Naan Unakkaaga
நான் உனக்காக (மகனே) நான் உனக்காக
என்னை நம்பி வாழ்கிறாய் நான் உனக்காக – 2
நீ எனக்காக இறைவா நீ எனக்காக
உன்னை நம்பி வாழ்கிறேன் நீ எனக்காக – 2
1. பொழியும் நல்ல வானம் தந்தேன் நான் உனக்காக
விளையும் நல்ல பூமி தந்தேன் நான் உனக்காக
இரவும் பகலும் பிரித்து வைத்தேன் நான் உனக்காக
படைத்தவை அனைத்தும் நலமெனக்கண்டேன் நான் உனக்காக (…நான்)
2. வானம் போல மனதை தருவேன் நான் உனக்காக
பூமி போல பலனை தருவேன் நான் உனக்காக
பகலை போல ஒளியை தருவேன் நான் உனக்காக
இருளை போல பொறுமை கொள்வேன் நான் உனக்காக (…நான்)
3. அன்பு செய்யும் அருளை தந்தேன் நான் உனக்காக
மன்னிக்கின்ற இதயம் தந்தேன் நான் உனக்காக
ஏற்றுக்கொள்ளும் மனதை தந்தேன் நான் உனக்காக
மாற்றம் செய்யும் வலிமை தந்தேன் நான் உனக்காக (…நான்)
naan unakkaaga (magane) naan unakkaaga
ennai nambi vaazhkiraai naan unakkaaga – 2
nee enakkaaga iraivaa nee enakkaaga
unnai nambi vaazhkiren nee enakkaaga – 2
1. pozhiyum nalla vaanam thanthen naan unakkaaga
vilaiyum nalla boomi thanthen naan unakkaaga
iravum pagalum piriththu vaiththen naan unakkaaga
padaiththavai anaiththum nalamenakkanden naan unakkaaga (…naan)
2. vaanam pola manathai tharuven naan unakkaaga
boomi pola palanai tharuven naan unakkaaga
pagalai pola oliyai tharuven naan unakkaaga
irulai pola porumai kolven naan unakkaaga (…naan)
3. anbu seiyyum arulai thanthen naan unakkaaga
mannikkindra idhayam thanthen naan unakkaaga
yettrukkollum manathai thanthen naan unakkaaga
maattram seiyyum valimai thanthen naan unakkaaga (…naan)