All Songs by david

Irul Soozhum Kaalam Ini Varuthe – இருள் சூழும் காலம் இனி வருதே

Irul Soozhum Kaalam Ini Varuthe
இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்

திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

1. விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் (…திறவுண்ட வாசல்)

2. இனி வரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடை உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆகிடுமே (…திறவுண்ட வாசல்)

3. இயேசுவே எங்கள் உள்ளங்களை
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
இந்தியாவின் எல்லா தெருக்களிலும்
இயேசுவின் நாமம் விரைந்திடுமே (…திறவுண்ட வாசல்)

4. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்

5. எத்தனை நாடுகள் இந்நாட்களில்
கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள்

Irul Soozhum Kaalam Ini Varuthe
Arul Ulla Naatkal Payanpaduththum
Thiravunda Vaasal Adaipadumun
Norungunda Manathaai Numselvor Yaar

Thiravunda Vaasal Adaipadumun
Norungunda Manathaai Numselvor Yaar
Naatkal Kodiyathaai Maariduthe
Kaalathai Aathaayam Seithiduvom

1. Visuvaasigal Ennum Koottam Undu
Anbu Ondre Avar Naduvil Undu
Orumanam Ottrumai Angu Undu
Endru Sollum Naatkal Indru Vendum (…Thiravunda Vaasal)

2. Ini Varum Naatkalil Namathu Kadan
Vegu Athigam Visuvaasigale
Nammidai Ulla Aikkiyame
Vettriyum Tholviyum Aagidume (…Thiravunda Vaasal)

3. Yesuve Engal Ullangalai
Anbenum Aaviyaal Niraiththidume
Indhiyaavin Ellaa Therukkalilum
Yesuvin Naamam Virainthidume (…Thiravunda Vaasal)

4. Tharisu Nilangal Anegam Undu
Tharisanam Pettror Neer Mun Varuveer
Parisaaga Yesuvai Avargalukkum
Aliththida Anbinaal Ezhunthu Selveer

5. Eththanai Naadugal Innaatkalil
Karththarin Panikkuththaan Kathavadaiththaar
Thirantha Vaasal Indru Unakkethiril
Payanpaduththum Makkal Gnaanavaangal (…Thiravunda Vaasal)

Puthusaa Puththam Puthusaa En Vaazhkai Maariduchu – புதுசா புத்தம் புதுசா

Puthusaa Puththam Puthusaa En Vaazhkai Maariduchu
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு – 2
பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு)
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன் – 2

வாக்குத்தத்தம் தந்து விட்டார்
என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார்
வார்த்தையால சொன்னதெல்லாம்
என் கண்களால் காண செய்தார் (…புதுசா)

1. கடந்த நாட்களில் கண்மணி போல்
காத்திட்டாரே என்னை நடத்தினாரே – 2
புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார்
புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார் (…வாக்குத்தத்தம்)

2. வெட்கப்பட்ட இடங்களிலே
தூக்கினாரே என்னை உயர்த்தினாரே – 2
எதிரியின் கண்கள் முன்னே விருந்தொன்றை வச்சாரய்யா
என் தலையை எண்ணையாலே அபிஷேகம் செய்தாரையா (…வாக்குத்தத்தம்)

Puthusaa Puththam Puthusaa En Vaazhkai Maariduchu
Puthusaa Puththam Puthusaa En Ulagame Maariduchu
Pazhaya Manushana Thuraththiputten (Ttu)
Puthiya Tharisanam Pettrukkonden – 2

Vaakkuththaththam Thanthu Vittaar
En Vaazhkkaiyai Uyarththivittaar
Vaarththaiyaala Sonnathellaam
En Kankalaal Kaana Seithaar (…Puthusaa)

1. Kadantha Naatkalil Kanmani Pol
Kaaththittaare Ennai Nadaththinaare – 2
Puthiya Naalukkulla En Kaala Pathiya Vachchaar
Puthiya Tharisanaththai En Vaazhvil Thanthu Vittaar (…Vaakkuththaththam)

2. Vetkappatta Idangalile
Thookkinaare Ennai Uyarththinaare – 2
Ethiriyin Kangal Munne Virunththondra Vachchaaraiyyaa
En Thalaiyai Yennaiyaale Abishegam Seithaaraiyaa (…Vaakkuththaththam)

Ummai Pola Oru Devan Illai – உம்மை போல ஒரு தேவன் இல்லை

Ummai Pola Oru Devan Illai
உம்மை போல ஒரு தேவன் இல்லை
உம்மை போல ஒரு அன்பர் இல்லை – 2
எந்தன் கண்ணீரை துடைப்பவரே (2)
எந்தன் கவலைகள் தீர்ப்பவரே (2)

