Thallanthu Pona Kaigalai
தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள்
1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்
அஞ்சாதிருங்கள்
அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்
அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்
2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூய வழி
தீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை
மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள்
3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி
சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்
4. பார்வைற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள்போல துள்ளிக்குதிப்பர்கள்
ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்
5. வறண்ட நிலம் நீருற்றால்
நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்
நரிகள் தங்கும் வளைகள் எங்கும்
கோரை முளைக்கும்
நாணலும் புல்லும் நிலைத்து நிற்கும்
Thai Madiyil – தாய்மடியில் தவழுகின்ற
Thai Madiyil
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்
1. கவலையில்லையே கலக்கமில்லையே
கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர்
2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
நன்றியோடு துதிக்கிறேன் – நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே
3. துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே – என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா -என்
4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த
5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்வேனையா – நான்
6. அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே – என்
ஆலோசனைக் கர்த்தரே – என்
அடைக்கலப் பட்டணமே
Nandri Pali Nandri Pali – நன்றிபலி நன்றிபலி
Nandri Pali Nandri Pali
நன்றிபலி நன்றிபலி நல்லவரே உமக்குத்தான்
ஆனந்தம் ஆனந்தமே அப்பா உம் திருப்பாதமே
1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்தையா நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (3)
2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர்நாள் தந்தீர்
மறவாத என் நேசரே உறவாடி மகிழ்ந்திடுவேன்
3. ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா
ஓடிஓடி உழைப்பதற்கு உடல்சுகம் தந்தீரையா
4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு
5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா
6. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே ஆறுதல் நாயகனே
7. என்நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமைதானே
Naanum En Veetarum – நானும் என் வீட்டாரும்
Naanum En Veetarum
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே
Jeba Aavi Ootrumaiya – ஜெப ஆவி ஊற்றுமையா
Jeba Aavi Ootrumaiya
ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே
1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்
2. உபவாசித்து, உடலை ஒறுத்து
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே
3. திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே
4. முழங்கால்கள் முடங்கணுமே
கண்கள் எல்லாம் குளமாகணும் -என்
5. தானியேல் போல மூன்றுவேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே..
6. உலகை மறந்து சுயம் வெறுத்து
உம் பாதத்தில் கிடக்கணுமே..
Karthave Ummai Potrugiren – கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
Karthave Ummai Potrugiren
கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர்
1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
என் கவலைகள் பெருகும்போது
உம் கரங்கள் அணைக்குதையா
2. உந்தன் தயவால் மலைபோல் நிற்கசெய்தீர்
உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கிபோனேன்
சாக்கு ஆடை நீக்கி, என்னை
சந்தோஷத்தால் மூடினீர்
3. உம்மாலே ஒருசேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
பெலத்தால் இடைகட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்
4. உம் திரு பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம்திரு நாமத்தில் வெற்றிக் கொடி ஏந்துவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே
5. உமது கோபம் ஒரு நிமிடம் தான்
உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
Eluputhal En Desathilae – எழுப்புதல் என் தேசத்திலே
Eluputhal En Desathilae
எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவ கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
1. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
3. கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்
4. ஒருமனமாய் சகைளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே
5. தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும்
6. ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே
7. துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை
8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே
9. அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே
10. மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே
Raja Neer Seitha Nanmaikal – ராஜா நீர் செய்த நன்மைகள்
Raja Neer Seitha Nanmaikal
ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2
2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா
3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா
4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்நீரையா
அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா
5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கரைகபை போக்கி
கூடவே வந்தீரையா
In English
Raja Neer Seitha Nanmaikal
Avai Enni Mudiyathaiyaa
Ereduppen nandri bali
En jeeva naalellam
Nandri raajaa yesu raajaa (4)
1. Athikai neram thattithatti eluppi
Puthu kirubai thanththeraiyaa
Aanatha malaiyil nanainthu
Nanaiththu
Thinam nandri solla veiththeeraiyaa – 2
2. Vethaththin ragasiyam
Arinththida purinththida
Um velicham thantheeraiya
Paatham amarnthu naan um kural
Ketkum baakiyam thanththeeraiya
3. Ovvoru naalum unavum
Udaiyum thanthu
Paathukaththu vanththeeraiya
Udal sugam thanthu oru kuraivindri
Valinadaththi vantheerraiya
4. Thunpaththin paathaiyil
Nadantha annaalil
Thookki sendreer iyaa
Anbar um karaththaal
Anaiththu anaiththu
Thinam athisayam seitheeraiya
5. Kooppitta naalil maru moli Koduththu
Viduthalai thantheeraiya
Kuraigalai neekki karaigalai pokki
Koodave vantheeraiya
Devan Namathu Adaikalamum – தேவன் நமது அடைக்கலமும்
Devan Namathu Adaikalamum
தேவன் நமது(எனது) அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
1. பூமி நிலை மாறி மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்
3. அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம்
உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர்
4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்
Devan Namathu(Yendathu) Adaikalamum Belanumaanaar
Aabathu Kaalathil Kooda Irukkum Thunaiyumaanaar
1. Poomi Nilai Maari Malaikal Nadunginaalum
Bayappadamaattom Bayappadamaattom
2. Yuthangalai Thaduthu Oyapanukiraar
Yetiyai Murikiraar Villai Odikkiraar
3. Amarnthirunthu Avarae Dhaevanendru Arivom
Uyarnthavar, Periyavar, Ulagai Aalbavar
4. Senaikalin Karthar Nammodu Irukindraar
Yacobin Dhaevan Nam Uyarntha Ataikalam
Thoongamal Jebikkum – தூங்காமல் ஜெபிக்கும்
Thoongamal Jebikkum
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான்
1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்
2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை காணும்வரை இதயத்தை ஊற்றணும்
3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும்
4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்
5. மோசேயை போல மலைமேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும்