Song Category: Tamil

Maha Maha Periyathu – மகா மகா பெரியது

Maha Maha Periyathu

மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை

தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை

1. மிகக் கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2
கொள்ளைநோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே – 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

2. பெலவீனங்களைக் குறித்து
பரிதவிக்கும் மிகப்பெரிய
பிரதான ஆசாரியரே – 2
ஏற்ற வேளை உதவி செய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்திருக்கிறேன் – 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

3. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே – 2
பூலோகம் பரலோகம்
எவ்வளவு உயர்ந்ததோ
அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

4. திருப்பாதம் காத்திருந்து
மன்றாடும் பிள்ளைகள் மேல்
மனதுருகும் நல்ல தகப்பனே – 2
பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே – 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2

Yaar Iruntha Yenakenna – யார் இருந்தால் எனக்கென்ன

Yaar Iruntha Yenakenna
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2
எல்லோரும் இருப்பார்கள்
இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பவரே -2

(ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை -2
என் தகப்பனே தகப்பனே இயேசுவே -2
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2

1. தாயின் வயிற்றினிலே
என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே -2
உலக தோற்றம் முதல்
முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே-என்னை
வரைந்த தெய்வம் நீரே -2 – விலகாத

2. உடைந்த மண்பாண்டம்
வீதியிலே கிடந்தேனே
அழகும் இல்லாமல்
உறுவற்று போனேனே -2
என்னை மீட்டெடுக்க
இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சவுந்தர்யமும்
எனக்காக இழந்தவரே -2 – விலகாத

3. துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே -2
உமக்கு மறைவான
சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழி இல்லப்பா -2 – விலகாத

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்

Oozhiyam Seivathu Thaan
ஊழியம் செய்வது தான்
எங்கள் இதயத்தின் வாஞ்சையே
ஊழியப் பாதையிலே
நாங்கள் நிற்பதும் கிருபையே
எங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் & 2
ஊழியம் ஊழியமே

1 கிராமங்களில் செல்லுவோன்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
அழியும் ஆத்மாக்களை
இயேசுவிடம் சேர்த்திடுவோம்

2 மழையிலும் வெயிலிலும்
எந்ந சூழ்நிலை வந்தாலும்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
ஊழியத்தை நிறைவேற்றுவோம்

3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலே
ஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
பரலோக ராஜ்ஜியத்தில்
என்றென்றும் ஆளுகை செய்வோம்

Oozhiyam seivathu thaan
Engal idhayathin vaanjaye
Oozhiya paadhiyil
naangal nirpathum kirubaiye

Engal pechum Engal moochu
Oozhiyam Oozhiyamey

Mazhaiyilum veyililum
Endha soozhnilai vanthaalum
Suvisesham sollidum
Oozhiyathai niraivetruvom

Gramamgalil selluvom
Suvisesham solliduvom
Azhiyum aathumaakalai
Yesuvidum serthiduvom

Ini ooivum urakkam illai
Ezhupputhal desathiley
Aayiram aayiramaai
Janangalai serthiduvom

Azhaithavar unmayullavar
Avar enrenrum nadathiduvar
Paraloga raajiyathil
Endrendrum aalugai seivom

Kannokki Paarum Deva – கண்ணோக்கி பாரும் தேவா

Kannokki Paarum Deva

கண்ணோக்கி பாரும் தேவா என்னை
கண்ணோக்கி பாரும் தேவா
கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா
கண்ணோக்கி பாரும் தேவா

ஒத்தாசை அனுப்பும் பர்வதமே – 2
கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா
கண்ணோக்கி பாரும் தேவா

அசுத்த ஆவியை எடுத்தீரே
பரிசுத்த ஆவியை கொடுத்தீரே – 2
கர்த்தாதி கர்த்தனே அப்பா பிதாவே
உம் நாமம் எந்தன் கெம்பீரமே – 2
– கண்ணோக்கி

பயமுள்ள ஆவியை எடுத்தீரே
பலமுள்ள ஆவியை கொடுத்தீரே – 2
தேவாதி தேவனே அப்பா பிதாவே
உம் பாதம் எந்தன் தஞ்சமே – 2
– கண்ணோக்கி

உலகத்தின் ஆவியை எடுத்தீரே
உன்னத ஆவியை கொடுத்தீரே – 2
ராஜாதி ராஜனே அப்பா பிதாவே
உம் கிருபை என்றும் போதுமே – 2
– கண்ணோக்கி

kannokki paarum deva ennai
kannokki paarum deva
kannokki paarum deva Yesu deva
kannokki paarum deva

oththaasai anuppum parvathame – 2
kannokki paarum deva Yesu deva
kannokki paarum deva

asuththa aaviyai eduththeere
parisuththa aaviyai koduththeere – 2
karthaathi karthane appa pithaave
um naamam endhan gembeerame – 2 (kannokki)

bayamulla aaviyai edutheere
balamulla aaviyai kodutheere – 2
devathi devane appa pithaave
um paadham endhan thanjame – 2 (kannokki)

ulagathin aaviyai edutheere
unnatha aaviyai kodutheere – 2
raajathi raajane appa pithaave
um kirubai endrum podhume – 2 (kannokki)

Senaikalin Karthar Nallavarae – சேனைகளின் கர்த்தர் நல்லவரே

Senaikalin Karthar Nallavarae

சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிட தந்தருள்வார்

எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம்

1. வெள்ளங்கள் புரண்டுமோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்புநடுவிலும்
ஏசு நம்மோடங்கு நடக்கின்றார்

2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி
நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?

3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின்
அன்பில் நிலைத்திருப்போம்

4. இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து
ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்

Senaikalin Karthar Nallavarae
Sethaminti Nammai Kaapavarae
Sornthidum Naerangal Thaettidum Vaakkukal
Sothanai Ventida Thantharulvaar

Ekkaalathum Nambiduvom
Thikkatta Makkalin Maraividam
Pakkapalam Paathukaappum Ikkattil Aesuvae Ataikkalam

1. Vellangal Purandumothinaalum
Ullathin Uruthi Asaiyaathae
Aelu Madangu Neruppunaduvilum
Aesu Nammodangu Nadakkintar

2. Aalathintum Naam Koopiduvom
Aaththiramaay Vanthu Thappuvippaar Kappalin Pinnanni
Niththirai Seythidum
Karthar Nammodundu Kavalai Yen?

3. Kaathirunthu Pelan Pettiduvom
Kartharin Arputham Kanndiduvom
Jeevanaanaalum Maranamaanaalum Nam Thaevanin
Anpil Nilaithiruppom

4. Yesu Nam Yuthangal Nadathuvaar
Aettiduvom Entum Jeyakkoti
Yaavaiyum Jeyiththu Vaanaththilparanthu
Aesuvai Santhithu Aananthippom

Aalai Mothum Padugu Alkadalil – அலை மோதும் படகு ஆழ் கடலில்

Aalai Morhum Padugu Alkadalil

அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க
கரை சேர முடியாமல் தவிக்க
அப்பா என் இயேசு தப்பாமல் வருவார்
நான் போகும் கரையில் சேர்ப்பார்

தடுமாறும் போது
தாங்கும் உந்தன் கிருபை
தன்னிமையின் போது
அன்ணைக்கும் உந்தன் கரங்கள்

போதுமே உந்தன் அன்பு ஒன்றே
என் வாழ்வில் எப்போதும்
நீர் போதுமே

ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கிருபை
ஏங்கிடும் எனக்கு உதவி செய்யும் கிருபை

வாக்குகள் தந்து நடத்தும் உந்தன் கிருபை
வாக்கு மாறாமல் நிறைவேற்றும் கிருபை
அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க
கரை சேர முடியாமல் தவிக்க
அப்பா என் இயேசு உன் படகில் வருவார்
நீ போகும் கரையில் சேர்ப்பார்

En Kelvikellam Bathil – என் கேள்விக்கெல்லாம் பதில்

En Kelvikellam Bathil
என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
என் வாழ்வெல்லாம் துணை நீங்கதானப்பா
இரட்சகரே என் இயேசு ராஜா
என் தேவையெல்லாம் நீங்க தானே

1. சிங்கத்தின் வாயில் நான் இருக்கின்றேன்
சீறிடும் புயலில் நான் தவிக்கின்றேன்
அற்புதம் செய்திடுங்க கை
தூக்கி எடுத்திடுங்க

2. செத்தவனை போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தை போலானேன்
என் விளக்கை ஏற்றிடுங்க
பிரமிக்க செய்திடுங்க

3. புலம்பலை களிப்பாக மாற்றினீரே
மகிமை அமர்த்திடாமல் உயர்த்தினீரே
உயிருள்ள நாளெல்லாம் கீர்த்தனம் பண்ணிடுவேன்

Nam Kartharum Ratchagarumaagiya – நம் கர்த்தரும் ரட்சகருமாகிய

Nam Kartharum Ratchagarumaagiya

நம் கர்த்தரும் ரட்சகருமாகிய
இயேசு கிறிஸ்துவில் வளருங்கள் (4)

அவர் கிருபையிலும் விசுவாசத்திலும்
அவர் வார்த்தையிலும் பரிசுத்தத்திலும்
அவர் உறவினிலும் நற்கிரியையிலும்
நற்சாட்சியாய் வளருங்கள்

Nam Kartharum Ratchagarumaagiya
Yesu Kiristhuvil Valarungal (4)

Avar Kirubayilum Visuvaasathilum
Avar Varthayilum Parisuththathilum
Avar Uravinilum Narkiriyayilum
Narsaatchiyaai Valarungal

Asaathiyangal Saathiyame – அசாத்தியங்கள் சாத்தியமே

Asaathiyangal Saathiyame

அசாத்தியங்கள் சாத்தியமே
தேவா உந்தன் வார்த்தையாலே – 2
அசையாத மலை கூட அசைந்திடுமே
அமராத புயல் கூட அமர்ந்திடுமே – 2

எல்லா புகழும் எல்லா கனமும்
என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
எல்லா துதியும் எல்லா உயர்வும்
என்னில் நிலைவரமானவர்க்கே

எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
எனக்காய் பேசும் இயேசுவுக்கே – 2

1. நான் எடுத்த தீர்மானங்கள்
ஒன்றன் பின்னால் தோற்றனவே – 2
சோராமல் எனக்காக உழைப்பவரே
தோற்காமல் துணைநின்று காப்பவரே – 2

2. என் கை மீறி போனதெல்லாம்
உம் கரத்தால் சாத்தியமே – 2
என் கரம் தவறியே இழந்ததெல்லாம்
உம் கரம் தவறாமல் மீட்டிடுமே – 2

3. பரிந்துரைகள் செய்யாததை
பரன்கிருபை செய்திடுதே – 2
தானாக முன்வந்து உதவினீரே
முன்னுரிமை நானென்று காண்பித்தீரே – 2

Asaathiyangal saathiyame
Devaa Unga Vaarthayaalae – 2
Asayaadha Malaikooda Asaindhidumae
Amaraadha Puyalkooda Amarndhidumae – 2

Ella Pugazhum Ella Ganamum
Ennil Asaathiyam Seibavarkae
Ella Thudhiyum Ella Uyarvum
Ennil Nilaivaramaanavarkae

Enakkaai Nirkum Yesuvukkae
Enakkaai Paesum Yesuvukkae – 2

1. Naan Yedutha Theermaanangal
Ondranpinnaal Thoatranavae – 2
Soaraamal Enakkaaga Uzhaipavarae
Thoarkaamal Thunai Nindru Kaappavarae – 2

2. En Kai Meeri Poanadhellaam
Um Karathaal Saathiyamae – 2
En Karam Thavariyae Izhandhadhellaam
Um Karam Thavaraamal Meettidumae – 2

3. Parindhuraigal Seiyyaadhadhai
Paran Kirubai Seidhidumae – 2
Thaanaaga Munvandhu Udhavineerae
Munnurimai Naanendru Kaanbiththeerae – 2

Kalangidum Nerangalil – கலங்கிடும் நேரங்களில்

Kalangidum Nerangalil
கலங்கிடும் நேரங்களில்
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
திக்கற்ற பிள்ளையை விசாரிப்பவர்,
உன்னையும் விசாரிப்பாரே

காப்பார் உன்னை காப்பார்
கண்ணின் மணிபோல் உன்னை காப்பார்

1. உலகத்தின் செல்வங்கள் நிலைநிற்குமோ
உன்னதரின் அன்புக்கு ஈடாகுமோ
திரண்ட ஆஸ்தியும், உயர் கல்வியும்
நிலையான சமாதானம் தந்திடுமோ

வருவாயா, இதயம் தருவாயா?
இயேசு உன்னை அழைக்கின்றார்

2. நீ நம்பும் சொந்தம் உன் கூட வருமோ?
நம்பிக்கைக்கு உரியவர் இயேசு தானே
மேலான பதவியும், அதிகாரம் இருப்பினும்
அவையெல்லாம் நிரந்தரமாகிடுமோ?

நம்பி வா, தேடி ஓடி வா,
நிரந்தரம் அவரே, நிம்மதியும் அவரே

3. நிலையான நகரம் இங்கில்லையே
நிரந்தரம் நமக்கு பரலோகமே
நீ காணும் யாவும் நிலையானதல்ல
நித்திய ஜீவனை நாடிடுவாய்

இயேசுவே வழி, சத்தியம்
ஜீவனும் அவரே, சமாதானம் அவரே