Thuya Aviye
தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத்தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் வல்லவரே நல்லவரே
Yakobe Nee – யாக்கோபே நீ வேரூன்றுவாய்
Yakobe Nee
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2
பூத்து குலுங்கிடுவாய்
காய்த்து கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த
என் மகனே(ளே) நீ வேரூன்றுவாய்
1. நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக்கொள்வேன்
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்
2. அருமையான மகன் அல்லவோ
பிரியமான பிள்ளையல்லவோ – நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது
3. நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்
4. புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன்
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
5. மேடுகளை பிளந்து ஆறுகள் தோன்ற செய்வேன்
பள்ளத்தாக்கின் நடுவினிலே
ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்
6. நானே உங்கள் தேவன் நீங்கள் என் பிள்ளைகள்
பாழான மண்மேடு கட்டப்படும்
பாடலும் ஆடலும் மீண்டும் கேட்கும்
Enathu Manavalane – எனது மணவாளனே
Enathu Manavalane
எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன்
நான் உம்மைத் தான் நேசிக்கிறேன்
[நான் உம்மோடு தான் இருப்பேன்]
1. உம் நாமம் சொல்லச் சொல்ல
என் உள்ளமெல்லாம் துள்ளுதையா – 2
உம் அன்பைப் பாடப் பாட – 2
இதயமெல்லாம் இனிக்குதையா – என் – 2
2. உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே – 2
உம் பாதம் அமரணுமே – 2
உம் சித்தம் அறியணுமே – நான் – 2
3. என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2
என் இதய எண்ணமெல்லாம் – 2
உதந்தனவாய் இருப்பதாக – உமக்கு – 2
4. அழகெல்லாம் அற்றுப் போகும்
உலக எழிலெல்லாம் ஏமாற்றும் – 2
உம் அன்பு மாறாதையா – 2
ஒரு நாளும் அழியாதையா – அது – 2
5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2
நான் நடக்கும் பாதையெல்லாம் – 2
உதந்தனவாய் இருப்பதாக – உமக்கு – 2
Enathu Manavaalane En Idhaya Yekkame
Iniyavare Yesaiyaa
Ummai Thaan Thedukiren
Naan Ummai Thaan Nesikkiren
[Naan Ummodu Thaan Iruppen]
1. Um Naamam Solla Solla
En Ullamellaam Thulluthaiyyaa – 2
Um Anbai Paada Paada – 2
Idhayamellaam Inikkuthaiyaa – En – 2
2. Um Mugam Paarkkanume
Um Azhagai Rasikkanume – 2
Um Paatham Amaranume – 2
Um Siththam Ariyanume – Naan – 2
3. En Vaayin Sorkkalellaam
Yettranavaai Iruppathaaga – 2
En Idhaya Ennamellaam – 2
Uganthanavaai Iruppathaaga – Umakku – 2
4. Azhagellaam Attru Pogum
Ula Ezhilellaam Yemaattrum – 2
Um Anbu Maaraathaiyaa – 2
Oru Naalum Azhiyaathaiyaa – Adhu – 2
5. Naan Paarkkum Paaivaiyellaam
Yettranavaai Iruppathaaga – 2
Naan Nadakkum Paathaiyellaam – 2
Uganthanavaai Iruppathaaga – Umakku – 2
Yesu Neenga – இயேசு நீங்க இருக்கையிலே
Yesu Neenga
இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்ல
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க
1. சமாதான காரணர் நீங்கதானே
சர்வ வல்லவரும் நீங்கதானே
2. அதிசய தேவன் நீங்கதானே
ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே
3. தாயும் தகப்பனும் நீங்கதானே
தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே
4. எனக்கு அழகெல்லாம் நீங்கதானே
எனது ஆசையெல்லாம் நீங்கதானே
5. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே
இரட்சிப்பின் தேவன் நீங்கதானே
6. எல்லாமே எனக்கு நீங்கதானே
எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே
7. முதலும் முடிவும் நீங்கதானே
முற்றிலும் காப்பவர் நீங்கதானே
8. வழியும் சத்தியமும் நீங்கதானே
வாழ்வளிக்கும் வள்ளல் நீங்கதானே
9. பாவ மன்னிப்பு நீங்கதானே
பரிசுத்த ஆவியும் நீங்கதானே
Yesu Neenga Irukaiyile
Naanga Sornthu Povathilla
Neenga Ellaame Paathukolveenga
1. Samaathaana Kaaranar Neengathaane
Sarva Vallavarum Neengathaane
