All Songs by david

Yesu Manidarai Pirandhar – இயேசு மானிடனாய் பிறந்தார்

Yesu Manidarai Pirandhar
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1. மேய்ப்பர்கள் ராவினிலே – தங்கள் மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே – இயேசு

2. ஆலோசனைக் கர்த்தரே
இவர் அற்புதமானவரே
விண் சமாதான பிரபு
சர்வ வல்லவர் பிறந்தனரே – இயேசு

3. மாட்டுத் தொழுவத்திலே – பரன்
முன்னணையில் பிறந்தார் தாழ்மையைப் பின்பற்றுவோம்
அவர் ஏழ்மையின் பாதையிலே – இயேசு

4. பொன்பொருள் தூபவர்க்கம்
வெள்ளைப் போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே
வான சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு

5. அன்னாளும் ஆலயத்தில் அன்று ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே கூறி தூயனைப் புகழ்ந்தனரே – இயேசு

6. யாக்கோபில் ஓர் நட்சத்ரம்
இவர் வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே
நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு

Christmas Nalithe – கிறிஸ்மஸ் நாளிதே

Christmas Nalithe
கிறிஸ்மஸ் நாளிதே(2)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

1. மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு

2. பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு

Varuvai Tharunamithuve

Varuvai Tharunamithuve

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை

அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களல் நீ குணமடைய

சத்திய வாக்கை நம்பியே வார்
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்

Sonthamakukuvom Sugantharipom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

Sonthamakukuvom Sugantharipom
சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்
E – Maj / 214 / T – 122

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்
இந்தியா இயேசுவுக்கே
காஷ்மீர் முதல் குமரி வரை
இந்தியா இயேசுவுக்கே

இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . .
இந்தியா இயேசுவுக்கே . . . .
எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . .

1. ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே
பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே
ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே
இமாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே

2. டெல்லி உத்தர்காண்ட் இயேசுவுக்கே
உத்தர் பிரதேசம் இயேசுவுக்கே
மத்திய பிரதேசம் இயேசுவுக்கே
பீகார் ஜார்க்கண்ட் இயேசுவுக்கே

3. அருணாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே
அஸ்ஸாம் சிக்கிம் இயேசுவுக்கே
நாகலாந் மணிப்பூர் இயேசுவுக்கே
மிசோராம் திரிபுரா இயேசுவுக்கே

4. மேகாலயா வெஸ்ட் பெங்கால் இயேசுவுக்கே
ஓடிசா சட்டீஸ்கர் இயேசுவுக்கே
மஹாராஷ்ட்ரா கோவா இயேசுவுக்கே
கர்நாடகம் கேரளா இயேவுக்கே

5. ஆந்திரா தெலுங்கானா இயேசுவுக்கே
தமிழ்நாடு புதுச்சேரி இயேசுவுக்கே
இலட்சத்தீவுகள் இயேசுவுக்கே
அந்தமான் நிக்கோபார் இயேசுவுக்கே

( இதே இராகத்தில் பின்வருமாறு பாடலாம் )

E – Maj / 2 / 4 / T – 122

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்
தமிழ்நாடு இயேசுவுக்கே
சென்னை முதல் குமரி வரை
தமிழ்நாடு இயேசுவுக்கே
இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . .
தமிழ்நாடு . . . இயேசுவுக்கே
எங்கள் தமிழ்நாடு இயேசுவுக்கே

1. சென்னை திருவள்ளூர் இயேசுவுக்கே
வேலூர் காஞ்சிபுரம் இயேசுவுக்கே
திருவண்ணாமலை இயேசுவுக்கே
விழுப்புரம் கடலூர் இயேசுவுக்கே

2. கிருஷ்ணகிரி தர்மபுரி இயேசுவுக்கே
சேலம் நாமக்கல் இயேசுவுக்கே
ஈரோடு நீலகிரி இயேவுக்கே
கோவை திருப்பூர் இயேசுவுக்கே

3. பெரம்பலூர் அரியலூர் இயேசுவுக்கே
நாகை காரைக்கால் இயேசுவுக்கே
கரூர் திருச்சி இயேசுவுக்கே
கள்ளக்குறிச்சி இயேசுவுக்கே

