Naan Nanagavay Vandiroukirain – நான் நானாகவே வந்திருக்கிறேன்

Naan Nanagavay Vandiroukirain

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா

1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக தானாக வந்திருக்கிறேன்

2. மார்த்தாளைப்போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப்போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரைப்போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

Naan Nanagavay Vandiroukirain
Um prasannathil vandhu nirkirayn
Neer indru ennai yetrukolveeraa
Um raajiyathil seerthukolveeraa

1. Yosaeppai pol naan ozhungillaiyae
Noah vai pol needhimaanum illaiyae
Aabragamaai pol visuvaasi illaiyae
Dhaaniyaelai pol ummai vaendavillaiyae
Naan naanaaga thaanaaga vandhirukkirayn

2. Maarthaalai pol umai sevikkalayae
Mariyaalai pol ummai naysikkalayae
Estherai pol edhayum seiyyavillaiyae
Elizabethin nargunangal ennil illaiyae
Naan veenaagi paazhaagi vandhirukkirayn

Dasanagiya Yakobe – தாசனாகிய யாக்கோபே

Dasanagiya Yakobe
தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே

1. உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன்
இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன்
மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன்

2. வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன்
வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன்
உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்

3. தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன்
கால்கள் கல்லில் இடராமல் கருத்தாய் காத்திடுவேன்
நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன்

4. ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான் இருப்பேன்
அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாமல் காத்துக் கொள்வேன்
உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்

Dasanagiya Yakobe bayappadaathay thigaiyaadhay

1. Unakku munbaaga naan selvaen vazhigal sevvaiyaakkuvaen
Idhuvaraiyilum kaathittaen iniyum kaathiduvaen
Maraivilirukkum pokkishangalai unakku thandhiduvaen

2. Valakkarathinaal thaangiduvaen belanai thandhiduvaen
Varanda nilathinmael aarugalai oedacheivaen
Un mael aaviyum aaseervaadhamum ootriduvaen

3. Thaayai pola thaetriduvaen thandhaipol anaithiduvaen
Kaalgal kallil idaraamal karuthaai kaathiduvaen
Ninaithidaadha alavavirku naan unnai uyarthiduvaen

4. Aarugalai nee kadakkaiyilay unnodu naan iruppaen
Akkini jwaalai unnai patraamal kaathu kolvaen
Unakku edhiraai ezhumbuvorai naanay sidharadippaen

Devanin Aalayam – தேவனின் ஆலயம்

Devanin Aalayam

தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்
மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்
நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம்

1. கண்கள் காண்பது செவ்வையான பார்வையா
எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா
கைகள் செய்வது சுத்தமான செயலா
கால்கள் போவது சரியான இடத்திற்கா
நாவு பேசுவது சமாதான வார்த்தையா
சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா

2. தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு
ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு
பரிசுத்த பரிசாய் பரனுக்கு படைத்திடு
குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு காண்பித்திடு
சுயத்தை வெறுத்து சிலுவையை சுமந்திடு
சரீரமென்பதை ஆலயமாக்கிடு

Devanin Aalayam thudhigalin aalayam
Paramanin aalayam parisutha aalayam
Magimaiyin aalayam magathuva aalayam
Nandriyin aalayam naamay avvaalayam

1. Kangal kaanbadhu sevvayaana paarvaiyaa
Ennam kondadhu nanmaiyaana ennamaa
Kaigal seivadhu suthamaana seyalaa
Kaalgal povadhu sariyaana idathirkaa
Naavu paesuvadhu samaadhaana vaarthaiyaa
Sindhithu seyalpadu unnai maatri kolvaayaa

2. Dhevan koduthadhai avarukkay koduthidu
Jeevanulla baliyaai avarukku alithidu
Parisutha parisaai paranukku padaithidu
Kutramatra kaniyaai kristhuvukku kaanbithidu
Suyathai veruthu silvaiyai sumandhidu
Sareeram enbadhai aalayamaakidu

Vaa Endrazhaikkum – வா என்றழைக்கும் தெய்வ

Vaa endrazhaikkum dheiva satham kaetkudhaa
வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா
நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார்

1. உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால்
அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார்
உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால்
அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார்
உன் கஷ்டங்கள் அறிவார்
உன் கண்ணீரை அறிவார்
உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார்

2. உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லு
உனை வழிகாட்டும் இறைவனிடம் முழங்காலில் நில்லு
உன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார்
உன் உடலுன்னை கைவிட்டால் உயிராக இருப்பார்
உன் தேவனை தேடு அவர் பாதங்கள் நாடு
முழுதான மனதோடு துதியோடு

