Nerukkadi Velaiyil Pathilalithu – நெருக்கடி

Nerukkadi Velaiyil Pathilalithu
நெருக்கடி வேலைளில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்
1. நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்;ந்திடுவார்
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொள்வார்
2. உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார்
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார்
3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
4. இரதங்களை நம்பும் மனிதர்
இடறிவிழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்

Malaimel Yeruvom – மலைமேல் ஏறுவோம் மரங்களை

Malaimel Yeruvom
மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
1. தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா
2. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய்
அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம்
வீணாய்ப் போவதேன்
3. மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்;
4. தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டைபண்ணாதே
5. சாப்பிட்டும் திருப்தியில்லை
குடித்தும் நிறைவில்லை
ஆடை அணிகின்றோம்
குளிரோ போகவில்லை

Ennai Kaakum – என்னைக் காக்கும்

Ennai Kaakum
என்னைக் காக்கும் கேடகமே
தலையை நிமிரச் செய்பவரே
இன்று உமக்கு ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை
1. உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
எனக்கு பதில் நீர்தந்தீரய்யா
படுத்து உறங்கி விழித்தெழுவேன்
நீரே என்னைத் தாங்குகிறீர்
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
2. சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
அஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன்
விடுதலை தரும் தெய்வம் நீரே
வெற்றிப்பாதையில் நடத்துகிறீர்
3. பக்தியுள்ள அடியார்களை
உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்
வேண்டும்போது செவிசாய்க்கிறீர்
என்பதை நான் அறிந்துகொண்டேன்
4. உலகப்பொருள் தரும் மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
நீர் ஒருவரே பாதுகாப்புடன்
சுகமாய் வாழச் செய்கின்றீர்
5. உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன்
உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன்
எனக்கு நன்மை செய்தபடியால்
நன்றிப் பாடல் பாடிடுவேன்

Sabaiyorae Ellorum – சபையோரே எல்லோரும்

Sabaiyorae Ellorum
சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
அவரது இரக்கம் என்றும் உள்ளது
1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்
அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார்

2. கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்
ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார்
ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார்

3. கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்
விடுதலைகீதங்கள் பாடவைக்கின்றார்
வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்

4. சொந்த மகனெறும் பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே
அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும்
அருள்வார் என்பதும் நிச்சயம்தானே

Manam Irangum Deivam Yesu – மனமிரங்கும்

Manam Irangum Deivam Yesu
மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்
1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தைபிடித்துதூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்
2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்
3. நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்

Udalai Kodu Ullathai Kodu – உடலைக் கொடு

Udalai Kodu Ullathai Kodu
உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார்
1. ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
உன்னை தேவன் உயர்த்துவாரு
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடனில்லாமல் நடத்துவாரு
2. நன்றிப்பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும்வென்றிடு
3. தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு
ஆளும் தலைவர்களை ஜெபத்;தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்
4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான்
அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
5. நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு

Pasumaiyana Pul Veliyil – பசுமையான புல்வெளி

Pasumaiyana Pul Veliyil
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே
நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே

என் மேய்ப்பவரே…நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா

1. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர்

2. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர்

3. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல

4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே

5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே

6. எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர்
எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர்

Pasumaiyana Pul Veliyil Padukka Vaippavarae
Amaithiyaana Thanneerandai Alaithu Selpavarae
Noyillatha Sugavaalvu Enakku Thanthavarae
Karampidithu Kadanillaamal Nadathi Selpavarae
En Maeiparae… Nal Aayanae
Enakondrum Kuraiyillappaa

1. Karangalaalae Annaithu Kondu
Sumanthu Selgireer
Maranthidaamal Unavu Koduthu
Belan Tharukireer

2. Puthiya Uyir Thinam Thinam Enakku Tharukireer
Um Peyarukkaerpa Parisuthamaai Nadathi Selkireer

3. Marana Irul Pallathaakil Nadakka Naernthaalum
Appaa Neenga Irupathaalae Enakku Bayamilla

4. Jeevanulla Naatkalellaam Nanmai Thodarumae
Thaevan Veettil Thinam Thinam Thangi Makilvaenae

5. Enathu Ullam Apishaekathaal Nirampi Valiyuthae
Ellaa Naalum Nantip Paadal Paati Makiluthae

6. Ethirikalin Kann Munnae Virunthu Tharukinteer
Enathu Thalaiyil Narumanath Thailam Poosukireer

Akkini Nerupai Irangi Varum – அக்கினி நெருப்பாய்

Akkini Nerupai Irangi Varum
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும்
1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்துப் பேசினீரே
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
எங்களை நிரப்பி பயன்படுத்தும்
2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
எங்களின் குற்றங்களை எரித்துவிடும்
3. ஏசாயா நாவைத் தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
எங்களை அனுப்பும் தேசத்திற்கு
4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
அந்நிய மொழியை பேச வைத்தீரே
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே
5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
எங்களை நிரப்பும் ஆவியினால்

Kangallai Pathiyavaipom – கண்களை பதிய வைப்போம்

Kangallai Pathiyavaipom
கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன்செல்லுவோம்
1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறித் தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்
2. இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்
3. தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்
சோர்ந்து போகமாட்டோம்
4. ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் -நம்
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு
5. மேகம் போன்ற சாட்சிகள்
நம்மை சூழ்ந்து நிற்க
நியமித்த ஓட்டத்திலே
ஓடுவோம் பொறுமையோடு

Ummil Naan Valgiren- உம்மில் நான் வாழ்கிறேன்

Ummil Naan Valgiren
உம்மில் நான் வாழ்கிறேன்
உமக்குள்ளே வளர்கிறேன்
1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே
வேர் கொண்டு வளரும் மரம்தானே
படர்ந்திடுவேன் நிழல் தருவேன்
பறவைகள் தங்கும் வீடாவேன்
2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்
அமைந்து உயரும் கட்டடம் நான்
பெருங்காற்று அசைப்பதில்லை
பெருமழையோ பிரிப்பதில்லை
3. இயேசுவே எனது தலையானீர்
நானோ உமது உடலானேன்
உம்நினைவு என் உணவு
உம் விருப்பம் என் ஏக்கம்
4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்
கொடியாய் படர்ந்து கனிதருவேன்
இலைகளெல்லாம் மருந்தாகும்
கனிகளெல்லாம் விருந்தாகும்
5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே
உந்தன் ஆவி என்னோடே
மீட்பளிக்கும் நறுமணம் நான்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்