Naane Vazhi Naane Sathyam – நானே வழி நானே

Naane Vazhi Naane Sathyam

நானே வழி நானே சத்யம்
நானே ஜீவன் மகனே(ளே) – உனக்கு – 2
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை – 2

ஹல்லேலூயா
ஹாலேலூயா ஆமென் (2)

1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம் – 2
கலங்காதே என் மகனே(ளே)
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் – 2 (…நானே வழி)

2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன் – 2
என் மகனே(ளே) வருவாயா
இதயத்திலே இடம் தருவாயா – 2 (…நானே வழி)

3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன் – 2
வருவாயா என் மகனே(ளே)
இதயத்திலே இடம் தருவாயா – 2 (…நானே வழி)

4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் – 2
கலங்காதே என் மகனே(ளே)
கண்மணி போல உன்னைக் காத்திடுவேன் – 2 (…நானே வழி)

நீரே வழி நீரே சத்யம்
நீரே ஜீவன் இயேசையா

உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை – 2 (…நீரே வழி)

நான் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர் ஒரு போதும் கைவிட மாட்டீர் – 2 (…நீரே வழி)

எனக்காகவே ஜீவிக்கின்றீர்
என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர் – 2 (…நீரே வழி)

Naane Vazhi Naane Sathyam
Naane Jeevan Magane(Le) – Unakku – 2
Ennaalandri Unakku Viduthalai Illai
Ennaalandri Unakku Nimmathi Illai – 2

Halleluyaa
Haaleluya Amen (2)

1. Naan Tharuven Unakku Samaathaanam
Naan Tharuven Unakku Santhosham – 2
Kalangaathe En Magane(Le)
Kanmani Pol Unnai Kaaththiduven – 2 (…Naane Vazhi)

2. Unakkaaga Siluvaiyil Naan Mariththen
Unakkaga Thiruratham Naan Sinthinen – 2
En Magane(Le) Varuvaayaa
Ithayaththile Idam Tharuvaaya – 2 (…Naane Vazhi)

3. Unakkaagave Naan Jeevikkindren
Un Ullaththil Vaazha Thudikkindren – 2
Varuvaayaa En Magane(Le)
Ithayathile Idam Tharuvaayaa – 2 (…Naane Vazhi)

4. Nee Nambum Manithar Kai Vidalaam
Aanaal Naan Oru Pothum Kai Vidamaatten – 2
Kalangaathe En Magane(Le)
Kanmani Pola Unnai Kaaththiduven – 2 (…Naane Vazhi)

Neere Vazhi Neere Sathyam
Neere Jeevan Yesaiyaa

Ummaalandri Enakku Viduthalai Illai
Ummaalandri Enakku Nimmathi Illai – 2 (…Neere Vazhi)

Naan Nambum Manithar Kaividalaam
Aanaal Neer Oru Pothum Kaividamaatteer – 2 (…Neere Vazhi)

Enakkaagave Jeevikkindreer
En Ullaththil Thangi Nadaththugireer – 2 (…Neere Vazhi)

 

Varavendum Deva Aaviye – வரவேண்டும் தேவ ஆவியே

Varavendum Deva Aaviye

வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே

ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டி
எரிய விடும்

தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் நல்லவரே வல்லவரே

Varavendum Deva Aaviyae
Engal Maththiyile
Varavaenndum Deva Aaviyae
Engal Ullaththile

Aatkollum Aiyaa
Abishaekiyum
Anal Mootti
Eriya Vidum

Thooya Aaviyae Anbin Aaviyae
Thunnaiyaalare Thaettrum Deivamae
Oottru Thanneerae Ullam Yenguthaiyaa
Varavendum Nallavare Vallavare

Viduthala Viduthala – விடுதலை விடுதலை

Viduthala Viduthala
விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை

1. நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை
2. பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை
3. ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை
4. வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை
5. கவலையிலிருந்து விடுதலை
கண்ணரிலிருந்து விடுதலை

Aatkonda Deivam – ஆட்கொண்ட தெய்வம்

Aatkonda Deivam
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்

2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்

3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு

4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே

5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே

6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே

Aatkonda Deivam Thiruppaatham Amarnthu
Aaruthal Ataikinten
Amaithi Perukinten

1. Puyal Veesum Kadalil Thadumaarum Padakai
Thaangidum Nangaramae (3) Thinam

2. Ethirkaattu Veesa Ethirpporum Paesa
Enaik Kaakkum Pukalidamae – Thinam

3. Nilaiyatta Vaalvin Nimmathiyae
Neengaatha Paerinpamae – Ennaivittu

4. Irul Neekkum Sudarae En Yesu Raajaa
En Vaalvin Aananthamae

5. Manathurukum Thaevaa Mannikkum Naathaa
Maaperum Santhoshamae

6. Kaayangal Aatti Kanneeraith Thutaikkum
Nalla Samaariyanae

Nandri Nandri Nandri Endru – நன்றி நன்றி நன்றி என்று

Nandri Nandri Nandri Endru
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிநேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா

1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே – நன்றி
2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்
3. உணவு உடைதினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே
4. கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே

