Kadaisikala Abishekham – கடைசி கால அபிஷேகம்

Kadaisikala Abishekham

கடைசி கால அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அறுவடையின் காலமிதே
தூய ஆவியால் நிரப்பிடுமே

அக்கினியாய் இறங்கிடுமே
அக்கினி நாவாக அமர்ந்திடுமே
பெரும் காற்றாக வீசிடுமே
ஜுவ நதியாக பாய்திடுமே

எலும்புகளின் பள்ளத்தாக்கில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்கதரிசனம் உரைத்திடவே

கர்மேல் மலை ஜெப வேளையில்
ஒரு கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாப் நடுங்கின போல்
அக்கினி மழையாக பொழிந்திடுமே

சீனாய் மலை மேலே
அக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

Appa Seitha Nanmaigalai Ninaichu Paarkiren – அப்பா செய்த நன்மைகளை நினைச்சு பார்க்கிறேன்

Appa Seitha Nanmaigalai Ninaichu Paarkiren

அப்பா செய்த நன்மைகளை
நினைச்சு பார்க்கிறேன்
ஆர்வத்தோடு நன்றி சொல்லி
துதித்து மகிழ்கிறேன் – 2

நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா – 4

1. நான் செய்த பாவங்களை மன்னித்தீரே
உம் மகனாய் என்னையும் ஏற்றுக் கொண்டீரே – 2

2. வாதை என் கூடாரத்தை அணுகாது என்று
வாழ்நாளெல்லாம் காத்து வந்தீரையா – 2

3. இல்லாததும் பொல்லாததும் சொல்லிய போது
மகிழ்ந்து களிகூர வைத்தீரையா – 2

4. உச்சிதமான கோதுமையால் போஷித்தீரே
கன்மலையின் தேனினால் தாகம் தீர்த்தீரே – 2

5. அறியாத புரியாத காரியங்களை
கூப்பிட்ட நேரங்களில் அறிவித்தீரையா – 2

6. நோய்களாலே துவண்டு போன அந்த நேரத்தில்
சுகம் தந்து என்னையும் காத்தீரையா – 2

Appa Seitha Nanmaigalai
Ninachu Paarkkiren
Aarvathodu Nandri Solli
Thuthithu Magizhkiren – 2

Nandri Raja Yesu Raja Nandri Raja – 4

1. Naan Seitha Paavangalai Mannitheere
Um Maganaai Ennaiyum Yetru Kondeere – 2

2. Vaathai En Koodarathai Anugaathu Endru
Vaazhnaalellaam Kaathu Vantheeraiyya – 2

3. Illaathathum Pollaathathum Solliya Pothu
Magizhnthu Kalikoora Vaitheeraiyya – 2

4. Uchchithamaana Kothumaiyaal Boshitheere
Kanmalaiyin Theninaal Thaagam Theertheere – 2

5. Ariyaatha Puriyaatha Kaariyangalai
Koopitta Nerangalil Ariviththeeraiyya – 2

6. Noygalaale Thuvandu Pona Antha Nerathil
Sugam Thanthu Ennaiyum Kaaththeeraiyya – 2

Vallamai Gnanam Neethiyum Nirantha – வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த

Vallamai Gnanam Neethiyum Nirantha
வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த
வாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம் -2
வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்
அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர் -2

உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே -2

1. கல்லான என் உள்ளம் அதை
உடைத்திட்ட நேசம் அது
கனிவான தம் அழைப்பிதழால்
அழைத்திட்ட நேசம் அது -2

உலகிலே காணாத நேசம்
என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்
இதுவரை அறியாத வாழ்வை
என் பரமனின் பாதத்தில் கண்டேன்

உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே

2. காணாமல் நான் அலைந்திருந்தேன்
தேடிடும் நேசம் கண்டேன்
கண் திறந்து கண்ணீர் துடைத்த
நாதனின் நேசம் கண்டேன் -2

தரணியில் உணராத மகிழ்ச்சி
தூய தேவனின் ஆவியில் உணர்ந்தேன்
நீதியின் வாழ்வெமக்களித்த
நீதி தேவனின் நீதியை அறிந்தேன்

உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே – வல்லமை ஞானம்

Jillena Kulirkaatru – ஜில்லான குளிர் காற்று

Jillena Kulirkaatru
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார் -2

1. நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே -2

மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர் -2

2. மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
மா ஜோதி மானிடரானார்
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
அவர் அன்பிற்கு இணையில்லையே -2

நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே -2

Jillaana Kulir Kaatru Veesum Neramathu
Meloga Thoothar Koottam Paadum Velaiyathu
Mannin Maantharum Katharum Neramathu
Nam Mesiyah Mannil Uthithaar – 2

1. Natchathiram Naduvaanil Oli Vilakkaai
Saasthirigal Pinthodarnthaare
Vellaipolam Thoobavarkkam Allichendre
Arpanithaar Avar Thiru Munne – 2

Manthai Meippargal Puthu Gaanam Paadiye
Vinthai Kaanave Virainthodi Sendranar – 2

2. Maanidarin Paavarogam Maattridave
Maa Jothi Maanidaraanaar
Unnai Meetka Thammai Paliyaaga Thantha
Avar Anbirku Inaiyillaiye – 2

Naasarethilor Nanmai Piranthathe
Nambinorkkellaam Athu Nanmai Alithathe – 2

Chennai City Yegi Ye Ye – சென்னை சிட்டி ஏகி யே ஏ

சென்னை சிட்டி ஏகி யே ஏ…
இது எங்கள் சிட்டி ஏகி ஏ… – 2

1. மகிமையின் தேவன் எங்கள் சொந்தம்
எல்.ஐ.சி போல உயர்ந்திடுவோம்
கூவத்தை போன்ற பாவத்தை நீக்கி
தூய்மை நம்மில் வீச செய்தார்
ஸ்பென்சர் ப்ளாசா மெரீனா பீச் யை
சும்மா நாங்கள் சுத்த மாட்டோம்
இயேசு நம்மில் வாழ்ந்து வாழ்த்த
சென்னை சிட்டியை கலக்கிடுவோம்

2. ஏர்டெல் போல தினமும் இயேசுவை
தடங்கல் இன்றி தொடர்பு கொள்வோம்
வேதம் காட்டும் டிராபிக் ரூலை
என்றும் நாங்கள் மீற மாட்டோம்
லைப் என்னும் ரோட்டில் டேமேஜ் வந்தால்
விசுவாசத்தில் நிலைத்திருப்போம்
பிளை ஓவர் போல அன்பின் பாதையில்
நண்பர் பலரை அழைத்துச் செல்வோம்

3. கிஷ்கிந்தா போல பலரை நாங்கள்
ஒன்றாய் கூட செய்திடுவோம்
இயேசுவின் அன்பினை அவர்கள் ருசிக்க
பைவ் ஸ்டார் புகழ் போல் பகர்ந்தளிப்போம்
லைட் ஹவுஸ் போல ஒளியை வீசி
நித்திய வழியை காட்டிடுவோம்
டீன் ஏஜ் வாழ்வில் பெஸ்ட்டை நாங்கள்
இயேசுவுக்கே நாம் பரிசளிப்போம்

Chennai City Yeh Hi Yeh
Ithu Engal City Yeh Hi Yeh – 2

1. Magimaiyin Devan Engal Sontham
Lic Pola Uyarnthiduvom
Koovathai Pondra Paavathai Neekki
Thooymai Nammil Veesa Seithaar
Spencer Plaza Marina Beach Ai
Summa Naangal Sutha Maattom
Yesu Nammil Vaazhnthu Vaazhtha
Chennai City Yai Kalakkiduvom

2. Airtel Pola Thinamum Yesuvai
Thadangal Indri Thodarbu Kolvom
Vetham Kaatum Traffic Rule Ai
Endrum Naangal Meera Maattom
Life Ennum Roattil Damage Vanthaal
Visuvaasathil Nilathirupom
Fly Over Pola Anbin Paathaiyil
Nanbar Palarai Azhaithu Selvom

3. Kishkintha Pola Palarai Naangal
Ondraai Kooda Seithiduvom
Yesuvin Anbinai Avargal Rusikka
Five Star Pugazh Pol Pagarnthalipom
Light House Pola Oliyai Veesi
Niththiya Vazhiyai Kaatiduvom
Teen Age Vaazhvil Best Ai Naangal
Yesuvukke Naam Parisalippom

Vaakuthatham Seithavar – வாக்குத்தத்தம் செய்தவர்

Vaakuthatham Seithavar
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா
உண்மை தேவன் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
பழையவர்கள் ஒழிந்துபோகும் வாக்குத்தத்தம்
நிறைவேறும் விசுவாசத்தில் உறுதிப்படு

வெற்றியை தந்திடுவார் இயேசு ராஜா
வெற்றியாய் நடத்திடுவார் இயேசு ராஜா
வெற்றியை தந்திடுவார் இயேசு ராஜா
என் தோல்வியெல்லாம் வெற்றியாகுமே (4)

திறந்த வாசலை உனக்கு முன்பாக
வைத்திருக்கும் தேவனவர்
வெண்கலத் தாழ்ப்பாள்களை
உடைத்தெறிந்து நுழையச் செய்வார்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்

தேவனாயிருக்கிற கர்த்தர் தாமே
வலது கையை பிடித்து என்னை
பயப்படாதே நான் உனக்கு துணையாய்
நிற்கிறேன் என்று சொன்னார்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்

வியாதியை நீக்கும் தேவனவர்
வியாதியை நீக்கி சுகமாக்குவார்
கிறிஸ்துவின் நாமத்தினால்
சுகத்தைப் பெற்று துதி செலுத்துவேன்
நம்பிடுவேன் நான் நம்பிடுவேன்
இயேசுவை என்றும் நம்பிடுவேன்

Vaakkuthatham Seidhavar
Vaakku Maara Unmai Dhevan
Vaakkuthatham Niraivetruvaar
Pazhaiyavaigal Ozhindhupogum
Vaakkuthatham Niraiverum
Visuvasathil Urudhipadu

Vetriyai Thandhiduvaar Yesuraja
Vetriyaai Nadathiduvaar Yesuraja
Un Thozhvi Yellam Vetriyaagumey

Thirandha Vaasalai Unakku Munbaga
Vaithirukkum Dhevanavar
Vengala Thazhpaalgalai Udaiththerindhu Nulaiya Seivar
Nambiduven Naan Nambiduven Yesuvai Endrum Nambiduven

Devanai Irukkira Karthar Thamey
Valadhu Kaiyai Pidithu Ennai
Bayapadadhey Naan Unakku Thunaiyai Nirkiren Endru Sonnar
Nambiduven Naan Nambiduven Yesuvai Endrum Nambiduven

Bayapathathey Paaril Ipoothae – பயப்படாதே, பாரில் இப்போதே

Bayapathathey Paaril Ipoothae
பயப்படாதே, பாரில் இப்போதே
திகையாதே, கலங்காதே

தெரிந்து கொண்டேன், பேர் சொல்லி அழைத்தேன்
அறிந்து கொண்டேன், நீ என்னுடையவன்

1. தண்ணீரை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நான் இருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும்போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே

2. அக்கினியில் நீ நடக்கும் போதும்
அஞ்ச வேண்டாம், வேகாதிருப்பாய்
அக்கினி ஜீவாலை உன்பேரில் பற்றாது
விக்கினங்கள் ஏதும் சுற்றாது – பயப்படாதே

3. இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே
இரட்சகராம் தேவனும் நானே
உன்னை மீட்க நான் வந்தேனே
கண்மணி போல் அருமையானவனே – பயப்படாதே

4. உன்னை நானே உருவாக்கினேனே
அன்னை போலவும் ஆதரிப்பேனே
கண்மூடாமலும் காத்திடுவேனே
சொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே

5. முந்தினதை நினைக்கவே வேண்டாம்
பூர்வமானதைச் சிந்திக்க வேண்டாம்
எந்த துன்பத்தில் சோர்ந்திட வேண்டாம்
வாக்குகளையும் விட்டிட வேண்டாம் – பயப்படாதே

6. ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே
என்றும் ஜெபத்தை தவறவிடாதே
கடந்த தோல்வியை எண்ணி விடாதே
நடந்திடும் வழிகளையும் விடாதே! – பயப்படாதே

7. அல்லேலூயாவுக் கருகனும் நானே!
அல்லும் பகலும் ஆதரிப்பேனே
அல்லேலூயா பாடிடுவாயே
வல்ல கரத்தால் நடத்திடுவேனே! – பயப்படாதே

Getsamaneyin Anubavathai Jebithida – கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட

Getsamaneyin Anubavathai Jebithida
கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட
எனக்கு தாரும் ஐயா

1. உம்மை போல் ஜெபித்திட வாஞ்சிக்கிறேன்
என் உள்ளமும் உணர்ந்திட வேண்டுகிறேன் – கெத்சமனேயின்

2. கண்ணீர் துளிகள் விழ வேண்டும்
என் ஏக்கங்கள் உம்மை தொட வேண்டும் – கெத்சமனேயின்

3. ஆத்துமா பாரத்தால் கதற வேண்டும்
நான் அழியும் ஜனத்திற்காய் புலம்ப வேண்டும் – கெத்சமனேயின்

4. பெருமூச்சு ஜெபமாய் மாற வேண்டும்
உம் பாதங்கள் உறுதியாய் தழுவ வேண்டும் – கெத்சமனேயின்

5. எந்தன் சிலுவையை சுமக்க வேண்டும்
நீர் கொடுத்திடும் பாத்திரம் பெற வேண்டும் – கெத்சமனேயின்

En Kanmalaiyanavar Thuthikapaduveraga – என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக

En Kanmalaiyanavar Thuthikapaduveraga
(என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2

நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
இரட்சண்ய கொம்பு – 2

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2
– என் கன்மலையானவர்

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் – 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2
– என் பெலனாகிய

என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும்பொது நான் அபயமிட்டேன்

உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் – 2
– என் பெலனாகிய

My Glory And The Lifter Of My Head

My glory and the lifter of my head (2)
For thou O Lord art a shield for me
My glory and the lifter of my head
I cried unto the Lord with my voice (3)
And He heard me out of His holy hill
My glory and the lifter of my head
For thou O Lord art a shield for me
My glory and the lifter head

Tamil:

என் தலையை உயர்த்துபவர் நீர் (2)