Poorana Aaseer Pozhinthidumae – பூரண ஆசீர் பொழிந்திடுமே

Poorana Aaseer Pozhinthidumae
1. பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே

வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே

2. ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே

3. தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா

4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்

5. குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே

6. மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே

Yesuvai Naam Enge Kanalam – இயேசுவை நாம் எங்கே

Yesuvai Naam Enge Kanalam
இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்

பனி படர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமா?

1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலை கடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே

2. வான மதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின் மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழும் இடம் கூறிட மாட்டாயோ

3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார்

Avar Endhan Sangeetham Anavar – இயேசு எந்தன் சங்கீதமானவர்

Avar Endhan Sangeetham Anavar

அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

 

1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே (2)
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் (2)
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே (2) (…அவர்)

2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் (2)
இருப்பேன் என்றவர் நமது தேவன் (2)
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் (2) (…அவர்)

3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம் (2)
வருகையில் அவரோடு இணைந்து என்றும் (2)
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் (2) (…அவர்)

Avar Endhan Sangeethamaanavar
Belamulla Kottayumaam
Jeevanin Athibathiyaana Avarai
Jeeviya Kaalamellaam Vaazhthiduvom 

1. Thuthigalin Maththiyil Vaasam Seiyum
Thoothar Ganangal Potrum Devan Avare (2)
Vendidum Bakthargalin Kuraigal Ketkum (2)
Thikkattra Pillaigalin Devan Avare (2) (…Avar)

2. Irandu Moondru Paerendhan Naamathinaal
Irudhayam Orumiththaal Avar Naduvil (2)
Iruppen Endravar Namadhu Devan (2)
Irukaram Thatti Endrum Vaazhthiduvom (2) (…Avar)

3. Vaanavar Krishthesu Naamamathai
Vazhnaal Muzhuvathum Vaazhthiduvom (2)
Varugaiyil Avarodu Inaindhu Endrum (2)
Vananguvom Vaazhthuvom Potriduvom (2) (…Avar)

 

Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

Yesuvai Nesikka Thondanginen

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம்

1. உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே

2. பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே

3. அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

Naan Nesikum Devan – நான் நேசிக்கும் தேவன்

Naan Nesikum Devan
நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)
நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன்

1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்

2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவர் ஆகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்

3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட வந்திடுவார்
கால் தளரும் வேளையிலே
ஊன்று கோலாகிடுவார்

4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனிக் கலங்கிடேனே
எந்தனுக்குக் காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே

Jebathai Ketkum Engal Deva – ஜெபத்தைக் கேட்கும்

Jebathai Ketkum Engal Deva
1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்

2. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர்

3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம்

4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்

1. Jebathai Kaetkum Engal Thaevaa
Jebathin Vaanjai Thantharulum
Jebathilae Tharithirunthu
Jebaththin Maenmai Kaana Seiyum

Jebamae Jeevan Jebam Jeyam
Jeeviyaththirku Ithuvae Sattam
Jebamae Jeevan Jebam Jeyam
Jeeviyathirku Ithuvae Sattam

2. Ookkathudanae Or Mugamaai
Vaakkuthathai Pattikondu
Nnokkathai Ellaam Naermaiyaakki
Kaetkumbadi Kirubai Seiyum

3. Aakaatha Nnokkam Sinthanaiyai
Agatrum Engal Nenjaivittu
Vaakaanathaakkum Manamellaam
Vallamaiyodae Vaenndi Kolvom

4. Idaividaamal Jebam Seiya
Idaiyoorellaam Neekkividum
Salippillaamal Unthan Paatham
Kadaisi Mattum Kathiruppom

Thirupatham Nambi Vanthen – திருப்பாதம் நம்பி வந்தேன்

Thirupatham Nambi Vanthen
1. திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

2. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தாங்கிடுவேன்

3. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

4. மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

5. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

7. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

Aandava Prasanna Magi – ஆண்டவா பிரசன்னமாகி

Aandava Prasanna Magi
ஆண்டவா பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
ஆசை காட்டும் தாசர் மீதில்
ஆசிர்வாதம் ஊற்றிடும்

1. அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப் பண்ணுவீர்
ஆசையோடு நிற்கிறோமே
ஆசீர்வாதம் ஊற்றுவீர்

2. தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடு கூடினோம்
உந்தன் திவ்ய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம்

3. ஆண்டவா! மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர்

4. தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே கடாட்சியும்
பெந்தே கோஸ்தின் திவ்ய ஈவை
தந்து ஆசிர்வதியும்

Paava Sanjalathai – பாவ சஞ்சலத்தை நீக்க

Paava Sanjalathai
1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்

2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார்

3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்

You raise me up

When I am down and, oh, my soul, so weary;
When troubles come and my heart burdened be;
Then I am still and wait here in the silence,
Until you come and sit awhile with me.

You raise me up, so I can stand on mountains;
You raise me up to walk on stormy seas;
I am strong when I am on your shoulders;
You raise me up to more than I can be.

You raise me up, so I can stand on mountains;
You raise me up to walk on stormy seas;
I am strong when I am on your shoulders;
You raise me up to more than I can be.

There is no life – no life without its hunger;
Each restless heart beats so imperfectly;
But when you come and I am filled with wonder,
Sometimes, I think I glimpse eternity.

You raise me up, so I can stand on mountains;
You raise me up to walk on stormy seas;
I am strong when I am on your shoulders;
You raise me up to more than I can be.

You raise me up, so I can stand on mountains;
You raise me up to walk on stormy seas;
I am strong when I am on your shoulders;
You raise me up to more than I can be.

You raise me up to more than I can be.