Ummai Pugalinthu Paaduvathu Nallathu
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
அது இனிமையானது ஏற்புடையது
1. பாடல்கள் வைத்திர் ஐயா
பாலகர் நாவிலே
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா
உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது – 2
2. நிலாவை பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
என்னை நினைத்து விசாரித்து
நடத்த நான் எம்மாத்திரமையா
3. வானதூதனை விட சற்று
சிறியவனாய் படைத்துள்ளீர்
மகிமை மாட்சிமை மிகுந்த
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்
4. அனைத்துப் படைப்புகள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
காட்டு விலங்குகள் மீன்கள்
பறவைகள் கீழ்படியச் சொன்னீர்
1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்
விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம்
2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்
3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்
கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
எப்போதும் நமக்கு தந்திடுவாரே
4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்
Yaar Pirikka Mudiyum Naathaa
யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
1. என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா
2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே
3. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
4. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
Nambikkaiyinaal Nee
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார்
1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய்
2. ஆடையை தொட்டால் நலம்பெறுவேனே
அறிக்கை செய்து சுகமடைந்தாள்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்
3. ஆபிரகாம் சாராள் குழந்தைப்பெற
ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்
வாக்குதத்தம் செய்தவர் நம்பதக்கவர்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்
4. கட்டாந்தரையிலே நடப்பது போல்
கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்
5. உலகிலே இருக்கும் அவனை விட
உனக்குள் இருப்பவர் பெரியவரே
துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி காணச் செய்வார்
6. மலையைப் பார்த்து கடலில் விழு
என்று சொன்னால் நடந்திடுமே
உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
நம்பினால் எல்லாம் நடந்திடுமே
Ummai Naan
உம்மை நான் போற்றுகிறேன் இறைவா
உம்மை நான் புகழ்கின்றேன் தேவா
போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வணங்குகின்றேன்
1. என்னைக் கைதூக்கிவிட்டீர்
எதிரியின் மேல் வெற்றி தந்தீர்
உதவி தேடி வந்தேன்
உடல் சுகம் தந்தீரய்யா- ஆஆ
புகழ்ந்து பாடுவேன்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
2. மாலைநேரம் அழுகையென்றால்
காலை நேரம் ஆனந்தமே
நொடிப்பொழுது உந்தன் கோபம்
தயவோ வாழ்நாளெல்லாம்
3. சாக்கு துணி களைந்துவிட்டீர்
மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்
புலம்பலை நீக்கிவிட்டீர்
புதுப்பாடல் நாவில் வைத்தீர்
4. மலைபோல் நிற்கச் செய்தீர்
மாவேந்தன் உம் அன்பினால்
நிலைகலங்கி போனேன் ஐயா
நின்முகம் மறைந்தபோது
5. என் உள்ளம் புகழ்ந்து பாடும்
இனி மௌனமாய் இருப்பதில்லை
கர்த்தாவே என் தெய்வமே
கரம்பிடித்த மெய் தீபமே
6. புழுதி உம்மை புகழ முடியுமா?
சத்தியம் சொல்ல அதனால் இயலுமா?
என் மீது இரங்கும் ஐயா
எனக்குத் துணையாய் இரும்