarang Kaalkalil Aannikalatiththaar
Senaiththiral Soola – Kurusinil

2. Paathakar Naduvil Paaviyinaesan
Paathakanpol Thonga – Yootha
Paathakar Parikaasangal Pannnni
Patiththiya Kodumaithanai – Kurusinil

3. Santhirasooriya Sakala Vaan Senaikal
Sakiyamaal Naanuthaiyo – Deva
Sunthara Mainthanuyir Vidukaatchiyaal
Thutikkaaka Nenjunntoo – Kurusinil

4. Eettiyaal Sevakan Ettiyae Kuththa
Iraivan Vilaavathilae – Avar
Theettiya Theetchai Kuruthiyum Jalamum
Thiranthoorthoduthu Paar – Kurusinil

5. Yerusalaem Maathae Maruthi Neeyaluthu
Aengip Pulampalaiyo – Nin
Erusalaiyathipan Ila Manavaalaan
Eduththa Kolamitho – Kurusinil

Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு

Paavikku Pugalidam
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி

Paavikku Pukalidam Yesu Iratchakar
Paarinil Paliyaaka Maanndaarae

Parisuththarae Paavamaanaarae
Paaramaana Siluvai Sumanthavarae

1. Kaatti Koduththaan Muppathu Velli
Kaasukkaakavae Karththan Yesuvai
Kolai Seyyavae Konndu Ponaarae
Kolkothaa Malaikku Yesuvai – Paavi

2. Kallar Maththiyil Oru Kallan Pol
Kuttamatta Kiristhaesu Thonginaar
Parikaasamum Pasithaakamum
Padukaayamum Atainthaarae – Paavi

3. Kaalkal Kaikalil Aanni Paaynthida
Kireedam Mutkalil Pinni Sootida
Iraththa Vellaththil Karththar Thonginaar
Ithaikkaanum Ullam Thaangumo – Paavi

4. Ulakaththin Ratchakar Yesuvae
Uyir Koduththaar Uyirththelunthaar
Thammai Nampinaal Ummaik Kaividaar
Thalaraamal Nampi Oti Vaa – Paavi

Yerukindrar Thalladi – ஏறுகின்றார் தள்ளாடி

Yerukindrar Thalladi
ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
நடந்தே ஏறுகின்றார்

1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறு

2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் – ஏறு

3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே – ஏறு

4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறு

5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல் கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறு

6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
சொந்தத் தாயின் அன்பிதுவே
எருசலமே! எருசலமே!
என்றழுதார் கண் கலங்க – ஏறு

Yerukindrar Thalladi
Aerukintar Thallaatith Thavalnthu Kalaippotae
En Yesu Kurusai Sumanthae
En Naesar Kolkothaa Malaiyinmael
Nadanthae Aerukintar

1. Kannaththil Avan Ongi Atikkach
Sinnap Pillaipol Aengi Nintar
Anthap Pilaaththum Kaiyaik Kaluvi
Aanndavarai Anuppukintan – Yeru

2. Minjum Pelaththaal Eetti Eduththae
Nenjaip Pilanthaan Aa! Kodumai
Iraththamum Neerum Oti Varuthae
Iratchakarai Nnokkiyae Paar – Yeru

3. Inthappaadukal Unthan Vaalvukkaaych
Sonthappaduththi Aettukkonndaar
Naesikkintayo Yesu Naatharai
Naesiththu Vaa Kuruseduththae – Yeru

4. Seval Koovidum Moontu Vaelaiyum
Sontha Kuruvai Maruthaliththaan
Oti Oliyum Paethuruvaiyum
Thaeti Anpaay Nnokkukintar – Yeru

5. Pinnae Nadantha Anpin Seeshanpol
Pinpatti Vaa Siluvai Varai
Kaatiyaip Pol Kasanthirukkum
Kashdangalai Avaridam Sol – Yeru

6. Settakalin Geel Serththanaiththidum
Sonthath Thaayin Anpithuvae
Erusalamae! Erusalamae!
Entaluthaar Kann Kalanga – Yeru

