Song Tags: Cross Tamil Song Lyrics

1. Aani Konda Um Kayangalai – ஆணி கொண்ட உம் காயங்களை
2. Aatham Purintha Pavathale – ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
3. Aattukuttiyanavarae Ennakaaga Baliyaaneer – ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்
4. Alaganavar Arumaiyanavar – அழகானவர் அருமையானவர்
5. Anbe Kalvari Anbe – அன்பே கல்வாரி அன்பே
6. Anbin Mugathai Andru – அன்பின் முகத்தை அன்று
7. Antho Kalvariyil – அந்தோ கல்வாரியில்
8. Appa Pithave Anbana Deva – அப்பா பிதாவே அன்பான
9. Appa Um Patham – அப்பா உம் பாதம்
10. Balipeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே
11. Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்
12. Ellame Mudinthathu Endru – எல்லாமே முடிந்தது என்று
13. En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது
14. En Yesu Raajanae – என் இயேசு ராஜனே
15. En Yesuve En Nesare – என் இயேசுவே என் நேசரே
16. Enge Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்
17. Engu Pogireer Yesu – எங்கு போகிறீர் இயேசு
18. Enkuthe Ennakanthan Thuyar – ஏங்குதே என்னகந்தான்
19. Ennavale Jeevan Viduthiro – என்னாலே ஜீவன் விடுத்தீரோ
20. Ezhai Manu Uruvai – ஏழை மனு உருவை

21. Iratham Jeyam – இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
22. Iratham Kayam Kuthum – இரத்தம் காயம் குத்தும்
23. Iyya Neeranu Anna – ஐயா நீரன்று அன்னா
24. Iyya Neeranu Anna Kaybavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின்
25. Jeevanulla Devane Varum – ஜீவனுள்ள தேவனே வாரும்
26. Kadanthu Vantha Pathai – கடந்து வந்த பாதைகளை
27. Kalangathe Kalangathe Karthar – கலங்காதே கலங்காதே
28. Kalvaari Siluvayilae – கல்வாரி சிலுவையிலே
29. Kalvari Anbai Ennidum Velai – கல்வாரி அன்பை எண்ணிடும்
30. Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை
31. Kalvari Malaiyoram Vaarum – கல்வாரி மலையோரம் வாரும்
32. Kalvari Mamalai Oram – கல்வாரி மாமலை ஓரம்
33. Kalvari Nayagane – கல்வாரி நாயகனே
34. Kalvari Ratham Enakkaga Sinthi – கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
35. Kalvari Sneham – கல்வாரி சிநேகம்
36. Kalvariye Kalvariye – கல்வாரியே கல்வாரியே
37. Kalvariyin Karunai Ithae -கல்வாரியின் கருணையிதே
38. Kandaen Kalvaariyin Kaatchi – கண்டேன் கல்வாரியின் காட்சி
39. Karthar Thuyar Dhoniyai – கர்த்தர் துயர் தொனியாய்
40. Kolkothaa Maettinilae – கொல்கொதா மேட்டினிலே
41. Kolkothaa Maettinilae – கொல்கொதா மேட்டினிலே
42. Kolkothave Kolai Marame – கொல்கொதாவே கொலை மரமே
43. Kurusinil Thongiye – குருசினில் தொங்கியே
44. Kurusinmel Kurusinmel – குருசின்மேல் குருசின்மேல்
45. Magimai Adaiyum Yesu – மகிமையடையும் இயேசு
46. Manathurugum Deivame – மனதுருகும் தெய்வமே
47. Marida Em Ma Nesare – மாறிடா எம்மா நேசரே
48. Mulmudi Paaramo Thevane – முள்முடி பாரமோ தேவனே
49. Mulmudi Sudiya Aandavar – முள்முடி சூடிய ஆண்டவர்
50. Naan Ummai Patri – நான் உம்மைப்பற்றி
51. Naane Vazhi Naane Sathyam – நானே வழி நானே
52. Nalla Kalam Porakuthu – நல்ல காலம் பொறக்குது
53. Nenjame Getsemanekku Nee – நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ
54. Nesare Um Thiru Paadam – நேசரே உம் திருபாதம்
55. Oppukoduthir Ayya – ஒப்புக் கொடுத்தீர் ஐயா
56. Paaduvoom Magilvoom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம்
57. Paavikku Pugalidam – பாவிக்கு புகலிடம் இயேசு
58. Parir Gethsemane – பாரீர் கெத்சமனே
59. Pavangal Pokave Sabangal Neekave – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
60. Pothumanavare Puthumaiyanavare – போதுமானவரே புதுமையானவரே
61. Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ
62. Punnnniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ
63. Ratha Kottai Kulle – இரத்தக் கோட்டைக்குள்ளே
64. Rathamae Sinthapatta Rathamae – இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
65. Siluvai Naadhar Yesuvin – சிலுவை நாதர் இயேசுவின்
66. Siluvai Sumantha Uruvam – சிலுவை சுமந்த உருவம்
67. Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில்
68. Siluvayil Thongum Yesuvai Paar – சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
69. Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன்
70. Thooyathi Thooyavare – தூயாதி தூயவரே உமது
71. Ullam Ellam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதய்யா
72. Ullamellam Uruguthaiyoo – உள்ளமெல்லாம் உருகுதையோ
73. Um Rathame Um Rathame – உம் இரத்தமே உம் இரத்தமே
74. Undhan Kaayangal Enthan Paavangaloo – உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
75. Urugaadho Nenjam – உருகாதோ நெஞ்சம்
76. Urugatho Nenjam – உருகாதோ நெஞ்சம்
77. Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே
78. Uyirulla Yesuvin Karangalilae – உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
79. Vinthai Kiristhesu Raja – விந்தை கிறிஸ்தேசு ராஜா
80. Yen Intha Padukal – ஏன் இந்தப் பாடுதான்
81. Yen Intha Paduthan – ஏன் இந்தப் பாடுதான்!
82. Yerukindrar Thalladi – ஏறுகின்றார் தள்ளாடி
83. Yesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு
84. Yesu Umthainthu Kaayam – இயேசு உமதைந்து காயம்
85. Yezhai Manu Uruvai – ஏழை மனு உருவை

Uyirulla Yesuvin Karangalilae – உயிருள்ள இயேசுவின் கரங்களிலே

Uyirulla Yesuvin Karangalilae
உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
உபயோகியும்….

உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன்-உம்மை
என்றும் பற்றிக் கொள்ளுவேன்
என் வாழ்வில் நீர்தான் எல்லாமே

ஆனந்தம் ஆனந்தம் உந்தன் சமூகம்
ஆராதனை வெள்ளத்தில் மிதக்கிறேன்
உள்ளம் நிரம்ப வாய் நிறைய ஸ்தோத்திரமே

உம்மைத் துதிக்காமல் இருக்க முடியவில்லை
சிலுவை உயர்த்தாமல் உறக்கமேயில்லை
உம்மை சொல்லாமல் வாழ்வேயில்லை
உம்மை நம்பாமல் நித்தியமில்லை

நீர் செய்த சகல உபரகாரங்கள்
நினைத்து நினைத்துத் துதிக்கின்றேன்
அல்லேலூயா ஆராதனை உமக்குத்தானே

உந்தன் அன்பை எங்கும் சொல்லுவேன்
நன்றி மறவாமல் என்றும் நடப்பேன்
பத்தில் ஒன்றை உமக்கு கொடுப்பேன்
சாட்சியாய் என்றும் வாழுவேன்

Uyirulla Yesuvin Karangalilae
Ennai Muluvathum Arppanniththaen
Aettukkollum Aenthikkollum
Upayokiyum….

Unthan Siththam Ennil Irukkum
Valuvaamal Athil Nadappaen-ummai
Entum Pattik Kolluvaen
En Vaalvil Neerthaan Ellaamae

Aanantham Aanantham Unthan Samookam
Aaraathanai Vellaththil Mithakkiraen
Ullam Nirampa Vaay Niraiya Sthoththiramae

Ummaith Thuthikkaamal Irukka Mutiyavillai
Siluvai Uyarththaamal Urakkamaeyillai
Ummai Sollaamal Vaalvaeyillai
Ummai Nampaamal Niththiyamillai

Neer Seytha Sakala Uparakaarangal
Ninaiththu Ninaiththuth Thuthikkinten
Allaelooyaa Aaraathanai Umakkuththaanae

Unthan Anpai Engum Solluvaen
Nanti Maravaamal Entum Nadappaen
Paththil Ontai Umakku Koduppaen
Saatchiyaay Entum Vaaluvaen

