All Songs by Lucas Sekar

Paraloga Thanthaiye Paraloga – பரலோக தந்தையே பரலோக

Paraloga Thanthaiye Paraloga
பரலோக தந்தையே பரலோக தந்தையே
பரிசுத்த தெய்வம் நீரே
பல கோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்
பரிசுத்த தெய்வம் நீரே

பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே
பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே (2)
ஒரு மனதோடு கூடி வந்தோம்
உன்னத தேவனை தொழுதிடவே (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

அப்பத்த கேட்டா கல்ல கொடுப்பானா
மீன கேட்டா பாம்ப கொடுப்பானா
முட்டைய கேட்டா தேளை கொடுப்பானா
பொல்லாத தகப்பனே நல்ல ஈவை அறியும் போது

இம்மைக்கும் மறுமைக்கும்
பரம தகப்பன் நீர் தானே (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

பறந்து காக்கும் பட்சியைப் போலே
தேவன் தினமும் காத்திடுவாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே
தேவன் தினமும் சுமந்திடுவாரே

தாயைப் போல் தேற்றுவார்
தகப்பனை போல் சுமந்திடுவார் (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

புள்ளுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே
அமர்ந்த தண்ணீரைன்டை நடத்திடுவரே
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்ற போது
தாழ்ச்சியென்பது வாழ்வினில் இல்லை

நன்மையும் கிருபையும்
வாழ்நாளெல்லாம் தொடர செய்வார் (2)
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் (2)

Jeyithaare Jeyithaare – ஜெயித்தாரே ஜெயித்தாரே

Jeyithaare Jeyithaare
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
சாத்தானை ஜெயித்தாரே
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
மரணத்தை ஜெயித்தாரே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும்

நமக்கு எதிராய் எழுதப்பட்ட
கையெழுத்தை குளைத்தாரே
சத்துருவின் கையிலிருந்து
நம்மை விடுதலையாக்கினாரே (2)
ஏ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு
வெற்றி சிறக்க பண்ணுகிறார்
மரண வாசனை எடுத்துவிட்டு
ஜீவ வாசனை கொடுத்துவிட்டார் (2)
ஓ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

ஜீவனுள்ள கல்லாய் மாற்றி
மகிமையின் ஆலயம் கட்டுகிறார்
இந்த கல்லின் மேல் மோதுகிறவன்
நொறுங்கி நொறுங்கி போவானே
ஓ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

மரண பயத்தில் இருந்த நம்மை
முற்றிலும் விடுதலையாக்கினாரே
மரணத்தின் கூரை சிலுவையிலே
உடைத்து ஜெயித்து எழுந்தாரே (2)
ஏ கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு இராஜாதி இராஜாவ
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழக்க முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

Elshadaai Endra Naamam – எல்ஷடாய் என்ற நாமம்

Elshadaai Endra Naamam
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் (2)
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது (2)
சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது (2)
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்யம் (2)
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே
அகில உலகத்தையே ஆளுகிற தெய்வம் நீரே
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

யாரும்மை மகிமை படுத்தாமல் இருக்கலாம்
தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் (2)
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

Malaigal Ellam Vazhigal Aakkuvar – மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

Malaigal Ellam Vazhigal Aakkuvar
மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – (2)

ஆபிரகாமின் தேவன் – அவர் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் – அவர் நம்முடைய தேவன்

1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே (2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) – ஆபிரகாமின்

2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) – ஆபிரகாமின்

3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) – ஆபிரகாமின்

Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம்

Thudhikka Thudhikka Inbam Peruguthe
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை
துதிக்க துதிக்க மதிலை தாண்டுவேன்

1. பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க
துதிச்சது இரண்டு பேர் விடுதலை பலருக்கு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

2. அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்
பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யணும்
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

3. சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

Neer Thiranthaal Adaipavanillai – நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை

Neer Thiranthaal Adaipavanillai
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2)

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2)

1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர்
பூமியில் இல்லையே (2)
பலவானின் வில்லை ஒடித்து
கீழேத் தள்ளுகிறார் (2)
தள்ளாடும் யாவரையும்
உயர்த்தி நிறுத்துகிறார் (2)
உயர்த்தி நிறுத்துகிறார் – இல்லை இல்லை

1. நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்ப விடாமல்
கடலில் அழித்தவராம் (2)
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி (2)
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அனுகாது (2)
என்றும் அனுகாது – இல்லை இல்லை

2. தேவனைத் துதிக்கும் துதியாலே
எரிகோ விழுந்தது
பவுலும் சிலாவும் துதித்த போது
சிறையும் அதிர்ந்தது (2)
துதியாலே சாத்தானை
கீழேத் தள்ளிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம் (2)
கொடியை ஏற்றிடுவோம் – இல்லை இல்லை

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) – இல்லை இல்லை

Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai (2)

Illai illai illai
En vaasalai adaippavan illai
Illai illai illai
Ennai ethirppavan boomiyil illai (2)

1. Kartharai poala parisuthamullavar
Boomiyil illaiyae
Kartharai poala vallamaiyu’l’lavar
Boomiyil illaiyae (2)
Balavaanin villai odithu
Keezhae thallugiraar (2)
Thallaadum yaavaraiyum
Uyarthi niruthugiraar (2)
Uyarthi niruthugiraar – Illai illai

2. Naasiyin suvaasathaal sengkadalai
Avar irandaai pilandhavaraam
Paarvoan saenaiyai thappa vidaamal
Kadalil azhithavaraam (2)
Marana irul soozhndhidum vaelaiyil
Paskaa aattukkutti (2)
Vaadhai engal koodaarathai
Endrum anugaadhu (2)
Endrum anugaadhu – Illai illai

3. Dhaevanai thudhikkum thudhiyaalae
Erigoa vizhundhadhu
Pavulum silaavum thudhitha poadhu
Siraiyum adhirndhadhu (2)
Thudhiyaalae saathaanai
Keezhae thalliduvoam
Thirandha vaasal nam munnae
Kodiyai aetriduvoam (2)
Kodiyai aetriduvoam – Illai illai

Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai (2) – Illai illai

Ennathan Aanal Enna – என்னதான் ஆனால் என்ன

Ennathan Aanal Enna

என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார்
என்னதான் காடு மரணமே கிறிஸ்து

1. காடு மேடு கடந்து சென்றாலும்
கரம் பிடித்து என்னை நடத்துகிறாரே
ஆறுகளை நான் கடக்கும் போதும்
மூழ்கி நானும் போவதில்லை
அக்கினியில் நடக்கும் போதும்
எரிந்து நானும் போவதில்லை

2. மரணமே ஆனாலும் என்ன
ஜீவனே ஆனாலும் என்ன
பரிசுத்தரின் பின்னே செல்வேன்
திரும்பி நானும்பார்க்கமாட்டேன்
எனது ஜீவன் உமது கரத்தில்
ஒருவரும் பறிப்பது இல்லை

3. கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே
சாவு எனக்கு ஆதாயமே
தேவனின் அன்பிலிருந்து
பிரிப்பவர்கள் யாரும் இல்லை
உமது பாதம் எனது தஞ்சம்
எனது கோட்டை நீர்தானே

– என்னதான் காடு மரணமே கிறிஸ்து