1. தாயை போல மார்பினிலே அணைத்து கொள்பவரே
தந்தையை போல் தோழ்களிலே சுமந்து செல்பவரே – 2
நண்பனை போல் எந்நாளும் நடந்து வருவீரே (2)
நான் நம்பும் அடைக்கலம் நீங்க மட்டும் தான் (2)

உம்மை போல ஒரு தேவன் இல்லை
உம்மை போல ஒரு அன்பர் இல்லை – 2
எந்தன் கண்ணீரை துடைப்பவரே (2)
எந்தன் துயரங்கள் நீக்குபவரே (2)

2. குழியில் கிடந்த என்னை நீங்க உயர வைத்தீரே
குனிந்து நடந்த நேரத்திலே நிமிர செய்தீரே – 2
நாற்றமான எனது வாழ்வு மனம் வீசுதே (2)
நன்றியோடு எந்நாளும் உமக்காய் வாழுவேன் (2)

உம்மை போல ஒரு தேவன் இல்லை
உம்மை போல ஒரு அன்பர் இல்லை – 2
எந்தன் கண்ணீரை துடைப்பவரே (2)
எந்தன் துயரங்கள் நீக்குபவரே (2)

Ummai Pola Oru Devan Illai
Ummai Pola Oru Anbar Illai – 2
Enthan Kanneerai Thudaippavare (2)
Enthan Kavalaigal Theerppavare (2)

1. Thaayai Pola Maarbinile Anaiththu Kolbavare
Thandhaiyai Pol Thozhgalile Sumandhu Selbavare – 2
Nanbanai Pol Ennaalum Nadandhu Varuveere (2)
Naan Nambum Adaikalam Neenga Mattum Dhan (2)

Ummai Pola Oru Devan Illai
Ummai Pola Oru Anbar Illai – 2
Enthan Kanneerai Thudaippavare (2)
Enthan Thuyarangal Neekkubavare (2)

2. Kuzhiyil Kidantha Ennai Neenga Uyara Vaitheere
Gunindhu Nadantha Nerathile Nimira Seitheere – 2
Naattramaana Enadhu Vaazhvu Manam Veesudhe (2)
Nandriyodu Ennaalum Umakkai Vaazhuven (2)

Ummai Pola Oru Devan Illai
Ummai Pola Oru Anbar Illai – 2
Enthan Kanneerai Thudaippavare (2)
Enthan Thuyarangal Neekkubavare (2)

Neenga Illama Vazhala Mudiyaathaiyaa – நீங்க இல்லாம.. வாழ முடியாதையா

Neenga Illama Vazhala Mudiyaathaiyaa
நீங்க இல்லாம.. வாழ முடியாதையா
உங்க கிருபை இல்லாம.. வாழ தெரியாதையா – 2

இயேசுவே.. என் எஜமானரே
நேசரே.. என் துணையாளரே – 2 (…நீங்க இல்லாம)

1. காலையிலே கிருபையும்.. மாலையிலே மகிமையும்
தருகின்ற நல்ல தெய்வமே – 2
தாய் மறந்தாலும் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே – 2

நன்றி சொல்லி.. துதி பாடி..
மனதார தொழுகிறோம் (…நீங்க இல்லாம)

2. இதுவரை நிா்ப்பதும்.. இனிமேல் நிலைப்பதும்
எல்லாமே உங்க கிருபைதான் – 2
பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையே
தாங்கி நடத்துவது உங்க கிருபையே – 2 (…நன்றி சொல்லி)

Ponguthe Aanantham – பொங்குதே ஆனந்தம்

Ponguthe Aanantham
பொங்குதே ஆனந்தம்
புவி எங்குமே இல்லா பேரானந்தம்
பொங்குதே ஆனந்தம்

வையகம் தந்திடா இன்பம்
இயேசையன் அளித்ததானந்தம் – 2
பொய்யனுக்கோ புகழவொண்ணா நாசம் (2)
மெய்யனகற்றினார் என் பாவ தோஷம் (2) (…பொங்குதே)

1. பரலோகமேன்மை துறந்து
நரலோக மானிடனாய் பிறந்து – 2
எவர்க்குமே கிடையாத சிலாக்கியம் (2)
பரமனை நம்புவோர்க்களித்தார் நல்பாக்கியம் (2) (…பொங்குதே)

2. குருசினில் சிந்தின இரத்தம்
குரு இயேசுவில் உண்டான சுத்தம் – 2
கல்வாரியில் தெய்வ மகத்துவ நேசம் (2)
கல்லான இதயமும் கனிந்திடும் பாசம் (2) (…பொங்குதே)

