Song Tags: Tamil Cross Songs

Marithavar Uyirthaar – மரித்தவர் உயிர்த்தார்

Marithavar Uyirthaar
மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
மரணத்தை இயேசு ஜெயித்தார்

1. பேய்கள் அலறிட
நோய்கள் பறந்திட
பாதாள வல்லமைகள் பதறிட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

2. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
பாவத்தின் பெலனை அழித்திட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

3. கிறிஸ்து உயிர்த்ததால்
விசுவாசம் பிறந்தது
உயிர்த்தெழுதலின் முதற்பலனாக
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் இயேசு …)

Karthar Uyirthelunthaar – கர்த்தர் உயிர்த்தெழுந்தார்

Karthar Uyirthelunthaar
கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – இன்னும்
கல்லறை திறந்திருக்க
நற்செய்தி தரிசனங்கள்
சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம்

1. காரிருளில் கண்ணீருடன்
கல்லறை நோக்கியே சென்றனரே
அற்புதக் காட்சியும் கண்டிட ஸ்திரீகள்
ஆச்சர்யம் அடைந்தனரே

2. மரியாளே என்ற சத்தம்
மா திகைப்பாய் அவள் கேட்டிடவே
ரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி
ரபூனி என்றழைத்தான்

3. பயந்திடவே சீஷர்களே
பூட்டின உள்ளறை தங்கினரே
மெய்ச் சமாதானத்தின் வாக்குகள் கூறி
மேசியா வாழ்த்தி சென்றார்

Karthar Uyirthelunthaar – Innum
Kallarai Thiranthirukka
Narseythi Tharisanangal
Saatri Keerthanam Panniduvom

1. Kaarirulil Kannnneerudan
Kallarai Nokkiyae Sentanarae
Arputha Kaatchiyum Kantida Sthirekal
Aacharyam Adainthanarae

2. Mariyalae Endra Satham
Maa Thikaipaai Aval Kaetidavae
Ratchakar Tharisanam Kandu Munnodi
Rapooni Endralaithaan

3. Payanthidavae Sesharkalae
Pootina Ullarai Thanginarae
Mei Samaathaanathin Vaakkukal Koori
Messiyaa Vaalthi Sendaar

Uyirodu Ezhunthavar – உயிரோடு எழுந்தவர் நம்

Uyirodu Ezhunthavar
உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே – 2

ஜெயித்தவர் மரணம் ஜெயித்தவர்
உயிர்த்தார் உயிரோடெழுந்தார் – 2

1. கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
சாத்தானை ஜெயித்தவர் உயிருடன் எழுந்தாரே – உயிரோடு

2. வல்லமை உடையவர் சாபத்தை முறித்திட
நோய்களை தீர்த்திட வீரமாய் எழுந்தாரே – உயிரோடு

3. புதுபெலன் அடைந்திட சாட்சியாய் மாறிட
அபிஷேகம் செய்பவர் மகிமையாய் எழுந்தாரே – உயிரோடு

Sarva Valla Devane – சர்வ வல்ல தேவனே

Sarva Valla Devane
சர்வ வல்ல தேவனே என் இயேசுவே
சாவை வென்ற தேவனே என் இயேசுவே
அல்லேலூயா உயிர்த்தார் அல்லேலூயா (2)

1. பூமி மிகவும் பலமாக அதிரவே
தூதன் வானத்திலிருந்து இறங்கவே
கல்லறையின் கல் புரண்டு ஓடவே
காவலர் திடுக்கிட்டு நடுங்கவே

2. வேதாள கணங்கள் யாவும் ஓடவே
பாதாள சேனைகளும் நடுங்கவே
நித்திய நம்பிக்கை நமக்கு நல்கவே
நித்தமும் நம்மை வழி நடத்தவே

3. மரியாள் இயேசுவையே காணவே
மா திகைப்பாய் மனம் மகிழ்ந்தழைக்கவே
தோமாவும் சந்தேகத்தால் திகைக்கவே
உண்மையை கண்டு உள்ளம் பூரிக்கவே

Karthar En Nambikkai – கர்த்தர் என் நம்பிக்கை

Karthar En Nambikkai
கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

அல்லேலூயா அல்லேலூயா (4)

1. வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
பாதாளக் கட்டுகள் கழன்று போனது
பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

2. சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே

Karthar En Nambikkai Thurukamaanavar
Kanmalai Kottaiyum Iratchippumaanavar
Ataikkalam Pukalidam Kaedakam Entar
Aapaththu Naalil En Apayamumaavaar

Alleluyaa Alleluyaa (4)

1. Vaanam Asainthathu Poomi Athirnthathu
Paathaala Kattukal Kalantu Ponathu
Paarthalaththin Raajan Uyirthelunthaarae
Karthar Karthar Entu Poomi Mulanguthae

2. Samuththiraththin Mael Athikaaramutaiyavar
Sannithi Pirakaaraththin Akkiniyaanavar
Singaanam Entumaay Veettirukkavae
Siluvaiyil Mariththu Uyirthelunthaarae

Parisuthar Yesu – பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்

Parisuthar Yesu
பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
புகழ் செலுத்தி மகிழ்வோம்
அன்றதி காலை மூன்றாம் நாளில்
சொன்னபடி எழுந்தார்

1. சடுதி பூமி அதிர்ந்ததே
சரீரம் வைத்த கல்லறை
அற்புதமாகத் திறந்திடவே
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
தேவனின் வல்ல செயலிதுவே
தேவனால் கூடாததொன்றுமில்லை
கலங்கிடாமல் நம்பிடுவோம்
கைவிடமாட்டார் கடைசி வரை – பரிசுத்தர்

2. அழிவைக் காணார் பரிசுத்தர்
அகல பாதாளம் வென்றார்
பூமியிலே தாழ்விடங்களிலே
புண்ணியராக இறங்கினாரே
சிறைப் பட்டவரை சிறையாக்கி
சிறந்த வரங்கள் அளித்தாரே
வானாதி வானம் ஏறினாரே
வலது பாரிசம் வீற்றிடவே – பரிசுத்தர்

3. பரிசுத்தாவி பெலத்தினால்
மரித்தவர் எழுந்தாரே
சரீரமாம் தம் திருச்சபை மேல்
சத்திய ஆவி பொழிந்தனரே
ஆவியால் தேவன் இறங்கிடவே
ஆவியால் தேகம் நிரம்பிடுதே
ஆகமதில் உலவுகின்றார்
ஆனந்த பாக்கியம் அடைகிறோமே – பரிசுத்தர்

4. பரம சீயோன் சேருவோம்
மரணமோ நம் ஜீவனோ
கடைசி நேரம் கேட்டிடுவோம்
எக்காள சத்தம் முழங்கிடுமே
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தவர்கள்
கல்லறை திறக்க எழும்பிடவே
மறுரூபம் கண்ணிமைப் பொழுதே
மகிமை அடைந்தே பறந்து செல்வோம் – பரிசுத்தர்

Alleluyaa! Alleluyaa! – அல்லேலூயா! அல்லேலூயா!

Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! அல்லேலூயா!
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
1. கல்லறையின் கல் திறந்திடவே
காவலர் நடுங்கிடவே
கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
களிப்புடன் பாடியே ஆர்ப்பரிப்போம்

2. வானத்தின் சேனை துதித்திடவே
வேதாள கணங்கள் ஓடிடவே
முன்னுரைத்த வாக்கின்படி
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தார்

3. பார்தலம் யாவும் படைத்தவரை
பூமியும் தாங்கிடுமோ
ரூபித்தாரே தேவனென்று
மரணத்தை வென்று எழுந்தது

4. மரித்தவர் ஓர் நாள்
எழும்பிடுவர் மா தேவன்
இயேசுவைப் போல் பாக்கியமாம்
வாழ்வினையும் பரிசுத்தர்
இயேசு அளித்திடுவார்

5. சீயோனின் ராஜனாய் வந்திடுவார்
மத்திய வானத்திலே
தாம் வரும் அந்நாளினிலே
மகிமையின் சாயலாய் மாற்றிடு

Jeeva Kristhu Uyirthelunthar – ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

Jeeva Kristhu Uyirthelunthar

1. ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
தேவ குமாரன் மரித்தெழுந்தார்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்

அல்லேலூயா (3) கிறிஸ்து உயிர்த்தார் !
அல்லேலூயா கல்லறைக் காட்சி
அற்புத சாட்சியே – ஆண்டவர்
இயேசு உயிர்த்தெழுந்தார்

2. பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
வேதாள கூட்டம் நடுங்கிடவே
அன்றதிகாலை மா இருள் வேளை
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்

3. நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
சாவை ஜெயித்து காட்சி அளித்து
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்

4. பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
என் மன ஜோதி தம் அருள் ஆவி
என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார்

5. நல் விசுவாசம் தந்திடுவார்
நம்பிடுவோரை எழுப்பிடுவார்
எக்காள சத்தம் கேட்டிட நாமும்
ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே

1. Jeeva Kristhu Uyirthelunthar
Deva Kumaaran Mariththelunthaar
Paavangal Pokka Paaviyai Meetka
Paliyaana Yesu Uyirththelunthaar

Alleluyaa (3) Kiristhu Uyirththaar
Alleluyaa Kallarai Kaatchi
Arputha Saatchiyae – Andavar
Yesu Uyirthelunthar

2. Paathaalam Yaavum Maerkonndavar
Vaethaala Koottam Nadungidavae
Antathikaalai Maa Irul Vaelai
Mannaathi Mannan Uyirththelunthaar

3. Naam Tholum Thaevan Uyirullavar
Nam Kirisyesu Parisuththarae
Saavai Jeyiththu Kaatchi Aliththu
Sonnapatiyae Uyirthelunthar

4. Poorippudan Naam Paadiduvom
Pooloka Mengum Saattiduvom
En Mana Jothi Tham Arul Aavi
En Ullam Ootta Uyirthelunthar

5. Nal Visuvaasam Thanthiduvaar
Nampiduvorai Eluppiduvaar
Ekkaala Saththam Kaettida Naamum
Aekuvom Maelae Jeyithelunthae

En Meetpar Kiristu Uyirthelunthar – என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்

En Meetpar Kiristu Uyirthelunthar

என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் சாவை ஜெயித்தார்
எனக்கென்ன பேரின்பம்

1. பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் ஜோதி
நரர் வாழ்த்திடவே பெரும் நீதி
நீர் மாறா மெய் ஜோதி

2. உந்தன் மகிமையை என்றென்றும்
சொல்வேன் உயிர்த்தெழுந்ததின்
மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதென்பேன்
பரலோக வாழ்வென்பேன்

3. ஆ அல்லேலூயா துதி பாடு
இன்று அமலன் எழுந்தார் பாடு
மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு

Venranare Nam Yesu – வென்றனரே நம் இயேசு

Venranare Nam Yesu
வென்றனரே நம் இயேசு பரன்
என்றென்றும் ஜெயித்தெழுந்தார்
ஜெயமே அடைந்துமே
இரட்சகரில் வளருவோம்

1. சேதமேதும் நெருங்கிடா
தேவ தேவன் தாங்குவார்
துன்பம் யாவும் நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும் – வென்றனரே

2. தீங்கு நாளில் மறைத்துமே
சுகமாய் காத்து மூடுவார்
தகுந்த வேளை கரத்தினில்
உயர்த்தி ஜெயமே நல்குவார் – வென்றனரே

3. தேவனோடு செல்லுவேன்
மதிலைத் தாண்டி பாயுவேன்
உலகை ஜெயிக்கும் தேவனால்
யாவும் ஜெயித்து செல்லுவேன் – வென்றனரே

4. நீதிமானை உயர்த்துவார்
நீதிபரனாம் இயேசுவே
சத்துரு வீழ்ந்து அழிந்திட
தேவன் ஜெயமே தந்திடுவார் – வென்றனரே

Venranare Nam Yesu Paran
Enrenrum Jeyiththezhunthar
Jeyame Atainthume
Iratsakaril Valaruvom

1. Sethamethum Nerungkita
Theva Thevan Thangkuvar
Thunpam Yavum Ningkitum
Inpam Enrum Thangkitum – Venranare

2. Thingku Nalil Maraiththume
Sukamay Kaththu Mutuvar
Thakuntha Velai Karaththinil
Uyarththi Jeyame Nalkuvar – Venranare

3. Thevanotu Selluven
Mathilaith Thanti Payuven
Ulakai Jeyikkum Thevanal
Yavum Jeyiththu Selluven – Venranare

4. Nithimanai Uyarththuvar
Nithiparanam Yesuve
Saththuru Vizhnthu Azhinthita
Devan Jeyame Thanthituvar – Venranare