Kristavanai Disturb Pannathe
கிறிஸ்தவனை Disturb பண்ணாதே
அவனை Assault எண்ணி விடாதே
அவன் வெட்ட வெட்ட வளருவான்
கொட்ட கொட்ட உயருவான்
1. திட்டம் போட்டு மிரட்டிடலாம் என்று எண்ணாதே
கட்டிப் போட்டு மடக்கிடலாம் என்று கனவு காணாதே
முட்டி போட்டு ஜெபிச்சான்னா – நீ
முதுகைக் காட்டி ஓடிடுவே – அவன்
ஆழம் அகலம் தெரியாமல் காலை விடாதே – அவன்
நீளம் உயரம் தெரியாமல் மாட்டிக் கொள்ளாதே
2. மாம்சத்தோடு இரத்தத்தோடும் போரிடாதவன்
வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன்
நிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதை
பொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன்
கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் – அவன்
தண்ணீரை தரைபோல வழி நடப்பவன்
3. கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன்
பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன்
உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும்
பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்
நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும்