Song Category: Tamil

Lockdown Ippo Illa Illa – லாக் டவுன் இப்போ இல்ல இல்ல

Lockdown Ippo Illa Illa

லாக்டவுன் இப்போ இல்ல இல்ல
குரண்டின் ஓ ரொம்ப தொல்லை
கொரோனாவுக்கு இப்போ சொல்வோம், குட்பை.. குட்பை..
ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் மறந்தே போச்சு
ஆன்லைன் கிளாஸே கதியா போச்சு
எக்ஸாம் பீவர் இங்கிரீஸ் ஆச்சு
ஆச்சு வந்து போச்சு..

வேர்ல்டும் ரொம்ப நாளா கிலோசு
அதனால இல்ல சண்டே கிளாஸ்சு
ஹெச்பிஸ் தான் டா இப்போ மாஸு
அத பத்தி நீயும் பேசு

டிவிலாம் பாத்து.. கண்ணெல்லாம் போச்சா
போன் எல்லாம் சூடாச்சா
டைம் பாஸ் பண்ணி.. போர் அடிச்சாச்சா
பைபிள் ல மறந்தாச்சா
உன் இஷ்டப்படி வாழ்ந்ததெல்லாம் தள்ளி வெய்யு
இனி ஜீசஸ் போல வாழணும்னா
அவரை நோக்கி ஸ்டெப்ப வெய்யு

லோக்டவுன் இப்போ இல்ல இல்ல
குரண்டின் ஓ ரொம்ப தொல்லை
கொரோனாவுக்கு இப்போ சொல்வோம் குட்பை குட்பை

lockdown ipo illa illa
quarantine oh romba tholla
coronavuku ipo solvom goodbye goodbye

students ellam maranthe poechu
online class eh gadhiyaa poechu
exam fever increase aachu
aachu vanthu pochu

world um romba naala close uh
adhanaala illa sunday class uh
HBS than da ipo mass uh
adha pathi neeyum pesu

tvlaam paathu kannellam poecha
phone ellam soodaachaa
timepass panni bore adichachaa
bible a maranthaachaa
un ishtapadi vazhnthathellam thalli veyyu
ini jesus pola vazhanumna
avara nokki step a veyyu

lockdown ipo illa illa
quarantine oh romba tholla
coronavuku ipo solvom goodbye goodbye

Photovum Vena – போட்டோவும் வேண

Photovum Vena

போட்டோவும் வேணா
ஜெராக்ஸும் வேணா
கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா
நீங்களும் நானும்
தேவனின் சாயலாய்
இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா (2)

பூமியின் மண்ணால் மனிதனை
தமது சாயலாய் உருவாக்கி
நாசியில் சுவாசத்தை ஊதினார்
மனிதன் உயிராய் மாறினான்

போட்டோவும் வேணா
ஜெராக்ஸும் வேணா
கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா
நீங்களும் நானும்
தேவனின் சாயலாய்
இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா

நடக்கும் போது நம் நிழலும் நடக்கும்
இந்த விஷயம் தெரியுமே
நம்மை காக்க தூதர்கள் உண்டு
இதுவும் கூட தெரியுமே
இயேசு போல நாமும் நடக்க
முயற்சி செய்வோமே
அவரின் சாயல் நம்மில் தெரிய
அவர் போல் வாழ்வோமே
இயேசுவாய் வாழ்வோமே

போட்டோவும் வேணா
ஜெராக்ஸும் வேணா
கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா
நீங்களும் நானும்
தேவனின் சாயலாய்
இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா (2)

Photovum vena
Xeroxum vena
Kannadikooda inga venave vena
Neengalum naanum
Devanin saayalai
Irupathai sollamal nan vittuduvena (2)

Boomiyin mannaal manithanai
Thamathu saayalaai uruvaaki
Naasiyil swasaththai oodhinaar
Manithan uyiraai maarinan

Photovum vena
Xeroxum vena
Kannadikooda inga venave vena
Neengalum naanum
Devanin saayalai
Irupathai sollamal nan vittuduvena

Nadakkum pothu nam nizhalum nadakum
Indha vishayam theriyume
Nammai kaaka thoothargalundu
Idhuvum kooda theriyume
Yesu pola naamum nadaka
Muyarchi seivome
Avarin saayal nammil theriya
Avar pol vazhvome
Yesuvaai vazhvome

Photovum vena
Xeroxum vena
Kannadikooda inga venave vena
Neengalum naanum
Devanin saayalai
Irupathai sollamal nan vittuduvena (2)

Unnadhare Um Maraivinile – உன்னதரே உம் மறைவினிலே

Unnadhare Um Maraivinile

உன்னதரே உம் மறைவினிலே
அனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்
வல்லவரே உம் நிழினிலே
நிம்மதியுடனே தங்கிடுவேன்

