Aviyana Engal Anbu – ஆவியான எங்கள் அன்பு

Aviyana Engal Anbu
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்..

1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா
2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர்பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா
3. பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா
4. மனதை புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு
5. தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா

Adhikaalai Sthothirabali – அதிகாலை ஸ்தோத்திரபலி

Adhikaalai Sthothirabali
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)

1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்
2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி
5. யோகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா
8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்
9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்;
எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே
10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா

Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்

Athi Seekirathil
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது

2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே

3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே

5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்

6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

Athi Seekirathil Neegividum
Intha Lesaana Upathiravam
Sornthu Pogaathae – Nee

1. Ullaarntha Manithan Naalukku Naal
Puthithaakka Padukinta Neramithu

2. Eedu Innaiyillaa Magimai
Ithanaal Namakku Vanthidumae

3. Kaannkinta Ulakam Thaedavillai
Kaanaatha Paralogam Naadukirom

4. Chiristhuvin Poruttu Nerukkappattal
Paakkiyam Namakku Paakkiyamae

5. Mannavan Yesu Varukaiyilae
Magilinthu Naamum Kalikooruvom

6. Makimaiyin Deva Aavithaamae
Mannaana Namakkul Vaalkindar

Ularntha Elumbugal – உலர்ந்த எலும்புகள்

Ularntha Elumbugal

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும் – 2

ஐயா அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா – இன்று – 2

1. நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் (…ஐயா அசைவாடும்)

2. சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும் (…ஐயா அசைவாடும்)

3. தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே (…ஐயா அசைவாடும்)

4. காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே (…ஐயா அசைவாடும்)

5. சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே (…ஐயா அசைவாடும்)

6. மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே (…ஐயா அசைவாடும்)

7. சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே (…ஐயா அசைவாடும்)

8. பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே (…ஐயா அசைவாடும்)

Ularntha Elumbugal Uyirpettru Ezha Vendum
Ondru Sernthu Muzhu Manithanaaga Vendum – 2

Aiyaa Asaivaadum Asaivaadum
Aaviyaana Devaa – Indru – 2

1. Narambugal Uruvaagattum
Um Sinthai Undaakattum (…Aiyaa Asaivaadum)

2. Sathaigal Undaagattum
Um Vasanam Unavaagattum (…Aiyaa Asaivaadum)

3. Tholinaal Moodanume
Parisuththamaaganume (…Aiyaa Asaivaadum)

4. Kaaloondri Nirkanume
Karththarodu Nadakanume (…Aiyaa Asaivaadum)

5. Senaiyaai Ezhumbanume
Desamengum Sellanume (…Aiyaa Asaivaadum)

6. Marupadi Pirakanume
Maruroobam Aaganume (…Aiyaa Asaivaadum)

7. Saaththaanai Jeyikkanume
Saatchiyaai Nirkanume (…Aiyaa Asaivaadum)

8. Bayangal Neenganume
Parisuththamaaganume (…Aiyaa Asaivaadum)

Nandri Endru Sollugirom Natha – நன்றி என்று சொல்கிறோம்

Nandri Endru Sollugirom Natha
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)

1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்திரே நன்றி ராஜா

2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா

4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா

6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே

7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா

8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா

Um Samugame – உம் சமூகமே என் பாக்கியமே

Um Samugame
உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்..
ராஜா.. இயேசு ராஜா

1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே
2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா -2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே

Jeeva Thanneerae – ஜீவத்தண்ணீரே ஆவியானவரே

Jeeva Thanneerae
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாருமையா போதகரே (2)
வற்றாத ஜீவ நதியாக

1. கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழணுமே (2) வேண்டாமா
2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லமிடமெல்லாம் செழிப்புதானே
3. கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
4. கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்

Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே

Alugai Seiyum Aaviyanavare
ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே-என் ஆற்றலானவரே

1. நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்

2. அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என்

3. புதிதாக்கும் பரிசுத்தரே
புதுபடைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்

4. சங்கீதம் கிர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றிப் பலி செலுத்தணுமே

Aalugai seiyum Aaviyaanavarae
Baliyaai thandhaen Parisuthamaanavarae
Aaviyaanavarae en aatralaanavarae

1. Ninaivellaam umadhaaganum
Paechellaam umadhaaganum
Naal muzhudhum vazhinadathum
Um virupam seyalpaduthum

2. Adhisayam seibavarae
Aarudhal naayaganae
Kaayam kattum Karththaavae
kanneerellaam thudaipavarae – en

3. Puthidhaakkum Parisutharae
Puthupadaipaai maatrumaiyaa
Udaithuvidum urumaatrum
Panpaduthum payanpaduthum

4. Appaavai arindhidanum
Velippaadu thaarumaiyaa
Manakkannaal oli peranum
Magimaiyin achaaramae

5. Ullaana manidhanai
Vallamaiyaai balappaduthum
Anbu ondrae aanivaeraai
Adithalamaai amaindhidanum

Ungal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய்

Ungal Thukkam
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிடமாட்டார்

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய் – கலங்கிடவே வேண்டாம்
2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கிறார் – உன்
3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விடமாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார்
4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக்கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நாம்

Pallangal Ellam Nirambida – பள்ளங்களெல்லாம் நிரம்பிட

Pallangal Ellam Nirambida
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்(2)
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியல் போடப்படும்
2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே
3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும்
4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்
5. அநுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்