Song Category: Tamil

Eesaakin Devan Aasirvathipaar – ஈசாக்கின் தேவன் ஆசீர்வதிப்பார்

Eesaakin Devan Aasirvathipaar
ஈசாக்கின் தேவன் ஆசீர்வதிப்பார்
என் எல்லையை பெரிதாக்குவார்
வர வர விருத்தியடைந்திடுவேன்
பலத்து பெரியவனாகிடுவேன் (2)

ரெகொபோத், ரெகொபோத்
நான் பெருகும்படி இடம் உண்டாக்கினார்
இயேசையா இயேசையா நான் செழிக்கும்படி என்னை ஆசீர்வதித்தார்

1. வெறுமையிலும் அருமையாக, நடத்திடுவார் குறைவில்லாமல் (2)
ஜெபத்திற்கு பதிலுண்டு – என்
கண்ணீருக்கு பலனுண்டு -2

ரெகொபோத், ரெகொபோத்
நான் பெருகும்படி இடம் உண்டாக்கினார்
இயேசையா இயேசையா நான் செழிக்கும் படி என்னை ஆசீர்வதித்தார்

2. விதைத்திடுவேன் விசுவாசத்தை, அறுத்திடுவேன் நூறு மடங்கு -2
ஏசேக்கு எனக்கில்லை,
சித்துனா இனி யில்லை -2

ரெகொபோத், ரெகொபோத்
நான் பெருகும்படி இடம் உண்டாக்கினார்
இயேசையா இயேசையா நான் செழிக்கும் படி என்னை ஆசீர்வதித்தார்

3. சத்துருக்கள் முன் உயர்த்தினாரே, என் சார்பில் வரச்செய்தாரே -2
சமாதானம் தந்தாரே,
சந்தோஷம் தந்தாரே -2

ரெகொபோத், ரெகொபோத்
நான் பெருகும்படி இடம் உண்டாக்கினார்
இயேசையா இயேசையா நான் செழிக்கும் படி என்னை ஆசீர்வதித்தார்

Esakkin Dhevan Aaseervadhipar
En Ellaiyai Peridhakuvar
Vara Vara Viruthi Adaindhiduven
Balathu Periyavanagiduven (2)

Rehoboth Rehoboth
Nan Perugumbadi Idam Undakkinar
Yesaiya Yesaiya Nan Sezhikkumbadi Ennai Aaseervadhithar (2)

1. Verumaiyilum Arumaiyaga
Nadathiduvar Kuraivillamal
Jebathirkku Badhilundu En
Kanneeruku Palanundu -2

Rehoboth Rehoboth
Nan Perugumbadi Idam Undakkinar
Yesaiya Yesaiya Nan Sezhikkumbadi Ennai Aaseervadhithar (2)

2. Vidhaithiduven, Visuvasathai
Aruthiduven, Nooru Madangu -2
Eseku (Argument) Enakillai
Sithuna (Jealous) Ini Illai -2

Rehoboth Rehoboth
Nan Perugumbadi Idam Undakkinar
Yesaiya Yesaiya Nan Sezhikkumbadi Ennai Aaseervadhithar (2)

3. Sathurukal Mun, Uyarthinare
En Saarbil Varaseidhare -2
Samadhaanam Thandhare
Sandhosam Thandhare -2

Rehoboth Rehoboth
Nan Perugumbadi Idam Undakkinar
Yesaiya Yesaiya Nan Sezhikkumbadi Ennai Aaseervadhithar (2)

Nam Devanai Thuthithu – நம் தேவனைத் துதித்துப்பாடி

Nam Devanai Thuthithu
நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்

களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்

1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

Nam Devanai Thuthithu Paadi
Avar Naamam Pottruvom

Kalikoornthiduvom Akamaghilthiduvom
Thuthi Saatriduvom Pughal Paadiduvom
Avar Naamam Pottruvom