என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

1. என்னில் உம்மை ஊற்றி விட்டீர் – அபிஷேகமாக
உம்மில் என்னை கண்டு கொண்டேன் – பரிசுத்தனாக

Chorus
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

2. எனக்காக தகர்த்து விட்டீர்- நீங்காத தடைகளை
என்னை கொண்டு முறித்து விட்டீர் – எதிரியின் சதிகளை

Chorus
என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

கருவில் நான் உருவாகும் முன்பென்னை அறிந்தீரே
அழியாத உறவாக உம் கையில் வரைந்தீரே

Unnadhare Um Maraivinile
Anudhinamum Naan Vaazhndhiduven
Vallavare Un Nizhalinile
Nimmadhiyudane Thangiduven

En Attrale En Aayane
Thetridum En Devane

1. Ennil Ummai Ootrivitteer
Abhishegamaha
Ummil Ennai Kandukonden
Parisuthanaaha

En Aatrale En Aayane
Thetridum En Devane

2. Ennakagaa Thaharthuvitteer
Neengadha Thadaihalai
Ennai Kondu Murithu Vitteer
Edhiriyin Sadhihalai

En Aatrale En Aayane
Thetridum En Devane

Karuvil Naan Uruvaagum
Munbai Ennai Arindheere
Azhiyadha Uravaaga
Um Kaiyil Varaindheere

Thadumarum Nerangalil – தடுமாறும் நேரங்களில்

Thadumarum Nerangalil
தடுமாறும் நேரங்களில்
தாங்கியே நடத்திடுவார்
தள்ளாடும் நேரத்திலும்
தயவோடு நடத்திச்செல்வார்
இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர்
இயேசு பெரியவர், இயேசு மேலானவர்

1. சோதனைகள் வந்தாலும்,
வேதனைகள் வந்தாலும்
சாத்தானின் கூட்டம்
என்னை சூழ்ந்திட்டாலும்
எரிகோவை தகர்த்தவர் என்னோடு உண்டு
எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்
(இயேசு நல்லவர் …)

2. கோரப்புயல் வீசினாலும்
படகினைக் கவிழ்த்தாலும்
ஆழியிலே ஜலம் பொங்கினாலும்
அவைகளை அதட்டிடும் தேவன் என்னோடு
அடக்கிடுவார் ஆசீர்வதித்திடுவார்
(இயேசு நல்லவர் …)

3. பிள்ளைகள் என்னை மறந்தாலும் உற்றார் என்னை வெறுத்தாலும்
நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
அன்போடு நேசிக்கும் இயேசு என்னோடு
கலக்கமுமில்லை பயமில்லையே
(இயேசு நல்லவர் …)

Aaviyanavare Paraloga Pidhavae – ஆவியானவரே பரலோகப்பிதாவே

Aaviyanavare Paraloga Pidhavae

ஆவியானவரே, பரலோகப்பிதாவே,
எந்தன் அன்பு நேசரே உம்மை ஆராதிப்பேன்

ஆராதனை(2) ஆவியிலே உமக்கு ஆராதனை
ஆராதனை(2) உண்மையிலே உமக்கு ஆராதனை (2)

1. என்னை அழைத்தவர் நீரே, என்னை நடத்திச் செல்வீரே (உம்) அன்பின் ஆவியால் தினம் நிரப்புகின்றீரே
(ஆராதனை ….)

2. பெலவீன நேரங்களில் என் பெலனாய் வந்தீரே
சுகவீன நேரங்களில் என் சுகமாய் மாறினீரே
(ஆராதனை ….)

3. சோர்ந்திடும் நேரமெல்லாம் என்னை தூக்கி சுமந்தீரே
தடுமாறும் நேரங்களில் என்னை தாங்கிக்கொண்டீரே
(ஆராதனை ….)

4. என் கன்மலையும் நீரே, என் கோட்டையும் நீரே உயர்ந்த அடைக்கலமும், நான் நம்பும் கேடகமும் நீரே
(ஆராதனை ….)

En Ovvoru Sottu Kanneerukkum – என் ஒவ்வொரு சொட்டு

En Ovvoru Sottu Kanneerukkum

என் ஒவ்வொரு சொட்டு
கண்ணீருக்கும் பதிலுண்டு
அதை பெற்று, பெற்று
அனுபவிக்க பெலனுண்டு
நான் திடன் கொள்வேன்,
நான் பெலன் கொள்வேன்
என் புலம்பலை ஆனந்த
களிப்பாய் மாற்றிடுவார்

1. கண்ணீரின் பாதையில்
நடக்கும்போதெல்லாம்
என் கண்ணீரைக் காண்பாரோ
என்று யோசித்தேன்
ஆனால் உள்ளங்கையில் என்னை
வரைந்து வைத்துள்ள கர்த்தர்
உன் கண்ணீரை காண்கிறேன்
என்று சொன்னாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)

