Kalvari Anbu Marrinadhennai
கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே – 2 அவதி எல்லாம்
என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே
இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே
கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே – 2 அவதி எல்லாம்
உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே
Ullankaiel Varainthavare
உள்ளங்கையில் வரைந்தவரே
கண்மனிபோல் கப்பவரே
தாயின்கருவில் என்னை கன்டவரே
பேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே
1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமே
மகிமையின் மேகமாய் என்னோடு வருமே
இஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமே
மகிமையின் மேகமாய் என்னோடு வருமே
கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
சிலுவையில் என்னை கண்டவரே
சிலுவையில் என்னை கண்டவரே
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்
Devane Naan Umathandaiyil
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே
2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே
3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே
Ezhai Manu Uruvai
ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே
1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு
2. அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு
3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு
4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை மனு
5. மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை மனு
Ezhai Manu Uruvai Eduththa
Yesu Raajan Unnanntai Nirkiraar
Aettuk Kol Avaraith Thallaathae