Karthar Thuyar Dhoniyai – கர்த்தர் துயர் தொனியாய்

Karthar Thuyar Dhoniyai
கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்தில்
இதயம் நொறுங்கி ஜெபித்தார்

1. மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தோன்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர்

2. துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினாரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந்தனிமையிலே – கர்த்தர்

3. பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன் – கர்த்தர்

4. திறந்த கெத்சமெனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடினும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவோ – கர்த்தர்

5. பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கிறதே
பெருமூச்சுடன் அழைக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியுடன் ஜெபிப்பேன் – கர்த்தர்

6. இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்

 

Karthar Thuyar Dhoniyai
Kathari Mukangavilnthae
Irul Soolntha Thotathil
Ithayam Norungi Jepithaar

1. Maranathin Viyaakulamo
Manithar Thunai Illaiyo
Dhaeva Thoothan Thondidavae
Tharunam Nerunga Oppataithaar
Thunba Sumai Sumanthaar – Karthar

2. Thukathaal Tham Seesharkalae
Thalai Saaithu Thoonginaarae
Thammai Moovar Kaividavae
Thooramaai Kadanthae Thikilatainthaar
Thananthanimaiyilae – Karthar

3. Pithaavae Ippaathirathin
Panginai Naan Yettukontaen
Aakatum Umathu Sitham
Athu Neengidumo Enturaithaar
Aa! Iraththa Vaervaiyudan – Karthar

4. Thirantha Kethsamenaeyil
Thuninthu Vantha Pakainjan
Enna Thurokam Seithitinum
Enthan Sinaekithanae Entalaithaar
Enna Maa Anpithuvo – Karthar

5. Paraman Jeba Sathamae
Poongaavinil Kaetkirathae
Perumoochchudan Alaikkum
Avarotinnainthae Kanneerudan
Aaviyudan Jebipaen – Karthar

6. Yesu Thaangina Thunpangal
Ennaith Thaantiyae Sellaathae
Enakkum Athil Pangunntae
Siluvai Marana Paadukalaal
Seeyonil Sernthiduvaen – Karthar

Antho Kalvariyil – அந்தோ கல்வாரியில்

Antho Kalvariyil
அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்

1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே – அந்தோ

2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே – அந்தோ

3. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே – அந்தோ

4. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் – அந்தோ

Antho! Kalvaariyil Arumai Iratchakarae
Sirumai Atainthae Thonginaar

1. Makimai Maatchimai Maranthilanthoraay
Kodumai Kurusaith Therintheduththaarae
Maayalokaththo Daliyaathu Yaan
Thooya Kalvaariyin Anpai Anntidavae – Antho

2. Alakumillai Saunthariyamillai
Anthak Kaeduttar Enthanai Meetka
Pala Ninthaikal Sumanthaalumae
Pathinaayiram Paerilum Siranthavarae – Antho

3. Mulin Mutiyum Sevvangi Anninthum
Kaal Karangal Aannikal Paaynthum
Kuruthi Vatinthavar Thonginaar
Varunthi Mativoraiyum Meettidavae – Antho

4. Athisayam Ithu Yesuvin Naamam
Athinum Inpam Anparin Thiyaanam
Athai Ennnniyae Nitham Vaalvaen
Avar Paathaiyae Naan Thodarnthaekidavae – Antho

5. Siluvai Kaatchiyai Kanndu Munnaeri
Sevaiyae Purivaen Jeevanum Vaiththae
Ennaich Sernthida Varuvae Nentar
Entum Unnmaiyudan Nampi Vaalnthiduvaen – Antho

Parir Gethsemane – பாரீர் கெத்சமனே

Parir Gethsemane
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே

1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர்

2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர்

3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்

4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர்

5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் – பாரீர்

6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் – பாரீர்

Paareer Gethsamanae Poongaavilen Naesaraiyae
Paaviyenakkaai Vaendudhal
Seidhidum Saththam Dhoniththidudhae

