Yesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில்

Yesappa Unga Namathil Innum Arputhangal Nadakuthu
இயேசப்பா உங்க நாமத்தில்
இன்றும் அற்புதங்கள் நடக்குது
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
பாவங்கள் பறந்தோடுது – 2

உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை
உந்தன் உயிர்தெழுதல் மகிமை மாறவில்லை

துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் வறுமைகள்
வந்தாலும் என் இயேசு குணமாக்குவார் -2
விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
தேவமகிமையை கண்டிடுவோம்

மந்திரம், சூனியம், செய்வினைக் கட்டுகள்
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
உலகத்தை நாம் கலக்கிடுவோம்

சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்
அசுத்த ஆவியை துரத்திடுவோம்

Yesappa Unga Namathil Innum Arputhangal Nadakuthu (2)
Peygal oduthu Noigal Thiruthu Pavangal Parandhoduthu (2)

Unthan Valamaigal Kurainthu Povathillai
Unthan Uyirtheluthal Magimai Maravillai (2)

Yesappa Unga Namathil Innum Arputhangal Nadakuthu

1. Thunbangal Thollaigal Vyathigal Varumaigal
Vanthallum En Yesu Gunamakuvar (2)
Visuvasam Nammakul Irunthal Pothum
Deva Magimaiyai Kandididuvom (2)

Unthan Valamaigal Kurainthu Povathillai
Unthan Uyirtheluthal Magimai Maravillai (2)

Yesappa Unga Namathil Innum Arputhangal Nadakuthu

2. Mandhira Sooniyam Seivinai Kattugal
Inrey Nam Yesu Udaitherivaar (2)
Aaviyanavar Namukkul Irupathanal
Ulagathai Naam Kalakituvom (2)

Unthan Valamaigal Kurainthu Povathillai
Unthan Uyirtheluthal Magimai Maravillai (2)

Yesappa Unga Namathil Innum Arputhangal Nadakuthu

3. Sathanin Sathigala Sabathin Valkaya
Inrey Nam Yesu Udaitherivaar (2)
Thuthiyin Ayutham Namakkul Irupathal
Asutha Aaviyai Thurathiduvom (2)

Unthan Valamaigal Kurainthu Povathillai
Unthan Uyirtheluthal Magimai Maravillai (2)

Yesappa Unga Namathil Innum Arputhangal Nadakuthu
Yesappa Unga Namathil Innum Arputhangal Nadakuthu
Peygal oduthu Noigal Thiruthu Pavangal Parandhoduthu (2)

Unthan Valamaigal Kurainthu Povathillai
Unthan Uyirtheluthal Magimai Maravillai (2)

Unthan Valamaigal Kurainthu Povathillai
Unthan Uyirtheluthal Magimai Maravillai (2)

Aaviyai Malai Pool Ootrum – ஆவியை மழைபோலே ஊற்றும்

Aaviyai Malai Pool Ootrum
ஆவியை மழைபோலே யூற்றும், – பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி

பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை
சரணங்கள்

1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை

2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை

3. காத்திருந்த பல பேரும் – மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். — ஆவியை

4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை

Aaviyai Malai pola Ootrum – Pola
Aadugalai Yesu Manthaiyir Kootum

Paarikkai jeevanai vitta christhe
Parinthu neer pesiye irangida seiyum – Aaviyai

1. Anbinaal jeevanai vitteer – Aavi
Arul maari Poliyare paralogam sendreer
Inba perikkile pongi magila
Yeralamana janangalai serum – Aaviyai

2. Sitharundalaigira Aatai pinnum
Thedi piditha neer thukki summanthu
Patharathe Naan than un nal meippan Yesu
Bakkiyar ennum nal vaakaiyarulum – Aaviyai

3. Kathiruntha pala perum – manam
Kadinam Kalla munne um paatham serum
Thothira geethangal paadi pungalnthu
Suthalogam vara thuyavi utrum – Aaviyai

4. Thothira geethangal paadi – Yengum
Suvishesa jeyathaiye nitham nitham thedi
Paathiraraga Anegarelumba
Parisutha aaviyin Arulmaari utrum – Aaviyai

Jeevanulla Devane Varum – ஜீவனுள்ள தேவனே வாரும்

Jeevanulla Devane Varum

ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்

தேவனே நீர் பெரியவர்.. தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர்.. தேவனே நீர் வல்லவர்

1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்

3. வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ

Jeevanulla Devane Vaarum
Jeeva Paadhaiyile Nadaththum
Jeeva Thanneer Oorum Oottrile
Jeevan Pera Ennai Nadaththum

Devane Neer Periyavar.. Devane Neer Parisuththar
Devane Neer Nallavar.. Devane Neer Vallavar