2. Adhisaya Devan Neengathaane
Aalosanai Karthar Neengathaane
3. Thaayum Thagapanum Neengathaane
Thaangum Sumaithaangi Neengathaane
4. Enakku Azhakellaam Neengathaane
Enathu Aasaiyellaam Neengathaane
5. Irul Neekkum Veliccham Neengathaane
Ratchitpin Devan Neengathaane
6. Ellame Enakku Neengathaane
Enakkul Vaazhbavarum Neengathaane
7. Mudhalum Mudivum Neengathaane
Muttrilum Kaappavar Neengathaane
8. Vazhiyum Sathyamum Neengathaane
Vaazhvalikkum Vallal Neengathaane
9. Paava Mannippu Neengathaane
Parisuttha Aaviyum Neengathaane
Ummodu Irupathu Thaan – உம்மோடு இருப்பது தான்
Ummodu Irupathu Thaan
உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்
1. எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள் -2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2
2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே
3. எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே
4. மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்
Enathu Thalaivan Yesu Rajan – எனது தலைவன் இயேசுராஜன்
Enathu Thalaivan Yesu Rajan
எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் – 2
1. இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம் – 2
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து – 2
பரவசம் அடைவேன் – 2
2. நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன் – 2
நினைத்து நினைத்து துதித்து துதித்து – 2
நிம்மதி அடைவேன் – 2
3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
நாளும் பின் தொடர்வேன் – 2
தோளில் அமர்ந்து கவலை மறந்து – 2
தொடர்ந்து பயணம் செய்வேன் – 2
4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே – 2
ஆத்துமாவை தினமும் தேற்றி – 2
அணைத்துக் கொள்பவரே – 2
Enathu Thalaivan Yesuraajan
Maarbil Saaynthu Saaynthu
Magizhnthu Magizhnthiruppaen – 2
1. Idhaya Dheebam Enathu Deivam
Irakkaththin Sikaram – 2
Paarththu Paarththu Rasiththu Rusiththu – 2
Paravasam Adaiven – 2
2. Needhi Devan Vettri Vendhan
Amaithiyin Mannan – 2
Ninaiththu Ninaiththu Thuthiththu Thuthiththu – 2
Nimmathi Adaiven – 2
3. Nalla Meippan Kuralai Ketpen
Naalum Pin Thodarven – 2
Tholil Amarnthu Kavalai Maranthu – 2
Thodarnthu Payanam Seiven – 2
4. Pasumpul Meychchal Amarntha Thanneer
Azhaiththu Chelpavarae – 2
Aaththumaavai Dhinamum Thettri – 2
Annaiththu Kolbavare – 2
Paava Mannippin – பாவமன்னிப்பின் நிச்சயத்தை
Paava Mannippin
பாவமன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்
1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடு
பின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே
நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்
4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
இயேசு ராஜா நாமமில்லாமல் இரட்சிப்பும் இல்லை
Raja Um Prasannam – ராஜா உம் பிரசன்னம்
Raja Um Prasannam
ராஜா உம் பிரச்னனம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா
பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்
1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
2. உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா
3. இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே
4. கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே
5. ஆட்கொண்ட அதிசயமே
ஆறுதலே அடைக்கலமே
6. துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே
7. அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே
8. சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமே
9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
Rajaa Um Prasannam Pothumaiyaa
Yepothum Yennaku Pothumaiyaa
Prasannam Prasannam Deva Prasannam
1. Athikaalamae Thaedukiraen
Aarvamudan Naadukiraen
2. Ulakamellaam Maayaiyaiyaa
Um Anbontrey Pothumaiyaa
3. Innum Ummai Ariyanumae
Innum Kitti Seranumae
4. Karam Pititha Naayagarae
Kaividaatha Thooyavarae
5. Aatkoonda Athisayamae
Aaruthalae Adaikkalamae
6. Thuthiyinilae Vaalbavarae
Thunnaiyaalarae En Manavaalarae
7. Anaathi Devan Adaikalamae
Avar Puyangal Aathaaramae
8. Sagaayam Seyyum Kaedakamae
Makimai Nirai Pattayame
9. Seerpaduthum Sirushtikarae
Sthirappaduthum Thunnaiyaalarae
Nam Yesu Nallavar – நம் இயேசு நல்லவர்
Nam Yesu Nallavar
நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்
1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார்
2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார்
3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை
4. நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் குறையெல்லாம் நீக்குவார்
5. நண்பனே கலங்காதே நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கிறார்
6. எத்தனை இழப்புகள் ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார் கரம்நீட்டித் தேற்றுவார்
7. என் இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட மறுரூபமாக்குவார்
Nam Yesu Nallavar
Nam Yesu Nallavar Orupothum Kaividaar
Oru Naalum Vilakidaar
Ontu Sernthu Naam Thuthippom
Saathaanai Mithippom
Daesathai Suthantharippom
1. Athisayamaanavar Aaruthal Tharukiraar
Sarva Vallavar Samaathaanam Tharukiraar
2. Kanneerai Kaannkiraar Katharalai Kaetkiraar
Vaethanai Arikiraar Viduthalai Tharukiraar
3. Ethirkaalam Namakkunndu Etharkum Payamillai
Athikaaram Kaiyilae Aaluvom Dhaesaththai
4. Norungunda Nenjamae Nokkidu Yesuvai
Koopidu Unnmaiyaai Kuraiyellaam Neekuvaar
5. Nanpanae Kalangaathae Nambikkai Ilakkaathae
Kanneerai Thudaipavar Kathavandai Nirkiraar
6. Ethanai Ilappukal Yemaatram Tholvigal
Kartharo Maatruvaar Karamneeti Thaetuvaar
7. En Yesu Varukiraar Maekangal Naduvilae
Makimaiyil Serthida Maruroopamaakkuvaar
Yesuvin Pinnal Naanum Selven – இயேசுவின் பின்னால் நான்
Yesuvin Pinnal Naanum Selven
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே
1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்தீடுவேன்
2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது
3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பெருகிடணும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கு
இயேசுதான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கணுமே
4. பழையன கடந்தன புதியன புகுந்தன
பரலோக குடிமகன் நான்
மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
முகமுகமாய் காண்பேன்
இதயமெல்லாம் ஏங்குதைய்யா
இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
எந்நாளும் நீந்தணுமே
Yaesuvin pinnaal naan selvaen
Thirumbi paarkka maattaen
Siluvaiyen munnaal
Ulagamen pinnaal
Yaesu sindhiya Raththathinaalae
Endrum vidudhalaiyae
1. Ulagaththin perumai selvaththin pattru
Ellaam udhari vittaen
Udal, porul, aavi udaimaigal yaavum
Oppu koduththu vittaen
Naan avar aalayam enakkullae yaesu
Enna nadandhaalum evaelaiyilum
Eppodhum thudhithiduvaen
2. Vaedhanai nerukkam innalgal idargal
Edhuvum pirikkaadhu
Vettri vaendhan en yaesuvin anbaal
Muttrilum jeyam peruvaen
Nigazhgindra kaalamoa varugindra kaalamoa
Vaazhvoa saavoa vallathoodharoa
Pirikkavae mudiyaadhu
3. Agilamengilum aandavar yaesu
Aatchi seidhidanum
Aaviyil niraindhu saththiyam paesum
Sabaigal perugidanum
En sondha dhaesam yaesuvukkae
Yaesudhaan vazhi engindra muzhakkam
Engum kaetkanumae
4. Pazhaiyana kadandhana
Pudhiyana pugundhana
Paraloaga kudimagan naan
Maruroobamaagi manavaalan yaesuvai
Mugamugamaai kaanbaen
Idhayamellaam aengudhaiyaa
Yaesuvae undhan anbu nadhiyilae
Ennaalumae neendhanumae