Nan Unaku Pothithu Nadakum – நான் உனக்கு போதித்து

Nan Unaku Pothithu Nadakum
நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே
உன்மேல் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு
1. ஈசாக்கு விதை விதைத்து
நூறுமடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல
2. ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே(ளே)
ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு
3. தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல்
4. கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்
(அறிக்கை செய்வார்கள்)
5. கலங்காதே நான்
உன்னோடு இருக்கிறேன் மகனே
பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில்
6. உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் – உன்னோடு

Thanirgal Kadakum Pothu – தண்ணீர்கள்

Thanirgal Kadakum Pothu
தண்ணீர்கள் கடக்கும்போது என்னோடு இருக்கிறீர்
அக்கினியில் நடக்கும்போது கூடவே வருகின்றீர்…
மூழ்கிப் போவதில்லை நான் எரிந்து போவதில்லை
1. என்மேல் அன்புகூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா
2. உமது பார்வையிலே
விலையேற பெற்றவன் நான்
மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
3. பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
ஆபத்திலே பாடி மகிழச் செய்தீரே
4. பெற்ற தாய் தனது பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே – உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
5. என்னை படைத்தவரே உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
6. என்னை மீட்கும்படி தன்னை பலியாக்கினீர்
எனக்குள் வந்து விட்டீரே
(என்னை) ஆட்கொண்டு நடத்திச் செல்வீரே

Ennai Kakavum – என்னைக் காக்கவும்

Ennai Kakavum
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
எனக்காய் யுத்தம் செய்து
இரட்சித்து வழி நடத்தி
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
ஏழு வழியாக துரத்திடுவீர்
2. வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
3. போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்
4. நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
5. காலை தோறும் என்னை எழுப்புகிறீர்
கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்
6. வற்றாத நீருற்றாய் ஓடச்செய்தீர்
வளமான தோட்டமாக மாற்றுகிறீர்

Ennai Nadathum Yesu Natha – என்னை நடத்தும்

Ennai Nadathum Yesu Natha
என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா
1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா
2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா
3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே
4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
6. உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன்

Vallamaiyin Aaviyanavar – வல்லமையின் ஆவியானவர்

Vallamaiyin Aaviyanavar

வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை
ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன் – 2

1. பவர் ஆவி எனக்குள்ளே
அந்த பய ஆவி அணுகுவதில்லை – 2
அன்பின் ஆவி எனக்குள்ளே
நான் அகற்றிவிட்டேன் கசப்புகளை – 2 (…வல்லமையின்)

2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை கன்ட்ரோல் பண்ணி நடத்துகிறார் – 2
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான் – 2 (…வல்லமையின்)

3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத்தெருவா மணம் வீசுவேன் – 2
மீட்புபெறும் அனைவருக்கும்
நான் வாழ்வளிக்கும் வாசனையானேன் – 2 (…வல்லமையின்)

4. உலகத்திற்கு வெளிச்சம் நான்
ஊரெல்லாம் டார்ச் அடிப்பேன் – 2
உப்பாக பரவிடுவேன்
நான் எப்போதும் சுவை தருவேன் – 2 (…வல்லமையின்)

5. கர்த்தரின் முத்திரை என் மேல்
நான் முற்றிலும் அவருக்குச் சொந்தம் – 2
அச்சாரமாய் ஆவியானவர்
நான் நிச்சயமாய் மீட்பு பெறுவேன் – 2 (…வல்லமையின்)

6. தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை – 2
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை – 2 (…வல்லமையின்)

7. கடவுள் எனக்கு வாக்களித்ததை
நிறைவேற்ற வல்லவரென்று – 2
நிச்சயமாய் நம்பினதாலே
நான் நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்) – 2 (…வல்லமையின்)

Vallamaiyin Aaviyaanavar
Ennul Vanthuvitta Kaaranaththinaal
Pollaatha Saaththaanai
Oru Sollaale Viratti Vitten – 2

1. Power Aavi Enakkulle
Andha Baya Aavi Anukuvathillai – 2
Anbin Aavi Enakkulle
Naan Akattrivitten Kasappukalai – 2 (…Vallamaiyin)

2. Kattuppaattin Aaviyaanavar
Ennai Control Panni Nadaththukiraar – 2
Ishtam Pola Alaivathillai
Avar Siththam Seithu Vaazhbavan Naan – 2 (…Vallamaiyin)

3. Kristhuvukkul Narumanam Naan
Theruththeruvaa Manam Veesuven – 2
Meetpu Perum Anaivarukkum
Naan Vaazhvalikkum Vaasanaiyaanen – 2 (…Vallamaiyin)

4. Ulakaththirku Velichcham Naan
Oorellaam Torch Adippen – 2
Uppaaga Paraviduven
Naan Eppothum Suvai Tharuven – 2 (…Vallamaiyin)

5. Karththarin Muththirai En Mel
Naan Muttrilum Avarukkuch Sontham – 2
Achchaaramaai Aaviyaanavar
Naan Nichchayamaay Meetpu Peruven – 2 (…Vallamaiyin)

6. Thevanaale Piranthavan Naan
Entha Paavamum Seyvathillai – 2
Karththare Paathukaakkiraar
Theeyon Ennai Theenduvathillai – 2 (…Vallamaiyin)

7. Kadavul Enakku Vaakkaliththathai
Niraivettra Vallavarendru – 2
Nichchayamaai Nambinathaale
Naan Nambikkaiyil Vallavanaanen (Valarkindren) – 2 (…Vallamaiyin)

Unnai Kaangiraar – உன்னைக் காண்கிறார்

Unnai Kaangiraar
உன்னைக் காண்கிறார் – உன்
கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு
நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் -உன்னை
1. நோய்நொடியில் வாடுகின்ற
உன்னைக் காண்கிறார்
நொடிப்பொழுது சுகம் தந்து
உன்னைத் தேற்றுவார்
2. கடன் தொல்லையால் கதறுகின்ற
உன்னைக் காண்கிறார்
உடன் இருந்த நடத்திடுவார்
ஒருபோதும் கைவிடார்
3. எதிர்காற்றோடு போராட்டமா
உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்
4. உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர்
உன் சார்பில் வருவார்கள்
5. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு
வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம்
நற்செய்தி முழங்குவோம்

Maranatha Yesu Natha – மாரநாதா இயேசு நாதா

Maranatha Yesu Natha
மாரநாதா…இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா
வாரும் நாதா இயேசு நாதா (2)
1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே
2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள்
என்றோ வெறுத்து விட்டேன்-நான்
3. பெருமை பாராட்;டுகள்
ஒரு நாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம்
சிறிதளவும் வேண்டாம் ஐயா
4. நியமித்த ஓட்டத்திலே
நித்திய கிரீடம்தான் நிச்சயமாய்ப் பெற்றுக்
கொள்வேன்
5. ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்
அப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிவேன்
6. உம் முகம் பார்க்கணுமே உம் அருகில்
இருக்கணுமே
உம்பாதம் அமரணுமே உம்குரல் கேட்கணுமே

Thunbama Thuyarama – துன்பமா துயரமா

Thunbama Thuyarama

துன்பமா.. துயரமா
அது தண்ணீர் பட்ட உடை போன்றதம்மா – 2
காற்றடிச்சா.. வெயில் வந்தா
காய்ந்து போய்விடும் கலங்காதே – 2

1. இயேசுதான் நீதியின் கதிரவன்
(அவர்) உனக்காக உதயமானார் உலகத்திலே – 2
நம்பி வா.. வெளிச்சம் தேடி வா (2)
உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது (2)

2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார்
இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார் – 2
எழுந்து வா.. போதும் பயந்தது (2)
உன் புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது (2)

3. உன் துக்கங்கள் இயேசு சுமந்து கொண்டார்
உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார் – 2
நீ சுமக்க.. இனி தேவையில்ல (2)
ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது (2)

4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு இல்லை
(என்) இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை – 2
கூப்பிடு.. இயேசு இயேசு என்று (2)
உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார் (2)

Thunbamaa.. Thuyaramaa
Athu Thanneerpatta Udai Pondrathammaa – 2
Kaattradichchaa.. Veyyil Vanthaa
Kaaynthu Poividum Kalangkaathe – 2

1. Yesuthaan Neethiyin Kathiravan
(Avar) Unakkaaka Uthayamaanaar Ulakaththile – 2
Nambi Vaa.. Velichcham Thedi Vaa (2)
Un Thukka Naatkal Indrodu Mudinthathu (2)

2. Izhanthu Ponathai Thedi Yesu Vanthaar
Ilaippaaruthal Tharuven Endru Sonnaar – 2
Ezhunthu Vaa.. Pothum Bayanthathu (2)
Un Puyalkaattru Indrodu Oynthathu (2)

3. Un Thukkangkal Yesu Sumanthu Kondaar
Un Pinigal Ellaam Yettruk Kondaar – 2
Nee Sumakka.. Ini Thevaiyilla (2)
Oru Sugavaazhvu Innaalil Thulirththathu (2)

4. Raththam Sinthuthal Illaamal Mannippu Illai
(En) Yesu Naamam Sollaamal Meetpu Illai – 2
Kooppidu.. Yesu Yesu Endru (2)
Un Kuraikalellaam Niraivaakki Nadaththiduvaar (2)

 

Arokiyam Arokiyam – ஆரோக்கியம் ஆரோக்கியம்

Arokiyam Arokiyam
ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்
1. நீதியின் சூரியன் என் மேலே -அவர்
சிறகின் நிழலாலே ஆரோக்கியம்
2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்
3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்
4. இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை
5. பொறாமை அவதூறு அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்
6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல்
வாஞ்சையாம்

Appa Ennai Muluvathum – அப்பா என்னை முழுவதும்

Appa Ennai Muluvathum
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என்
1. உள்ளம் உடல் எல்லாமே
உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல்
காத்துக் கொள்ளுமையா – ஒரு
2. உலகப்பெருமை சிற்றின்பம்
உதறி விட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள்
கடந்து போனதையா
3. வாக்குவாதம் பொறாமைகள்
தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய்
அணிந்து கொண்டேன் நான்
4. உமக்காய் வாழும் வைராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள்
என்றோ மடிந்ததையா (செத்ததையா)