1. Dhaegamellaam Varundhi Soagamadaindhavaraai
Dhaevaadhi Dhaevan Aega Suthan Padum Paadugal Enakkaayae – Paareer

2. Appaa Ippaaththiramae Neekkum Nin Siththamaanaal
Eppadiyumum Siththam Seieyya Ennai Thaththam Seidhaen Endraarae – Paareer

3. Raththaththin Vaervaiyaalae Meththavumae Nanainthae
Immaanuvaelan Ullamurugiyae Vaedudhal Seidhanarae- Paareer

4. Mummurai Tharai Meedhae Thaangonnaa Vaedhanaiyaal
Munnavan Thaanae Veezhndhu Jebiththaarae Paadhagar Meetpuravae – Paareer

5. Anbin Arul Mozhiyaal Aarudhal Alippavar
Thunba Vaelaiyil Thaettrvaarindriyae Nondhu Alarugindraar – Paareer

6. Ennaiyum Thammai Poala Maatrum Immaa Naesaththai
Enni Yenniyae Ullam Kanindhu Naan Endrum Pugazhndhiduvaen – Paareer

Paareer gethsamanae translation

Behold my beloved in Gethsemane garden
The cry of prayer for me sinner is heard

The whole body in pain, sorrow stricken
God of gods, the only Son sufferings are for me – Behold

O My Father, if possible, let this cup pass from Me
However I have given myself to do your Will said He – Behold

His blood sweats drenching Him
Emmanuel did an heart melting prayer – Behold

Three times He prayed with unbearable sufferings
God fell Himself and prayed for sinners’ redemption – Behold

He who comforts with loving grace words
Cries bitterly at this time of distress with nobody to console – Behold

His great love of changing me like Himself
I will praise Him with my whole heart thinking this forever and ever – Behold

Ullamellam Uruguthaiyoo – உள்ளமெல்லாம் உருகுதையோ

Ullamellam Uruguthaiyoo
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே

2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்

3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ

Kalvariye Kalvariye – கல்வாரியே கல்வாரியே

Kalvariye Kalvariye
கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்

1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே

2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே

3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே

4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே

5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே

6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே

7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே

Kalvariye Kalvariye
Kalvaariyae Kalvaariyae
Kal Manam Urukkidum Kalvaariyae – En

1. Paavi Thuroki Sanndaalan Naanaayinum
Paathakam Pokkip Parivudan Iratchiththa – Kalvaariyae

2. Paaviyai Meetkavae Naayakan Yesu Tham
Jeevanin Iraththaththaich Sinthina Unnatha – Kalvaariyae

3. Naathan Enakkaaka Aatharavatroraai
Paathakar Maththiyil Paathakan Pol Thongum – Kalvaariyae

4. Mulmuti Sootiyae Koor Aanni Meethilae
Kallanai Pola En Naayakan Thongidum – Kalvaariyae

5. Sarvam Pataiththaalum Sorloka Naayakan
Karmaththin Kolamaay Nirpathaik Kaannpaeno – Kalvaariyae

6. Ennnum Nanmai Aethum Ennilae Illaiyae
Pinnai Aen Naesiththeer Ennai En Pon Naathaa – Kalvaariyae

7. Ivvitha Anpai Naan Engumae Kaanneenae
Evvitham Ithargeedu Aelai Naan Seykuvaen – Kalvaariyae

Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

Yesu Kristuvin Anbu
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

1. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – இயேசு கிறிஸ்துவின்

2. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – இயேசு கிறிஸ்துவின்

Yesu Kristuvin Anbu
Entum Maaraathathu
Yesu Kiristhuvin Maaraa Kirupai
Entum Kuraiyaathathu

1. Un Meeruthalkalkaay Yesu Kaayangal Pattar
Un Akkiramangalkaay Yesu Norukkappattar
Unakkaakavae Avar Adikkappattar
Unnai Uyarththa Thannai Thaalththinaar – (2) – Yesu

2. Paavi Entennai Avar Thallavae Maattar
Aavalaai Unnai Alaikkiraarae
Thayangidaathae Thaavi Otivaa
Thanthai Yesuvin Sontham Kollavaa – (2) – Yesu