1. Paavigal Throgigal Ayyaa
Paava Aadhaam Makkale Thooyaa
Paadhagar Em Paavam Pokkave
Paadhagan Pol Thongineerallo

2. Ainthu Kanda Makkalukkaaga
Ainthu Kaayamettra Nesare
Nonthurugi Vantha Makkal Mel
Nesa Aavi Veesach Cheiguveer

3. Vaakkuththaththam Seitha Karththare
Vaakku Maaraa Unmai Naadhane
Vaakkai Nambi Vanthu Nirkirom
Valla Aavi Maari Ootruveer

4. Nyayath Theerppin Naal Nerunguthe
Nesar Vara Kaalamaaguthe
Maayalogam Nambi Maandidum
Maanidarai Meetka Maattiro

 

Kartharin Kai Kurugavillai – கர்த்தரின் கை குறுகவில்லை

Kartharin Kai Kurugavillai
கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

1. விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசித்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

2. பரிசுத்த ஆவியானவரே
பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
கிருபையிலே வளர்ந்திடுவோம்
வரங்களை நாடிடுவோம்

3. திருச்சபையே கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவார்

4. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்த்
தம்முடன் சேர்த்துக்கொள்வார்

5. மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய்

Kartharin Kai Kurugavillai
Kartharin Vaakku Maaridadhae
Suththargalai Maaridavae
Sudhan Arul Purindhanarae

1. Visuvaasiyae Nee Padharadhae
Visuvaasiyae Nee Kalangadhae
Visuvaasathal Needhimaan
Indrum Endrum Pizhaippaan

2. Parisuththa Aaviyaanavarae
Parisuththa Paadhayil Nadaththiduvaar
Kirubayilae Valarndhiduvom
Varangalai Naadiduvom – Visuvaasi

3. Thiruch Chabayae Kiriyi Seivaai
Divya Anbil Perugiduvaai
Thalaimuraiyaai Thalaimuraiyaai
Thazhaithida Arul Purivaar

4. Nenjamae Nee Anjidaadhae
Thanjam Yesu Un Aranae
Tham Janaththai Seekkiramaai
Thammudan Serththuk kolvaar

5. Megam Pondra Vaakkuththaththam
Soola Nindrar Kaaththirukka
Visuvaasaththaal Urimai Kolvaai
Viraindhu Mun Yeagiduvaai – Visuvaasi

Potri Thuthipom En Deva Devanai – போற்றி துதிப்போம் எம் தேவ

Potri Thuthipom En Deva Devanai
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)

இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே – என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)

1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேரத்தணைத்து
அன்பை என்றும் பாடுவேன் – இயேசு

2. யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

3. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – இயேசு

4. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் – இயேசு

Pootri Thuthipom Em Deva Devanai
Puthiya Ithayamudanae – Naettum
Intum Endrum Maaraa Yesuvai
Naam Endrum Paatithuthipom

Yesu Ennum Naamamae
En Aathumaavin Geethamae
En Nesara Yesuvai Naan Endrum
Yetri Makilinthiduvaen

1. Koira Bayangaramaana Puyalil
Kotiya Alaiyin Mathiyil – Kaakkum
Karamkondu Maarpil Serthannaitha
Anbai Endrum Paaduvaen – Yesu

2. Yordaan Nathipondra Sothanaiyilum
Sornthamilnthu Maalaathae
Aarpin Jeya Thoniyotae
Paathukaatha Anbai Endrum Paaduvaen – Yesu

3. Thaai Than Paalakanaiyae Marappinum
Naan Maravaen Entu Sonnathaal
Thaalththi Ennaiyavar Kaiyil Thanthu
Jeeva Paathai Endrum Oduvaen – Yesu

4. Poomiyakilamum Saatchiyaakavae
Pongalendra Kattalaiyathaal – Aavi
Aathumaavum Thaekam Yaavum Indru
Endrum Thondu Seiguven – Yesu

Aarathanai Aarathanai Thuthi Aarathanai – ஆராதனை ஆராதனை துதி

Aarathanai Aarathanai Thuthi Aarathanai
ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை – (2)
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே – (2)

1. தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை – (2)
வான பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை – (2) – ஆராதனை

2. ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை – (2)
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை – (2) – ஆராதனை

Arathanai Arathanai Thuthi
Arathanai Arathanai (2)
Kalayilum Malayilum
Arathanai Appavukkae

1. Thooya Aviyae Umakku Arathanai
Thunaiyalarae Umakku Arathanai – (2)
Vana Pithavae Umakku Arathanai
Vazhikattiyae Umakku Arathanai – (2) – Arathanai