4. தஞ்சாவூர் திருவாரூர் இயேசுவுக்கே
திண்டுக்கல் புதுக்கோட்டை இயேசுவுக்கே
தேனி மதுரை இயேசுவுக்கே
சிவகங்கை விருதுநகர் இயேசுவுக்கே

5. இராமநாதபுரம் இயேசுவுக்கே
தூத்துக்குடி முத்துநகர் இயேசுவுக்கே
திருநெல்வேலி இயேசுவுக்கே
கன்னியாகுமரி இயேசுவுக்கே

Uyirulla Nallellam – உயிருள்ள நாளெல்லாம்

Uyirulla Nallellam
உயிருள்ள நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன்
உயிரான இயேசுவே ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் அப்பா
ஆராதிப்பேன் இயேசுவே
ஆராதிப்பேன் தூயரே ஆராதிப்பேன்

1. எந்தன் பெலனே ஆராதிப்பேன்
எந்தன் கோட்டையே ஆராதிப்பேன்
எந்தன் அரணே ஆராதிப்பேன்
எந்தன் கேடகமே ஆராதிப்பேன்

2. யெகோவா நிசியே ஆராதிப்பேன்
ஜெயதரும் தேவனே ஆராதிப்பேன்
யெகோவா ராஃபா ஆராதிப்பேன்
சுகம்தரும் தேவனே ஆராதிப்பேன்

Uyirulla Nallellam
Ummai Araadhippaen
Uyiraanah Yesuvaiye Araadhippaen

Araadhippaen Appa
Araadhippaen Yesuvae
Araadhippaen Thuyarae Araadhippaen

1. Endhan Belanae Araadhippaen
Endhan Kotayae Araadhippaen
Endhan Aranae Aradhippaen
Endhan Kedagamae Aradhippaen

2. Yehovah Nissiyae Aradhippaen
Jayamtharum Devanae Aradhippaen
Yehovah Rapha Aradhippaen
Sugamtharum Devanae Aradhippaen

 

Nobody Loves Me Like You

Morning, I see You in the sunrise every morning
It’s like a picture that You’ve painted for me
A love letter in the sky

Story, I could’ve had a really different story
But You came down from heaven to restore me
Forever saved my life

Nobody loves me like You love me, Jesus
I stand in awe of Your amazing ways
I worship You as long as I am breathing
God, You are faithful and true
Nobody loves me like You

Mountains, You’re breaking down the weight of all my mountains
Even when it feels like I’m surrounded
You never leave my side, oh oh oh

Nobody loves me like You love me, Jesus
I stand in awe of Your amazing ways
I worship You as long as I am breathing
God, You are faithful and true
Nobody loves me like You

Oh, what a song to sing
Oh, what a song to sing
Oh, what a song to sing
Oh, what a song (my heart keeps singing)
Oh, what a song to sing (what a song)
Oh, what a song to sing (I’ll never stop)
Oh, what a song to sing
Jesus, You love me
And I love You, God

Nobody loves me like You love me, Jesus
I stand in awe of Your amazing ways
I worship You as long as I am breathing
God, I will worship You, forever worship You
Nobody loves me like You love me, Jesus
I stand in awe of Your amazing ways
I worship You as long as I am breathing
God, You are faithful and true
Nobody loves me like You

Nobody loves me like You love me, Jesus (I’m a child of God)
I stand in awe of Your amazing ways (yes, I am)
Nobody loves me like You
Nobody loves me like You

Varugavae Varugavae – வருகவே…!!! வருகவே..!!!

Varugavae Varugavae
வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
உம்மை வரவேற்கிறேன்…(2)
உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
நீர் வாருமே ஆவியானவரே…

ஓ… ஓ… ஓ

உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
நீர் வாருமே ஆவியானவரே…!

என்னை நிரப்புமே – (8)

1. ஜீவ ஊற்று நீர் பரிசுத்தர் நீர்
உயிர்பித்திடும் ஆவியானவர் நீர்…
நல்ல ஆவி நீர் சத்ய ஆவி நீர்
இயேசு கிறிஸ்துவின் தேற்றரவாளன் நீர்…

என்னை நிரப்புமே – (8)

வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
உம்மை வரவேற்கிறேன்…

2. ஞான ஆவி நீர் நித்ய ஆவி நீர்
சமாதானம் தந்திடும் ஆவியானவர் நீர்…
பெலனுள்ள ஆவி நீர் உணர்வுள்ள ஆவி நீர்
என்னை ஜெபிக்க வைத்திடும் ஜெப ஆவி நீர்…

என்னை நிரப்புமே – (8)

வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
உம்மை வரவேற்கிறேன்…
உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
நீர் வாருமே ஆவியானவரே…

ஓ… ஓ… ஓ

உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
நீர் வாருமே ஆவியானவரே…

என்னை நிரப்புமே – (16)

Varugaveh – 2
Aaviyaanavare
Ummai varaverkindren – – – (2)

Unmaiyaai mana urukkamaai ummai vendukiren
neer vaarumey aaviyaanavare
Ohhh… Ohhh… Ohhh…
Unmaiyaai mana urukkamaai ummai vendukiren
neer vaarumey aaviyaanavare

Ennai nirappumey – 8

Jeeva ootru neer… parisuthar neer…
Uyirpithidum aaviyaanavar neer..
Nalla aavi neer… sathya aavi neer…
Yesu kristhuvin thetraravaalan neer…

Ennai nirappumey – 8

Varugaveh – 2
Aaviyaanavare
Ummai varaverkindren – – – (1)

Nyana aavi neer… nithya aavi neer…
Samadhanam thanthidum aaviyaanavar neer…
Belanulla aavi neer… unar ulla aavi neer…
Ennai jebikka vaithidum jeba aavi neer…

Ennai nirappumey – 8

Varugaveh – 2
Aaviyaanavare
Ummai varaverkindren – – – (2)

Unmaiyaai mana urukkamaai ummai vendukiren
neer vaarumey aaviyaanavare
Ohhh… Ohhh… Ohhh…
Unmaiyaai mana urukkamaai ummai vendukiren
neer vaarumey aaviyaanavare

Ennai nirappumey – 16

Maarave Aasaipadugiren – மாறவே ஆசைப்படுகிறேன்

Maarave Aasaipadugiren
மாறவே ஆசைப்படுகிறேன்
என்னை மாற்றிவிடும்
கருணை நேசரே – 2

1. என் சிந்தை மாறணும்
என் செயல்கள் மாறணும்
என் பேச்சு மாறணும்
என் பெருமை மாறணும்
– மாறவே ஆசை

2. என் நடை மாறணும்
என் உடை மாறணும்
என் உள்ளம் மாறணும்
ஐயா உம்மை போலவே
– மாறவே ஆசை

3. என் ஜெபம் மாறணும்
என் துதி மாறணும்
என் சுயம் சாகணும்
ஐயா உம்மை போலவே
– மாறவே ஆசை

Maaravae Aasaipadugiraen
Ennai Maatrividum
Karunai Naesarae – 2

1. En Sindhai Maaranum
En Seyalgal Maaranum
En Paechu Maaranum
En Perumai Maaranum
– Maaravae Aasaipadugiraen

2. En Nadai Maaranul
En Udai Maaranum
En Ullam Maaranum
Aiyaa Ummai Poalavae
– Maaravae Aasaipadugiraen

3. En Jebam Maaranum
En Thudhi Maaranum
En Suyam Maaranum
Aiyaa Ummai Poalavae
– Maaravae Aasaipadugiraen

Pali Beedatthil Vaithaen – பலிபீடத்தில் வைத்தேன் என்னை

Pali Beedatthil Vaithaen Ennai

பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் – 2

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே – 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் – 2
நித்தம் வழிநடத்தும் – 2

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் – 2
வாருமய்யா வந்து என்னை – 2
வல்லமையால் நிரப்பும் – 2

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க – 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் – 2
பரிசுத்தமாக்கி விடும் – 2

Padaippu Ellam Umakkae – படைப்பு எல்லாம் உமக்கே

Padaippu Ellam Umakkae
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே – 2

1. இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் – 2
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் – 2
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே – 2

2. இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் – 2
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே – 2
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் – 2