Song Tags: Kaanikai Padalgal

Pali Beedatthil Vaithaen – பலிபீடத்தில் வைத்தேன் என்னை

Pali Beedatthil Vaithaen Ennai

பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் – 2

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே – 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் – 2
நித்தம் வழிநடத்தும் – 2

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் – 2
வாருமய்யா வந்து என்னை – 2
வல்லமையால் நிரப்பும் – 2

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க – 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் – 2
பரிசுத்தமாக்கி விடும் – 2

Padaippu Ellam Umakkae – படைப்பு எல்லாம் உமக்கே

Padaippu Ellam Umakkae
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே – 2

1. இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் – 2
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் – 2
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே – 2

2. இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் – 2
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே – 2
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் – 2

Kaanikai Tharuvaye – காணிக்கை தருவாயே

Kaanikai Tharuvaye
காணிக்கை தருவாயே கர்த்தற்குனது
காணிக்கை தருவாயே

அனுபல்லவி

காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால் – காணிக்கை

சரணங்கள்

1. பத்தில் ஒரு பங்குதானோ பந்தினில் கட்டுப்
பட்ட யூதருக் கல்லவோ
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்
பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ – காணிக்கை

2. உன்றன் உடல் உன் சொந்தமோ அதைவிடினும்
உன்மனம் ஆவி பந்தமோ
அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
உன்னையும் உன்னுடைய உடைமையுல்லோ ஈவாய் – காணிக்கை

3. தேவ வசனம் பரப்ப அதனுக்கென்று
செல்லும் செலவை நிரப்ப
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே – காணிக்கை

4. பயிர் பலன் மூலமாகவும் இன்னும் பலர்க்குப்
பணம் முதலானதாகவும்
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில் – காணிக்கை