En Yesuve En Nesare – என் இயேசுவே என் நேசரே

En Yesuve En Nesare

என் இயேசுவே என் நேசரே
ஏன் இந்த பாடுகளோ
என் இதயம் நெகழிந்திடுதே
உம் முகம் பார்க்கையிலே

கைகளில் கால்களில் ஆணிகளால்
தழும்புகள் ஏற்றது எனக்காகவோ
பெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்
பெலன் தந்து என்னை தாங்கினீரே

தலையினில் முள்முடி துளைத்திடவே
தாகத்தால் தவித்தே துடித்தீரையா
அநாதையை போலவே சிலுவையிலே
அன்பினால் எனக்காக தொங்கினீரே

உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்
உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையா
என்னதான் ஈடாக தந்திடுவேன்
என்னையே உமக்காக தருகிறேன்

En Yesuve En Nesare
Yen Intha Paadukalo
En Ithayam Nekalinthiduthae
Um Mukam Paarkaiyilae

Kaikalil Kaalkalil Aannikalaal
Thalumpukal Aettathu Enakkaakavo
Pelaveenam Nnoykalai Sumanthu Konnteer
Pelan Thanthu Ennai Thaangineerae

Thalaiyinil Mulmuti Thulaiththidavae
Thaakaththaal Thaviththae Thutiththeeraiyaa
Anaathaiyai Polavae Siluvaiyilae
Anpinaal Enakkaaka Thongineerae

Ulappatta Nilampol Urukkulaintheer
Udal Ellaam Kaayangal Aettaraiyaa
Ennathaan Eedaaka Thanthiduvaen
Ennaiyae Umakkaaka Tharukiraen

Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ

Punniyar Ivar Yaaro
புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ

தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்

வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்

பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
பாடகலாதோ வென்கிறார்
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்

என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Punniyar Ivar Yaaro Veelnthu Jebikum
Purushan Sanjalam Yaatho

Thannilal Solaiyilae Saamanadu Vaelaiyilae
Mannnnil Kuppura Veelnthu Vanangimantati Kenjum

Velai Neengaatho Venkiraar Kodumarana
Vaethanai Yuttenenkiraar
Aaluthaviyumillai Atiyaar Thuyilukintar
Neelun Thuyarkadalil Neenthith Thathalikkintar

Paathiram Neekku Menkiraar Pithaavae Intha
Paadakalaatho Venkiraar
Naethiram Neer Poliya Nimalan Maeniyil Raththam
Neettu Viyarvaiyaaka Nilaththil Sottamantadum

Ensitham Malla Venkiraar Appaa Nin Sitham
Entaikumaaka Venkiraar
Anbin Kadavul Thamatharung Karaththilaeyeentha
Thunba Paathirathati Vandalaiyum Parukum

Mulmudi Sudiya Aandavar – முள்முடி சூடிய ஆண்டவர்

Mulmudi Sudiya Aandavar
முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்

கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்

நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே

வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா

கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே

Mulmudi Sudiya Aandavar
Namakkaay Mariththaar

Kolgathaa Malaiyilae
Yesu Paadukal Sumanthaar

Nam Paavam Theerika Paliyaanaar
Iratham Sinthi Meetar
Kallanai Pola Katundaarae
Unthanai Meettidavae

Vaarinaalae Adikappatar
Paavi Enakaaga
Aapathilae Thunaiyaaga
Emmai Kaarum Dhaeva

Kaal Kaikalilae Aannipaaya
Mutkireedam Pinni Sooda
Thaasarkalai Kaaththa Yesu
Paliyaaka Maandaarae

Kolkatha Malai Meethile – கொல்கொதா மலை மீதிலே

Kolkatha Malai Meethile
கொல்கொதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்

அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார்

மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சசித்தார்

உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் ரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார்

செந்நீரோ கண்ணீராய் மாறி
தரணியில் பாய்ந்ததங்கே
உன்நிலை நினைத்தவரே
தன்நிலை மறந்து சகித்தார்

வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் ஆத்துமாவே
வந்திடு நீ இயேசுவண்டை

Kalvaari Siluvayilae – கல்வாரி சிலுவையிலே

Kalvaari Siluvayilae
கல்வாரி சிலுவையிலே
கள்வர்கள் நடுவினிலே -2
கர்த்தன் இயேசு எனக்காகப்பட்ட
பாடு அவமானங்கள் -கல்வாரி

நினைத்து நினைத்து துதிக்கின்றேனே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே -2
நன்றி நன்றி ஐயா….
நன்றி இயேசய்யா -2

1. பாவ சாப ரோகங்கள் யாவும்
சிலுவையிலே சுமந்து நீர் தீர்த்தீர் -2
உந்தன் தழும்புகளால் பூரண சுகமானேனே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே -2 -நினைத்து

2. எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
இத்தனை என் மேல் அன்பு வைத்தீரே-2
எத்தனை என்னையுமே உத்தமனாக்கினீரே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே-2
-நினைத்து

Kalvaari Siluvayilae
Kalvarkal Naduvinilae-2
Karththan Yesu Enakkaaka patta
Paadu Avamaananhal-Kalvaari

Ninaithu Ninaithu Thuthikkindrenae
Ummai Nokki Parkkindraene-2
Nandri Nandri Aiya
Nandri Yesaiyah -2

1. Paava Saaba Rogangal Yaavum
Siluvaiyilae Sumanthu Neer Theertheer-2
Unthan Thazhumbugalaal Poorana Sugamanene
Sinthina Rathathinaal Meetpinai Petraene -Ninaithu

2. Ethanayo Throgam Naan Seithaen
Ithanai En mel Anbu Vaitheerae -2
Ethan Ennaiyumae Uthamanaakkineerae
Sinthina Rathathinaal Meetpinai petraene -Ninaithu

Nalla Kalam Porakuthu – நல்ல காலம் பொறக்குது

Nalla Kalam Porakuthu
நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2
பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2
கவலைகள் கண்ணீர்கள் மாறுது
வறுமைகள் வேதனைகள் நீங்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

கடன்சுமை கஷ்டங்கள் மாறுது இயேசுவாலே – 2
நிந்தைகள் அவமானம் நீங்குது இயேசுவாலே – 2
போட்டிகள் பொறாமைகள் மாறுது
தடைபட்ட காரியங்கள் வாய்க்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

சிலுவையில் உனக்காக மரித்த இயேசுவாலே – 2
தீமைகள் நன்மையாக மாறுது இயேசுவாலே – 2
இயேசுவின் நாமத்தில் வேண்டிடு
வாழ்வில் நலம் வளம் பெற்றிடு இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

En Meetpar Sendra Paathayil – என் மீட்பர் சென்ற பாதையில்

En Meetpar Sendra Paathyil
என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன் (5)
சிலுவையை(2) நான் விடேன்

1. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா

2. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா

3. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயாசெய்வாயாகோழை
நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா

4. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேனே

En Meetpar Sendra Paathaiyil
Nee Sella Aayaththamaa
Kolkathaa Malai Vaathaiyil
Pangaip Peruvaayaa

Siluvaiyai Naan Vidaen (5)
Siluvaiyai(2) Naan Vidaen

2. Ooraar Inathaar Mathiyil
Thunpam Sakippaayaa
Moorkkar Kopikal Naduvil
Thidanaai Nirpaayaa

3. Thaakathaalum Pasiyaalum
Thoynthaalum Nirpaayaa
Avamaanangal Vanthaalum
Siluvai Sumapaayaa

4. Paavaathmaakkal Gunappada
Nee Thatham Seyvaayaaseyvaayaakolai
Nenjar Thidappada
Meiyuththan Seivaayaa

5. Vaalnaalellaam Nilai Nintu
Siluvaiyai Sumappaenae
Deva Arulinaal Vendru
Mael Veettach Seruvaenae

Enni Enni Paar – எண்ணி எண்ணிப் பார்

Enni Enni Paar
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை – 2

நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் – 2

1. தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே – 2
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி

2. காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே – 2
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் – 2

3. சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2

4. ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் – 2

Urugatho Nenjam – உருகாதோ நெஞ்சம்

Urugatho Nenjam
உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
உனக்காகாக பலியாக வந்தார்
அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியை கண்டு

1. கனவெல்லாம் துஷ்டம் தீராத கஷ்டம்
கதறிடும் மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கனிவுடன் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

2. நடமாட முடியா தடுமாறி கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்றே
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிக்கின்ற ஆன்மா
பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
ரட்சித்து வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே