Devanuke Magimai – தேவனுக்கே மகிமை

Devanuke Magimai

தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை – 2
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை – என்னை – 2

ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க – 2 (…தேவனுக்கே)

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – 2
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – இந்த – 2 (…ஐயா)

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – 2
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – இந்த – 2 (…ஐயா)

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – 2
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் – 2 (…ஐயா)

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – 2
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று – 2 (…ஐயா)

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – 2
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – பாவ – 2 (…ஐயா)

Dhevanukke Makimai
Dheivaththirkke Makimai – 2
Thedi Vanthu Meettavare
Thinam Umakke Makimai – Ennai – 2

Aiyaa Vaazhka Vaazhka
Um Naamam Vaazhka – 2 (… Dhevanukke)

1. Unnathaththil Dhevanukke
Makimai Undaakattum – 2
Poomiyile Samaathaanamum
Piriyamum Undaakattum – Intha – 2 (… Aiyaa)

2. Sevikalai Neer Thiranthu Vitteer
Seyvom Um Siththam – 2
Puvithanile Um Viruppam
Pooranamaakattume – Intha – 2 (… Aiyaa)

3. Elimaiyaana Engalaiye
Entrum Ninaippavare – 2
Olimayame Thunaiyaalare
Ullaththin Aaruthale – Engal – 2 (… Aiyaa)

4. Thedukira Anaivarume
Makizhnthu Kalikoorattum – 2
Paadukira Yaavarume
Parisuththam Aakattume – Intru – 2 (… Aiyaa)

5. Kurai Neekkum Vallavare
Kodi Sthoththirame – 2
Karai Pokkum Karththaave
Kalvaari Naayakane – Paava – 2 (… Aiyaa)

Unthan Aavi Enthan – உந்தன் ஆவி எந்தன்

Unthan Aavi Enthan
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்

1. உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்கவேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம் வாழவேண்டும்
2. பாவமான சுபாவம் எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி என்றும் நடத்த வேண்டும்
3. ஜீவதண்ணீர் நதியாகப் பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம் வாழவேண்டும்
4. வரங்கள் கனிகள் எல்லா நாளும் பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து மடியவேண்டும்
5. ஏதேன் தோட்ட உறவு என்றும் தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு மகிழ வேண்டும்

Alinthu Pokindra – அழிந்து போகின்ற

Alinthu Pokindra
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத்தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்

தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே

1. இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும்
2. திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன்
3. எக்காள சப்தம் நான் மொளனம் எனக்கில்லை
சாமக்காவலன் சத்தியம் பேசுவேன்
4. கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன்
கெம்பீர சத்தமாய் அறுவடை செய்கிறேன்
5. ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும்

Yesu Kristu En Jeevan – இயேசுகிறிஸ்து என் ஜீவன்

Yesu Kristu En Jeevan
இயேசு கிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்
1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
அவருக்குள் நான் வேர்கொண்டேன்
அவர்மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை
2. என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே
3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே
4. கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவமன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

Nesare Um Thiru Paadam – நேசரே உம் திருபாதம்

Nesare Um Thiru Paadam
நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை

1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை

2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை

3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே
இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை

Naesarae um thiru paadham amarndhaen
Nimmadhi nimmadhiyae
Aarvamudanae paadithudhipaen
Aanandham aanandhamae
Adaikkalamae adhisayamae aaraadhanai aaraadhanai

1. Um valla seyalgal ninaithu ninaithu
Ullamae pongudhaiyaa
Nallavarae nanmai seidhavarae
Nandri nandri aiyaa
Vallavarae nallavarae aaraadhanai aaraadhanai

2. Baliyaana semmari paavangal ellaam
Sumandhu theerthavarae
Parisutha ratham enakkaaga alloa
Baakkiyam baakkiyamae
Parisutharae padaithavarae aaraadhanai aaraadhanai

3. Ethanai innalgal En vaazhvil vandhaalum
Ummai piriyaen aiyaa
Rathamae sinthi saatchiyaai vaazhvaen
Nichayam nichayamae
Ratchagarae yaesu naadhaa aaraadhanai aaraadhanai

Vathai Unthan Koodarathai – வாதை உந்தன் கூடாரத்தை

Vathai Unthan Koodarathai
வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா

1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்

2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு

3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்

4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்

5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்

6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்

7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்

Unthan Naamam Magimai – உந்தன் நாமம் மகிமை பெற

Unthan Naamam Magimai
உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே
– ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்

1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே

2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே

3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்
கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம்

4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவநதி பெருகியோட வேண்டுமே

5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாச கூட்டம் பெருக வேண்டுமே

Undhan Naamam Magimai Pera Vendum Karththaave
Undhan Arasu Viraivil Varavendum Karththaave
Jebikkirom Naangal Thuthikkirom – 2

1. Inthiyaa Ratchagarai Ariya Vendume
Irulil Ullor Velichchaththaiye Kaana Vendume

2. Saaththaan Kottai Thagarnthu Vizha Vendume
Saabam Neengi Samaathaanam Varanume

3. Kanneer Sindhi Kathari Naangal Azhukirom
Karamviriththu Ummai Nokki Paarkkirom

4. Siluvai Raththam Thelikkappada Vendume
Jeevanadhi Perugiyoda Vendume

5. Jebasenai Engum Elumba Vendume
Ubavaasa Koottam Peruga Vendume

Anbe En Yesuve – அன்பே என் இயேசுவே ஆருயிரே

Anbe En Yesuve
அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே

1. உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்
2. வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்
3. தாயைப் போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்
4. உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு
5. இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்
6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

Oppukoduthir Ayya – ஒப்புக் கொடுத்தீர் ஐயா

Oppukoduthir Ayya
ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்

3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட

4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர் ஐயா

5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக
உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்

Oppukoduthir Ayya
Ummaiyae Enakkaaka
Ulakin Iratchakarae
Unnatha Paliyaaka

1. Engalai Vaalavaikka Siluvaiyil Thongineer
Nnokkip Paarththathinaal
Pilaiththuk Konntoom Aiyaa

2. Niththiya Jeevan Pera Neethimaanaay Maara
Jeevantharum Kaniyaay Siluvaiyil Thongineer

3. Suththikariththeerae Sontha Janamaaka
Ullaththil Vantheer Aiyaa Umakkaay Vaalnthida

4. Paavaththirku Mariththu Neethikkup Pilaiththida
Um Thiru Udalilae En Paavam Sumantheeraiyaa

5. Ennaiyae Tharukiraen Jeeva Paliyaaka
Ukantha Kaannikkaiyaay Udalaith Tharukiraen

Priyamanavale Un Athuma – பிரியமானவனே உன் ஆத்துமா

Priyamanavale Un Athuma
பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் -நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)

1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு
2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான்கால்கள் உனக்குண்டு மறவாதே
3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓட மகனே
நெருங்கிவரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே