Song Category: Tamil

Getsamaneyin Anubavathai Jebithida – கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட

Getsamaneyin Anubavathai Jebithida
கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட
எனக்கு தாரும் ஐயா

1. உம்மை போல் ஜெபித்திட வாஞ்சிக்கிறேன்
என் உள்ளமும் உணர்ந்திட வேண்டுகிறேன் – கெத்சமனேயின்

2. கண்ணீர் துளிகள் விழ வேண்டும்
என் ஏக்கங்கள் உம்மை தொட வேண்டும் – கெத்சமனேயின்

3. ஆத்துமா பாரத்தால் கதற வேண்டும்
நான் அழியும் ஜனத்திற்காய் புலம்ப வேண்டும் – கெத்சமனேயின்

4. பெருமூச்சு ஜெபமாய் மாற வேண்டும்
உம் பாதங்கள் உறுதியாய் தழுவ வேண்டும் – கெத்சமனேயின்

5. எந்தன் சிலுவையை சுமக்க வேண்டும்
நீர் கொடுத்திடும் பாத்திரம் பெற வேண்டும் – கெத்சமனேயின்

En Kanmalaiyanavar Thuthikapaduveraga – என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக

En Kanmalaiyanavar Thuthikapaduveraga
(என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2

நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
இரட்சண்ய கொம்பு – 2

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2
– என் கன்மலையானவர்

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் – 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2
– என் பெலனாகிய

என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும்பொது நான் அபயமிட்டேன்

உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் – 2
– என் பெலனாகிய

Vallamaiudaiyavar Magimaiyaanathai – வல்லமையுடையவர் மகிமையானதை

Vallamaiudaiyavar Magimaiyaanathai
வல்லமையுடையவர் மகிமையானதை எனக்கு செய்தார் !
நேற்றும் இன்றும் மாறவில்லையே,
என்றும் மாறிடார் -2

தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
நீ விசுவாசித்தால் தேவ மகிமை காண்பாய் !

1. செங்கடல் இரண்டாய் பிளந்திடுமே
எரிகோவும் என் முன் தகர்ந்திடுமே
செயல்களில் மகத்துவமானவரே
கிருபையாய் என் முன் செல்வாரே.

2. சகலமும் நேர்த்தியாய் நடத்திடுவார் குறித்ததை நிறைவேற்றி முடித்திடுவார்
நிச்சயம் முடிவு எனக்கு உண்டு
பரவச பாக்கியம் அடைந்திடுவேன் !!

3. தேவனின் நகரம் எனக்கு உண்டு
ஆயத்தமாகி காத்திருப்பேன்
பாடுகள் சகித்து வாழ்ந்திடுவேன்
மகிமையின் மகுடம் சூட்டிடுவார் !!

4.தேவனால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உயர்ந்த மதிலையும் தாண்டிடுவேன்
தடைகளை தகர்த்து எறிந்திடுவேன்
சோதனை ஜெயித்து வாழ்ந்திடுவேன் !!

Yesu Nesikkiraar – இயேசு நேசிக்கிறார்

Yesu Nesikkiraar
இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க
யான் செய்ததென்ன மா தவமோ!

1. நீசனாமெனைத்தான்
இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன்தன் முழு
மனதால் நேசிக்கிறார்

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம்

3. நாதனை மறந்து
நாட்கழித்துலைந்தும்
நீதன் இயேசெனை
நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம்

4. ஆசை இயேசுவென்னை
அன்பாய் நேசிக்கிறார்
அதை நினைந்தவர்
அன்பின் கரத்துளே
ஆவலாய்ப் பறப்பேன்

5. ராசன் இயேசுவின் மேல்
இன்ப கீதஞ் சொலில்,
ஈசன் இயேசெனைத்
தானேசித்தாரென்ற

இணையில் கீதஞ் சொல்வேன்!

Unnmaiyaai Thammai Nooki – உண்மையாய் தம்மை நோக்கி

Unnmaiyaai Thammai Nooki

உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

1. தானியேல் சிங்ககெபியில்,
மூவர் எரியும் தழலில் –
நம்பினார்கள் தேவன் விடுவித்தாரே
இன்றைக்கும் தேவன் விடுவிப்பாரே

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

2. அன்னாளின் துக்கத்தையும்,
ஆகாரின் கண்ணீரையும் –
பார்த்தாரே தேவன் பதில் தந்தாரே
இன்றைக்கும் தேவன் பதில் தருவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

3. விலகாத வியாதிகளும்,
மாறாத சூழ்நிலையும் –
வார்த்தையினால் தேவன் மாற்றினாரே
இன்றைக்கும் தேவன் மாற்றிடுவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

Naan Paadumpothu – நான் பாடும் போது

Naan Paadumpothu
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23)
அக்களித்து அகமகிழும்

1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14)
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருக்கிறது

நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14)
நம்பிக்கையோடு துதிப்பேன்

2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3)
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே

3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6)
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்

4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5)
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்

5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9)
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே

Neer Ennai Vittu Poonal – நீர் என்னை விட்டு போனால்

Neer Ennai Vittu Poonal
நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு என்னாகும்
நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு என்னாகும் – 2

தனியே நான் நின்றிடுவேன்
துணையில்லாமல் நான் சென்றிடுவேன் – 2
நீர் வேண்டும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் என் எந்நாளினுமே – 2

1. புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் – 2
வருஷம் தோறும் உன்னை வழி நடத்தும் தேவன்
வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 – (தனியே நான்)

2. கண்ணீராலே என் கண்கள் கலங்கி போனாலும் கண்ணீரெல்லாம் கணக்கில் வைத்துள்ளீர் – 2
துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றிடும்-2
துணையாளரே உம்மை துதித்திடுவேன் – (தனியே நான்)

3. வேதனையால் என் உள்ளம் உடைந்து போனாலும்
வேதத்தாலே என் காயம் ஆற்றுகிறீர்
சோதனையெல்லாம் சாதனையாய் மாற்றிடும்
சேனைகளின் தேவனே ஸ்தோத்தரிப்பேன் – 2
(நீர் என்னை)

நீர் என்னோடு வரவேண்டும்
நான் உம்மோடு வாழ வேண்டும் – 2
நீர் போதும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் எந்நாளிலுமே – 2
நீர் என்னை விட்டு போனால்

Jeeva Naalellam Nanmaiyum – ஜீவ நாளொல்லாம் நன்மையும்

Jeeva Naalellam Nanmaiyum
ஜீவ நாளொல்லாம் நன்மையும் கிருபையும் தொடரும் என்னை தொடரும்
என் வாழ்நாள் முழுவதும்
உம் கோலும் தடியுமே
தேற்றும் என்னை தேற்றும்

நம்பிக்கை நீரய்யா
என் நங்குறம் நீரய்யா
நான் தங்கும் வாசஸ்தலமே

1. நீர் கால்கள் ஓரமாய் நடப்பட்ட மரமாய்
கனிகள் தந்திடுவேன்
இலையுதிர மரம் நானே
நேசர்க்கு கனி கொடுப்பேன்

2. விண்ணப்பம் கேட்டு
கண்ணிரை துடைத்து
ஆறுதல் அளிப்பவரே
வேண்டினதை தருவாரே
வரப்போகும் என் ராஜவே

Indam Kollamal Perugaseiyum – இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் – Seerpaduthuvaar

Indam Kollamal Perugaseiyum

இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை
சீராக மாற்றிட வருவாரே

சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்

1. கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
புது நன்மைகள் உன்னை சேரும்

2. மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உன் மேன்மை உன் கையில் சேரும்

 

Nandri Baligal Seluthiye Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiye Naangal
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
ஆலயம் கூடி வந்தோம்
துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
உம்மை போற்ற வந்தோம் (2)

கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி செலுத்த வந்தோம்
நம்மை மறவா அவர் கிருபை
எண்ணியே துதிக்க வந்தோம்

1. உடன்படிக்கை எனக்குத் தந்து
உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்

2. வாதைகள் என்னை சூழ்ந்தபோது
செட்டைகளாலே எனை மறைத்தீர்
பாதைகள் எல்லாம் காக்கும்படி
தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர்

3. தேவைகள் நெருக்கி நின்றபோது
அற்புதமாகப் பெருக வைத்தீர்
கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
கண்மணியே என்று என்னை அழைத்தீர்