1. Nam Paavam Yaavum Neekki Meettar
Avar Naamam Pottruvom
Thun Maarkka Vaasam Muttum Neekki
Avar Naamam Pottruvom – Kali Koor

2. Mei Jeeva Paathai Thannil Sendru
Avar Naamam Pottruvom
Nal Aaviyin Kanikal Eenthu
Avar Naamam Pottruvom – Kali Koor

3. Meloga Thoothar Geetham Paadi
Avar Naamam Pottruvom
Perinba Naadu Thannil Vaala
Avar Naamam Pottruvom – Kali Koor

Unakkulae Irukindravar – உனக்குள்ளே இருக்கின்றவர்

Unakkulae Irukindravar
உனக்குள்ளே இருக்கிறன்வர்
உன் இயேசு பெரியவரே
வல்லமை தந்திடுவார் வரங்கள் தந்திடுவார்
வாக்கு மாறாதவரே -2

1. எல்லா தடைகள் உடையுது
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் -2
என் தேவன் என்னுடன் இருக்கிறார்
நான் நன்றாக அறிந்தேனே -2 (உனக்குள்ளே)

2. நான் சோர்ந்து போன நேரம்
உங்க வார்த்தையால் உயிர்பித்தீரே – 2
நித்திய ஜீவ வார்த்தைகள்
என்னிடத்தில் உண்டு சொன்னீரே -2 (உனக்குள்ளே)

3. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தாங்கினதே -2
என் வாழ்க்கை உமது கரத்திலே
நான் ஒப்புவித்தேன் என்றென்றுமே -2 (உனக்குள்ளே)

Unakkulae Irukinravar
Un Yesu Periyavare
Vallamai Thandiduvaar
Varangal Thandiduvaar
Vaakku Maaraadhavare

1. Ellaam Thadaigal Udayudhu
Ummai Aaradhikkum Bodhellam -2
En Dhevan En Udan Irukiraar
Naan Nandraaga Arindhene -2

2. Naan Sorndhu Pona-neram,
Unga Vaarthayaal Yirpitheatre -2
Nithiya Jeeva Vaarthaigal
Yenidathil Undu Sonnere -2

3. Endhan Belaveena Naerangalil
Um Kirubai Thaanginadhe -2
Yen Vaalkai Umadhu Karathilae
Naan Oppuvithaen Endendrume -2

Lyrics, Tune & Sung By Pr.GIDEON PRAKASAM

Nandriyaal Paadiduven – நன்றியால் பாடிடுவேன்

Nandriyaal Paadiduven
நன்றியால் பாடிடுவேன் (நான்)
நன்றியால் பாடிடுவேன்
நீர் செய்த நன்மைகள் ஏரளாம் (நான்)
நன்றியால் பாடிடுவேன் – (2)

நல்லவரே நன்றி ஐயா
நன்மைகளை செய்தவரே
என்ன கடங்காத நன்மைகள்
என் வாழ்வில் செய்தவரே

1. கடந்த நாட்கள் எல்லாம்
கண்மணிபோல் காத்தீர் (2)
ஜீவன் தப்பவைத்தீர்
என்னை வாழவைத்தீர் (2)
(நல்லவரே)

2. உன்னை பெயர் சொல்லி
அழைத்த தேவன் நான் (2)
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வந்திடுவேன் (2)
(நல்லவரே)

3. வாழ்க்கை பயனத்திலே
தனிமை வாட்டும்போது (2)
கூடவே இருந்திரையா
துன்ப வேளையிலே (2)
(நல்லவரே)

Nandriyaal paadiduven ( naan)
Nandriyaal paadiduven
Neer Seitha Nanmaigal Yeraalam (naan)
Nandriyaal paadiduven

Nallavare Nandri Ayya
Nanmaigal Seithavare
Ennukkadangaatha Nanmaigal
En Vazhvil Seithavare

1. Kadantha Naatkal Ellam
Kanmani pol kaatheer (2)
Jeevan Thappa Vaitheer
Ennai Vazha Vaitheer

(Nallavare)

2. Unnai peyar Solli
Azhaitha Devan Naan (2)
Nee pogum idamellam
Unnodu Vanthiduven
(Nallavare)

3. Vazhkai Payanathilae
Thanimai Vattumbothu (2)
Kudave iruntheeraiyya
Thunba velaiyilae
(Nallavare)

Lyrics by Pr. Gideon Prakasam

Paraloga Geetham! | பரலோக கீதம்!

1. பரலோக கீதம் பாடும் அந்த நாள்
துன்பங்கள் என்னை விட்டு அகலும் அந்த நாள்
மனபாரங்கள் பறந்து ஓடி மறையும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் மகிமையான நாள் – அது (2)

ஆனந்தம் (2) ஆனந்தமே
இயேசுவைச் சந்திக்கும் நாள் ஆனந்தமே
அல்லேலூயா பாடி போற்றிடுவேன்
இயேசுவைக் கண்டு நான் மகிழ்ந்திடுவேன்

2. தூதர்கள் என்னை வரவேற்கும் நாள்
பரிசுத்தர் கூட்டத்தில் நானும் சேரும் நாள்
என் நேசரை முகமுகமாய் தரிசிக்கும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் இன்பமான நாள் -அது (2)

3. நீதி என்னும் ஆடை தரிக்கும் அந்த நாள்
ஜீவ நதி ஓரமாய் உலாவும் அந்த நாள்
ஜீவ கனி புசித்து மகிழும் அந்த நாள்
இயேசுவைச் சந்திக்கும் விந்தையான நாள் – (2)

4. கிரீடங்கள் எனக்குச் சூட்டப்படும் நாள்
வெகுமதிகள் வெகுவாய் பெற்று மகிழும் நாள்
ஜீவ புஸ்தகத்தில் என் பெயரைக் காணும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் மகிழ்ச்சியான நாள் – (2)

Paavi Naan Undhan Paathame – பாவி நான் உந்தன் பாதமே வந்தேன்

Paavi Naan Undhan Paathame
பாவி நான் உந்தன் பாதமே வந்தேன்
பாவ பாதாளச் சேற்றில் வீல்தேன்
ஆவியில் சேர்ந்தேன் ஜீவனைத் தாரும்
ரட்சகனே, ரட்சகனே, ரட்சகனே, ரட்சகனே

பன்றிகளோடு தினமுறவாடி
பாவிச் சேற்றில் வீழந்து புரண்டோடி
நன்றியில்லாமல் பிரிந்துமைச் சென்றேன்
பாதகன் நான், பாதகன் நான், பாதகன் நான், பாதகன் நான்

இயேசுவை இதயத்தில் ஏற்கவே இல்லை
ஏசியே உம்மைச் சிலுவையில் கொன்ரேன்
கடின மனத்தைக் கடந்து போகாதீர்
கிருபைகூரும், கிருபைகூரும், கிருபைகூரும், கிருபைகூரும்

Kartharai Kembiramaai Paadi – கர்த்தரை கெம்பிரமாய் பாடி

Kartharai Kembiramaai Paadi

கர்த்தரை கெம்பிரமாய் பாடி பாடி
இரட்சண்ய கன்மலையை உயர்த்திடுவோம்-2

ஒஒ ஓசன்னா அல்லேலூயா
ஓசன்னா அல்லேலூயா -4

பூமியின் குடிகளே துதியுங்கள்
பெரியவரை என்றும் புகழ்ந்திடுங்கள்
இம்மட்டும் காத்தாரே இனிமேலும் காப்பாரே
இம்மானுவேலரை துதியுங்கள்

ஒஒ ஓசன்னா அல்லேலூயா

நீதிமான்களே துதியுங்கள்
நீதி தேவனை உயர்த்திடுங்கள்
உண்டாக்கினாரே உயிர் கொடுத்தாரே
சிருஷ்டிகரை என்றும் துதியுங்கள்

ஒஒ ஓசன்னா அல்லேலூயா

பரிசுத்தவான்களே துதியுங்கள்
பரிசுத்தரை என்றும் போற்றிடுங்கள்
இரட்சண்ய மகிமையும் கனமும் செலுத்தி
தூயவரை என்றும் துதியுங்கள்

ஒஒ ஓசன்னா அல்லேலூயா

Ummai Sutri Sutri – சுற்றி சுற்றி

Ummai Sutri Sutri
உம்மை சுற்றி சுற்றி வந்தால் எனக்கு கிருபை கிடைக்குமே
உம்மை தொட்டு தொட்டு பார்த்தால்
எனக்கு சுகம் கிடைக்குமே

நீர்தானே எனக்கு நல்ல கர்த்தர்
நீர்தானே எனக்கு நல்ல மேய்ப்பர்

1. எதையெல்லாமோ சுற்றி வந்தேன் அறியாமையால்
எதையெல்லாமோ செய்தேன் ஒன்றும் புரியாததால்
கிருபையாக என்மீது அன்பு கூர்ந்து
உம்மை சுற்றிவர செய்தீரே நன்றி ஐயா .
(நீர்தானே எனக்கு ..)

2. ஊர் ஊராய் சுற்றி வந்தேன் உம்மைத்தேடி
நேர்த்திக் கடன் செலுத்தினேன் ஓடோடி
எதுவுமே தேவையில்லை என்று சொல்லி
என்னை தேடி வந்த தெய்வமே நன்றி ஐயா
(நீர்தானே எனக்கு ..)

3. எப்போதும் என்னை சுற்றி இருக்கின்றீர்
ஒருபோதும் என்னை விட்டு விலக மாட்டீர்
எனக்குள்ளே நீர் வந்து தங்கியதால்
என்னை ஆலயமாக்கிவிட்டீர் நன்றி

Aaviyaanavare Thooya Aaviyaanavare – ஆவியானவரே தூய ஆவியானவரே

Aaviyaanavare Thooya Aaviyaanavare
ஆவியானவரே தூய ஆவியானவரே
எங்கள் மத்தியிலே அசைவாடும் ஆவியே-2

ஆவியே தூய ஆவியே-4
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
எங்கள் தூய ஆவியே-2

1. அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அக்கினியாய் பயன்படுத்திடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-2
– ஆவியானவரே தூய…

2.வரங்களினால் என்னை நிரப்பிடுமே
வல்லமையாய் பயன்படுத்திடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-2
– ஆவியானவரே தூய…

3. பெலத்தின்மேல் பெலன் நான் அடைய
பெலத்தால் என்னை நிறைப்பிடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-4
– ஆவியானவரே தூய…

Enthan Raaga Thalaivane – எந்தன் இராக தலைவனே

Enthan Raaga Thalaivane
எந்தன் இராக தலைவனே…
எந்தன் சங்கீத தலைவனே…
உம்மை நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா…

என் நேசர் அழகு … என் ராஜா அழகு …
வெண்மையும் சிவப்புமானவரே
பதினாயிரங்களும் போற்றும் பரிசுத்தரே
மண்ணான எந்தன் துதியை
நீர் விரும்புகிறீர்

வானம் உம் சிங்காசனமும்
பூமி உம் பாதபடி
ஆளுகை செய்திடும் தேவனே
நீதி நியாயம் செய்திடும் நியாயாதிபதியே
ஒன்றுக்கும் உதவா என்னையும்
நீர் தெரிந்தெடுத்தீர்

ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதே நீர் செய்த நன்மையை சொல்லவே
பல நன்மைகள் செய்திடும் நல்லவரே
பாவியான என்னையும் நீர் நேசித்தீரே

எந்தன் இராக தலைவனே…
எந்தன் சங்கீத தலைவனே…
உம்மை நினைத்து நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா…