All Songs by david

Dam Dam Dam Damaku – டம் டம் டம் டமக்கு

Dam Dam Dam Damaku

டம் டம் டம் டமக்கு டம் டம் (3) டம் டம்

தண்ணிக்குள்ள யாரு?
பெரிய மீனுதான் பாரு
மீனின் வயிற்றிலே யாரு?
நம்ம யோனா தான் பாரு } – 2

ஐய்யய்யோ (4) மாட்டிக்கிட்டாரு யோனா மாட்டிக்கிட்டாரு
கர்த்தர் சொன்ன பேச்சை கேட்காம மாட்டிக்கிட்டாரு

எப்படி இருந்த யோனா இப்படி ஆயிட்டாரு (2)
நீயும் இப்படி வாழாதே கீழ்ப்படிந்து வாழ்ந்திடு
நீயும் இப்படி வாழாதே மனந்திரும்பி வாழ்ந்திடு

Dam dam dam damaku dam dam (3) dam dam

Thaneerukulla yaaru
Peria meenu thaan paaru
Meenin vayitriley yaaru
Namma yona than paaru (2)

Ayyayyo (4) maatikittaaru yona maatikitaaru
Karthar sonna petchai ketkaama maatikitaaru

Eppadi iruntha yona ippadi aayitaaru (2)
Neeyum ippadi vaazhaathey keezhpadinthu vaazhthidu
Neeyum ippadi vaazhaathey mananthirumbi vaazhthidu

Song Theme : மன்னிக்கிறவரை வந்து பாருங்கள்

Thapu Pannamatom – தப்பு பண்ண மாட்டோம்

Thapu Pannamatom
தப்பு பண்ண மாட்டோம்
தண்டனை வாங்க மாட்டோம்
Schoolக்கு போவோம் ஒழுங்காய்
பாடம் படிப்போம் நன்றாய் } – 2

Bible எங்கள் Guide
அது காட்டும் பாதை நடப்போம்
எபேசியர் 6:1ஐ மறந்து போக மாட்டோம்
மாட்டோம் (3) பொய் சொல்ல மாட்டோம்
மாட்டோம் (3) சண்டை போட மாட்டோம்
மாட்டோம் (3) எதிர்த்து பேச மாட்டோம்
மாட்டோம் (3) சினிமா பார்க்க மாட்டோம்
நடப்போம் (2) கீழ்ப்படிந்து நடப்போம்

Thappu pannamaatom
Thandanai vaanga maatom
Schooluku povom olungaai
Paadam padipom nandraai -2

Bible engal guide
Adhu kaatum paadhai nadapom
Ephesiar 6:1 ai maranthu poga maatom
Maatom (3) Poi solla maatom
Maatom (3) Sandai poda maatom
Maatom (3) Ethirthu pesa maatom
Maatom (3) Cinema paarka maatom
Nadapom (2) keezhpadinthu nadapom

Song Theme : கீழ்ப்படிந்தவரை வந்து பாருங்கள்

Yovan 3 : 16 – யோவான் 3 : 16

Yovan 3 : 16
யோவான் 3:16 தேவனின் அன்பை சொல்லுது
உனக்காய் எனக்காய் பூமியிலே இயேசு வந்தார்

1யோவான் 3:16 இயேசுவின் அன்பை சொல்லுது
உனக்காய் எனக்காய் சிலுவையிலே இயேசு மரித்தார்

லா லா லல்லல்லா…

Yovaan 3:16 devanin anbai solluthu
Unakaai enakaai bhoomiley Yesu vanthaar

Yovaan 3:16 devanin anbai solluthu
Unakaai enakaai siluvayiley Yesu marithaar

laa laa lalalalaa

Song Theme : நேசிக்கிறவரை வந்து பாருங்கள்

Super Man Yaru – சூப்பர் மேனு யாரு

Super Man Yaru

Super Man னு யாரு? (2)
Differentஆன Bikeல போனா Super Man னா?
Costly ஆன Car ல போனா Super Man னா?
No No No No…
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டால்
Super Man நீ தான்
இயேசுவை போல வாழ்ந்து காட்டினால்
Super Man னும் நீ தான் – Yes (2)

Super Man-nu yaaru (2)
Different aana bikela pona super man naa
Costly aana car la ponaa super man naa
No no no no
Yesuvai ullathil yetrukondaal
Super man nee than
Yesuvai pola vazhnthu kaatinaal
Super Man-um nee thaan – Yes (2)

Nee Yaaraga Inthalum Paravaillai – நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல

Nee Yaaraga Inthalum Paravaillai
நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல
உன் சூழ்நிலை எதுவானாலும் பரவாயில்ல
காப்பார் காப்பார் உன்னைக் காப்பார்
பாதுகாப்பார் எப்போதுமே } – 2

1. நீ ஆபத்தில் இருந்தாலும் பரவாயில்ல
நீ தோல்வியில் இருந்தாலும் பரவாயில்ல
பார்ப்பார் பார்ப்பார் உன்னைப் பார்ப்பார்
உள்ளங்கையில் வரைந்து பார்ப்பார்

2. நீ நினைத்தது நடக்கலையா பரவாயில்ல
நீ எதிர்பார்த்தது கிடைக்கலையா பரவாயில்ல
நன்மை நன்மை எல்லாம் நன்மை
நடந்தது எல்லாம் என்றும் நன்மை

Summer Vanthale Kalakal Thane – சாம்மார் வந்தாலே கலக்கல் தானே

Summer Vanthale Kalakal Thane

Summer வந்தாலே கலக்கல் தானே
CGC -க்கு போனாலே Colourful தானே

பாடல் பாடி மகிழ
வசனம் கதை கேட்க } – 2
கற்றுகொள்ள போகலாம்
சீக்கிரம் வாங்க } – 2

இயேசுவுக்காய் வாழ
இயேசுவைப் போல மாற
இயேசப்பாவின் நோக்கத்தை
நிறைவேற்ற வாங்க

ரம்… பம்… பம்… பம்… பம்
-ப-ப-ப-ப….பம்…பம்…
CGC ஆரம்பம்
டம்…டம்…டம்…டம்…
ஊரெல்லாம் கொண்டாட்டம்

Yesuvin Pinne Pogathuninthen – இயேசுவின் பின்னே போக

1. இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்

2. உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)

3. கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)

4. என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)

5. இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)

6. நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)

7. செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)

8. கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)

9. கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)

10. இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)

Uthamamai Mun Sella – உத்தமமாய் முன் செல்ல

Uthamamai Mun Sella

உத்தமமாய் முன் செல்ல
உதவி செய்யும் யேகோவா

ஊக்கமதை கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும் – 2

1. பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எம்மை வருத்தும்

சாத்தானின் அக்னி அஸ்திரங்கள்
எண்ணா நேரத்தில் தாக்கும் – 2

2. தீர்மானங்கள் தோற்கா வண்ணம்
காத்துக்கொள்ள உதவும்

நேர்மையாக வாக்கைக் காக்க
வழி வகுத்தருள வேண்டும் – 2

3. இவ்வுலக மாயாபுரி
அழியப் போவது நிச்சயம்

இரட்சகனே நீர் ராஜாவாக
வருவது அதி நிச்சயம் – 2

4. தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ

கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே – 2

Uththamamaai Mun Sella
Uthavi Seiyyum Yegovaa

Ookkamathai Kaividaamal
Kaaththukkolla Udhavum – 2

1. Palavithamaam Sothanaigal
Ulagaththil Emmai Varuththum

Saaththaanin Akkini Asthirangal
Ennaa Neraththil Thaakkum – 2

2. Theermaanangal Thorkaa Vannam
Kaaththukkolla Udhavum

Nermaiyaaga Vaakkai Kaakka
Vazhi Vaguththarula Vendum – 2

3. Ivvulaga Maayaapuri
Azhiya Povathu Nichchayam

Ratchagane Neer Raajaavaaga
Varuvathu Athi Nichchayam – 2

4. Thootharodu Paadalodu
Paralogil Naan Ulaava

Kirubai Seiyyum Yesu Devaa
Unmai Vazhikaattiye – 2

Kalvari Mamalai Mel – கல்வாரி மா மலைமேல் கை

Kalvari Mamalai Mel
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருகிற் றென் மனதை

அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்

கர்த்தரின் சத்தமத்தை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே

Song Lyrics & Tune Composed by Rev. S. Devadason, Former Editor, Varukayin Thoothan & CSI Pastor at Karungal, Kannanore at the period of Bishop Gnanadason, KK Diocese.

Vaalibam Unnai Izhukudho – வாலிபம் உன்னை இழுக்குதோ

Vaalibam Unnai Izhukudho
வாலிபம் உன்னை இழுக்குதோ
வானத்தைத் தொடத் துடிக்குதோ
பாவங்கள் கண்ணை மறைக்குதோ
கைகள் செய்ய துடிக்கின்றதோ
உந்தன் சிந்தை மறைக்கின்றதோ (2)

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

உலகின் வாழ்க்கை ஒன்று தானே
மறந்து நீ போகாதே
இன்று மறித்தால் எங்கு செல்வாய்
காலமும் நில்லாதே
மயக்கும் எல்லாம் மாயை தானே
மதி கெட்டு போகாதே
சிதைக்கும் உன்னை சில்லரை ஆக்கும்
சீர் கெட்டுப் போகாதே
கானல் போன்ற வாழ்க்கையெல்லாம்
மறைந்து போதும் முன்பே
உன்னைப் படைத்த சிருஷ்டிகரை நீ
மறந்து போகாதே
சத்திய தேவன் அவர் நித்தியம் தருபவர்
வாழ்வை இழந்தவற்கு வழியை திறப்பவர்
சத்திய தேவனை நீ நித்தமும் தேடிடு
ஜீவனைக் கொடுத்தவற்கு வாழ்வை கொடுத்திடு

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)