Katta Patta Manitharellam – கட்டப்பட்ட மனிதரெல்லாம்

Katta Patta Manitharellam

கட்டபட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும் – 2
காயப்பட்ட மனிதரெல்லாம்
கல்வாரி வர வேண்டும் – கர்த்தர்
உம்மைக் காண வேண்டும் – 2
தேவா… தேவா…

1. எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே – 2
எங்கும் பற்றி எரியட்டுமே

2. அறியாமை இருள் விலகி
அதிசய தேவனைக் காண வேண்டும் – 2
அதிசய தேவனைக் காண வேண்டும்

3. பாவங்கள் சாபங்கள் – பாரத
தேசத்தில் மறைய வேண்டும் – 2
எங்கள் பாரத தேசத்தில் மறைய வேண்டும்

4. இமயம் முதல் குமரி வரை – என்
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் – 2
என் இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

5. உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும் – 2
உலகம் எங்கும் செல்ல வேண்டும்

சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும் – 2
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

Kattapatta Manitharellaam
Kattavizhkka Pada Vendum – 2
Kaayappatta Manitharellaam
Kalvaari Vara Vendum – Karththar
Ummai Kaana Vendum – 2
Devaa… Devaa…

1. Ezhupputhal Thee Paravattume
Engum Pattri Eriyattume

2. Ariyaamai Irul Neekki
Athisaya Devanaik Kaana Vendum – 2
Athisaya Devanaik Kaana Vendum

3. Paavangal Saabangal – Bhaaratha
Dhesaththil Maraiya Vendum – Engal – 2
Engal Bhaaratha Dhesaththil Maraiya Vendum

4. Imayam Muthal Kumari Varai – En
Yesuvin Raththam Paaya Vendum – 2
En Yesuvin Raththam Paaya Vaenndum

5. Unmaiyaana Ooliyarkal
Ulagam Engum Sella Vendum – 2
Ulagam Engum Sella Vendum

6. Sabaigalellaam Thooymaiyaagi
Saatchi Vaazhvu Vaazha Vendum – 2
Saatchi Vaazhvu Vaazha Vendum

Iratham Jeyam – இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

Retham Jeyam
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்

2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம்

3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்

4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம்

5. பிரிவனை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம்

6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம்
விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம்
விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்

Iratham Jeyam Iratham Jeyam
Kalvaari Yesuvin Iratham Jeyam
Kaarunya Dheavanin Iratham Jeyam

1. Yethiriyai Thuratthidum Iratham Jeyam
Yennaalum Sugam Tharum Iratham Jeyam
Adhigaaram Thandhidum Iratham Jeyam
Adhiseyam Seidhidum Iratham Jeyam

2. Paavangal Pokkidum Iratham Jeyam
Parisutthamaakkidum Iratham Jeyam
Saabangal Neekkidum Iratham Jeyam
Samaadhaanam Thandhidum Iratham Jeyam – Namakku

3. Vidudhalai Tharugindra Iratham Jeyam
Vettri Mael Vettri Tharum Iratham Jeyam
Belaveenam Neekidum Iratham Jeyam
Belavaanai Maatridum Iratham Jeyam

4. Namakkaai Parindhu Peasum Iratham Jeyam
Naaldhorum Padhukaakum Iratham Jeyam
Needhimaanaakidum Iratham Jeyam
Nitthiya Jeevan Tharum Iratham Jeyam

5. Pirivinai Neekidum Iratham Jeyam
Pilavugal Pokkidum Iratham Jeyam
Oppuravakkidum Iratham Jeyam
Oru Manamaakidum Iratham Jeyam

6. Kutramilla Yesuvin Iratham Jeyam
Kuraivugal Pokidum Iratham Jeyam
Villaiyerapetra Iratham Jeyam
Vinnagam Nadathidum Iratham Jeyam

En Yesu Unnai – என் இயேசு உன்னைத்

En Yesu Unnai
என் இயேசு உன்னைத் தேடுகிறார்
இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்

1. கதறிடும் உன்னைப் பார்க்கின்றார்-உன்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
உதவிடும் கரத்தை நீட்டுகிறார்-உன்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்
2. சிலுவை மரணம் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
உன் பாவம் சுமந்து தீர்த்தாரே – தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே
3. மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
கலங்கிடும் மனிதா வருவாயா – என்
கர்த்தரின் பாதம் விழுவாயா
4. சகேயு உடனே இறங்கி வந்தான்
சந்தோஷமாக வரவேற்றான்
பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்
5. பேதுரு படகில் இடம் கொடுத்தான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
அதிசய தேவனை கண்டு கொண்டான்-என்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்

Nesikkiren Ummai Thaane – நேசிக்கிறேன் உம்மைத்தானே

Nesikkiren Ummai Thaane
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா

1. ஒவ்வொரு நாளும் எனது கண்முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால் – என்
அசைக்கப்படுவதில்லை – நான்
2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே – என்
நினைவெல்லாம் ஆள்பவரே
3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மை தேடணுமே
4. உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்

Devathi Devan Rajathi -தேவாதி தேவன் இராஜாதி

Devathi Devan Rajathi
தேவாதி தேவன் இராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே

மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்

1. திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே
2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்
3. சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே
4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்த
அணைத்து மகிழ்பவரே
5. உளையான சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலையின் மேல்நிறுத்தி – என்னை
பாட வைத்தீரே