2. Jeeva Palyiae Umakku Arathanai
Jeeva Thanneerae Umakku Arathanai – (2)
Megasthanthamae Umakku Arathanai
Mesiyavae Umakku Arathanai – (2) – Arathanai

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

Isravele Kartharai Nambu
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..
இஸ்ரவேலே அவர் உன் துணையும் கேடகமானவர் (2)

1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கும் உண்டு

2. அக்கினியை நீ கடக்கும் போது
ஆறுகளை நீ மிதிக்கும் போது
அக்கினி அணுகாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே

3. அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை
உள்ளம் கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லைை

 

Isravaelae Kartharai Nambu…
Kartharai Nambu… Kartharai Nambu…
Isravaelae Avar Un Thunnaiyum Kedakamaanavar – 2

1. Puluthiyilirunthu Thookki Viduvaar
Kuppaiyilirunthu Uyarthiduvaar – 2
Pirabukkalodum Raajaakkalodum
Utkaara Seipavar Unakku Unndu – 2

2. Akkini Meethu Nee Nadakkum Pothum
Aarukalai Nee Kadakkum Pothum – 2
Akkini Pattathu Aarukal Puralaathu
Aandavar Unnodu Iruppathaalae -2

3. Avar Unnai Vittu Vilakuvathillai
Avar Unnai Endrum Kaividuvathillai – 2
Ullangaiyil Varainthavar Avar
Unnai Endrum Marappathumillai – 2

Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil – இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்

Yesuvin Naamathinaal Kudidum Samaiyangalil
இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2

1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2
மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2

2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2
துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2

3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2
அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2

Thuthipaen Thuthipaen Yesu Devanai -துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

Thuthipaen Thuthipaen Yesu Devanai

பல்லவி

துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
அல்லேலூயா பாடி
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

அனுபல்லவி

துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிட
தூயவனாய் வந்த தேவகுமாரனை

சரணங்கள்

1. கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர்
தம் ஜனத்தின் கூக்குரல்
கருணை கூர்ந்து கேட்கும் காதுள்ளோர்
லோகப் பாவச் சுமைதனை
சிரசுகொண்டு சுமந்தழிக்க வென்றே
குருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை – துதிப்பேன்

2. பொற் குத்துவிளக்கு ஏழு மத்தியிலே
எங்கள் இயேசு நாயகர்
பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார்
நிலையங்கி தரித்தோராய்
கற்பிக்குங் காரியம் கவனமாய்க் கேட்டு
சொற்படி செய்வோரை தப்பாமல் மீட்போரை – துதிப்பேன்

3. வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே!
அவரருகில் வருவீர்;
வழியில் ஆறுதல் செய்பவர் அவரே;
லோக பாவத்தைச் சுமந்தார்;
பழைய சுபாவங்கள் ஒழித்து முற்றுமாய்
அழித்து பக்தரை மோட்சத்தில் சேர்ப்போரை – துதிப்பேன்

4. அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமுமே
பரிசுத்தர் யேகோவாவை
அல்லேலூயா வென்று போற்றிப் பாடுவோம்
சர்வ வல்ல பராபரன்
வல்லமையாலே நம் அல்லலெல்லாம் வெல்லும்
நல்லவர் இயேசுவை அல்லும் பகலுமாய் – துதிப்பேன்

Vanandira Yatherayil – வனாந்திர யாத்திரையில் களைத்து நான்

Vanandira Yatherayil
வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே

1. செங்கடல் எதிர்த்து வந்து
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுதே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் (… வனாந்திர)

2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே (… வனாந்திர)

3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாம் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனியெனக் கொன்றுமே தாழ்வு இல்லையே (… வனாந்திர)

Vanaanthira Yaathiraiyil Kalaithu Naan
Sornthu Pogum Nerangalil
Nesarin Satham Ennil Kettidum
En Vaazhvu Sezhithidume

1. Sengadal Ethirthu Vanthu
Pangam Vanthidaamal Angu
Paathai Ondru Kannil Theriyuthe
Viduvipaar Aandavar Nalkuvaar Puthubelan
Thaduthidum Sathrukkal Azhinthu Maaluvaar (…Vanaanthira)

2. Devanai Marakka Seiyum
Vedhanai Niraintha Vaazhvai
Sathuru Vithaithidum Pothu
Maaraavin Kasantha Neer Mathuramaaga Maaridum
Kaarirul Neengida Velicham Thondrume (…Vanaanthira)

3. Inimaiyatra Vaazhvil Naan
Thanimai Endru Ennum Pothu
Magimai Devan Thaangiduvaare
Inimaiyaam Mannaavai Varushikka Pannuvaar
Iniyenakkondrume Thaazhvu Illaiye (…Vanaanthira)