3. பாவ பரிகார நாமம்
கொடும் ரோகப் பரிகார நாமம் – 2
சர்வ லோகத்திலும் மேலான நாமம் (2)
சர்வ ஜனத்திற்கும் இரட்சண்ய நாமம் (2) (…பொங்குதே)

Ponguthe Aanantham
Puvi Engume Illaa Peraanantham
Ponguthe Aanantham

Vaiyagam Thanthidaa Inbam
Yesayyan Aliththathaanantham – 2
Poyyanukko Pugazhavonnaa Naasam (2)
Meyyanakattrinaar En Paava Thosham (2) (…Ponguthe)

1. Paralogamenmai Thuranthu
Naraloga Maanidanaai Piranthu – 2
Yevarkkume Kidayaatha Silaakkiyam (2)
Paramanai Nambuvorkkaliththaar Nalbhaakkiyam (2) (…Ponguthe)

2. Kurusinil Sinthina Raththam
Guru Yesuvil Undaana Suththam – 2
Kalvaariyil Dheiva Magaththuva Nesam (2)
Kallaana Ithayamum Kaninthidum Paasam (2) (…Ponguthe)

3. Paava Parikaara Naamam
Kodum Roga Parikaara Naamam – 2
Sarva Logaththilum Melaana Naamam (2)
Sarva Janaththirkkum Ratchanya Naamam (2) (…Ponguthe)

Karunai Pithaave – கருணைப் பிதாவே கல்வாரி அன்பே

Karunai Pithaave
கருணைப் பிதாவே.. கல்வாரி அன்பே ஆ..ஆ..ஆ..ஆ..
உம்மை அல்லால் எனக்காருமில்லை – ஆ..ஆ..ஆ..ஆ.. (2) – 2

1. ஆ.. இன்ப நாதா.. ஆத்தும நேசா
ஆத்தும நேசா.. ஆத்தும நேசா – 2
அன்பின் கடலே.. அன்பின் கடலே.. ஆ..ஆ..ஆ..ஆ..
அன்பினால் என்னை உருவாக்கினீரே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

2. கிருபை தாருமே.. கிருபாநிதியே
கிருபாநிதியே.. கிருபாநிதியே – 2
அன்பின் வடிவே.. அன்பின் வடிவே.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஏழைக்கிறங்கும் இயேசய்யா – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

3. தேவனின் சித்தம்.. செய்திட செய்யும்
செய்திட செய்யும்.. செய்திட செய்யும் – 2
தியாகமானீரே.. தியாகமானீரே.. ஆ..ஆ..ஆ..ஆ..
தேடிட உள்ளம் களித்திடு்தே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

4. கஷ்டங்கள் விலக.. கைகொடுத்தீரே
கைகொடுத்தீரே.. கைகொடுத்தீரே – 2
நேசர் முகம் காண.. நேசர் முகம் காண.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

5. எந்தன் கண்ணீரை.. போக்கிடும் காலம்
போக்கிடும் காலம்.. போக்கிடும் காலம் – 2
வேகம் வரும் என்று.. வேகம் வரும் என்று.. ஆ..ஆ..ஆ..ஆ..
காத்திருந்து நான் வாடுகிறேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

6. யாத்திரை முடிந்து.. இயேசு ராஜனை
இயேசு ராஜனை.. இயேசு ராஜனை – 2
மேகத்தில் சந்தித்து.. மேகத்தில் சந்தித்து ஆ..ஆ..ஆ..ஆ..
நித்திய காலமாய் வாழ்ந்திடுவேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

Karunai Pithaave.. Kalvaari Anbe Aa…Aa…Aa…Aa…
Ummai allaal Enakkaarumillai – Aa… Aa… Aa… (2) – 2

1. Aa… Inba Naathaa.. Athuma Nesaa
Athuma Nesaa.. Athuma Nesaa – 2
Anbin Kadale.. Anbin Kadale.. Aa…Aa…Aa…Aa…
Anbinaal Ennai Uruvaakkineere – Aa…Aa…Aa…Aa… (2)

2. Kirubai Thaarume.. Kirubaa Nithiye
Kirubaa Nithiye.. Kirubaa Nithiye – 2
Anbin Vadive.. Anbin Vadive.. Aa…Aa…Aa…Aa…
Yezhaikkirangum Yesaiyaa – Aa…Aa…Aa…Aa… (2)

3. Dhevanin Siththam.. Seithida Seiyum
Seithida Seiyum.. Seithida Seiyum – 2
Thyagamaaneere.. Thyagamaneerey.. Aa…Aa…Aa…Aa…
Thedida Ullam Kaliththiduthe – Aa…Aa…Aa…Aa… (2)

4. kashtangal vilaga.. kaikoduththeere
kaikoduththeere.. kaikoduththeere – 2
nesar mugam kaana.. nesar mugam kaana.. Aa…Aa…Aa…Aa…
yengiduthe aasai en ullile – Aa…Aa…Aa…Aa… (2)

5. Enthan Kaneerai.. Pokkidum Kaalam
Pokkidum Kaalam.. Pokkidum Kaalam – 2
Vegam Varum Endru.. Vegam Varum Endru.. Aa…Aa…Aa…Aa…
Kaathirunthu Naan Vaadukiren Aa…Aa…Aa…Aa…

6. Yaathirai Mudinthu.. Yesu Raajanai
Yesu Raajanai.. Yesu Raajanai – 2
Megathil Santhiththu.. Megathil Santhiththu Aa…Aa…Aa…Aa…
Niththiya kaalamaai Vaazhnthiduven – Aa…Aa…Aa…Aa… (2)

Unakkulle Irukkindra – உனக்குள்ளே இருக்கின்ற

Unakkulle Irukkindra
உனக்குள்ளே இருக்கின்ற
உன் இயேசு என்றும் பெரியவரே – 2
நீ அறியாததும் உனக்கெட்டாததுமான
பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2

1. பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோ
பெருங்காற்றில் படகு தவிக்கின்றதோ – 2
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே (2)

2. நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ – 2
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் கலங்காதே (2)

3. சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ – 2
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே (2)

4. மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளி வரும் நேரம் இருளானதோ – 2
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே (2)

5. செங்கடல் உனக்கு முன்னானதோ
சேனைகளெல்லாம் பின்னானதோ – 2
சேனையின் கர்த்தர் இருக்கின்றார்
சேதமின்றி காப்பார் கலங்காதே (2)

Unakkulle Irukkindra
Un Yesu Endrum Periyavare – 2
Nee Ariyathathum Unakkettaathathumaana
Periya Kaariyangal Seithiduvaar – 2

1. Peruvellam Mothi Adikkindratho
Perunkaattril Padagu Thavikkindratho – 2
Periyavar Unakkulle Irukkindraar
Paarthukkolvaar Nee Kalangaathe (2)

2. Nambikkai Illaa Nilaiyaanatho
Visuvaasam Unnil Kuraivaanatho – 2
Arputhar Unakkulle Irukkindraar
Athisayam Seivaar Kalangaathe (2)

3. Soozhnilai Ellaam Ethiraanatho
Suttraththaar Unnil Pagaiyaanaaro – 2
Vallavar Unakkulle Irukkindraar
Valakkaram Thaanguvaar Kalangaathe (2)

4. Mathuramaana Vaazhvu Kasappaanatho
Oli Varum Neram Irulaanatho – 2
Jeevanulla Devan Irukkindraar
Yaavaiyum Seivaar Kalangaathe (2)

5. Senkadal Unakku Munnaanatho
Senaigalellaam Pinnaanatho – 2
Senaiyin Karththar Irukkindraar
Sethamindri Kaappaar Kalangaathe (2)

Thaangattume Um Kirubai – தாங்கட்டுமே உம் கிருபை தேவனே

Thaangattume Um Kirubai Devane
தாங்கட்டுமே உம் கிருபை தேவனே
தனிமையில் நடக்கும் போதெல்லாம் – என்
பெலவீனத்தில் உம் கிருபை பூரணம்
என் மேல் இறங்க வேண்டுமே (2)

தனிமையை நினைத்து அழும் நேரமெல்லாம்
தகப்பனே உம் கிருபை தாங்கணுமே (2)

1. உமது சேவைக்காக அழைத்தீரையா
எந்தன் சேவையை நீர் நினைக்கணும்
உமது தரிசனங்கள் என் வாழ்விலே
நீங்க நிறைவேற்றி முடிக்கணும் (2)

கிருபையே (2) மாறாத தேவ கிருபையே
கிருபையே (2) நாள் தோறும் தாங்கும் கிருபையே

2. உலகில் உபத்திரவம் வரும் போதெல்லாம்
உந்தன் கிருபை என்னைத் தாங்கணும்
ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால்
உந்தன் கிருபை என்னை நிரப்பணும் (2)

கிருபையே (2) மாறாத தேவ கிருபையே
கிருபையே (2) நாள் தோறும் நடத்தும் கிருபையே

Thaangattume Um Kirubai Devane
Thanimaiyil Nadakkum Podhellaam – En
Belaveenatthil Um Kirubai Pooranam
En Mel Iranga Vendume (2)

Thanimaiyai Ninaitthu Azhum Neramellaam
Thagappane Um Kirubai Thaanganume (2)

1. Umathu Sevaikkaaga Azhaittheeraiyaa
Endhan Sevaiyai Neer Ninaikkanum
Umathu Dharisanangal En Vaazhvile
Neenga Niraivettri Mudikkanum (2)

Kirubayye (2) Maaraatha Deva Kirubayye
Kirubayye (2) Naal Thorum Thaangum Kirubayye

2. Ulagil Ubatthiravam Varum Podhellaam
Undhan Kirubai Ennaith Thaanganum
Ooliya Paadhaiyil Naan Sornthu Ponaal
Undhan Kirubai Ennai Nirappanum (2)

Kirubayye (2) Maaraatha Deva Kirubayye
Kirubayye (2) Naal Thorum Nadatthum Kirubayye

Siragugalin Nizhalthanile Naan – சிறகுகளின் நிழல்தனிலே

Siragugalin Nizhalthanile Naan

சிறகுகளின் நிழல்தனிலே நான்
நம்பி இளைப்பாறுவேன்
நீர் துணையாய் இருப்பதனால் நான்
என்றும் இளைப்பாறுவேன் – 2

கண்மணி போல என்னை காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்
கண் உறங்காமல் காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்

மறைவிடமே.. ஆராதனை..
உறைவிடமே உமக்கு ஆராதனை
அடைக்கலமே.. ஆராதனை..
புகலிடமே உமக்கு ஆராதனை

ஆராதனை உமக்கு ஆராதனை
என்னை நேசிக்கும் (ஆதரிக்கும்) இயேசுவே ஆராதனை – 2

1. பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே
வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே – 2

அடைக்கலமான என் தாபரமே
(என்னை) அணுகாமல் காப்பவரே – 2 (…மறைவிடமே)

2. இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே
என்னை காப்பவரே
நன்மைக்கு கைமாறாய் தீமை செய்வோர் மத்தியில்
என்னை காப்பவரே – 2

துரோகங்கள் நிறைந்த பூமியிலே
துணை நின்று காப்பவரே
தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே
என்னை என்றும் காப்பவரே (…மறைவிடமே)

Siragugalin Nizhalthanile Naan
Nambi Ilaippaaruven
Neer Thunayaai Iruppathanaal Naan
Endrum Ilaippaaruven – 2

Kanmani Pola Ennai Kaappavarai Naan
Nambi Ilaippaaruven
Kan Urangaamal Kaappavarai Naan
Nambi Ilaippaaruven

Maraividame.. Aaraathanai..
Uraividame Umakku Aaraathanai
Adaikkalame.. Aaraathanai..
Pugalidame Umakku Aaraathanai

Aaraathanai Umakku Aaraathanai
Ennai Nesikkum (Aatharikkum) Yesuve Aaraathanai – 2

1. Pakkathil Aayiram Per Vizhunthaalum
Ennai Anugaamal Kaappavare
Valapakkathil Pathinaayiram Vizhunthaalum
Ennai Anugaamal Kaappavare – 2

Adaikalame En Thaabarame
(Ennai) Anugaamal Kaappavare – 2 (…Maraividame)

2. Ichagam Pesidum Naavugal Munnile
Ennai Kaappavare
Nanmaikku Kaimaaraai Theemai Seivor Mathiyil
Ennai Kaappavare – 2

Throgangal Niraintha Boomiyile
Thunai Nindru Kaappavare
Thevittaamal Nesikkum En Nesare
Ennai Endrum Kaappavare (…Maraividame)

Yesuve Ennakiragidume – இயேசுவே எனக்கிறங்கிடுமே

Yesuve Ennakiragidume
இயேசுவே எனக்கிறங்கிடுமே
அழுதிடும் எந்தன் சத்தம் கேழுமே
வடியும் எந்தன் கண்ணீர் துடைக்க
ஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2

அவரே என்னை திரும்பி பார்த்தார்
அவரே என்னை தூக்கி எடுத்தார் – 2
அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார் – 2

1. எந்தன் வீட்டில் உம் பாதபடி
சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே
முடிந்தது என்று நகைத்தனரே
ஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2 (…அவரே)

2. அந்த தாயின் அன்பை மறந்தேன்
பாவத்தால் உம் பெலன் இழந்தேன்
இப்போதும் உந்தன் ஆவி ஊற்ற
ஒருமுறை என்னை நினைத்திடுமே – 2 (…அவரே)