Itho Oru Thirantha Vasal – இதோ ஓர் திறந்த வாசல்

Itho Oru Thirantha Vasal

இதோ ஒரு திறந்த வாசல்
உனக்காக எனக்காக
இயேசு தருகிறார் – 2

ஒருவனும் பூட்ட முடியாது (3) – இதை

1. அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட [மீட்டிட] அறுவடை பணியை நாம் செய்திட [செய்திட] – 2 (…இதோ)

2. கட்டுண்ட மக்களை விடுவிக்க [விடுவிக்க] சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட [மீட்டிட] – 2 (…இதோ)

3. கிராமம் எல்லாம் வீதியெல்லாம் சென்றிட [சென்றிட] ஏசுவின் ஊழியத்தை செய்திட [செய்திட] – 2 (…இதோ)

4. சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க [முறியடிக்க] சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட [தகர்த்திட] – 2 (…இதோ)

5. கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க [சுதந்தரிக்க] சிலுவை கொடி தேசத்திலே பறந்திட [பறந்திட] – 2 (…இதோ)

6. இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட [செயல்பட] மகிமையான ஊழியத்தை செய்திட [செய்திட] – 2 (…இதோ)

7. புறப்படு புறப்படு புறப்படு [புறப்படு] ராஜாவின் வேலை செய்ய புறப்படு [புறப்படு] – 2 (…இதோ)

8. ஏசுவுக்காய் உன்னையும் அர்பணிக்க [அர்பணிக்க] இரத்த சாட்சி வரிசையிலே நின்றிட [நின்றிட] – 2 (…இதோ)

9. தேசத்திலே அக்கினி ஊற்றப்பட [ஊற்றப்பட] நீயும் நானும் அக்கினியாய் மாறிட [மாறிட] – 2 (…இதோ)

Itho Oru Thirantha Vaasal
Unakkaaga Enakkaaga
Yesu Tharugiraar – 2

Oruvanum Pootta Mudiyaathu (3) – Ithai

1. Azhinthu Pogum Aathumaavai Meettida [Meettida] Aruvadai Paniyai Naam Seithida [Seithida] – 2 (…Itho)

2. Kattunda Makkalai Viduvikka [Viduvikka] Siraipatta Janangalai Meettida [Meetida] – 2 (…Itho)

3. Kraamam Ellaam Veethiyellaam Sendrida [Sendrida] Yesuvin Ooliyaththai Seithida [Seithida] – 2 (…Itho)

4. Saaththaanin Soozhchchigalai Muriyadikka [Muriyadikka] Saththuruvin Kottaigalai Thagarththida [Thagarththida] – 2 (…Itho)

5. Kaalmithikkum Desaththai Suthantharikka [Suthantharikka] Siluvai Kodi Desaththile Paranthida [Paranthida] – 2 (…Itho)

6. Yesuvukkaai Ezhumbi Neeyum Seyalpada [Seyalpada] Magimaiyaana Ooliyaththai Seithida [Seithida] – 2 (…Itho)

7. Purappadu Purappadu Purappadu [Purappadu] Raajaavin Velai Seiyya Purappadu [Purappadu] – 2 (…Itho)

8. Yesuvukkaai Unnaiyum Arpanikka [Arpanikka] Raththa Saatchi Varisaiyile Nindrida [Nindrida] – 2 (…Itho)

9.Desaththile Akkini Ootrappada [Ootrappada] Neeyum Naanum Akkiniyaai Maarida [Maarida] – 2 (…Itho)

Ponnana Yesuvai Punniya – பொன்னான இயேசுவை

Ponnana Yesuvai Punniya
பொன்னான இயேசுவை
புண்ணிய நல் நேசரை
கொண்டு செல்வோம் பூலோகம் எங்கும்
அவர் ஒன்றே வழி என்றே கூருவோம்

தேவனே நம்மை நடத்திடுவார்
தேவை அறிந்து பயன்படுத்திடுவார்

1. அவர் எந்நாளும் நம்மோடு
இருப்பதினால் அலைகள் புயல்கள்
நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம்
வஞ்சகனை வெல்வோம்
அரணான கோட்டைகளை பிடித்திடுவோம்

2. எலியா எலி சாமூலம் அற்புதம் செய்தார்
இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார்
எத்தனையோ நோய்கள்
அத்தனையும் போக்கும்
இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்

3. காலமும் கடலலையும் காத்திருக்காது – இந்த
காலத்திலே உலகை கலக்கிடுவோம்
கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம்

Neer Indri Vazhvethu Iraiva – நீரின்றி வாழ்வேது இறைவா

Neer Indri Vazhvethu Iraiva
நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே

2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
உமையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா

3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேனையா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா

Neerindri Vaazhvaedhu Iraivaa
Um Ninaivindri Magizhvaedhu Dhaevaa
Ulagathil Nooraandu Naan Vaazhndha Poadhum
Um Illathil Vaazhum Oru Naalae Poadhum

1. Pala Koadi Vaarthaigal Naan Kaetta Poadhum
Yaesuvae Neer Paesum Oru Vaarthai Poadhum
Oraayiram Jeevan Uyir Vaazhumae
Um Vaarthaiyil Undu Arpudhamae

2. Kallukkul Thaeraiyai Vaithavar Neer
Adharkullum Jeevanai Thandhavar Neer
Umaiyandri Anuvaedhum Asaiyaadhaiyaa
Um Thunaiyindri Uyir Vaazha Mudiyaadhaiyyaa

3. Ethanai Nanmaigal Seidheeraiyaa
Adhil Edharkendru Nandri Solli Thudhippaen Aiyaa
Athanaiyum Solla Vaendum Endraal
Aayiram Aandugal Poadhaadhaiyaa

Karthave Devargalil Umakopanavar Yaar – கர்த்தாவே தேவர்களில்

Karthave Devargalil

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)

உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்

1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)

2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)

3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2)
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2)

Karthaavae Dhaevargalil Umakkoppaanavar Yaar
Vaanathilum Boomiyilum Umakkoppaanavar Yaar (2)

Umakkoppaanavar Yaar Umakkoppaanavar Yaar
Vaanathilum Boomiyilum Umakkoppaanavar Yaar

1. Sengadalai Neer Pilandhu
Undhan Janangalai Nadathi Sendreer (2)
Neer Nallavar Sarva Vallavar
Endrum Vaakku Maaraadhavar (2)

2. Thootharkal Unnum Unavaal
Undhan Janangalai Poashitheerae (2)
Ummai Poala Yaarundu
Indha Janangalai Naesithida (2)

3. Kanmalaiyai Neer Pilandhu
Undhan Janangalai Thaagam Theertheer (2)
Um Naamam Adhisayam
Indrum Arpudham Seidhiduveer (2)

Ennil Enna Kandeer – என்னில் என்ன கண்டீர்

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே

1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் – என்னில் என்ன

2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் – என்னில் என்ன

3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே – என்னில் என்ன

Ennil Enna Kandeer Ennai Nesikka
Ippaavikku thagudhi Illaye
Ennil Enna Kandeer Ennai Nesikka
Ivvelaikku thagudhi Illaye
1. En Belaveenam Arindhum Nesitheer
En Kuraigal Therindhum Neer Nesitheer – Ennil Enna

2. Ummai Vittu Vilagum Seyal Seidha Naalundu
Ummai Kaayapaduthum Vaarthai Sonna Naalundu
Paavam Seiya Kaalam Ketta Throgi Naan (2) – Ennil Enna

3. Paava Setril Kidandha Oru paavi naan aiya
Undhan Anbin Kayitral Ennai Elutheere
Um Nesam pol Ondrum Engum illaye (2) – Ennil Enna

ennil enna kandeer ennai nesika
ip paviku thagudhi illaye.
ennil enna kandeer ennai nesika
iv vezhaiku thagudhi illaye.

en balaveenam arindhum neer nesithir
en kuraigal therindhum neer nesithir

ummai vitu vilagum seyal seidha naazhundu
ummai kaya paduthum varthai sonna naazhundu
paavam seiya kaalam keta throgi naan(2)

paava setril kidandha oru paavi naan ayya
undhan anbin kayitral ennai elutheere
um nesam pol ondrum engum illaye(2)

Album Name: Karunayin Pravagam
Singer: John Sam

Ennai Marava Yesu Natha – என்னை மறவா இயேசு நாதா

Ennai Marava Yesu Natha
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே

2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை

3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே

4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே

5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடும்.

Ennai Marava Yesu Natha
unthan thayavaal ennai nadathum

1. Valla jeeva vaakkuthathangal
varainthenakkai thanthathaale sthothiram
aabathile arum thunaiye
paathaikku nalla theebamathe

2. Payapadathe valakarathale
pathukaapen entrathale sthothiram
paasam enmel neer vaithathinaal
parikka iyalaathevarumennai

3. Thai than seyai maranthu vittalum
maraven unnai entrathale sthothiram
varaintheerentro um ullankaiyil
unnatha enthan pugalidam

4. Unnai thoduvon en kanmaniyai
thoduvathaaga uraithathale sthothiram
akkiniyin mathilaaga
anbare ennai kaathidum

5. Ennai muttrum oppuvithen
yetru entrum nadathuveere sthothiram
eppadiyum um varugaiyile
yezhai ennai serthidum

Magilvom Magilvom – மகிழ்வோம் மகிழ்வோம் தினம்

Magilvom Magilvom
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே – இந்த

2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்

4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Magilvoom Magilvoom thinam agamagilvoom
Yesu raja nam sonthamaginaar
Intha paarthalathil sonthakararavar
enthan ullathil sonthamanar

Ha aanathanmay paramanathamay
ithu maa perum bakkiyamay – intha

1. Chinnamcheruvayathil ennai kurithuvittar
Thuram poyenum kandukondar
Thamathu jeevanai enakum alithu
Jeevan petrukkol endruraithar

2. Yentha sulnilaiyum avaar anbinindru
Ennai pirikaathu kathukolvar
Ennai nambiavar thantha poorupathanai
Avar varum varai kathu kollven

3. Avar varum nallilae ennai karam asaithu
anbaai kupituu seirthukolvar
Avar samugamathil angay aavarudanay
aadi paadiyay magilthiduven

Yehovah Nissi Yehovah Nissi – யெகோவா நிசி யெகோவா நிசி

Yehovah Nissi Yehovah Nissi
யெகோவா நிசி (4)
யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)

1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம்

2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபெலமோ தேவையா
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
ஜீவ தேவ சேனை அல்லவா – நம்

3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
அல்லேலூயா தேவ படை வெல்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – என்றும்

Setril Irunthu Thookinar – சேற்றிலிருந்து தூக்கினார்

Setril Irunthu Thookinar

சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலைமேல் நிறுத்தினார்

பாவமான வாழ்க்கையை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே

அவர் எந்தன் கன்மலை
அவர் எந்தன் கன்மலையானர்

Yesuvai Pol Azhugullore – இயேசுவைப் போல் அழகுள்ளோர்

Yesuvai Pol Azhugullore
இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை

1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்

2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்

3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்

4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்

5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்

6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

Yesuvai Poll Azhugullore Yaaraiyum Ippoovinil
Ithuvarai Kanndathillai Kaanbathumillai

1. Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil
Neerae Pothum Verae Vendaam Enthan Anbar Yesuvae
Mannukaaga Maanikkaththai Vittidamaattaen

2. Sampoorana Azhugullore Ennai Meettu Konnteerae
Sampooranamaaka Ennai Unthanukgeenthaen

3. Yerusalaem Kumaarikal Eththanai Valainthoraay
Ummil Ulla Enthan Anpai Neekka Muyantar

4. Loka Suka Maenmaiyellaam Enthanai Kavarchithaal
Paava Sothanaikalellaam Ennai Sothithaal

5. Neermel Mothum Kumilipol Minnum Jadamokamae
En Mel Vanthu Vegamaaga Mothiyadithaal

6. Thinanthorum Ummil Ulla Anbu Ennil Ponguthae
Nesarae Neer Veegam Vanthu Ennai Serumae