3. உன் சோர்வினை தீர்ப்பது மனிதர்கள் இல்லை
உன் நோய்களை தீர்ப்பது மருந்துகள் இல்லை
நீ பிழைத்திட ஒரு வழி உன் கிறிஸ்து தானே
உன் பாவங்கள் மறைவதும் அவரிடம்தானே
வேறு வழியை தேடாதே நீ தூரம் செல்லாதே
பதறாதே தயங்காதே மயங்காதே

Vaa endrazhaikkum dheiva satham kaetkudhaa
Nee thirumba maataaya unnai thedi paarkiraar

1. Un norungunda idhayathai avaridam koduthaal
Adhai sari seidhu marupadiyum unnidam koduppaar
Un manavedhanaigalai nee solli azhudhaal
Avvedhanaigalai theerthu aarudhal alipaar
Un kashtangal arivaar
Un kanneerai arivaar
Unnai paarpaar unnai meetpaar unnai kaappaar

2. Un manabaaram yaavaiyum avaridam sollu
Unai vazhi kaatum iraivanidam muzhangaalil nillu
Un uravugal kaivittaal uravaaga iruppaar
Un udalunnai kaivittaal uyiraaga iruppaar
Un dhevanai thedu avar paadhangal naadu
Muzhudhaana manadhodu thudhiyodu

3. Un sorvinai theerpadhu manidhargal illai
Un noygalai theerpadhu marundhugal illai
Nee pizhaithida oru vazhi un kristhu thaanay
Un paavangal maraivadhum avaridam thaanay
Veru vazhyai thedaadhey nee dhooram sellaadhay
Padharaadhay thayangaadhay mayangaadhay

Ulagam Thondrum Munne – உலகம் தோன்றும் முன்னே

Ulagam Thondrum Munne
உலகம் தோன்றும் முன்னே உன்னை
தெரிந்துகொண்டாரே தேவன்
கருவினில் உருவாகும் முன்னே உன்னை
பிரித்தெடுத்தாரே தேவன்
கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்
பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
ஆவியாய் கூடவே இருக்கின்றார்
உனக்காய் பரிந்து பேசுகிறார்

Ulagam Thondrum Munne
Unnai therindhu kondaaray dhevan
Karuvinil uruvaagum Munne
Unnai piritheduthaaray dhevan
Kiristhu unakkaay adikapattaar
Un paavangalukkaga norukapattaar
Aaviyaai koodavay irukkindraar
Unakkaai parindhu pesugiraar

Netru Indru Naalai – நேற்று இன்று நாளை

Netru Indru Naalai Maaraadhavaray

நேற்று இன்று நாளை மாறாதவரே
காலம் மாறினாலும் மாறாதவரே

1. வாக்குத்தத்தம் கொடுத்தால் – அதை
நிறைவேற்றிடுவார்
நம்மைப் போல அல்ல – அவர்
கண்டதையும் சொல்ல

2. சொல்வதெல்லாம் உண்மை – அவர்
செய்வதெல்லாம் நன்மை
பொய்கள் கிடையாது – அவர்
செய்கை புரியாது

3. தாழ்பாள்களை முறித்தார் – வெண்கல
கதவினை உடைத்தார்
இன்றும் அதைச் செய்வார் – உன்னை
விடுவித்து காப்பார்

4. பாவம் நீங்கிப்போனதே – வாழ்வில்
விடுதலை வந்ததே
செய்ததெல்லாம் அவரே – இன்றும்
அதைச் செய்வாரே

Netru indru naalai Maaraadhavaray
Kaalam maarinaalum maaraadhavaray

1. Vaakuthatham koduthaal – adhai
Niraivetriduvaar
Nammaipola alla – avar
Kandadhayum solla

2. Solvadhellaam unmai – avar
Seivadhellaam nanmai
Poigal kidaiyaadhu – avar
Seigai puriyaadhu

3. Thaazhpaalgalai murithaar – vengala
Kadhavinai udaithaar
Indrum adhai cheivaar – unnai
Viduvithu kaapaar

4. Paavam neengi ponadhay – vaazhvil
Vidudhalai vandhadhay
Seidhadhellaam avaray
Indrum adhai seivaaray

Yaridam Solven Yaridam Solven – யாரிடம் சொல்வேன்

Yaridam Solven Yaridam Solven

யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
உம்மிடம் சொல்வேன்

1. உலகம் அழைக்கிறது – உம்
நாமமும் அழைக்கிறது
உலகை வெறுக்கவில்லை
உம்மையும் மறக்கவில்லை
நானென்ன செய்யட்டும் தேவா

2. இச்சைகள் இழுக்கிறது – உம்
சத்தியம் தடுக்கிறது
புவியை வெறுத்திட
பிதாவை பற்றிக்கொள்ள
மனதில் பெலன் தாருமே

3. இரட்சிப்பு விளையாட்டா – நம்
இரட்சகர் விளையாட்டா
எத்தனை முறை விழ
எத்தனை முறை எழ
மன்னிப்பு இன்னொன்று உண்டா

Yaaridam solven Yaaridam solven
Endhan dhukkathai endhan kadhayai
Endhan thunbathai
Ummidam ummidam ummidamthaanay
Ummidam solven

1. Ulagam azhaikiradhu – um
Naamamum azhaikiradhu
Ulagai verukkavillai
Ummaiyum marakkavillai
Naan enna seyyattum dheva

2. Ichaigal izhukkiradhu – um
Sathiyam thadukkiradhu
Puviyai veruthida
Pidhaavai patrikolla
Manadhil belan thaarumay

3. Ratchippu vilayaataa – nam
Ratchagar vilaiyaataa
Ethanai murai vizha
Ethanai murai ezha
Mannipu innondru undaa

Pithave Potri – பிதாவே போற்றி

Pithave Potri
பிதாவே போற்றி
குமாரன் போற்றி
ஆவியே போற்றி
போற்றி போற்றி

1. யேகோவாயீரே போற்றி போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

2. யேகோவாநிசியே போற்றி போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர்

3. யேகோவா ஷாலோம் போற்றி போற்றி
சமாதானம் தருகின்றீர்

4. யேகோவா ராப்பா போற்றி போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர்

5. யேகோவா ஷம்மா போற்றி போற்றி
கூடவே இருக்கின்றீர்

Pithave Potri kumaaran potri
Aaviyay potri potri potri

Yegovaa yeeray potri potri
Ellaamay paarthukolveer

Yegovaa nisiyay potri potri
Engalukku vetri tharuveer

Yegovaa shalom potri potri
Samaadhaanam tharugindreer

Yegovaa raphaa potri potri
Engalukku sugam tharuveer

Yegovaa shammaa potri potri
Koodavay irukkindreer

Arputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்

Arputhar Arputhar Yesu Arputhar
அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்

1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே – எல்லோரும்

2. அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே – எல்லோரும்

Arputhar, Arputhar, Arputhar Arputhar Yesu Arputhar
Andinoar vaazhvai inbamaai maatrum
Yesu Arputhar
Elloarum paadungal
Kaithaalam poadungal
Sandhoashathudanae sangeedham paadungal – Arpudhar

1. Ennenna thubangal nammil vandhapoadhum
Theertha Yesu arpudhar
Ethanai thollaigal nammai soozhntha poadhum
Kaatha Yesu arpudhar
Ulagathil iruppoanilum – engal
Yesu periyavar arpudharae
Unmaiyaai avarai thaedum yaavarukkum
Yesu arpudharae – Elloarum

2. Alaikadal maelae nadandhavar
Engal Yesu arpudhar
Agoara kaatraiyum amaidhippaduthiya
Yesu arpudhar
Araindhanar siluvaiyilae
Aandavar marithaar annaalinilae
Aagilum moondraam naal uyirudan ezhundha
Yesu arpudhar – Elloarum

Sthothirame Sthothirame Appa Appa – ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

Sthothirame Sthothirame Appa Appa

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
நல்லவரே வல்லவரே

1. கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
ரட்சகரும் தேவனுமானார் – நான்
நம்பின என் துருகமும் கேடகமானார்
ரட்சணிய கொம்புமானார்

2. தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர் – ஒரு
சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்

3. உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் – உம்
காருணியத்தால் பெரியவனானேன்
நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர்
வழுவாமல் நடந்து செல்கிறேன்

Sthothirame Sthothirame Appa Appa
Um kirubai enakku podhum appa appa
Nallavaray vallavaray

1. Kartharay en kanmalaiyum kottayumaanaar
Ratchagarum dhevanumaanaar – naan
Nambina en thurugamum kedagamaanaar
Ratchaniya kombumaanaar

2. Dhevareer en irulai ellaam velichamaakineer
Enadhu vilakkai yetri vaitheer – oru
Senaikullay paayacheidhu porida cheidheer
Madhilai ellaam thaandida cheidheer

3. Ummudaiya valakarathaal ennai thaangineer – um
Kaarunyathaal periyavanaanen
Naan sellugindra paadhai ellaam agalamaakineer
Vazhuvaamail nadandhu selgiren