2. சோதனையில் சோர்ந்து போய்
அமிழ்ந்து போகையில்
எல்லாமே முடிந்ததோ என்று யோசித்தேன்
ஆனால் அமிழ்ந்த பேதுரு கரம்
பிடித்து தூக்கின கர்த்தர்
என்னையும் தம் கரம் பிடித்து
தூக்கி விட்டாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)

3. தீமையான காரியங்கள்
சூழ்ந்து கொள்கையில்
தேவன் என்னை மறந்தாரோ
என்று யோசித்தேன்
ஆனால் யோசேப்பை ராஜாவாக
மாற்றின கர்த்தர்
எல்லா தீமைகளையும்
நன்மையாக முடியச்செய்தாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)

Abishekium Ennai Anal Mootum – அபிஷேகியும் என்னை அனல்

Abishekium Ennai Anal Mootum

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும்
ஆவியினால் என்னை நிரப்பிவிடும்
ஆர்ப்பரித்து துதித்திட
வல்லமையால் நிரம்பிட
அக்கினியின் அபிஷேகம் ஊற்றிடுமே

1. எரிகோ மதில்கள் தகர்க்கப்பட
யெசபேலின் ஆவிகள் கட்டப்பட
எதிரியின் சேனையை கலக்கிடவே
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )

2. எலியாக்கள் எழும்பி வரவேண்டுமே
சவால் விட்டு தேசத்தை சந்திக்கவே
இயேசுவின் நாமம் மகிமைப்பட
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )

3. மரித்தவர் உயிர் பெற்று எழுந்திடவே
சத்தியத்தின் சாட்சியாய் மாறிடவே
அப்போஸ்தலர் ஆதி நிலை ஏகிடவே
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )

Naan Jeikka Piranthavan – நான் ஜெயிக்க பிறந்தவன்

Naan Jeikka Piranthavan
நான் ஜெயிக்க பிறந்தவன் ஆளப்பிறந்தவன்
ஆசீர்வாத வாய்க்கால்தான்
என்னைக்கொண்டு தேவன் பெரிய காரியம் செய்திடுவார்

1. கிறிஸ்துவோடு ஆளுகை செய்ய
அழைக்கப்பட்ட மனிதன் நான்
தேசத்தை ஆள்வேன் சமாதான கொடியை
உலகமெங்கும் வீசச்செய்வேன்

2. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே
ஆசீர்வதிக்கப்பட்டவன் நான்
உலகத்தை ஜெயிப்பேன் சாத்தானை மிதிப்பேன்
கர்த்தரின் சொத்துக்கு பங்காளி நான்

3. எனக்கு எதிராய் பதினாயிரம் பேர்
பாளயமிறங்கி வந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்பட மாட்டேன்
இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவேன்

4. கர்த்தரின் வேதத்தில் எப்போதுமே
தியானமாக இருப்பதனால்
இலட்சம்பேருக்கு என்னை அவர்
ஆசீர்வாதமாய் மாற்றிடுவார்

Um Vaarthaigal Melaanathu – உம் வார்த்தைகள் மேலானது

Um Vaarthaigal Melaanathu
உம் வார்த்தைகள் மேலானது
உம் வல்லமை மேலானது
உம் திரு இரத்தம் மேலானது
உம் சமூகமே மேலானது
உம் வார்த்தைகள் மேலானது
உம் வல்லமை மேலானது
அல்லேலூயா (8)

Um Vaarthaigal Melaanathu
Um Vallamai Melaanathu
Um Thiru Ratham Melaanathu
Um Samoogame Melaanathu
Um Vaarthaigal Melaanathu
Um Vallamai Melaanathu
Hallelujah (8)

Ennai Jenipithavarum Neer – என்னை ஜெனிப்பித்தவரும் நீர் தானே

Ennai Jenipithavarum Neer
என்னை ஜெனிப்பித்தவரும் நீர் தானே
என்னை பெற்றெடுத்தவரும் நீர் தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர் தானே
என்னை வளர்த்தவரும் நீர் தானே -2
கன்மலையே கன்மலையே -2
உமக்கே ஆராதனை -4

1. தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவே இல்லாத உண்மையான அன்பு
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மரித்தீரே -2
எனக்காக உயிர்த்தீரே -4
– உமக்கே ஆராதனை

2. என் மேல் கிருபை வைத்து
இரட்சிப்பை தந்தவரே
இதற்கு ஈடு இணை
பூமியிலே இல்லையப்பா -2
என் மேலே அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை -2
நித்திய ஜீவனை தந்தீரே -4
– உமக்கே ஆராதனை

3. உமக்கு நிகரான தெய்வம்
ஒன்றும் இல்லைப்பா
அகில உலகத்திற்க்கும்
ஆணடவரும் நீர் தானே -2
முடிவில்லா இராஜ்ஜியத்தை
அரசாளும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் -2
நித்திய மகிழ்ச்சியே நீர் தானே -4
– உமக்கே ஆராதனை